கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DSE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Inspire Manak Award 2026-2027 New Entries | DSE Proceedings

 


 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Inspire Manak Award 2026-2027 New Entries | DSE Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,சென்னை 6. 

முன்னிலை - முனைவர். ச. கண்ணப்பன், 


ந.க.எண்.038471/எம்2/இ2/2026 , நாள்: 21.07.2026


பொருள்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை 25 - புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது 2026-2027 ஆம் ஆண்டிற்கான - புதிய பதிவுகள் செய்வது தொடர்பாக


பார்வை

1) Neha Rawat, Project Associate 1, NIF INSPIRE-MANAK. Letter Dated. 14.07.2026


2) செயல் இயக்குநர். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை அவர்களின் கடித எண் 4394/Pl/2020 நாள் 14.07.2026


3) தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க. எண் 038471/எb2/$2/2026 நாள் 17.07.2026


மாணவர்களை இளம் அறிவியல்பால் ஈர்க்கும் திட்டமே INSPIRE MANAK விருதுத் திட்டமாகும். இத்திட்டம், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூலம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுப்பணிகளை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் பள்ளிக் கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வருகிறது.


6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணவர்களில் அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின்கீழ், பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களின் 5 சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகளை பரிந்துரை செய்யலாம். சமுதாயத்திற்கு பயன்மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த, புதுமையான திட்டங்களை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள திட்டங்களைவிட எந்தவகையில் மேம்பட்டது என்பதைத் பொறுத்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது ரூ.10,000/-(ரூபாய் பத்தாயிரம் மட்டும்) பரிசுத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த பரிசுத் தொகையைக் கொண்டு மாணவர்கள் தங்கள் திட்ட மாதிரி வடிவங்களை சிறப்புறத் தயாரித்து போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களும் விருதுத் தொகையின் உதவியோடு சிறந்த முறையில் அறிவியல் காட்சிப்பொருட்களைத் தங்கள் அறிவியல் திறனுக்கேற்ப உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத் தனது கருத்துருவை விளக்கமாக www.inspireawards


dst.gov.in இணையதளத்தில் பள்ளி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள். மாவட்ட அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்படும். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறும் 10% மாணவர்கள் மாநில


அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொள்வார்கள். மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பதக்கங்கள் பரிசாக வழங்கப்படும். மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றிபெறும் மாணவர்களில் 10% மாணவர்கள். புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் கலந்துகொள்வார்கள். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை. புதுடெல்லி இச்செயல்களுக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொள்கிறது என்று பார்வை(1) மற்றும் (2)ல் காணும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், பார்வையில் காணும் கடித நகல்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


2026-2027ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 15.07.2026 முதல் தொடங்கப்பட்டுள்ள விவரம் ஏற்கனவே பார்வை (3)ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இதற்காக பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் பதிவு செய்ததைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பதிவு செய்யலாம். அதாவது மேல்நிலைப் பள்ளியாக இருப்பின் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 3 மாணவர்களும், 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் இருந்து 2 மாணவர்களும் என மொத்தம் 5 மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். உயர்நிலை பள்ளியாக இருப்பின் 6ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். நடுநிலைப் பள்ளிகள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 5 மாணவர்கள் பதிவு செய்யலாம். இதற்காக www.inspirewards-dst.gov.in στοότηοΒαιαπιωχαδιού 15.07.2026 ល់ 15.09.2026 விண்ணப்பிக்க இயலும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மேற்குறிப்பிட்டஊறு. 2026-2027ஆம் ஆண்டிற்கான Inspire Manak Award-க்கு அதிகப்படியான மாணவர்கள் விண்ணப்பிக்க அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவிபெறும் / தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1) பார்வையில் காணும் கடிதங்களின் நகல்கள்


2) குறிப்புகள்


பெறுநர்


முதன்மைக் கல்வி அலுவலர்.


முதன்மைக் கல்வி அலுவலகம்,


அனைத்து மாவட்டங்கள்


நகல்


Tamilnadu Science and Technology Centre, Gandhi Mandapam Road,


Chennai-25.


NOTE (குறிப்புகள்):


1. பதிவு செய்யும்போது அலைபேசி எண் ஓராண்டு அல்லது இரண்டாண்டுகள் தொடர்புக்கு ஏற்ற வகையில் அமையுமாறு பதிவிட வேண்டும். பள்ளியின் தொலைபேசி எண் இருப்பின் அதை அவசியம் பதிவிட வேண்டும். பள்ளி மாறிச்செல்பவர்கள், ஓய்வு பெற போகும் ஆசிரியர்களின் அலைபேசியைக் கண்டிப்பாகப் பதிவிட வேண்டாம்.


2. INSPIRE MANAK விருதில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்


விரைவுத்துலங்கிக் குறியில் (QR CODE) வழங்கப்பட்டுள்ளது. 3. மின்னஞ்சல் கண்டிப்பாகப் பள்ளி மின்னஞ்சல் மட்டுமே


குறிப்பிடவேண்டும். தனிப்பட்ட மின்னஞ்சல்களைப் பதிய வேண்டாம்.


4. வங்கிக்கணக்கு மாணவரின் பெயரில் மட்டுமே இருக்க வேண்டும் 5. ஏற்கனவே புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது


பெற்றவர்கள் இந்த ஆண்டு மீண்டும் பதிவு செய்யக்கூடாது. 6. மாணவர்களுடைய ஆய்வுகள் புதியதாக சிறப்பாக அமைந்தால் மட்டுமே தேர்ந்தேடுக்கப்பட்டு ரூ.10,000/- வழங்கப்படும்.


7. புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது ஒருங்கிணைப்பாளர்கள் 1. திருமதி கி. கோமதி, கோளரங்கப் பொறியாளர் 94863 41068 2. திரு. கோ.சுடலை, வழிநடத்தும் விரிவுரையார் (தே.நி) 77089 42872


8. School Password தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் மற்றும் கைபேசி எண்கள் பின்வருமாறு (தொடர்பு கொள்ள வேண்டிய நேரம் காலை 10.00 மணி (முதல் மாலை 05.00 மணி வரை) (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை)


திரு. கோ.சுடலை, வழிநடத்தும் விரிவுரையாளர் (தே.நி) திருமதி ஜெ.துர்காபவானி, அறிவியல் உதவியாளர் நிலை-11 திரு. வி. வினோத்குமார், காட்சிக்கூட போதகர் (தே.நி) திரு.தே.சரவணன், காட்சிக்கூட போதகா திரு. சீ அருண்பிரசாத், NMR


77089 42872 98419 29435 88256 50327 99417 11029 91766 52917 77084 88203


செல்வி. மு. ஹரிணி, NMR



அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் /தனியார் பள்ளி முதல்வர்களுக்கு வணக்கம் 

Inspire Manak Award 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது அனைத்து தலைமை ஆசிரியர்களும் விரைந்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 முதன்மைக் கல்வி அலுவலர்



கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு - இயக்குநரின் செயல்முறைகள்



பள்ளிக் கல்வி - 2026-27 ஆம் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு - மாநில / மாவட்ட /வட்டார குழுக்களுக்கான வழிகாட்டல்கள் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


சென்னை 06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


முன்னிலை: முனைவர் ச.கண்ணப்பன்


ந.க.எண்.007235/கே/இ3/2026 நாள் : 02/07/2026


பொருள்: பள்ளிக் கல்வி 2026 - 27 கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு மாநில மாவட்ட/வட்டார குழுக்களுக்கான வழிகாட்டல்கள் சார்பு.


