கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SMC லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

October 2024 Pay Demand Bill Form for Temporary Teachers appointed by SMC


 பள்ளி மேலாண்மை குழு SMC School Management Committee மூலம் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு அக்டோபர் 2024 மாத ஊதிய கேட்பு படிவம்


October 2024 Pay Bill Model Form for Temporary Teachers appointed by SMC



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




First Meeting of SMC - School Education Department Phone Message

 

 

 

பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டம் - பள்ளிக் கல்வித் துறையின் அலைபேசி தகவல்...


First Meeting of School Management Committee - School Education Department Phone Message...


பள்ளிக் கல்வித் துறை --

தமிழ்நாடு.... 


செய்தி .


பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு (SMC) புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பள்ளிக்கல்வித் துறையின் வாழ்த்துகள். 


நமது புதிய SMC-யின் முதல் கூட்டம் வரும் 25.10.2024 அன்று மாலை 3.00 - 4.30 மணி வரை நடக்கவிருக்கிறது. உங்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடர்புகொண்டு பேசி, இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள். 


பள்ளியின் தேவைகள் ஒவ்வொன்றையும் கவனித்து, அவற்றை குழுவாக அனைவரும் கலந்துபேசி தீர்மானங்களாக இயற்றுங்கள். 


பள்ளிக்கூடத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட குழுதான் SMC. குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்றவற்றை பார்த்துப்பார்த்து உறுதிசெய்வது SMC குழுவில் உள்ள நம் அனைவரின் பொறுப்பு. 


SMC-யின் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 


பள்ளிக் கல்வித் துறை. 

தமிழ்நாடு.


SMC Meeting on 25-10-2024 - Guidelines - SPD Proceedings, Dated : 18-10-2024

 

 

 

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் School Management Committee கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 18-10-2024...



SMC Meeting on 25-10-2024 - Guidelines - SPD Proceedings, Dated : 18-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

SMC உறுப்பினர்களுக்கு தேவையான ID CARD & LETTER PAD மாதிரி ( PDF & Word File)



 SMC உறுப்பினர்களுக்கு தேவையான ID CARD &  LETTER PAD மாதிரி ( PDF & Word File)


🏠🦹🏻 _*பள்ளி மேலாண்மைக் குழு (SMC - 2024-26) உறுப்பினர்களுக்கு தேவையான*_


1. ID CARD ( PDF Model & Empty File, Word File)


2. LETTER PAD ( PDF File & Word File)


*அனைத்தும் PDF, WORD FILE ஆக ஒரே Linkல் கொடுக்கப்பட்டுள்ளது.*


🔗 https://drive.google.com/drive/folders/1lO5HF2B8kuuqx2RNoq_IxeJFdVPq_Jxj?usp=drive_link


நன்றி!




SMC Meeting on 25-10-2024 - Agenda Addendum - SPD Proceedings, Dated : 22-10-2024

 

 

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் - கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு - மாநிலத்‌ திட்ட இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள்‌. 22-10-2024...


SMC Meeting on 25-10-2024 - Agenda Addendum - SPD Proceedings, Dated : 22-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.10.2024 - கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை - சார்ந்த கூடுதல் வழிகாட்டுதல்கள்...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 600 006

மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்.1342/அ11/ஒபக/பமேகு/2024, நாள்:22/10/2024.


பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் – கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு.

பார்வை : 1. மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - ந.க. எண்.1342/C7/பமேகு/ஒபக/2024, நாள்:18.10.2024.

