கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Magizhvudan Munneru Module

 


மகிழ்வுடன் முன்னேறு கட்டகம் / கையேடு


Magizhvudan Munneru Module / Handbook 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




மகிழ்வுடன் முன்னேறு


மகிழ்வுடன் முன்னேறு-நோக்கமும் தனித்துவமும்


மகிழ்வுடன் முன்னேறு என்பது பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் தமது உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்தவும். சொந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்தவும், தங்களது தனித்திறன்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும் மாணவர் மையக் கொண்டாட்ட நாளாகும்.


பொதுவாக நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பாளர்களில் வெற்றி பெறுபவரைத் தேர்ந்தெடுப்பதே முதன்மை நோக்கமாக அமைகிறது. இதற்கு மாறாக, மகிழ்வுடன் முன்னேறு நிகழ்வு வெற்றி தோல்வி என்ற அணுகுமுறைக்கு அப்பாற்பட்டு, ஒவ்வொரு மாணவரின் திறன், முயற்சி, படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை அங்கீகரித்து கொண்டாடுவதை மையமாகக் கொண்டுள்ளது.


போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அல்லது போட்டி மனப்பான்மையால் ஏற்படக்கூடிய தயக்கமின்றி, ஒவ்வொரு மாணவரும் தமது திறனைத் தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான களத்தை இந்நிகழ்வு வழங்குகிறது. இதன் மூலம், போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமே திறமைக்கான அளவுகோல் அல்ல: ஒவ்வொரு மாணவரிடமும் தனித்துவமான திறனும் ஆற்றலும் உள்ளன என்பதைக் கொண்டாடும் வாய்ப்பாக மகிழ்வுடன் முன்னேறு அமைகிறது.


மேலும், இந்நிகழ்வு பெற்றோர் மற்றும் சமூகத்தினரும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஆர்வங்களையும் படைப்புகளையும் நேரடியாகக் கண்டு பாராட்டுவதற்கான ஒரு திறந்த மேடையாக அமைகிறது. இதன் மூலம், மாணவர்களின் கல்விசார் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட அவர்களின் பல்வேறு


திறன்களைப் பெற்றோரும் சமூகத்தினரும் அறிந்துகொள்ளவும். பாராட்டவும். ஊக்கப்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுகிறது.


எனவே மகிழ்வுடன் முன்னேறு என்பது வெற்றியாளர்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் நிகழ்வல்ல: பள்ளியில் உள்ள ஒவ்வொரு மாணவரின் திறமையையும் கொண்டாடி ஒவ்வொரு குழந்தைக்கும் எனது திறனுக்கும் ஒரு மேடை உண்டு என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு மகிழ்ச்சியான மாணவர் தலைமையிலான கொண்டாட்டமாகும்.


இக்கட்டகத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள். மகிழ்வுடன் முன்னேறு நிகழ்வினை பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான ஒரு முன்மாதிரி அணுகுமுறையாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை கட்டாயமான செயல்பாடுகளாகக் கருதப்பட வேண்டியதில்லை. ஒவ்வொரு பள்ளியும் தங்களது சூழல், மாணவர்களின் வயது, ஆர்வம், திறன் மற்றும் உள்ளூர் வளங்களுக்கு ஏற்ப நிகழ்வுகளைத் தாங்களே திட்டமிட்டு செயல்படுத்தலாம்.


குறிப்பாக, மாணவர்களே இந்நாளுக்கான செயல்பாடுகளைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்து, தங்களது எண்ணங்களுக்கும் படைப்பாற்றலுக்கும் உரிய இடமளித்து. ஒவ்வொரு மாணவரும் தனது உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வை மேலும் ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் வடிவமைக்க வேண்டும்.


செயல்பாட்டுக் களங்கள் வழக்கமான வகுப்பறைச் சூழலுக்கு அப்பாற்பட்டு, பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் தங்களது சிந்தனையின் அடிப்படையில் குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு ஏற்றதாகக் கருதும் பொருத்தமான மற்றும் புதுமையான இடங்களில் அமைக்கப்படலாம். இதன் மூலம் பள்ளி வளாகமே மாணவர்களின் கற்றல், படைப்பு மற்றும் திறன் வெளிப்பாட்டிற்கான உயிரோட்டமான களமாக மாறும்.


மேலும் மாணவர்களின் வயது மற்றும் வளர்நிலைக்கு ஏற்ப செயல்பாடுகளைத் திட்டமிடுவதோடு மாணவர்களின் விருப்பம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் பல்வேறு செயல்பாட்டுக் களங்களை உருவாக்கி குறிப்பிட்ட செயல்பாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தாங்களாக முன்வந்து அந்தக் களத்தில் இணைந்து செயல்படுவதற்கும் வாய்ப்பளிக்கலாம்.


எனவே மகிழ்வுடன் முன்னேறு" என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றும் ஒரு நாள் மட்டுமல்ல: மாணவர்களே சிந்தித்து, திட்டமிட்டு, செயல்பட்டு, படைத்து, வெளிப்படுத்தி, மகிழ்ந்து கற்றுக்கொள்ளும் ஒரு மாணவர் மையக் கொண்டாட்டமாக அமைய வேண்டும். ஒவ்வொரு மாணவரின் தனித்திறனுக்கும் உரிய இடமளித்து, "ஒவ்வொரு மாணவரும் ஒரு திறமை: ஒவ்வொரு திறமைக்கும் ஒரு மேடை-என்ற நோக்கத்துடன் இந்நிகழ்வு பள்ளிகளில் செயல்படுத்தப்பட வேண்டும்.


செயல்படுத்துவதற்கான கட்டகம்-2026-27


1. முன்னுரை- மகிழ்வுடன் முன்னேறு


பள்ளிகள் கல்வியைக் கற்பிக்கும் இடங்களாக மட்டுமன்றி, மாணவர்களின் தன்னம்பிக்கை, தலைமைத்துவம், படைப்பாற்றல், தொடர்புத்திறன், குழுவாகச் செயல்படும் திறன். பொறுப்புணர்வு மற்றும் சமூகப் பங்களிப்பு போன்ற பல்வேறு திறன்களை வளர்க்கும் கற்றல் மையங்களாக திகழ்கின்றன.


மாணவர்கள் தங்களது பல்வேறு திறன்களை வெளிப்படுத்துவதற்கும். தங்களது சாதனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், தாங்களே நிகழ்வுகளைத் திட்டமிட்டு நடத்துவதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் மகிழ்வுடன் முன்னேறு-என்ற மாணவர் தலைமையிலான கொண்டாட்ட நிகழ்வு அறிமுகப்படுத்தப்படுகிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்