பார்வை:


1. அரசாணை (நிலை) எண். 121 பள்ளிக்கல்வித் (தொ.க.3 (2) ) துறை நாள் 19.05.2025


2. சென்னை 06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 034195/88/(தொ.க.) /பி.சி. /2025 நாள். 17.06.2025


3. சென்னை 06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண். 0313147/எப்/இ1 /2026 நாள். 01.04.2026


மாணவர், மொழிப்பாடங்கள் மற்றும் கணித செயல்பாடுகளில் அடிப்படைத் திறனை உறுதி செய்திடும் பொருட்டு 2023 2024 ஆம் கல்வியாண்டில் இணைப்புப் பயிற்சியும்' 2024 2025 ஆம் கல்வியாண்டில் Focus Learners திட்டமும் 2025 2026 கல்வியாண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 மற்றும் 9 வகுப்புகளில் பயின்ற மாணவர்களுக்கு அடிப்படைக் கற்றலில் திறன் அடைவு பெறுவதற்குப் பள்ளிகளில் முறையான வகுப்புகள் திறன் திட்டமும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களின் ஆணையின்படி, மாவட்ட திருவாகக் குழுவின் பங்களிப்போடு, மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதல்களுடன், தலைமையாசிரியர்கள் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் வழி கொண்டு சீரிய முறையில் நடத்தப்பட்டு, பெரும்பான்மையான மாணவர்கள் கற்றலில் திறன் அடிப்படையில் கற்றல் விளைவுகளைப் பெற்று முழு அடைவு பெற்றனர்.


இந்நிலையில் 6 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படைக் கற்றல் விளைவுகளுடன் அனைத்துக் கற்றல் விளைவுகளையும் உறுதிப்படுத்தும் வகையில் 2026 2027 ஆம் கல்வியாண்டில் கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு மூலம் கீழ்க்கண்ட பணிகள் மாவட்ட அளவில் நடைபெற ஏதுவாக சென்ற ஆண்டு பணியாற்றிய மாநில நிருவாக ஒருங்கிணைப்புக் குழு தொடர்ந்து இக்கல்வியாண்டும் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.


பாட மற்றும் நிருவாக ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளாவன:


1. 2026-27ஆம் கல்வி ஆண்டில் கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு அமைக்க 6 முதல் 10 வகுப்பு வரை தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 11, 12 வகுப்புகளுக்குத் தலைமை ஆசிரியர்கள். முதுகலை ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்க விருப்பமுள்ளவர்களின் பட்டியலைத் தயாரித்தல்.


2. கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழு மூலம் திறன் குறைவான மாணவர்களுக்கு முதல் பருவத்திற்குள் அடிப்படை கற்றல் அடைவு பெற வழி செய்தல்.


3. ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார குழுக்கள் மூலம் (Whatsapp Group) அடிப்படை விவரங்கள் பெறுதல்.


4. அனைத்து விதமான போட்டித் தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையிலும், மாணவர்களின் பங்கேற்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் வகையிலும் ஐந்தாண்டுத் திட்டம் தயாரித்தல் மற்றும் கல்வியாண்டு செயல்பாடுகளை மாதவாரியாக திட்டமிடுதல் (இணைப்பு -4)


5. மாணவர்களுக்கு அனைத்துக் கற்றல் விளைவுகளும் சென்றடைய மாவட்ட கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழுவில் உள்ள திறமையான. 6 முதல் 12 வகுப்பு வரை பாடத்திட்டத்தில் தொடர்ச்சியை நன்கு அறிந்த ஓர் ஆசிரியரை முதன்மைக் கருத்தாளராகக் கொண்டு, உயர்நிலை அளவில் 5 பாடங்களையும் மேல்நிலை அளவில் 12 பாடங்களையும் கருத்துப் பரிமாற்றம் செய்து வலுவூட்ட ஒருங்கிணைப்புப் பணி மேற்கொள்ளுதல்.


6. முதன்மைக் கல்வி அலுவலர் /மாவட்ட கல்வி அலுவலர்களது பள்ளிப்பார்வையின் போது காணப்பட்ட குறை மற்றும் நிறைகள் மாதந்தோறும் செயல்முறைகளாக (PROCEEDINGS) அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டதை உறுதி செய்தல்.


7. முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளி பார்வையின் போது தலைமை ஆசிரியரின் பணி மற்றும் ஆசிரியரின் கற்பித்தல் பணி சிறப்பாக இருப்பின் அவர்களைப் பாராட்டும் விதமாகப் பாராட்டுச் சான்றிதழ் (இணைப்பு-3) கொடுக்கத் தேவையான நடவடிக்கை எடுத்தல் மற்றும் சிறப்பாகச் செயல்பட்ட வட்டாரங்களில் அவர்கள் பின்பற்றிய முறைகள் தொகுக்கப்பட்டு. பிற மாவட்டங்களுக்கு அந்த வழிமுறைகள் மாநில நிருவாகக் குழு மூலம் வழங்குதல்.


8. மாதத் தேர்வு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் போது மாணவர்கள் தானாக நன்முறையில் தேர்வெழுதித் தேர்ச்சி பெற ஊக்கப்படுத்தும் வகையில் இக்குழு முறையான களம் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ளுதல்.


9. ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்தில் மாநில அளவில், மாவட்ட அளவில் நடைபெற்ற செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து ஒப்பிட்டு அறிக்கையைத் தயாரித்தல்.


10. பெறப்பட்ட தரவுகளைக்கொண்டு பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களுடன் மாவட்ட குழுக்களை இணைக்கும் வகையில் இணையவழிக் கூட்டங்கள் நடத்துதல்,


11. சிறப்பாகச் செயல்பட்ட ஆசிரியரின் செயல்பாடுகள் சார்ந்த (புகைப்படங்கள். காணொளிகள், நூல்கள், PDF, Audio, Video) போன்றவற்றைத் தொகுத்து அறிக்கைகளாக பெறுதல்.


12. கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழுவானது பொதுத்தேர்வின் தேர்ச்சி விழுக்காட்டை மட்டும் இலக்காக கொள்ளாமல் சராசரி மதிப்பெண்களை உயர்த்துவதை இன்றியமையாத நோக்கமாகக்கொண்டு செயல்பட ஊக்குவித்தல்.


13. NAS, PGI, SLAS ASER உள்ளிட்ட மதிப்பீடுகளில் நம் தமிழ்நாடு மாணவர்களின் மதிப்பெண்கள் கணிசமாக உயர்ந்து வருவதை உறுதி செய்தல்.


14. NEET, JEE, CUET, CLAT, Gunadr NMMS, TRUST, NTSE, தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு போன்ற திறனாய்வு, உதவித்தொகைத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வினை இக்குழு மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்துதல்.


15. மேற்காண் அனைத்துச் செயல்பாடுகளிலும் மாநில, மாவட்ட, வட்டாரக் குழுக்கள் முன்னின்று ஒருங்கிணைத்திடவும். கற்றல் கற்பித்தல் வழிகாட்டுதல் குழுவின் செயல்பாடுகள் படிப்படியாக முன்னேற்றம் பெறவும். 2026-27 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 12 வகுப்புகளுக்கான கற்றல் அடைவுகள் முழு இலக்கினை எட்டுவதற்கு மாவட்ட/வட்டார பாட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களை (இணைப்பு-2) அவர்தம் பள்ளிலிருந்தே பணிபுரிந்திட இணைப்பிலுள்ள படிவத்தில் பூர்த்தி செய்திடவும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.