2. Director, Directorate of School Education, Chennai-6, R.C.No. 037289/M1/S1/2024 Dated:17.10.2024 


******

பார்வை-1-இன்படி பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டத்தினை 25.10.2024, வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மைக் குழு செயல்படும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்காண் செயல்முறைகளில் உள்ள கூட்டப் பொருளில் கீழ்க்கண்டவாறு சேர்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை

அ) போதை பொருள் இல்லாத தமிழ்நாடு (Drug Free Tamil Nadu):

சமூக சீர்கேடுகளில் போதைப் பொருள் பயன்பாடு மிக முக்கியமானதாக உள்ளது. எதிர்கால நற்சமூகத்தை உருவாக்கும் உயரிய பணியினைப் பள்ளிகள் மேற்கொள்கிறது என்றால் அது மிகையாகாது. ஆரோக்கியமான மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருள்கள் பயன்பாடு மற்றும் அவற்றால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்கால சமூகம் போதைப் பொருள் பயன்பாடு இல்லாத சமூகமாக உருவாகும்.  இதனை உறுதிசெய்ய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் எவ்வாறு கீழ்க்காண் செயல்பாடுகளில் உதவமுடியும் என்பதை விவாதித்து தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.  

a) பார்வை-2-இன்படி அமைக்கப்பட்டுள்ள “பள்ளியளவில் போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு குழு” வில் பள்ளி மேலாண்மைக் குழுவிலிருந்து ஒருவர் உறுப்பினராக பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும்.   

b) பள்ளிகளில் போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு மன்றங்களை (Anti-drug club) உருவாக்கப்படுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.

c) ஒவ்வாரு நாளும் காலை அல்லது மதியம் அல்லது மாலை என வளாகம் முழுவதும் குறிப்பாக கழிவறைகள், விளையாட்டு மைதானம், பள்ளியின் சுற்றுச் சுவரின் இருபுறங்களிலும் புகையிலை, கூல்-லிப், சிகரெட் போன்ற பொருட்கள் கிடக்கின்றனவா என கண்காணிக்க வேண்டும்.

d) போதைப் பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களை அடையாளம் கண்டு பள்ளியளவில் போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு குழு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

e) பள்ளி அருகில் வாசலில் கடைகளில் விற்கும் பொருட்கள் என்னென்ன என குழுவாக முன்னறிவிப்பு இல்லாமல் சென்று கவனித்து ஆசிரியர் ஒருங்கிணைப்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

f) பார்வை-2-இல் போதை எதிர்ப்பு மன்றச் செயல்திட்டங்களில்             (2024-2025) கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த பள்ளியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

g) அனைத்துப் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மாணவர்களின் உடல், மனநலப் பாதுகாப்பை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக் குழு உதவ வேண்டும். 


ஆ) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO)

பாலியல் தீங்குகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் மற்றும் குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அத்தீங்குகளிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் விவாதித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்துவது. 

a) பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.

b) பாலியல் துன்புறுத்தல் குறித்து நம்பிக்கையானவர்களிடம் தெரிவிப்பது மற்றும் அதுகுறித்துப் புகாரளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். 

c) மாணவர்களிடையே ஏற்படும் நடத்தை மாற்றங்களை கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ள வேண்டும்.

d) உள் புகார் குழு (Internal Compliant Committee-ICC) 

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 [The Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013] அடிப்படையில் ஆண், பெண் இருவரும் இணைந்து பணி செய்யும் இடங்களில் உள் புகார் குழு (Internal Compliant Committee-ICC) ஒன்று அனைத்து வகையான அரசுப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும். எனவே பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உள் புகார் குழுவை ஏற்படுத்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 


இ) பள்ளிக் கல்வித் துறையின் அழைப்பு மைய எண் 14417 மற்றும்  குழந்தைகள் உதவி மைய எண் 1098: 

a) அரசின் நலத்திட்டங்கள், பாடத் திட்டங்கள், தேர்வு முறைகள் மற்றும் மேற்படிப்பு சார்ந்த விவரங்கள், வளரிளம் பருவத்தினருக்கான மனநிலை சார்ந்த அறிவுரைகள், தேர்வுக்காக தயார்ப்படுத்துதல், தேர்வை எதிர்கொள்வது மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த பயத்தைப் போக்குதல் போன்ற தகவல்கள், ஆலோசனைகளை 14417 இலவச அழைப்பு மைய எண் வாயிலாக பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்பது குறித்து பள்ளி மேலாண்மைக் குழுவில் அவசியம் பகிர்ந்துகொள்ள வேண்டும். 

