பதவி விலகினார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடந்து வரும் நிலையில் ராஜினாமா
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20ஆம் தேதி நடத்திய பேரணியின் பொழுது காவல்துறையினர் தாக்குதலில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். கனிமொழி தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தனர்.
வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார்.
இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் மத்திய அரசுக்கும் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்றனர்.
மந்திரி அமைச்சர் ராஜினாமா
இந்த நிலையில், இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "கனத்த மனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த 10 நாட்களாக நாட்டில் நிலவி வரும் சூழல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அரசின் வரலாற்றில் போராட்டங்களுக்கு பணிந்து, மத்திய அமைச்சர் பதவி விலகுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.