>>> செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Selection of outstanding teachers for Dr. Radhakrishnan Award | DSE Proceedings



 05-09-2026 அன்று ஆசிரியர் தின விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்க சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Selection of outstanding teachers for the Dr. Radhakrishnan Award to be presented at the Teachers' Day celebration on 05-09-2026 – Proceedings of the Director of School Education


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 06


ந.க.எண். 010095/ஐ/இ1/2026, நாள்.15.07.2026


பிறப்பிப்பவர்: முனைவர் ச.கண்ணப்பன்


பொருள்:


பள்ளிக் கல்வி - டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான 05.09.2026 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் - சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஏதுவாக EMIS இணைய தளம் மூலம் ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்திட மென்பொருள் உருவாக்குதல் - நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்ய தெரிவித்தல் - தொடர்பாக.


பார்வை: அரசாணை (1டி) எண்.220 பள்ளிக் கல்வி (பொது-II) துறை. நாள் 05.08.2022


தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளினை ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில அரசு விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழாவில் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசும், வெள்ளிப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.


பார்வையில் காணும் அரசாணையில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களை தேர்வு செய்திட கீழ்கண்டவாறு 38 வருவாய் மாவட்டத்திற்கான விருதுகள் நிர்ணயம். மாவட்ட / மாநில குழு அமைத்தல், மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள், ஆகியவை தெரிவிக்கப்பட்டுள்ளது.




 மாவட்டத் தேர்வுக்குழு


வ. எண்    பதவி     குழுவில் பதவி


1. முதன்மைக் கல்வி அலுவலர்

தலைவர்


2. முதல்வர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 

உறுப்பினர்


3. மாவட்டக் கல்வி அலுவலர்கள் 

உறுப்பினர்


4. மேல்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்

உறுப்பினர்


5. உயர்நிலைப் பள்ளி முதுநிலை தலைமையாசிரியர்

உறுப்பினர்


6. முதுநிலை வட்டாரக் கல்வி அலுவலர்

உறுப்பினர்


மாநிலத் தேர்வுக் குழு


1. பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை -6

தலைவர் 


2. இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். சென்னை -6

உறுப்பினர்


3. தொடக்கக் கல்வி இயக்குநர். சென்னை-6

உறுப்பினர்


4. அரசு தேர்வுகள் இயக்குநர், சென்னை - 6

உறுப்பினர்


5. தனியார் பள்ளிகள் இயக்குநர், சென்னை-6

உறுப்பினர்


6. இயக்குநர், ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை, சென்னை 8 (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


7. சென்னை மாநகராட்சி ஆணையாளர். சென்னை 8 (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


8. முதல்வர், கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சைதாப்பேட்டை சென்னை  

உறுப்பினர்


9. சிறப்பு ஆணையர் (ம) இயக்குநர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலம் சென்னை - 5 (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


10. இயக்குநர், சமூக பாதுகாப்புத்துறை, சென்னை (அல்லது) அன்னாரின் பிரதிநிதி

உறுப்பினர்


11. பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (இடைநிலை) சென்னை - 6 

உறுப்பினர் செயலர்


விருது வழங்கிட ஆசிரியர்களைத் தேர்வு செய்திட பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள்.


1. விருதிற்குத் தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தெரிவித்தல் வேண்டும்.


2. போதிய ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவிக்காமல் ஆய்வு அலுவலர்கள் தங்கள் பள்ளிகள் பார்வையின் போது கண்டறிந்த சிறந்த ஆசிரியர்களை பள்ளிக் தலைமையாசிரியரிடம் இணையதளத்தில் பதிவு செய்திடல் வேண்டும். அறிவுறுத்தி


3. முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்கள் செயல்பாடுகளை இணையதளத்தில் மதிப்பீடு செய்ய வேண்டும்.


4. விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகள் மற்றும் பிற சான்றுகள் மாவட்ட அளவில் உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.


5. விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்டத் தேர்வுக்குழுவின் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, மதிப்பீடு செய்தல் வேண்டும்.


6. மாவட்டத்தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் /கருத்துருக்களை இணையவழியாக மதிப்பீடுகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.


7. மாநிலத் தேர்வுக்குழு மாவட்டக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதி மதிப்பீடு செய்து தகுதியானவர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.


வழிகாட்டு நெறிமுறைகள் (GUIDELINES)


1. மாநில பாட திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகள் / ஆதிதிராவிட பழங்குடியினர் நலத்துறை / பிற்பட்டோர் நலத்துறை / சமூக பாதுகாப்புத் துறை / நிதி உதவி பெறும் பள்ளிகள் / ஆங்கிலோ இந்திய பள்ளிகள் மற்றும் அயநிதி / மெட்ரிக் பள்ளிகள் ஆகிய மேலாண்மைகளின் கீழ் செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களும் விருதிற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.


2. இவ்விருது வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மட்டுமே கற்பித்தல் ஈடுபடும் வழங்கப்படும். அலுவலகங்களில் பணியில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்ககூடாது.


3. கல்வியாண்டில் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களைப் பரிந்துரை செய்யக்கூடாது. ஆசிரியர்கள் கல்வியாண்டில் குறைந்தது 4 மாதங்கள் (செப்டம்பர் 30ஆம் தேதிவரை -in Regular Service) பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். (மறுநியமன காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது).


4. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எவ்விதக் குற்றச்சாட்டிற்கும். ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும். பொது சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை. தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.


5. அரசியலில் பங்கு பெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாகப் பரிந்துரைக்கப்படக் கூடாது.


6. கல்வியினை வணிகரீதியாகக் கருதி செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இவ்விருதிற்குத் தகுதியற்றவர்களாகக் கருத்தப்பட வேண்டும்.


7. சிறந்த முறையில் பணிபுரியும் தமிழாசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களான ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள். கைத்தொழில் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத் திறன் ஆசிரியர்களில் தகுதியானவர்களையும் விருதிற்குப் பரிந்துரைக்கும் போது கவனத்தில் கொள்ளவேண்டும்.


8. பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்களின் கருத்துருக்கள். பெயர்பட்டியலினை மாவட்டத் தேர்வுக்குழுத் தலைவர் தமது சொந்தப் பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களும் இது தொடர்பாக மந்தணம் காத்திடல் வேண்டும்.


9. டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்காக வரையரை செய்யப்பட்ட படிவத்தில் மட்டுமே ஆசிரியர்களின் இணையவழியாக EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


10. ஆகஸ்டு மாதம் 14ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டியல் தயார் செய்து 1:2 என்ற வீதத்தில் தேர்வு செய்து, நல்லாசிரியர் விருதிற்கான ஆசிரியர்களின் கருத்துருக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


11. வருவாய் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்படும் பொழுது, அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பள்ளிகளையும் உள்ளடக்கியதாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


12 மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது.


ஆசிரியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது 


1. விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியிலான EMIS வழியாக மட்டுமே ஆசிரியரின் EMIS login மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


2. விண்ணப்பம் பதிவேற்றம் செய்து சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளான 03.08.2026 வரை மட்டுமே EMIS-ல் பதிவேற்றம்/Reset/Edit செய்ய இயலும். அதன்பிறகு விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய இயலாது.


