கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருப்பூர் மாவட்டத்தில் 9 பள்ளிகளை மூட முடிவு

 


திருப்பூர் மாவட்டத்தில் 9 பள்ளிகளை மூட முடிவு - நாளிதழ் செய்தி 


9 பள்ளிகளை மூட முடிவு


ஒரு மாணவர் கூட இல்லாமல் என்ன செய்வது?


திருப்பூர், ஜூலை 7-திருப்பூர் மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லாத, 9 அரசு பள்ளி கள் நடப்பு கல்வியாண்டில் மூடும் நிலை உருவாகியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில், 144 அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, 10க்கும் குறைவாக உள்ளது. இது தவிர, ஒரு மாணவர் கூட இல்லாமல், 9 பள்ளிகள் உள்ளன. குறிப்பாக, தாராபுரம் கல்வி மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லாமல், 7 பள்ளிகளும், திருப்பூர் கல்வி மாவட்டத்தில், 2 பள்ளிகளும் உள்ளன.


வேலை தேடி பெற்றோர் வெளியூர் செல்வது, இடம்பெயர்ந்து குடியேறுவது, கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் நகர்வது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூர் மாவட்டத்தில் பல கிராமப்புற அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்துள்ளது. 


ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாததால், 9 பள்ளிகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது


அய்யம்பாளையம், பொங்கலுாரில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆகிய இரண்டிலும், ஒரு மாணவர் கூட நடப்பு கல்வியாண்டில் சேரவில்லை.


இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளைச் சுற்றி குடியிருப்புகள் மிகக் குறைவாக உள்ளன. 


பள்ளி வயதுடைய குழந்தைகள் இல்லாததால் சேர்க்கை குறைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...