கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்தியாவின் E20 பெட்ரோல் வேண்டாம் என பூடான் கூற காரணம் என்ன?



இந்தியாவின் E20 பெட்ரோல் வேண்டாம் - பூடான்


வாகனத்தின் என்ஜின்கள் முழுமையாக பழுதடையும் என்று கூறி இந்தியாவின் E20 பெட்ரோலை வாங்க பூட்டான் மறுப்பு.


E20 பெட்ரோலில் சிறிதளவு நீர் கசிந்தாலும் வாகன என்ஜின்கள் முழுமையாக சேதமடையும் என்றும் மலைப்பாங்கான சாலைகளில் E20 பெட்ரோல் போதிய மைலேஜ் மற்றும் எனர்ஜியைத் தராது என்பதாலும் பூட்டான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.


எத்தனால் கலந்த E20 பெட்ரோல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும். மலைப்பிரதேசமான பூடானில் சேமிப்பு தொட்டிகளுக்குள் சிறிதளவு தண்ணீர் கசிந்தாலும் பெட்ரோலின் தரம் கெட்டு, வாகனங்களின் எஞ்சின்கள் பழுதாகிவிடும் என்பதால், பூடான் இந்த எரிபொருளை வாங்க மறுத்து, சாதாரண பெட்ரோலை வழங்குமாறு கோரியுள்ளனர்.


பூடான் E20 பெட்ரோலைத் தவிர்ப்பது ஏன்?

ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை (Hygroscopic nature): 

பெட்ரோலில் சேர்க்கப்படும் எத்தனால் காற்றில் மற்றும் தொட்டிகளில் உள்ள ஈரப்பதத்தை மிக எளிதாக ஈர்க்கும் தன்மை கொண்டது.


பழமையான சேமிப்பு தொட்டிகள்:

 பெரும்பாலான நிலத்தடி பெட்ரோல் சேமிப்பு தொட்டிகள் பழமையானவை. அவை மலைப்பகுதிகளில் அமைந்துள்ளதால், நீர் கசிவு ஏற்பட்டு எரிபொருள் மாசடைய அதிக வாய்ப்புள்ளது.


எஞ்சின் பாதிப்பு: 

எத்தனால் தண்ணீரை உறிஞ்சுவதால் எரிபொருள் பால் போன்று நிறம் மாறிவிடும். இதனால் மலைப்பாங்கான சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எஞ்சின்கள் பழுதடைந்து பாதியிலேயே நின்றுவிடும் அபாயம் உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வ...