கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மீண்டும் பரவும் கொரோனா | ஆந்திராவில் 4 பேர் உயிரிழப்பு



ஆந்திராவில் மீண்டும் கொரோனா


ஆந்திர பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 16 வரையிலான காலகட்டத்தில் 12 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


- ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ தகவல்


3 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மீண்டும் Corona பரவல் வேகமெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன், சிகிச்சை பெற்று வந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். 


இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்ட 12 பேரில் கடப்பாவைச் சேர்ந்த 8 பேர், குண்டூரைச் சேர்ந்த 2 பேர், விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடாவைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். 3 பேர் வீட்டு தனிமைப்படுத்தலிலும், 2 பேர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொற்று வேகமாகப் பரவும் அபாயம் இல்லை. அதே சமயம் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா புதிய வகை வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிய 5 மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன” என அதில் கூறப்பட்டுள்ளது. ஆந்திரா மட்டுமின்றி 2026 ஜூலை 1 முதல் நாடு முழுவதும் 339 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census 2026 - HLB Blank Layout Map

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 - விவரமான கோட்டு வரைபடம்   Census 2026 - HLB Blank Layout Map >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்