கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: வலுக்கும் கண்டனம்






 முதலமைச்சராக விஜய் பதவியேற்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு வலுக்கும் கண்டனம்


பதவியேற்பு விழாவில் முதலில் வந்தேமாதரம், நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையானது. 


"மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறிய போது கூட அங்கு "வந்தே மாதரம்"  ஒலிக்கவில்லை. ஆனால் இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் பட்சமாக நிறுத்தி தமிழ் தாயின் முகத்தில் கரியைப் பூசி உள்ளனர். மரபுகளை சிதைத்து தமிழை அவமதிப்பது தான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா? தமிழ் தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு நேர்ந்த அவமானம்" என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 


முதலமைச்சர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்


முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: வலுக்கும் கண்டனம்... 


விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்றார். இந்தப் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக இசைக்கப்பட்டது.


இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவருகிறது. திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


முதலமைச்சராக விஜய் பதவியேற்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு விசிக, சிபிஎம், வைகோ மற்றும் ராமதாஸ் கண்டனம்  தெரிவித்துள்ளனர். 


முதலமைச்சரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல என சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும். அந்த வகையில் அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப்பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது என வலியுறுத்தி இருந்தார்.


முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாமல் வந்தேமாதரம் பாடப்பட்டது தமிழ்நாட்டின் மரபை மீறிய நிகழ்வு என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 


விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது மரபு மீறிய செயல் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


பதவியேற்பு விழாவில் தமிழுக்கு 3வது இடமா? என விசிக கண்டனம் தெரிவித்துள்ளது.



இந்நிலையில், தாய் தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும்; தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடுதான் ஆளுநர் கொடுங்குற்றத்தை அரங்கேற்றினாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution : The number of SMC members to be elected based on the number of parents

  பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு 2026-2028  பெற்றோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை  S...