3. அனைத்து வினாக்களுக்கும் உரிய உள்ளீட்டினை பதிவேற்றம் செய்யுமாறும், பதில் எதுவும் இல்லை எனில் (Not applicable) கலத்தில் இல்லை அல்லது 0 (பூஜியம்) - னை உள்ளீடு செய்து (whichever is applicable) சமர்ப்பிக்கவும். noor


4. விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யும் pdf/link ஆனது மாவட்ட/மாநிலத் தேர்வுக்குழுவால் சரிபார்க்க ஏதுவாக இருக்க வேண்டும் (Expiry ஆகாமலும் viewable ஆகவும் இருத்தல் வேண்டும்)


5. Presentation to State Selection Committee எனும் கலத்தில் ஆசிரியர்கள் மாநிலத் தேர்வுக்குழுவிற்கு தங்களுடைய பங்களிப்பை தெரிவிக்கும் வகையிலான உள்ளடக்கத்தினை ஒருங்கிணைந்த pdf ஆக பதிவேற்றம் செய்ய வேண்டும்.


6. இணைப்பில் கண்டிப்பாக உள்ள சான்றிதழ்களை அவற்றிற்குண்டான கலத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.


7. விண்ணப்பம் பதிவேற்றம் செய்வதற்காக இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள demo video-வினை முழுமையாக பார்த்து மின் விண்ணப்பிக்கவும்.


எனவே. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொடக்க/நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலை/ தனியார் பள்ளிகள்/ ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்/சமூக பாதுகாப்புத்துறை / ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை EMIS இணைய தளம் மூலம் 17.07.2026 அன்று முதல் 03.08.2026-க்குள் முழுமையாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

பள்ளிக்கல்வி இயக்குநர்


இணைப்பு: சான்று படிவங்கள் மூன்று



பெறுநர்:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்


நகல்: 


1. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், செ-06 

2. இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்ககம், செ-06



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Deputation Order issued for teachers to work in government model schools | DSE Proceedings

 



அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு ஆணை வழங்கி இணை இயக்குநர் உத்தரவு


Deputation Staff List 2026 - District wise


Order issued for teachers to work on deputation in government model schools - DSE Joint Director's Proceedings 


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (மேல்நிலைக் கல்வி) செயல்முறைகள், சென்னை-6


ந.க.எண்.31064/டபிள்யு2/இ1/2026, நாள்.13.07.2026


பொருள் : பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணி மற்றும் பணி மாறுதலில் பணிபுரிந்த முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள்/கணினிப் பயிற்றுநர் நிலை 1 பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்றது - மீண்டும் மாற்றுப்பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் சார்ந்து


பார்வை


1. அரசாணை நிலை எண் 176 , பள்ளிக் கல்வித் (பக 5(1)) துறை, நாள் 17.12.2021


2. G.O(Ms)No.138 School Education (SSA1) Department, dated 08.08.2022


3. G.O.(Ms) No.224 School Education (SSA1) Department, dated 23.12.2022.


4. G.O.210, School Education Department, Dated 18.11.2023.


5. சென்னை 06, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிக் குழு உறுப்பினர் செயலாளர் கடிதம் ந.கஎண் 1559/ஆ1/மா.ப/2026 நாள் 09.07.2026.


38 மாவட்டங்களில் தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டதில். தமிழ்நாடு மாதிரி குழுமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாற்றுப்பணியில் பணிபுரிந்து வரும் மற்றும் பணிமாறுதலில் நிரந்தர பணியிடத்தில் பணிபுரிந்து வரும் பட்டியலில் கண்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்றுநர் நிலை 1ல் உள்ளவர்கள் 08.07.2026 அன்று நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தமிழ்நாடு மாதிரி பள்ளி குழுமத்திலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர் இணைப்பில் கண்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளிகளை தெரிவு செய்து மாறுதல் ஆணை பெற்றுள்ளனர். மாதிரிப் பள்ளிகளின் நிர்வாக காரணங்களுக்காகவும், ஏற்கனவே ஆசிரியர்களுக்கு மாதிரிப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாலும் மற்றும் மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் அவ்வாசிரியர்கள் தொடர்ச்சியாக மாதிரிப் பள்ளிகளில் பணிபுரிவது அவசியமாக கருதப்படுகிறது என்பதால் அவரவர் பணியாற்றிய மாதிரிப் பள்ளியில் மாற்றுப் பணியில் பணிபுரிய மாற்றுப்பணி புரிதலுக்கான ஆணை (Deputation Order) வழங்கிடுமாறு பார்வை (5)ல் காண் கடிதம் வாயிலாக கோரப்பட்டுள்ளது.


எனவே பார்வை (5)ல் காண் கடிதத்துடன் பெறப்பட்ட 91 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினிப் பயிற்றுநர் நிலை 1 ஆசிரியர்களும் 08.07.2026 ல் நடைபெற்ற மாவட்டத்திற்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணி மாறுதல் பெற்று சார்ந்த பள்ளியில் பணியேற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் பணிபுரியவில்லை என்பதை உறுதி செய்த பின்பு, அவ்வாசிரியர்களுக்கு தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் குழுமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மறு உத்தரவு வரும்வரை மாற்றுப்பணியில் பணிபுரிதல் பொருட்டு பணிவிடுவிப்பாணை வழங்கிடுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


மாதிரிப் பள்ளிகளில் மாற்றுப் பணிக்கு செல்வதால் அரசு பள்ளிகளில் கற்பித்தல் பணியை தொடர பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் அதற்கான ஊதியம் மாதிரிப் பள்ளிகள் மூலம் வழங்கப்படும் என்றும் மாதிரிப் பள்ளிகள் குழும உறுப்பினர் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது


மேலும் பட்டியலில் கண்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்/ கணினி பயிற்றுநர் நிலை 1 பணிவிடுவிப்பு மற்றும் பணியேற்ற அறிக்கையினை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைத்திடுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு : முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல்


இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி)


பெறுநர் சார்ந்த ஆசிரியர்கள் (உரிய வழியாக)


நகல் 

1. சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் வாயிலாக)

2. சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் (முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக) 

3. உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் குழுமம், சென்னை-6 (தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது)



மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பட்டியல் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



Census 2027 பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரம் - DSE Proceedings



மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரம் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர் அல்லாத அரசு ஊழியர்களை பயன்படுத்த விபரங்கள் கேட்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை -06


ந.க.எண். 040696/அ3/இ1/2026 , நாள். 10.07.2026


பொருள் :


மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 - ஆசிரியரல்லாத பணியாளர்கள் - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக.


பார்வை :


அரசாணை (நிலை) எண். 450 பொது (சட்ட அலுவலர்) துறை , நாள். 09.07.2026


2027 ஆம் ஆண்டிற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் / பணியாளர்களுக்கு மாறுதல் அளிப்பதில் கட்டுப்பாடுகள் விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.