b) குழந்தைகள் நலன், பாதுகாப்பு, குழந்தைத் திருமணங்கள் தடுப்பு சார்ந்த சந்தேகங்கள், மற்றும் தகவல் அளித்திட 1098 குழந்தைகள் உதவி மைய எண்ணை தொடர்புகொள்ளலாம் என்கிற விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்படுத்த வேண்டும். 

c) மேற்காண் உதவி மைய எண்களை பள்ளி வளாகம், மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 


ஈ) விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பது:

மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி வகுப்பு நேரம் முடிந்த பிறகு சிறப்பு விளையாட்டு வகுப்புகள் நடத்திடவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கீழக்காண் செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

a) மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள தேவையான விளையாட்டுப் பொருட்கள், விளைாயட்டு மைதானம் மற்றும் முறையான பயிற்சியாளர் போன்ற ஏற்பாடுகள் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி (NSNOP)  திட்டம் வாயிலாக பெற தீர்மானம் நிறைவேற்றலாம்.

b) ஒவ்வொரு வருடமும் Battery test முறையாக நடத்தப்படுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும். 

c) மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

d) விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதன் சாதக பலன்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்படுத்த வேண்டும். 


உ)  திறந்த வெளி மலம் கழித்தல் தடுத்தல் (Prevention of Open Defecation): 

திறந்த வெளி மலம் கழித்தலால் பொது சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பல வகையான தொற்று நோய்கள் ஏற்பட இவை முக்கியக் காரணியாக உள்ளது. பள்ளி வளாகம், பள்ளிக்கு வரும் வழியில், தெருக்களில், பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுத்தல் வாயிலாகப் பொது சுகாதாரம் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றி, இதுகுறித்து கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.     

a) பள்ளிகளில் உள்ள கழிவறைகள் போதிய தண்ணீர் வசதியுடன், பயன்படுத்தும் வகையில் இருப்பதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.

b) கழிவறைகள் பயனற்ற நிலையில் இருப்பது, நீரிணைப்பு இல்லாமல் இருப்பது, போதிய எண்ணிக்கையில் கழிவறைகள் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட தேவைகளை ஆலோசித்து பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

c) மாணவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் திறந்தவெளி மலம் கழித்தல் பிரச்னைகள் இருப்பின், அதுகுறித்த விவரங்களை பள்ளி மேலாண்மைக்கு குழு கூட்டத்தில் பகிர்ந்து உரிய தீர்மானங்களை நிறைவேற்றி கிராம சபைக் கூட்டங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மேற்காண் கூடுதல் கூட்டப் பொருள்களை (Addendum) சேர்த்து பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றிட தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




மாவட்டத் திட்ட இயக்குநருக்காக


பெறுநர்:

 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 

(அனைத்து மாவட்டங்கள்)


நகல்: (மின்னஞ்சல் வாயிலாக)

1. அரசுச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை-9.

2. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்

3. இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை 

4. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்


SMC Members Registration - EMISல் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்...

 

 

 


அனைவருக்கும் வணக்கம்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் SMC Members Registration - EMISல் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்...


1. Delete option enabled.

தவறாக Category. மாற்றி registration செய்திருந்தால் delete option பயன்படுத்தி மாற்றம் செய்யலாம்.


2.   Final submit option enabled

 24 members க்கும் குறைவான உறுப்பினர்கள் உள்ள பள்ளிகளுக்கும் final submit கொடுக்கும் option உள்ளது.


3. Vice-president Category ல் மாற்றுத்திறனாளி parent உடன் 4th 'Other' option வழங்கப்பட்டுள்ளது.


4. Local body number இரு பள்ளியில் தேர்வாகி இருந்தால் ஒரே Mobile number, Adhaar number பயன்படுத்தும் option கொடுக்கப்பட்டுள்ளது. 


5. ஒரு முறை Final submit கொடுத்து விட்டால் இனி Edit செய்ய முடியாது.


6. Alumini membersல் 3 உறுப்பினர்களுக்கு Sub- category ல் parent aluminiஐ Select செய்ய வேண்டும். parent அல்லாத Aluminiக்கு sub- categoryல் general alumini option தேர்வு செய்ய வேண்டும்.



