கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Diwali Precautionary Measures | DSE Proceedings



தீபாவளி பண்டிகையின் பொழுது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Precautionary measures to be taken during the Deepavali festival – Proceedings of the Director of School Education


Diwali Celebration - Precaution and Safety Measures to students


தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



/தனிக்கவனம்/ மிக அவசரம்/


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


முன்னிலை: திருமதி ந. லதா


ந.க. எண். 000936/எம்2/இ1/2026 , நாள். 02.11.2026


பொருள் : பள்ளிக் கல்வி - தீபாவளி 2026 மகிழ்ச்சியாக கொண்டாடுதல் -தீபாவளி பண்டிகையின்போது தீ விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் - தொடர்பாக.


தீபாவளி பண்டிகை 08.11.2026 அன்று கொண்டாடப்பட உள்ளது. இத்தகைய மகிழ்ச்சிகரமான நன்னாளில் சில இடங்களில் கவனக் குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்பட்டு குடிசைப் பகுதிகளில் உயிர் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்படுகிறது. மேலும், சிறார்களுக்கு தீக்காயங்களும் சில நேரங்களில் பார்வை இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதும் தடுப்பதும் நமது முக்கிய கடமையாகும்.


தீபாவளி நன்னாளில் சிறியவர்களும், பெரியவர்களும் பட்டாசு பயன்படுத்தும் வேளையில் முறையாக. கவனமாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். கவனக்குறைவு காரணமாக தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், விபத்துக்கள் மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி கொண்டாட அற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது.


காலை இறைவணக்கத்தின்போது, பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு தலைமையாசிரியர்கள் பள்ளியில் தீபாவளிப் பண்டிகையின்போது பின்பற்றப்படவேண்டிய கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்க உரிய நடவடிக்கை எடுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


பட்டாசுகள் கொளுத்துமிடத்திற்கு அருகாமையில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக்கொள்ள வேண்டும்.


பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையிலோ வெடிக்க கூடாது. மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடிக்க வேண்டும்.


ராக்கெட்டுகளை வெட்ட வெளியில் குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே செலுத்த வேண்டும்.


குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும்.


வெடிக்காத பட்டாசுகளை குனிந்து பரிசோதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


விவரம் அறியாத இளஞ்சிறார்களை வெடிகளைக் கொளுத்த அனுமதிக்காமல் இருத்தல் வேண்டும்.


உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் ஆகியோர் பட்டாசு வெடிக்கும்போது வந்தால் அவர்கள் பாதுகாப்பாக கடந்து சென்ற பின்னர் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.


பட்டாசுகளை மின் சாதன பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு உருளை அருகில் வைத்து வீடுகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.


விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவைகள் பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. பறவைகள் அடைக்கலமாகும் பகுதிகளிலும் பட்டாசுகளை வெடிக்கச் செய்வதை தவிர்த்திட வேண்டும்.


மூடிய பெட்டிகளில்/ பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கக்கூடாது.


பட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகள், டெரிகாட்டன். டெரிலின் ஆகிய எளிதில் தீ பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது.


பட்டாசுகளை கூட்டமான பகுதிகளிலும் தெருக்களிலும் மற்றும் சாலைகளிலும் வெடிக்கக்கூடாது.


பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ வெடிக்கக்கூடாது.


நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.


பெட்ரோல் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ கூடாது.


அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. ஏனெனில் அது உடலையும் மனநிலையையும் பாதிக்கும். காதுகள் செவிடாகக் கூடும். கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்படவேண்டாம். 


 சென்ற ஆண்டைப் போன்றே இவ்வாண்டும் மேற்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி மகிழ்ச்சி நிறைந்த விபத்தற்ற தீபாவளியாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளிக் கல்வி இயக்குநர் (மு.கூ.பொ) 


பெறுநர்


முதன்மைக் கல்வி அலுவலர். முதன்மைக் கல்வி அலுவலகம், அனைத்து மாவட்டங்கள்.


நகல்


அரசுச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-09


அவர்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கு பதில் அலுவலகத்தில் ஆசிரியர்கள் - ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி

பள்ளிக்கு பதில் அலுவலகத்தில் ஆசிரியர்கள் - ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி (நாளிதழ் செய்தி)  பள்ளிக்கு வராமல் கல்வி அலுவலகங்களுக்குச் ச...