எனவே, பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து அலுவலகங்கள், DIET's. அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியரல்லாத பணியாளர்களில் 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்கள் விவரங்களை இணைப்பில் காணும் படிவங்களில் தயார் செய்து இன்று 10.07.2026 மாலை 05.00 மணிக்குள் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேற்காண் பணியில் எவரும் ஈடுபடுவோர் எவரும் இல்லையெனில் இதே படிவங்களில் இன்மை அறிக்கையினை அளிக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Form - 1 (PA to DEO's, Superintendent's and Desk Superintendent's)


a3sec.tndse@gmail.com


Form - 2 (Assistant's, Junior Asst's, Typist's, Steno Typist's)


cosea4sec@gmail.com


Form-3


(Lab Asst's, Record Clerk's, Record Asst's and other Categories)


a5sectndse@gmail.com


இணைப்பு - மாதிரி படிவங்கள் 3


இணை இயக்குநர் இயக்குநர் (பணியாளர் தொகுதி)


பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள். (மின்னஞ்சல் வழியாக)


நகல்:


1. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை 06


2. உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை 06


3. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை 06


4. இயக்குநர். தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை 06


5. இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சிநிறுவனம், சென்னை 06


6. இயக்குநர், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், சென்னை 06


முதன்மை உடற்கல்வி ஆய்வாளர், முதன்மை


7. உடற்கல்விஆய்வாளர் அலுவலகம், சென்னை 06


8. இவ்வியக்கக அ2, அ4, அ5 பிரிவிற்கு


9. தகவல் பலகைக்கு


தங்கள் அலுவலகப் பணியாளர்கள் சார்பாக விவரங்களை அளிக்கும் பொருட்டு பணிந்தனுப்படுகிறது


15-07-2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

 


15.07.2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 06


ந.க.எண். 34752/எம்-1/இ2/2023, நாள். 08.07.2026.


பொருள்: பள்ளிக் கல்வி - 2026 - 27ஆம் கல்வியாண்டு - முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான 15.07.2026 அன்று அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் - அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு  பேச்சுப்போட்டி,  கட்டுரைப்போட்டி, மாணவர்களுக்கு பரிசு கவிதைப்போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல் - சார்பு.


பார்வை :


அரசாணை (நிலை) எண். 169 பள்ளிக் கல்வி (எக்ஸ்) துறை, நாள் .06.07.2012


பார்வை 1இல் கண்டுள்ள அரசாணையில் தமிழ்நாட்டில் கல்லாமை இருளை நீக்கப் பள்ளிகள் பல திறந்து கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுக் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜுலை திங்கள் 15 ஆம் நாளினை " கல்வி வளர்ச்சி நாள்" என அரசு அறிவித்தும் அந்நாளில் காமராஜர் திருவுருவப்படத்தை அலங்கரித்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட அரசால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வாண்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளை நடத்தி வெற்றிப்பெற்ற மாணவ/ மாணவியருக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.


இணை இயக்குநர்


பெறுநர்


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்,


அனைத்து மாவட்டம்.


Issuance of Community & Residence Certificates within Schools | DSE Proceedings



பள்ளிகளிலேயே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல் - 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ் விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை  School Login App ல் 13.07.2026க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 


Issuance of Community Certificates and Nativity certificates within schools - Proceedings issued by the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6


பிறப்பிப்பவர்: முனைவர் ச. கண்ணப்பன்


ந.க. எண் : 12328/இ/இ2/2025 , நாள் : 22.06.2026


பொருள் : பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு பயிலும் பள்ளிகளிலே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல் சார்ந்து அரசாணை பெறப்பட்டது - சான்றுகள் உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை- School Login App-பதிவேற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் ஆதார் எண்ணை பதிவேற்றம் மேற்கொள்ள கோருதல் - தொடர்பாக.


பார்வை

1. அரசாணை (நிலை)எண்.06, பள்ளிக் கல்வி (பக5(2)த்துறை , நாள்.09.01.2026.

2. இவ்வியக்க இதே எண்ணிட்ட கடிதம் நாள். 11.06.2026


பார்வை 2 இல் காணும் கடிதத்தின் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.


2026-2027 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்கள் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களில் (இரு வகை சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்கள் விவரம் மற்றும் சான்றிதழ்கள் தேவைப்படும் மாணாக்கர்களின் விவரம் ஆகியவற்றை தமிழ்நாடு கல்வி மேலாண்மை தகவல் மைய School Login-இல் உடனடியாக சான்றுகள் பெற்றிருக்கும் மாணாக்கர்கள்/ தேவைப்படும் மாணாக்கர்கள் விவரங்களை ஆம்/இல்லை (Yes/No) என பதிவுகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி இப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.


மேலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் ஆதார் எண் மற்றும் இரு வகை சான்றுகள் பெற்றிருக்கும் மாணாக்கர்கள்/ தேவைப்படும் மாணாக்கர்கள் விவரங்களை ஆம்/இல்லை (Yes/No) என பதிவுகள் ஜூலை 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி இப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


பள்ளிக் கல்வி இயக்குநர்


பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

(மின்னஞ்சல் மூலம்)


நகல்: அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். (மின்னஞ்சல் வழியாக)


நகல்:

வருவாய் நிருவாக ஆணையர்,

எழிலகம், சேப்பாக்கம், சென்னை -05 தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது



2026-27ஆம் கல்வியாண்டிற்கான Magizh Mutram மாணவர் செயல்பாடுகள் | இயக்குநரின் செயல்முறைகள்

 


மகிழ் முற்றம் | Magizh Mutram 


Magizh Mutram 2026-27 DSE Proceedings


அரசுப் பள்ளிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான மகிழ் முற்றம் சார்ந்த மாணவர் செயல்பாடுகள் -  வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess" திரையிடுதல் - இயக்குநரின் செயல்முறைகள்

 


ஜூன் 2026 மாத குழந்தைகள் திரைப்படம்


Proceedings of the Director of School Education regarding the screening of the children's film "The Little Princess" for the month of June.


ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess" திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




படத்தின் கரு மற்றும் கதைச்சுருக்கம்


படம் வெளியான ஆண்டு: 1935


இயக்கம்: Mr. Walter Lang


The Little Princess- தி லிட்டில் பிரின்ஸஸ்


இந்தக் கதை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தை பின்னணியாகக் கொண்டது. சாரா கிரூவ் என்ற சிறுமி, தனது தந்தை கேப்டன் ரெஜினால்ட் கிரூவுடன் இந்தியாவில் வாழ்ந்து வருகிறாள். அவரது தந்தை பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக இந்தியாவில் பணியாற்றுகிறார். அன்பும் செல்வச் செழிப்பும் நிறைந்த சூழலில் வளர்ந்த சாரா, புத்திசாலித்தனம், கற்பனைத் திறன். கருணை போன்ற நற்குணங்களைக் கொண்டவள்.


சாராவின் தந்தை இரண்டாம் ஆங்கிலோ-போயர் போரில் பங்கேற்கத் தென்ஆப்பிரிக்கா செல்கிறார். சாரா, இங்கிலாந்தில் இருக்கும் மிஸ் மின்சின் நடத்தும் விடுதிப் பள்ளியில் சேர்க்கப்படுகிறாள்.


போரின் போது, சாராவின் தந்தை இறந்துவிட்டார், அவருக்குச் சொத்துகள் ஏதும் இல்லை என்றும் செய்தி வருகிறது. பள்ளியில் அனைவராலும் மதிக்கப்பட்டிருந்த சாராவைப் பணிப்பெண்ணாக ஆக்குகிறார்கள்.


அவமானங்கள், தனிமை ஆகியவற்றை எதிர்கொண்டாலும், சாரா தனது அன்பு, மனிதநேயம், நம்பிக்கை, மன உறுதி ஆகியவற்றை இழக்காமல் வாழ்கிறாள். தனது தந்தை உயிருடன் இருப்பதாக நம்பிக்கை கொள்கிறாள்.


சாராவின் நம்பிக்கை எவ்வாறு அனைவரின் மனதையும் மாற்றுகிறது என்பதே இப்படத்தின் கதை.