💐அனைவருக்கும் வணக்கம்💐


 *SMC Member Updation சார்ந்த தகவல் -* 


🎯SMC EMIS UPDATION

இல் 24 உறுப்பினர்களுக்கு குறைவாக இருந்த பள்ளிகளுக்கு FINAL SUBMISSION வழங்கும் OPTION தற்பொழுது ENABLE செய்யப்பட்டுள்ளது.



🎯Final submission கொடுத்த பிறகு எந்தவித திருத்தங்களையும் கண்டிப்பாக மேற்கொள்ள முடியாது .



🎯ஆகவே final submission கொடுக்கும் முன் விவரங்களை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு கொடுக்க வேண்டும் .


🎯துணைத் தலைவர் விபரங்கள் பதிவு செய்யும்போது அதில் உள்ள மூன்று option களும் பொருந்தாத நிலையில் தற்பொழுது நான்காவதாக other option கொடுக்கப்பட்டுள்ளது .



🎯ஏதேனும் தவறான பதிவுகள் இருந்தால் அதை நீக்க delete option வழங்கப்பட்டுள்ளது .



🎯உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் ஒரு பள்ளிக்கு மேல் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் தற்போது மற்றொரு பள்ளியிலும் பதிவேற்றம் செய்வதற்கான option enable செய்யப்பட்டுள்ளது.


ஒரு பள்ளிக்கு ஒரு Ward member மட்டுமே இருக்கும் பட்சத்தில் 1. Ward member உடன் 2. ஊராட்சி மன்ற தலைவரையும் சேர்த்துக் கொள்ளலாம்.


🎯HM அல்லது teacher அல்லது இருவருமே இல்லாத பள்ளிகளில் ஆசிரியர் விவரங்களுக்கு அங்கு மாற்றுப் பணியில் அல்லது பொறுப்பில் உள்ள. ஆசிரியர் விவரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



🎯குறைந்தபட்சம் ஐந்து பெற்றோர் உறுப்பினர்களாவது இருந்தால் மட்டுமே final submission வழங்க முடியும் .


🎯Alumini  general அல்லது  alumini parent என்பதில்  alumini பொது உறுப்பினர்களுக்கு general என்ற option ஐயும் பெற்றோர் சார்ந்த உறுப்பினர்களும் alumini parent என்ற optionம் கொடுக்க வேண்டும்.


   Alumini parent option  ஐ select செய்யவில்லை எனில் alumini பொது உறுப்பினராக  கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.


🎯 ஆகவே அதை தவிர்க்க alumini parent உறுப்பினர்களுக்கு alumini parent  என்பதை select செய்ய வேண்டும்.


Alumni Parent - 3

Alumni General -1 என்ற அடிப்படையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


அனைத்து உறுப்பினர்  விவரங்களும் சரியாக உள்ளதை உறுதி செய்த பின் 19.09.2024க்குள் Final submission கொடுத்திடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Final submission கொடுத்தபிறகு எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது.


 நன்றி🙏


"நிகழ்ச்சி நிரல் எங்களுக்கு தெரியாது" - அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்...

 "நிகழ்ச்சி நிரல் எங்களுக்கு தெரியாது" -  அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்...




“மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை;


இந்த மாதிரியான நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை;


நாங்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை”


- சென்னையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ம.சித்ரகலா மற்றும் நிர்வாகிகள் கூட்டாக பேட்டி


பள்ளி மேலாண்மைக் குழு SMC, பள்ளி செயல்பாடுகளில் தலையிடக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு.கண்ணப்பன் அவர்கள் அறிவுறுத்தல்...

 

 


 பள்ளி மேலாண்மைக் குழு SMC, பள்ளி செயல்பாடுகளில் தலையிடக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு.கண்ணப்பன் அவர்கள் அறிவுறுத்தல்...



SMC- புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS WEBSITE ல் பதிவு செய்ய கடைசி நாட்கள் விவரம்...

 

 


பள்ளி மேலாண்மை குழு SMC- புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS WEBSITE ல் பதிவு செய்ய கடைசி நாட்கள் விவரம்...


