"மகிழ்வுடன் முன்னேறு" நிகழ்வினை பள்ளிகளில் செயல்படுத்துவது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600006.
நக.எண். 02422/ எப்1/2026, நாள்: 27.11.2026
பொருள்: தொடக்கக் கல்வி - 2026-27 - "மகிழ்வுடன் முன்னேறு" நிகழ்வினை பள்ளிகளில் செயல்படுத்துவது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - சார்பு
பார்வை 2026-27 ஆம் ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண்-9.
2026-27 ஆம் ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாணவர்களிடம் மறைந்திருக்கும் தனித்திறமையை உலகத்திற்கு வெளிக்கொணரும் வகையில் மாணவர்களின் படைப்பாற்றல், தலைமைத்துவம், தனித்திறமைகள் மற்றும் கற்றல் ஆர்வம் மலர, புத்தகப்பை இல்லா கல்விச் செயல்பாடுகளை ஊக்குவித்து மாணவர்கள் மகிழ்வை பிரதானப்படுத்தி, மகிழ்வுடன் முன்னேறுதிட்டத்தினை அறிவித்தார்கள்.
மகிழ்வுடன் முன்னேறு Magizhvudan Munneru
மாணவர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும். நிகழ்வுகளைத் திட்டமிட்டு நடத்துவதன் வாயிலாகத் தலைமைத்துவத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும். திறமைகளை அங்கீகரிக்கவும் நடைமுறைப்படுத்தப்படும். ஏதுவாக மாணவர்களின் பள்ளிகளில் இத்திட்டம்
மகிழ்வுடன் முன்னேறு"- நோக்கமும் தனித்துவமும்
மகிழ்வுடன் முன்னேறு" என்பது பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் தமது உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்தவும், சொந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்தவும், தங்களது தனித்திறன்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும் மாணவர் மையக் கொண்டாட்ட நாளாகும்.
பொதுவாக நடைபெறும் போட்டிகளில், பங்கேற்பாளர்களில் வெற்றி பெறுபவரைத் தேர்ந்தெடுப்பதே முதன்மை நோக்கமாக அமைகிறது. இதற்கு மாறாக, மகிழ்வுடன் முன்னேறு" நிகழ்வு வெற்றி தோல்வி என்ற அணுகுமுறைக்கு அப்பாற்பட்டு, ஒவ்வொரு மாணவரின் திறன், முயற்சி, படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை அங்கீகரித்து கொண்டாடுவதை மையமாகக் கொண்டுள்ளது.
தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு மாணவரும் தமது திறனை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான களத்தை இந்நிகழ்வு வழங்குகிறது. இதன் மூலம், போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமே திறமைக்கான அளவுகோல் அல்ல: ஒவ்வொரு மாணவரிடமும் தனித்துவமான திறனும் ஆற்றலும் உள்ளன என்பதைக் கொண்டாடும் வாய்ப்பாக மகிழ்வுடன் முன்னேறு அமைகிறது.
மேலும், இந்நிகழ்வு பெற்றோர் மற்றும் சமூகத்தினரும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஆர்வங்களையும் படைப்புகளையும் நேரடியாகக் கண்டு பாராட்டுவதற்கான ஒரு திறந்த மேடையாக அமைகிறது. இதன் மூலம், மாணவர்களின் கல்விசார் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட அவர்களின் பல்வேறு திறன்களைப் பெற்றோரும் சமூகத்தினரும் அறிந்துகொள்ளவும், பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே, மகிழ்வுடன் முன்னேறு என்பது வெற்றியாளர்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் நிகழ்வல்ல: பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவரின் திறமையையும் கொண்டாடி. ஒவ்வொரு குழந்தைக்கும் எனது திறனுக்கும் ஒரு மேடை உண்டு என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு மகிழ்ச்சியான மாணவர் தலைமையிலான கொண்டாட்டமாகும்.
மேற்கண்ட அறிவிப்பின்படி, அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் இத்திட்டத்தின் நோக்கம். பள்ளியளவில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், இத்திட்டத்தின் விளைவுகள் ஆகியவை அடங்கிய கட்டகம் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களிடையே உள்ள தனித்திறமைகளை ஊக்குவித்து, பாராட்டி கொண்டாடும் வகையில் மகிழ்வுடன் முன்னேறு" திட்டத்திணை அரசுப் செயல்படுத்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இக்கட்டகத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள். மகிழ்வுடன் முன்னேறு' நிகழ்வினை பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான ஒரு முன்மாதிரி இவை கட்டாயமான அணுகுமுறையாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. செயல்பாடுகளாகக் கருதப்பட வேண்டியதில்லை. ஒவ்வொரு பள்ளியும் தங்களது சூழல், மாணவர்களின் வயது, ஆர்வம், திறன் மற்றும் உள்ளூர் வளங்களுக்கு ஏற்ப நிகழ்வுகளைத் தாங்களே திட்டமிட்டு செயல்படுத்தலாம்.
