தொடக்கக் கல்வி ஆசிரியர் (D.El.Ed.,) பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் (Instructions for applying for Diplomo in Elementary Education (D.El.Ed.,) )...
💥 இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் ஜுலை 4ஆம் தேதியில் காலை 10 மணிக்கு https://scert.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியாகும்.
💥 2022-23-ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கின்றன.
💥 தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பிற்குச் சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் (Higher Secondary) தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். மேலும், பொதுப்பிரிவினர் (குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் (BC / BCM / MBC / SC SCA ST) பிரிவினர் குறைந்தபட்சம் 45 விழுக்காடு (540/1200 - 270/600) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
💥 விண்ணப்பதாரர் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் எந்த மொழிப் பாடப்பிரிவிற்கு (தமிழ் / ஆங்கிலம்/ தெலுங்கு/ உருது) விண்ணப்பிக்கின்றாரோ, அம்மொழியினை 12ஆம் வகுப்பு வரை மொழிப்பாடத்தில் பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ கட்டாயாமாகப் பயின்றிருக்க வேண்டும்.
💥 31-07-2022 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும். ஆதரவற்றோர் (Orphans), கணவரால் கைவிடப்பட்ட பெண்டிர் மற்றும் விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். கலப்புத் திருமணத் தம்பதியினரில் பொது / பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31-07-2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 மற்றும் ஆதி திராவிடர்/ பழங்குடியினருக்கு 31-07-2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும்.
💥 சிறப்பு இட ஒதுக்கீடு: மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது.
💥 விண்ணப்பத்தினை https://scert.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 09.07.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் உரிய கட்டணத்துடன் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...