இந்தத் திரைப்படம் மாணவர்களிடம் அன்பு, மனிதநேயம், நம்பிக்கை, சமத்துவம் போன்ற மதிப்புகளை வளர்க்க உதவும் ஓர் உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக அமைகிறது.



ஜூன் மாத சிறார் திரைப்படம் "The Little Princess"..


Movie Link

👇👇👇

https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard



DSE - Revised Tranfer Counselling Schedule 2026-2027



பள்ளிக் கல்வித் துறை - திருத்திய ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு


DSE - Revised Teachers' Tranfer Counselling Schedule 2026-2027



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



சுற்றறிக்கை-2


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6


ந.க. எண். 032782 / சி3 / இ1 / 2026 , நாள்.10.06.2026


பொருள்:-


பள்ளிக் கல்வி - 2026-27ம் ஆண்டு அனைத்துவகை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை அனுப்புதல் சார்பு.


பார்வை:-

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6 ந.க. எண்.032782 / சி3 / இ1/ 2026, நாள். 08.06.2026  ந.க. எண். 009324/டி1/2026, நாள் 08.06.2026


-0-


பார்வையில் காணும் செயல்முறைகளில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பாக 2026-27ம் ஆண்டிற்கான அனைத்துவகை ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்விற்கான காலஅட்டவணை மற்றும் மாறுதல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.


இதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பாக திருத்திய கலந்தாய்விற்கான காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.


இணைப்பு: திருத்திய காலஅட்டவணை


பள்ளிக் கல்வி இயக்குநர்


பெறுநர்


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் மூலமாக)


இச்சுற்றறிக்கையின் நகலினை (DEO (Sec.) தகவல் அளிக்கவும்)


நகல்: 

1  EMIS ஒருங்கிணைப்பாளர், மாநில திட்ட இயக்ககம் சென்னை-6


2 சம்மந்தப்பட்ட பிரிவுகள் (W1, W2, W3, C1, C2, C3, C4, C5, V1)


TET தேர்வு காரணமாக ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்



 TET தேர்வு காரணமாக ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம் - தொடக்கக்கல் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு


ஆசிரியர் தகுதி தேர்வு 4 மற்றும் 5- ஆம் தேதி நடைபெற உள்ளதால் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு தேதி மாற்றம் - DEE Revised Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு குறித்த DEE & DSE செயல்முறைகள்...




தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.


ந. க. எண். 009324/டி1/2026, . நாள் 09.06.2026


பொருள்:


தமிழ்நாடு தொடக்கக் கல்வி - 2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - ஜூன் 2026 மாதத்தில் நடத்துதல் -விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகள் வழங்கியது தொடர்பாக திருத்திய ஆணை வழங்குதல்-சார்ந்து,


பார்வை:


1. அரசாணை (நிலை) எண்.176, பள்ளிக் கல்வி (பக5(1)த் துறை, நாள். 17.12.2021.


2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.032782/சி3/இ1/2026, நாள் . 08.06.2026 மற்றும் ந.க.எண்.009324/10-1/2026, நாள் . 08.06.2026.


பார்வை 2-ல் காணும் செயல்முறைகளின் தொடர்ச்சியாக 04.07.2026 அன்று ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I (TET Paper I) நடைபெற உள்ளதால் ஆசிரியர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 06.07.2026 மற்றும் 07.07.2026 ஆகிய இரு நாட்களில் மட்டுமே நடைபெறும் எனவும், இதர கலந்தாய்வுகள் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நடைபெறும் எனவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநர்



பெறுநர்:


அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி).


(இச் செயல்முறையினை தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டராக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்)


நகல்:


1. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.


2 மாநில திட்ட இயக்குநர் சமக்கர சிக்க்ஷா, சென்னை-6. அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.


3. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக


2026- 2027 Teachers' Transfer Counseling - DSE & DEE Proceedings & Schedule

 


பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வித்துறை - 2026- 2027ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு செயல்முறைகள் & கால அட்டவணை வெளியீடு


DSE & DEE - 2026- 2027 Teachers' Transfer Counseling Proceedings & Schedule Released


தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2026-27 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6


ந.க. எண். 032782 / சி3 / இ1 / 2026 , நாள் : 08.06.2026


ந.க. எண். 009324 / டி1 / 2026 , நாள் : 08.06.2026


பொருள்:-


பள்ளிக் கல்வி - 2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு.


பார்வை-


1) அரசாணை (நிலை)எண்.176 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.12.2021


2) அரசாணை (நிலை)எண்.180 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.17.10.2022


3) அரசாணை (நிலை)எண்.94, பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.24.5.2023


4) அரசாணை (நிலை) எண். 164 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.11.7.2024


5) தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்செயல்முறைகள் ந.க. எண்.037584/சி3/இ 1/2025 , நாள்.18.06.2025


6) தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.13466/டி1/2025, நாள்.18.06.2025


 -0-


பார்வையில் காணும் அரசாணைகள் மற்றும் செயல்முறைகளின் அடிப்படையில் கடந்த 2025-26 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனை பின்பற்றி கடந்த ஆண்டு (2025-26) ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் முடிக்கப்பட்டுள்ளது. பணிகள்


2) அதேபோல 2026-27ஆம் கல்வியாண்டிற்கும் அனைத்து ഖത ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளவும், மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் அனைத்துவகை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.


மேற்படி மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 15.06.2026 முதல் 22.06.2026 வரை 06.00 பிப வரை EMISல் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.


பார்வை-2ல் காணும் அரசாணையில் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணிநிறைவடைந்திருக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்குபெற விருப்பம் உள்ள அனைத்துவகை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.


 3) ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login IDஐ பயன்படுத்தி EMIS மூலம் வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்ததேதி, பணியில் சேர்ந்த நாள், ஆசிரியர் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென olrar Login ID Teacher Profile ல் சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் Individual Login IDஐக்கு சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும். 


ஆசிரியரின் மாறுதல் விண்ணப்பத்தினை பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) செய்த பின்னர் முதல் கட்டமாக பள்ளித் தலைமை ஆசிரியர் Approval செய்யப்படவேண்டும்.


மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியரது விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட (CEO) முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.


> அரசு உயர்/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியரால் ஒப்புதல் செய்யப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக முதன்மைக் கல்வி அலுவலர் தங்களுக்கென ஒதுக்கீடு செய்ப்பட்ட Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்த பின்னர் இரண்டாம் கட்டமாக முதன்மைக் கல்வி அலுவலர் 2nd Approval செய்யப்படவேண்டும்.