குறிப்பாக, மாணவர்களே இந்நாளுக்கான செயல்பாடுகளைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, தங்களது எண்ணங்களுக்கும் படைப்பாற்றலுக்கும் உரிய இடமளித்து, ஒவ்வொரு மாணவரும் தனது உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வை மேலும் ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் வடிவமைக்க வேண்டும்.
செயல்பாட்டுக் களங்கள் வழக்கமான வகுப்பறைச் சூழலுக்கு அப்பாற்பட்டு, பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் தங்களது சிந்தனையின் அடிப்படையில், குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு ஏற்றதாகக் கருதும் பொருத்தமான மற்றும் புதுமையான இடங்களில் அமைக்கப்படலாம். இதன் மூலம் பள்ளி வளாகமே மாணவர்களின் கற்றல், படைப்பு மற்றும் திறன் வெளிப்பாட்டிற்கான உயிரோட்டமான களமாக மாறும்.
மேலும், மாணவர்களின் வயது மற்றும் வளர்நிலைக்கு ஏற்ப செயல்பாடுகளைத் திட்டமிடுவதோடு, தேவையில்லாத பொருட்செலவுகளை தவிர்த்து, மாணவர்களின் விருப்பம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் பல்வேறு செயல்பாட்டுக் களங்களை உருவாக்கி, குறிப்பிட்ட செயல்பாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தாங்களாக முன்வந்து அந்தக் களத்தில் இணைந்து செயல்படுவதற்கும் வாய்ப்பளிக்கலாம்.
எனவே, மகிழ்வுடன் முன்னேறு" என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றும் ஒரு நாள் மட்டுமல்ல: மாணவர்களே சிந்தித்து, திட்டமிட்டு, செயல்பட்டு, படைத்து, வெளிப்படுத்தி, மகிழ்ந்து கற்றுக்கொள்ளும் ஒரு மாணவர் மையக் கொண்டாட்டமாக அமைய வேண்டும். ஒவ்வொரு மாணவரின் தனித்திறனுக்கும் உரிய இடமளித்து, ஒவ்வொரு மாணவரும் ஒரு திறமை: ஒவ்வொரு திறமைக்கும் ஒரு மேடை" என்ற நோக்கத்துடன் இந்நிகழ்வு பள்ளிகளில் செயல்படுத்தப்பட வேண்டும்.
இக்கல்வியாண்டில் மகிழ்வுடன் முன்னேறு தினத்தினை 01.12.2026, 12.01.2027 மற்றும் 02.02.2027 ஆகிய தேதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்கண்டவாறு. மகிழ்வுடன் முன்னேறு" நிகழ்வினை அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் புத்தகப்பையின்றி மகிழ்ச்சியுடன் பங்கேற்கும் வகையில் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் செயல்படுத்துவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்நிகழ்வின் மூலம் மாணவர்களிடையே தலைமைத்துவம், படைப்பாற்றல், தகவல் தொடர்புத் திறன். குழு உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் பிற வாழ்வியல் திறன்களை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்கள் (Orientation) வழங்க வேண்டும்.
மேலும், தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் இந்நிகழ்வு முறையாகவும் மாணவர் மையமாகவும் செயல்படுத்தப்படுவதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு நிகழ்வின் நிறைவிலும், மாணவர்களின் கருத்துகள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றைப் பெற்று நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளைப் பதிவுசெய்யும் புகைப்படங்களுடன் கூடிய அறிக்கையினை பள்ளித் தலைமையாசிரியர்கள் தயாரித்து, ஆவணப் படுத்துவதுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களுக்கு சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், ஒவ்வொரு முறையும் இந்நிகழ்வு செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள், தங்களது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள், மாணவர்களின் கருத்துகள் மற்றும் புகைப்படப் பதிவுகள் உள்ளிட்ட தொகுக்கப்பட்ட அறிக்கையை தொடக்கக்கல்வி இயக்ககத்திற்கும், magizhvudanmunneru@tnschoolsgov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இச்செயல்பாடுகளை சிறப்பாக நடைமுறைப்படுத்திட, வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்தப் பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலர், மன்றச் செயல்பாடுகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (DC.3) மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் இது சார்ந்து தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இயக்குநர்
இணைப்பு:
மகிழ்வுடன் முன்னேறு கட்டகம்
பெறுநர்
1 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)
நகல்
1 அரசு செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-06-
அவர்களுக்குத் தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது.
2. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை -06

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.