🪴தொடக்கப்பள்ளிகள் : 23.8.24


🪴உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்: 30.08.2024


🪴 நடுநிலைப் பள்ளிகள்: 06.09.2024



தமிழ்நாடு அரசுப் பள்ளி SMC குழுக்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்வு: எமிஸ் தளத்தில் பதிய உத்தரவு...

 

 


தமிழ்நாடு அரசுப் பள்ளி SMC குழுக்களுக்கு புதிதாக உறுப்பினர்கள் தேர்வு: EMIS தளத்தில் பதிய உத்தரவு...



💥சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு (எஸ்எம்சி) புதிதாக தேர்வான உறுப்பினர்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.



💥தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்தது. 



💥இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 37,061 அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி குழுக்களுக்கு புதிய உறுப்பினர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


💥அதன்படி முதல்கட்டமாக 12,117 ஆரம்பப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி எஸ்எம்சி குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டன. தொடர்ந்து 2-வது கட்டமாக மீதமுள்ள 11,924 தொடக்கப் பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் நேற்று மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதற்காக பள்ளிகளுக்கு பெற்றோர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவற்றில் அதிக எண்ணிக்கையில் ஆதரவு பெற்ற பெற்றோர்கள் எஸ்எம்சி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.


💥இதேபோல், தலைவர், துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியில் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் அடங்கிய 24 பேர் கொண்ட புதிய குழு உருவாக்கப்பட்டது. அடுத்தகட்டமாக மீதமுள்ள அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஆகஸ்ட் 24, 31-ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.



💥இந்நிலையில், எஸ்எம்சி குழுவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஆதார் எண் உட்பட விவரங்களை எமிஸ் தளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும். இது சார்ந்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டுமென சுற்றறிக்கை வாயிலாக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.



SMC மறுகட்டமைப்பு 2024 - தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை EMISல் பதிவு செய்தல் - வழிகாட்டு காணொளி...

 

 


 SMC மறுகட்டமைப்பு 2024 - தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை EMISல் பதிவு செய்தல் - வழிகாட்டு காணொளி...





SMC மறுகட்டமைப்பு செய்யப்பட்ட விவரங்களை EMIS-ல் பதிவேற்றம் செய்தல் குறித்த தகவல்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 16-08-2024...

 

 


SMC மறுகட்டமைப்பு செய்யப்பட்ட விவரங்களை EMIS-ல் பதிவேற்றம் செய்தல் குறித்த தகவல்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 16-08-2024...


Information regarding uploading of SMC Reconstitution details in EMIS – Proceedings of State Project Director, Dated : 16-08-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SMC Reconstitution 17.08.2024 - Participants Attendance Guidelines...

 

 


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு SMC Reconstitution 17.08.2024 - Participants Attendance Guidelines...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 SMC மறு கட்டமைப்பு கூட்டத்தில் (17.08.2024) பங்கேற்றவர்களின் வருகையை பதிவு செய்வதற்கு...


          EMIS WEBSITE

              ⬇️

              SCHOOL

               ⬇️

         SMC RECONSTITUTION

                ⬇️

         PARTICIPATION ATTENDANCE

                 ⬇️

SELECT DATE, FILL  MALE & FEMALE

                 ⬇️

                 SUBMIT


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இல் பதிவேற்றம் செய்வது எப்படி...

 

 


 பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இல் பதிவேற்றம் செய்வது எப்படி... 


SMC Reconstitution - EMIS Website Entry Procedure...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Schools SMC Reconstitution 2024 - 26

Guidelines:

1.Number of Parents from Marginalised Communities : Atleast (0.75 * parent members)

2.Number of Female Members Mandated: Atleast (0.5* parent members)

3.Each member should be given their mobile numbers. The same mobile number cannot be added for other members.

உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய கைப்பேசி எண்ணை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும். ஒரு உறுப்பினருக்கு அளித்த கைப்பேசி எண்ணை வேறோரு உறுப்பினருக்கு அளிக்க இயலாது.


