இன்று (09-12-2023) ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன (Today (09-12-2023) Ration Card Grievance Redressal Camps are being held)...
ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் வருகின்ற சனிக்கிழமை (09.12.23) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்...
ரேஷன் கார்டு
1. பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல்
2. முகவரி மாற்றம்
3. புதிய அலைபேசி எண் சேர்த்தல் அல்லது பழைய அலைபேசி எண் மாற்றம்
4. குடும்பத் தலைவர் மாற்றம் - 18 வயதுக்கு கீழே உள்ளவர்களை குடும்ப தலைவராக நியமிக்க முடியாது
5. தற்போது இருக்கும் முகவரி மாற்றம் செய்யாமலே தங்கள் அருகில் இருக்கும் ரேஷன் கடையை மற்றும் மாற்றம் செய்தல்
6. அரசி (NPHH) அட்டையை சர்க்கரை அட்டையாக (NPHH-S) மாற்றம் செய்தல்
7. தொலைந்து போன பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக புதிய மின்னணு நகல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தல்
8. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல்
9.உரிமம் வழங்குதல் அதாவது ஒருவர் ரேஷன் கடைக்கு செல்ல இயலாத (வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் நோய்வாய் பட்டவர்கள்) சூழ்நிலையில் இருக்கும் பொழுது அவருக்கு பதிலாக வேறு ஒருவர் அவரது பொருட்களை பெறுவது.. அதாவது அங்கீகார சான்று பெறுதல். .
10. ரேஷன் கார்டை ரத்து செய்தல் ( ஒருவேளை வேறு மாநிலங்களில் குடியேறி இருந்தால்)
11. ஒரு நபர் இருக்கும் ரேஷன் கார்டை அவர் விருப்பப்படும் பட்சத்தில் மட்டும் மற்ற குடும்ப உறுப்பினர்கள பெயர் இருக்கும் ரேசன் கார்டுடன் இணைத்துக் கொள்ளலாம். . .
*தேவைப்படும் ஆவணங்கள்
1. ஆதார் அட்டை நகல் குழந்தைகளாக இருந்தால் பிறப்புச் சான்றிதழ் அவசியம்
2. முகவரி மாற்றம் செய்வதற்கு கேஸ் பில் வங்கி கணக்கு புத்தகம் மின் இணைப்பு ரசீது இதில் ஏதாவது ஒன்று ஒரிஜினல் கொண்டு வர வேண்டும்
3. பெயர் நீக்கம் செய்வதற்கு இறப்புச் சான்றிதழ் அல்லது திருமணச் சான்றிதழ் கட்டாயம் தேவை
4. மாற்றம் செய்யும் அலைபேசி எண்ணை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்
சர்க்கரை ஆட்டையை (NPHH-S) அரிசி (NPHH) அட்டையாக இப்போது மாற்றம் செய்ய முடியாது அதேபோல் NPHH கார்டை PHH கார்டாகவும் மாற்றம் செய்ய முடியாது இதைப் பற்றிய தெளிவான தகவல் வரும் மார்ச் மாதம் வெளியாகும்.