கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC மறு கட்டமைப்பு (12.09.2026) - பள்ளிகளில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை

 

SMC மறு கட்டமைப்பு (12.09.2026) - பள்ளிகளில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை


 *நிகழ்விற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:*


பள்ளி பாடத்திட்டம்

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை முன்கூட்டியே தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.  

கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.  

மறுகட்டமைப்புக்குத் தேவையான படிவங்கள் மற்றும் ஆவணங்கள் தயாராக உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.  

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிக்கு மட்டுமே பார்வையாளராகச் செல்ல வேண்டும்.  



*நிகழ்வின் போது* *மேற்கொள்ள வேண்டிய பணிகள்:*


நிகழ்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவே ஒதுக்கப்பட்ட பள்ளிக்குச் செல்ல வேண்டும்.  

நிகழ்வு உரிய நேரத்தில் தொடங்க உதவிட வேண்டும் மற்றும் நிகழ்வு முடியும் வரை பள்ளியிலேயே இருக்க வேண்டும்.  

எவ்விதக் குறுக்கீடும் செய்யாமல், நடுநிலையோடு நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும்.  

பெண்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  

பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், தலைமையாசிரியருக்குச் சார்பற்ற முறையில் தீர்வு காண ஆலோசனை வழங்க வேண்டும்.  



*நிகழ்விற்குப் பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:*


படிவங்கள் 1 முதல் 7 வரையிலான ஆவணங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.  

பார்வையாளர்களுக்கான Google Form அறிக்கையை நிகழ்வு நடைபெறும் அதே நாளில் மாலை 6 மணிக்குள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.


 *கட்டாயம் செய்ய வேண்டியவை:*


அரசு வழிகாட்டுதல்களையும் சுற்றறிக்கைகளையும் முழுமையாகப் பின்பற்றி நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.  

மாணவர் நலன் மற்றும் பள்ளி வளர்ச்சியையே முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.  

ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட/வட்டாரப் பார்வையாளர் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.  


*கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:*


தங்களுக்குத் தெரிந்த நபர்களை உறுப்பினராகத் தேர்வு செய்ய தலைமையாசிரியருக்கு அழுத்தம் கொடுப்பதோ பரிந்துரைப்பதோ கூடாது. 

தேர்வு முடிவுகளை மாற்ற முயற்சி செய்யக் கூடாது.  

தலைமையாசிரியரின் மறுகட்டமைப்பு நடைமுறைகளில் தேவையின்றி தலையிடவோ, ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறவோ கூடாது.  

ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பார்வையாளராகப் பங்கேற்கக் கூடாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution : The number of SMC members to be elected based on the number of parents

  பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு 2026-2028  பெற்றோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை  S...