பொதுமாறுதல் கலந்தாய்வில் வழங்கப்படும் முன்னுரிமை Priority 


1. முற்றிலும் கண்பார்வையற்றவர் 100%


2. மாற்றுத்திறனாளிகள் (40% அதற்கு மேல் ஊனம் உள்ளவர்கள்) (கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் உட்பட)


3. மனவளர்ச்சி குன்றிய / மாற்றுத்திறனாளி குழந்தை உள்ள பெற்றோர்


4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை / டையாலிசிஸ் சிகிச்சை / இதய அறுவை சிகிச்சை / புற்றுநோயாளிகள் / மூளைகட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள்


5. இராணுவத்தில் பணிபுரிபவரின் கணவன் / மனைவி


6. விதவை / மனைவியை இழந்தவர் / 40 வயது கடந்த முதிர்கன்னியர் / சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை 


7. தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுக்கு மேல் பணியாற்றுபவர்கள்


8. கணவன் / மனைவி பணி முன்னுரிமை (above 30km)


9. இதர பிரிவுகள்


மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் (Competent authority) அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


தற்போது பணிபுரியும் பள்ளிக்கு மாறுதல் பெற்ற வகை (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) i) விருப்ப மாறுதல் ii) மனமொத்த மாறுதல் ii) நேரடி நியமனம் iv) பதவி உயர்வு v) நிருவாக மாறுதல் vi) அலகு மாறுதல் vil) பணிநிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


4) ஆசிரியர் பயிற்றுநர் BRTE & DC


ஆசிரியர் மற்றும் மாவட்ட பயிற்றுநர்கள் ஒருங்கிணைப்பாளர்களும் விருப்ப மாறுதல் கோரி EMIS ல் மேற்காண் அறிவுரைகளின்படியே விண்ணப்பிக்கவேண்டும். இவர்கள் சார்பாக விண்ணப்பிக்கும் மாறுதல் விண்ணப்பங்களை சரிபார்த்து Approval சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் மேற்கொள்ளப்படவேண்டும்.


5) அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை


ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு பயன்படுத்தி EMIS செய்யப்பட்ட Individual Login ID வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.


மாறுதலுக்கு விண்ணப்பித்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரும் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முதன்மைக் கல்வி அலுவலரும் (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு) தங்களுக்குரிய Login IDஐ பயன்படுத்தி சரிபார்த்து ஒப்புதல் (Approval) அளிக்கப்படவேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் மாவட்டக் கல்வி அலுவலரிடமும் / அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எனில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.


6) பொதுமாறுதல் அறிவுரைகள் சார்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான


மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் ஒப்புதல் (Approval) அளித்த பிறகு ஒரு பிரதியினை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை / மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் (Approval) அளிக்க தங்களுக்கு என EMIS மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட் User Name and Pasword ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் மாறுதல் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.


மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்த்திடல் வேண்டும்.


7) பொதுவான அறிவுரைகள்


மேல்நிலைப் பிரிவில் உயிரியியல் பாடப்பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும்போது தாம் பயின்ற Main Subject (Major) குறிப்பிடப்படவேண்டும் மற்றும் எந்த  பணியிடத்தில் (Post Details Zoology, Botony, Biology)  பணிபுரிகிறார் என்ற விவரத்தினையும் குறிப்பிடப்படவேண்டும்.


கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம் /பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிருவாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் (Competent authority) பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். கணவன்-மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30கி.மீ மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்படவேண்டும். கணவன் பணிபுரியும் மாவட்டம் (அ) மனைவி பணிபுரியும் மாவட்டத்தை மட்டுமே தெரிவு செய்ய அனுமதிக்கப்படவேண்டும். வேறு மாவட்டங்களை தெரிவு செய்திட அனுமதிக்க இயலாது.


> உள்மாவட்டத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்களுக்குரிய சுழற்சி (turn) வரும்போது அம்மாவட்டத்தில் தங்களுக்கு மாறுதல் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம். பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முழுமையாக முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள (Resultant Vacancy) காலிப்பணியிடங்களில் மேற்காணுமாறு Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை உள்மாவட்டத்திற்குள் மாறுதல் பெற வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரவர்களின் முன்னுரிமைப்படி மீண்டும் ஒரு முறை (One More choice) காலிப்பணியிடங்களை விருப்பத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர்.


மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter district transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது) 


மேலும் மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் உள்மாவட்டம் /மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய இரு கலந்தாய்விற்கும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் உள்மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.


மனமொத்த மாறுதல்கள் (Mutual Transfer) சார்பான விண்ணப்பங்கள். பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் விண்ணப்பிப்பது சார்ந்து அறிவுரைகள் பின்னர் வழங்கப்படும்.


மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


> கலந்தாய்வு நடைபெறும் நாளில் மாற்றுப்பணி அனுமதிக்க இயலாது எனவும், தற்செயல் விடுப்பு அளித்துவிட்டு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கலாகிறது.


மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent & Late) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.


> மேலும் இணைப்பில் காலஅட்டவணையில் விண்ணப்பிக்கப்பட்ட காணும் தெரிவித்துள்ளவாறு மாறுதல் கோரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் உரிய தேதியில் வெளியிடப்படும். அப்பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் அதனை EMIS Online வழியே உரிய விவரங்களை தெரிவித்திடவும், இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் அலுவலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட EMIS Login IDஐ பயன்படுத்தி மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திடவும் உரிய முறையீடுகள், திருத்தங்கள் இருப்பின் அதனை சரிசெய்திடவும் அறிவுறுத்தப்படுகிறது.


மேற்படி திருத்தங்கள் / முறையீடுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Seniority List) வெளியிடப்பட்ட பிறகு திருத்தங்கள் / முறையீடுகள் ஏதும் இருப்பின் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


> பார்வை-1ல் காணும் அரசாணைக்கு திருத்தம் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.164 பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள்.11.7.2024ன்படி கடந்த ஓராண்டிற்குள் (1.6.2025 to 31.5.2026) ஆசிரியரின் கணவரோ (அ) மனைவியோ விபத்து மற்றும் இதர காரணங்களால் திடீரென மரணம் அடைந்து இருப்பின் எந்தவித முன்னுரிமையும் பின்பற்றாமல் கலந்தாய்வுக்கு முன்னரே அவர்கள் கோரும் காலிப்பணியிடத்திற்கு மாறுதல் வழங்கப்படவேண்டும்.


புகாருக்கு உள்ளாகி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் அதே பள்ளியை கலந்தாய்வில் தெரிவு செய்திட அனுமதித்தல் கூடாது. மேலும் போக்சோ வழக்குகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வேறு மாவட்டத்திற்கு நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஏற்கனவே பணிபுரிந்த அதே மாவட்டத்தினை தெரிவு செய்ய அனுமதித்தல் கூடாது. இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணித்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள்.


> கலந்தாய்வு:- அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பதவி வாரியாக கால அட்டவணையில் குறிப்பிட்டவாறு முதன்மைக் கல்வி அலுவலர்களின் EMIS Login மூலமாகவே நடத்தப்படும்.


தொடக்கக் கல்வி இயக்ககம்


1. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்/ தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள் / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை:


* ஒவ்வொரு ஆசிரியரும் மாறுதலுக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்கும்போது EMIS இணையத்தில் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ID ஐ பயன்படுத்தி EMIS வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது ஏதேனும் ஆசிரியர் சார்பான விவரங்கள் தவறுதலாக இருப்பின் (பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், ஆசிரியரின் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் இதரவைகள்) அதிலிருந்து வெளியேறி தங்கள் பள்ளிக்கென உள்ள Login IDயில் Teacher Profile சென்று தவறாக உள்ள விவரங்களை சரிசெய்யப்பட்ட பின்னர் மீளவும் தங்களுடைய Individual Login ID யில் சென்று அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் Submit செய்திடல் வேண்டும்.


2. பொது மாறுதல் சார்பாக வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான அறிவுரைகள்:


ஆசிரியரின் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை பெற்ற தொடர்புடைய வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டவற்றினை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிடுதல்) செய்த பின்னர் முதல் கட்டமாக வட்டாரக் கல்வி அலுவலர்Approval செய்யப்பட வேண்டும்.