Select Member category

Chairperson

Vice Chairperson

HM

Teacher Representative

Parent Members

Local Body Representative

Educationist

Alumni


பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய புகைப்படங்கள் விவரம்...



>>> SMC மறுகட்டமைப்பு நிகழ்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தேவையான விவரங்கள் அடங்கிய படிவம்...


12,117 அரசு தொடக்கப் பள்ளிகளில் எஸ்எம்சி மறுகட்டமைப்பு - பெற்றோர் திரளாக பங்கேற்பு...

 

 


12,117 அரசு தொடக்கப் பள்ளிகளில் எஸ்எம்சி மறுகட்டமைப்பு - பெற்றோர் திரளாக பங்கேற்பு...



SMC மறுகட்டமைப்பு Reconstitution நிகழ்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தேவையான விவரங்கள் அடங்கிய படிவம்...

 


 🏠🦹🏻 SMC மறுகட்டமைப்பு Reconstitution நிகழ்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தேவையான விவரங்கள் அடங்கிய படிவம்...


Form for uploading details of selected members through SMC Reconstitution event on EMIS website...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இல் பதிவேற்றம் செய்வது எப்படி...


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வு நடைபெற உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை...

 


பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு SMC Reconstitution நிகழ்வு நடைபெற உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை...


பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு வரும் ஆகஸ்ட்10 தேதி 50% தொடக்கப்பள்ளிகள் ஆகஸ்ட் 17 தேதி 50% தொடக்கப் பள்ளிகள்...



 * 10-ந் தேதி➖ 12,117  தொடக்கப் பள்ளிகளிலும்,


*17-ந்தேதி➖ 11,924 தொடக்கப் பள்ளிகளிலும்,


*24-ந் தேதி➖ 6,152 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும்,


*31-ந் தேதி ➖6,868 நடுநிலைப் பள்ளிகளிலும்


 பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது.


பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு விழிப்புணர்வுக் கூட்டம் தொடர்பான காணொளிகள், அரசாணைகள், செயல்முறைகள் & படிவங்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்ய...

 


 பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு SMC Reconstitution விழிப்புணர்வுக் கூட்டம் தொடர்பான காணொளிகள், அரசாணைகள், செயல்முறைகள் & படிவங்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்ய...


🏠🦹🏻 *பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 2024 ~ 2026*


▪️ உறுப்பினர் சான்றிதழ்

▪️ உறுதிமொழி 

▪️ கூட்ட அழைப்பிதழ் 

▪️ படிவங்கள் 

▪️ அட்டவணைகள் 

▪️ நிகழ்ச்சி நிரல் 

▪️ பார்வையாளர் படிவம்

▪️ வழிகாட்டி அரசாணைகள்

▪️ சுவரொட்டிகள் 

▪️ விழிப்புணர்வு கூட்ட வீடியோக்கள்


📌 *தேவையான அனைத்தும் ஒரே Link ல் PDF , Word , Exel,  PSD, Picture & Video File ஆக வழங்கப்பட்டுள்ளது.* 


🖇️ https://drive.google.com/drive/folders/1F3UTNkcubZEog10uCa794mB_ER3DFTbf?usp=drive_link


அன்புடன்,

பெ. அலெக்ஸ் பாண்டியன்,

BRTE, BRC - சேடபட்டி 

9943311042



இன்று (02.08.2024) நடைபெறுகின்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும் வழிமுறை...

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்.. இன்று (02.08.2024) நடைபெறுகின்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு - பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையை கீழ்கண்ட வழிமுறையை பயன்படுத்தி தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..



இன்று (02.08.2024) நடைபெறுகின்ற பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு SMC Reconstitution பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும் வழிமுறை...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...





>>> 02.08.2024 அன்று நடைபெறும் "SMC பெற்றோர் விழிப்புணர்வு" கூட்டத்தில் பங்குபெறும் பெற்றோர்களின் வருகை விவரத்தினை TNSED Parents Appல் HM Login ல் சென்று மாலை 6 மணிக்குள் அனைத்துப் பள்ளிகளும் பதிவினை மேற்கொள்ள உத்தரவு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...