கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Biometric லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Biometric லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Bio Metric Attendance - CEO Proceedings, Dated : 16-10-2024


மீண்டும் விரல் ரேகை (Biometric) அடிப்படையிலான வருகைப்பதிவு முறை நடைமுறை...



AEBAS பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள் : 16-10-2024..



Bio Metric Attendance - CEO Proceedings, Dated : 16-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை (AEBAS) செயல்படுத்துவது தொடர்பான விளக்கங்கள்/ வழிமுறைகள் - தேசிய மருத்துவ ஆணையம்...



 NMC 25/01/2024 - Clarifications/ directions regarding implementation of Adhaar Enabled Biometric Attendance System (AEBAS) in all government and private medical colleges...



அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை (AEBAS - Biometric Attendance) செயல்படுத்துவது தொடர்பான விளக்கங்கள்/ வழிமுறைகள் - தேசிய மருத்துவ ஆணையம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்...



 அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்...


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விரைவில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த உள்ளது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இம்முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு சில அரசு பள்ளிகளில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது..



கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்கவும் நிர்வாக வசதிக்காகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு பின் பற்றப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய கடைகளிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில் வருகை விவரம் பதிவு செய்யப்படுகிறது இந்த பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சோதனை முறையில் அறிமுகம் ஆகிறது.



செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மறைமலை அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது.



ஆறாவது முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவர்களுக்கு  பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.



இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மற்ற பள்ளிகளுக்கும் பயம் மெட்ரிக் வருகை பதிவு விரிவுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



இத்திட்டம் அமலானாதால் அரசின் நலத்திட்டங்களை தவறாக கணக்கிடுவது, மாணவர்கள் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.



பயோமெட்ரிக் கருவி பொருத்துவதன் மூலம் பள்ளிகளின் வருகைப்பதிவு அழிக்க முடியாத ஆவணமாகிவிடும் என கல்வித் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.



பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை - பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகள் அமைப்புகளால் அனைத்து அரசு ஊழியர்களின் வருகைக்காக ஆதார் பயோமெட்ரிக் வருகை முறையை (AEBAS) செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் (Department of Personnel & Training - Instructions regarding implementation of Aadhar Enable Biometric Attendance System (AEBAS) for attendance of all Government employees, by various Ministries/Departments Organizations)...



>>> பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை - பல்வேறு அமைச்சகங்கள்/ துறைகள் அமைப்புகளால் அனைத்து அரசு ஊழியர்களின் வருகைக்காக ஆதார் பயோமெட்ரிக் வருகை முறையை (AEBAS) செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் (Department of Personnel & Training - Instructions regarding implementation of Aadhar Enable Biometric Attendance System (AEBAS) for attendance of all Government employees, by various Ministries/Departments Organizations)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு - சிசிடிவி கண்காணிப்பு...


 அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளைத் தவிர்க்க பயோமெட்ரிக் (Biometric) முறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின்கீழ் 1,354 அரசு விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதிகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகின்றன.


இந்த விடுதிகளில் சேர பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதன்படி கடந்த கல்வியாண்டில் (2019-20) விடுதிகளில் 85,914 மாணவ, மாணவிகள் தங்கினர்.


இதற்கிடையே மாணவர்களின் நலன் கருதி விடுதிகளில் கட்டமைப்பு வசதிகளின் தரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் விடுதிகளில் நிதி செலவினத்தை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தும் நோக்கில் பயோமெட்ரிக் வருகைப்பதிவை அமல்படுத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.


இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:


அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதியை பெரும்பாலான விடுதிகள்முறையாகப் பயன்படுத்துவதில்லை. உணவுக்கான செலவினங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதையடுத்து முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் கைவிரல் ரேகைப் பதிவுடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த பயோமெட்ரிக் முறை என்பதால் அவை இணையவழியில் மாவட்ட அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். பயோமெட்ரிக் கருவியில் பதிவாகும் தகவல்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும் வந்துவிடும். இதனால் வருகைப்பதிவு, திட்டசெலவின அறிக்கை, நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மாவட்டஅலுவலகங்கள் மூலம் கண்காணிக்க முடியும்.


இதுதவிர வருகை அடிப்படையிலேயே மாணவர்களுக்கு தினமும் உணவு வழங்கப்படும். இதன்மூலம் அனைத்து நலத்திட்டங்களும் தகுதியான மாணவர்களுக்கு முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும். மேலும், வெளிப்புற மாணவர்கள் விடுதிகளில் தங்குவதும் தவிர்க்கப்படும்.


வருகை பதிவைக் கொண்டு தினசரி செலவினங்கள் கணக்கிடப்பட்டு விடுதிகளுக்கு நிதி ஒதுக்கப்படும். இதனால் கூடுதல் மற்றும்தேவையற்ற செலவுகள் தவிர்க்கப்படுவதுடன், முறைகேடுகளுக்கான வாய்ப்புகளும் குறையும்.


அதேபோல், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விடுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ‘பயோ மெட்ரிக்’ முறை – ஆள்மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை...

 


தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் நடைபெறும் ஆள் மாறாட்டங்களை தவிர்க்க ஆதார் அட்டை அடிப்படையிலான ‘பயோ மெட்ரிக்’ சேவையை நடைமுறைப்படுத்த உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் அதிகம் ஆள் மாறாட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்க இந்த ஆண்டு நடத்தப்படும் தேர்வுகளில் அதிக மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் நடைபெற்ற இந்த தேர்வில் சில நேரங்களில் விதி மீறல்களும் நடைபெறுகின்றன.

இதனை தடுக்கும் விதத்தில் டிஎன்பிஎஸ்சி ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி போட்டித் தேர்வு நடத்தப்படும் தேர்வு மையங்களில் ஆதார் அடிப்படையிலான ‘பயோ மெட்ரிக்’ வருகைப்பதிவு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த திட்டத்திற்கான நிறுவனத்தை தேர்வு செய்து அதன்பின் மார்ச் மாதம் நடத்தப்படும் துறை தேர்வுகள், இன்ஜினியரிங் பணி தேர்வுகள், குரூப் 4, குரூப் 2, குரூப் 1 தேர்வுகளில் பயோ மெட்ரிக் முறை அமலுக்கு வரும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...