+ மேற்படி வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியனை சம்பந்தப்பட்ட (DEO) மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும்.


ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை வட்டாரக் கல்வி அலுவலரால் ஒப்புதல் செய்யப்பட்ட பின்னர் இரண்டாம் கட்டமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Login IDஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை View செய்து அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்த பின்னர் இரண்டாம் கட்டமாக மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) 2nd Approval செய்யப்பட வேண்டும்.


மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை (Priority) கோரி விண்ணப்பிக்கும்போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை (ஆவண நகல்) இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


+ தற்போது பணிபுரியும் பள்ளியில் மாறுதல் பெற்ற வகையில் (ஏற்கனவே பெற்ற மாறுதல் ஆணை இணைக்கப்படல் வேண்டும்) I) விருப்ப மாறுதல் ii) மனமொத்த மாறுதல் iii) நேரடி நியமனம் iv) பதவி உயர்வு V) நிர்வாக மாறுதல் vi) அலகு மாறுதல் vil) பணி நிரவல் இவற்றில் எந்த வகை என்பதை உரிய ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


3. பொது மாறுதல் சார்பாக மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்களுக்கான அறிவுரைகள்:


மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதல் (Approval) அளித்த பிறகு ஒரு பிரதியினை மாவட்டக் கல்வி அலுவலரிடம் (தொடக்கக் கல்வி) ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


மாறுதல் கோரி விண்ணப்பத்த ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஒப்புதல் அளிக்க தங்களுக்கென EMIS மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட User Name and Password ஐ பயன்படுத்தி ஆசிரியர்களின் மாறுதல் சார்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை சரிபார்த்து உறுதி செய்து ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.


மாறுதல் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை (Priority) அடிப்படையில் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) சரிபார்த்திடல் வேண்டும்.


+ கலந்தாய்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் (கணினி, மின்இணைப்பு, இணையதளம், இருக்கை வசதி போன்ற இதர வசதிகளை) மேற்கொள்ளப்படவேண்டும். கலந்தாய்வுகள் நடைபெறும் அன்றைய நாளில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை சிறப்பாக நல்லமுறையில் நடத்திட அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது. மேற்காண் விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு /வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து முதன்மைக் கல்வி கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அலுவலர்கள்/மாவட்டக் தெரிவிக்கலாகிறது.


இணைப்பு: பொதுமாறுதல் காலஅட்டவணை

(பள்ளிக் கல்வி & தொடக்கக் கல்வி)


தொடக்கக் கல்வி இயக்குநர்     பள்ளிக் கல்வி இயக்குநர்


பெறுநர்


அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் &

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) (மின்னஞ்சல் மூலமாக) இச்சுற்றறிக்கையின் நகலினை (DEO (Sec.) & BEO's தகவல் அளிக்கவும்)


நகல்: 1 இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி & மேல்நிலைக் கல்வி)

2  EMIS ஒருங்கிணைப்பாளர், மாநில திட்ட இயக்ககம் சென்னை-6 

3 சம்பந்தப்பட்ட பிரிவுகள் (W1, W2, W3, C1, C2, C3, C4, C5, V1)



01-06-2026 முதல் பள்ளிகள் திறப்பு - பள்ளி திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - DSE செயல்முறைகள்

 

2026-27- School Reopening - Hon'ble Educational Minister Review _ Instructions


01.06.2026 முதல் பள்ளிகள் திறப்பு - பள்ளி திறப்புக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் DSE செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06. 

முன்னிலை: முனைவர் ச.கண்ணப்பன்

ந.க.எண் : 016677/எம்1/இ1/2026, நாள் : 18.05.2026


பொருள்: மாண்புமிகு பள்ளிக் கல்வி தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 18.05.2026 அன்று ஆய்வு கூட்டம் 2026-2027 ஆம் கல்வியாண்டு தொடங்கும் முன்னர் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரைகள் - தொடர்பாக.


மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் 18.05.2026 அன்று பள்ளிக்கல்வித் துறை சார்பான நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இவ்வாய்வு கூட்டத்தில் ஒன்று. இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது பாட நூல்கள் வெளியிடப்பட்டது.


மாணவர்கள் எளிதில் புரிந்து கற்று தனித்திறன் மிக்கவர்களாக உருவாகும் வகையிலும், மாணவர்களிடம் எதிர்நோக்கப்படும் கற்றல் விளைவுகளை அடையும் வகையிலும் இப்பாட நூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


குழந்தைமைய கற்றல் அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகள் மிகவும் விரும்பும் கதைகள், பாடங்கள், கற்றல் செயல்பாடுகள் மூலம் கற்கும் வகையிலும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன


மேலும், மாணவர்களது உடல் இயக்க திறன்கள் (Motor ) சமூக மனவெழுச்சித் திறன்கள். விழுமியங்கள், வாழ்க்கை திறன்களை உள்ளடக்கிய பாடப்பொருட்களோடு அழகிய வண்ண வடிவமைப்புடன் இப்பாட நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.


அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப்பின் 01.06.2026 திங்கள் கிழமையன்று திறக்கப்படும் எனவும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.


பள்ளி திறக்கப்படும் நாளன்று, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் வகையில், தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுபப்பட்டுள்ளது. இப்பாட நூல்களை பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.


இக்கல்வியாண்டில் புதிய பாட புத்தகங்கள் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல் மற்றும் கற்பித்தல் நுட்பங்கள் சார்ந்த பயிற்சி 01.06.2026 முதல் 03.06.2026 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் திறக்கப்படவுள்ள நிலையில் அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து பின்வரும் அறிவுரைகளை வழங்கப்பட்டுள்ளது.


* 2026-27ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா நலத்திட்டங்கள் (பாடபுத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை புத்தக பைகள்) மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி திறக்கும் நாளன்று கிடைத்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து கல்வி அலுவலர்கள். தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


* பள்ளிகளில் உள்ள திறன் பலகைகள் (Smart Board) மற்றும் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (HI--Tech Lab) பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உரிய இணைய வசதியுடன் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.


* பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகியவை தூய்மையாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.


* பள்ளி வளாகத்திலோ அல்லது வருப்பறைகளிலோ தேவையற்ற/பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அவற்றினை அப்புறப்படுத்த வேண்டும். மாணவர்கள் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டியை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* கழிப்பறைகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தண்ணீர் வசதியுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகள் (Septic Tanks) கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் (Borewell) பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடியிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.


* தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு EMIS வழியாக உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டும்.


* 2025-26ஆம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி / உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளிகளில் முறையே ஆறாம் வகுப்பு / ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்படுவதை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும். பள்ளி வளாகத்தில் பெண்குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடல் வேண்டும்.


மேற்கண்ட அறிவுரைகளை  தலைமையாசிரியர்களும் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்/ அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்  ( இடைநிலை மற்றும் தொடக்கக் கல்வி) / மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


பள்ளிக்கல்வி இயக்குநர்


பெறுநர்


1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். 

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) 

3. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)


நகல்


1. அரசு கூடுதல் தலைமைச் செயலளார். பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-00 அவர்களுக்கு பணிவுடன் அனுப்பப்படுகிறது. 

2. மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-06. அவர்களுக்கு பணிவுடன் அனுப்பப்படுகிறது. 

3. மாநிலத் திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-06. அவர்களுக்கு பணிவுடன் அனுப்பப்படுகிறது.

4. தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை-6 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...