கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் விலையில்லா NMMS பயிற்சி புத்தகம்

 


தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் விலையில்லா NMMS பயிற்சி புத்தகம்


அன்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.. நமது NMMS SAT புத்தக தயாரிப்புக் குழுவின் சார்பில் இக்கல்வியாண்டு ( 2026-27) தமிழ் நாடு முழுவதும் *"அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும்" NMMS தேர்வு எழுதவுள்ள தாய் தந்தையரை இழந்த / தாய் அல்லது தந்தை இவர்களுள் எவரேனும் ஒருவரை இழந்த* மாணவ மாணவிகளுக்கு NMMS MOHAN குழுவால் புதிதாக உருவாக்கப்பட்ட *NMMS பயிற்சி புத்தகங்களை (MAT மற்றும் SAT தமிழ் & ஆங்கில வழி)*

 SAT புத்தக ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மூலம்) விலையின்றி அளிக்க உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக GOOGLE FORM அனுப்பி உள்ளோம். அதில், உரிய விபரங்களை அளித்து, தொடர்புடைய மாணவர்களிடம் எமது புத்தகங்கள் சென்றடைய உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.

கடந்த ஆண்டு Google form ஆனது சில மாவட்டங்களைச் சென்றடையாத காரணத்தால் அம் மாவட்டங்களைச்  சேர்ந்த குழந்தைகளுக்கு  புத்தகங்கள் கிடைக்கவில்லை.  எனவே, ஆசிரியப் பெருமக்கள் ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்து உரிய நபர்கள் பயனடைய உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி..

*குறிப்பு: புத்தகங்களானது பதிவு செய்யப்பட்ட விவரங்களின் சரிபார்த்தலுக்குப் பின்னர், நவம்பர் மாதம் 24 ஆம் தேதிக்கு மேல் வழங்கப்படும்.*


பதிவு செய்ய இணைப்பு :


https://forms.gle/ddLjg4AZupC3QXch8



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 90% மானியத்தில் விரைவு மின் இணைப்பு - அரசாணை வெளியீடு

ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 90% மானியத்தில் விரைவு மின் இணைப்பு வழங்க அரசாணை வெளியீடு G.O.Ms. No : 83 ,  Dated : 19-10-2026 ரூபாய் மூன்று ல...