கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

 

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க வலியுறுத்தல்


தேர்தல் அன்று பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 24ஆம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் தேர்தல் ஆணையத்திற்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்*


வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி முடிய நள்ளிரவு வரை சில இடங்களில் ஆகிவிடுகிறது. மறுநாள் அவர்களால் மீண்டும் பள்ளிக்கு செல்வது சிரமமாகும்.


இதனால் வரும் ஏப்ரல் 24ம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


தேர்தல் நாளான


23.4.2026 அன்று அதிகாலை முதல் இரவுநேரம் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது.


இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முஜிபுர் இந்திய தேர்தல் ஆணைய தமிழ்நாடு அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பணிகளில் பள்ளிக் கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்கள்பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் நாளுக்கு அடுத்த நாளான 24.4.2026 வெள்ளிக்கிழமை பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தேர்தல் பணி மிகவும் பொறுப்பும் கவனமும் உடைய பணியாகும்.


இப்பணிகளை நிறைவேற்ற உடல் மற்றும் மன உழைப்பும் அதிகம் தேவைப்படுகிறது.


 குறிப்பாக ஓட்டுப் பதிவு நிறைவடைந்த பின்பு ஒட்டுப்பெட்டி ஒப்படைக்கும் பணிகள் இரவு நேரம் வரை, நள்ளிரவு வரை நீடிப்பதால், அடுத்த நாள் உடனடியாக பள்ளிக்கு வருவது ஆசிரியர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.


பல ஆசிரியர்கள் தன் இருப்பிட முகவரியிலிருந்து வெகு தொலைவில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதும், பல ஆசிரியர்கள் ஒட்டுச் சாவடி மையத்திலிருந்து 24.4.2026 அன்று அதிகாலையே தன் இருப்பிடத்திற்குச் சென்று சேர்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


எனவே, ஆசிரியர்கள் உடல் நலனையும், மன நலனையும் கருத்தில் கொண்டு 23.4.2026 அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும். அதற்கு மறுநாள் 24.4.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முஜிபுர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Special camp for inclusion of names in the electoral roll - District Collector Press Release

  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.10.2026 அன்று சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக் குறிப்பு வெளியீடு Special camp for inc...