கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
EER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

EMIS Websiteல் EER - Update செய்யும் விதம் & தேவையான தகவல்கள்...

 EMIS ல் EER என்ற Tab புதிதாக உருவாக்கப் பட்டுள்ளது.



 EMIS Websiteல் EER - Update செய்யும் விதம் & தேவையான தகவல்கள்...


Total population எனும் தலைப்பில்

Category, Male+Female=Total என SC(A), SC, ST, MBC, BC (H), BC (M), BC (C), OC, Totalஆகிய விவரங்களை நிரப்ப வேண்டும்...




Schools > EER Elementary எனும் தலைப்பில் 

Child Population, School Age Population, School Going Population, Dropout, Never Enrolled, Eligible for Enrolment, Migration Inbound, Migration Outbound, Migration Summary ஆகிய தலைப்புகளில் கீழ் Boys+Girls=Total என SC(A), SC, ST, MBC, BC (H), BC (M), BC (C), OC, Totalஎன Category வாரியாக விவரங்களை நிரப்ப வேண்டும்...




Schools > EER Secondary எனும் தலைப்பில் 

School Age Population, School Going Population, Studying At Other Than School Education, Dropout Age 15 to 19, Migration Inbound, Migration Outbound, Migration Summaryஆகிய தலைப்புகளில் கீழ் Boys+Girls=Total என SC(A), SC, ST, MBC, BC (H), BC (M), BC (C), OC, Totalஎன Category வாரியாக விவரங்களை நிரப்ப வேண்டும்...



கீழ்கண்ட படிவத்தை  Habitationwise முதலில் தயார்செய்ய வேண்டும். பிறகு Over all  மொத்த தொகுப்பை தயார் செய்து அதை  மட்டும் EMIS தளத்தில் உள்ள EER ஐ Online ல் நிரப்பி Update செய்ய வேண்டும்..


>>> EER FORMAT...


குறிப்பு:

Age 0 - 3 = 0+ To 2+

Age 3+ to 5 = 3+ to 4+

Age 5+ to 10 = 5+ to 9+

Age 11 to 14 = 10+ to 13+

Age 15 to 19 = 14+ to 18+


மேற்கண்ட Age categories தெளிவாக age+  வைத்து நிரப்பினால் சரியாக இருக்கும்..


>>> இத்தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



EER Format... (Elementary Education Register)



EER (Elementary Education Register) 

  1. School Habitaion wise formats (Primary )
  2. School Consolidation formats (Primary)
  3. School Habitaion wise formats (Upper Primary)


EER படிவத்தில் (primary) hapitation wise விபரங்கள் 

1. மக்கள் தொகை (ஆண்,பெண்)


2.Child population 0 to 3, 3 to 5 பிரித்து எழுத வேண்டும்.


Upper primary level


school age population 15+ to 19 மற்றும் 15 to19.


School going children

15 to 19 மற்றும் 15 to19 ITI ,  Diploma, Catering படிப்பில்  சேர்ந்தவர் விபரம் கேட்கப் பட்டுள்ளது.


Drop out, never enroll details கேட்க பட்டுள்ளது.


 இததகவல்களை பூர்த்தி செய்து வைத்து EMIS வலைத்தளத்தில் EER format upload செய்த பின் entry செய்ய வேண்டும். 


தற்போது மேற்கண்ட விபரங்களை பள்ளியில் பூர்த்தி செய்து வைத்திருக்க வேண்டும்.


>>> Click here to Download EER Format...




EER பதிவேட்டில் ஒரு மாணவன், 18+ வயது வரை கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் தகவல்கள் சேகரிக்கப் படுவது ஏன் ?

 EER பதிவேட்டில் ஒரு மாணவன், 18+ வயது வரை  கல்வி பயில்வதை உறுதி செய்யும் வகையில் தகவல்கள் சேகரிக்கப் படுவது ஏன்?

CBSE பள்ளிகளில், 31.03. அன்று 5 வயது நிறைவடைந்த மாணவர்கள் மட்டுமே, முதல் வகுப்பில் சேர தகுதி படைத்தவர்கள்.

உதாரணமாக 31.03.2015 ஆம் தேதிக்கு முன்பு பிறந்த மாணவர்கள் மட்டுமே CBSE பள்ளிகளில், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு சேர தகுதி படைத்தவர்கள்.

01.04.2015 அன்று பிறந்திருந்திருந்தால் கூட, 2020-21 ஆம் கல்வி ஆண்டில், முதல் வகுப்பில் சேர இயலாது. 

இதற்கு எந்த அலுவலரும் தவிர்ப்பு வழங்க இயலாது.

ஆனால், தமிழகத்தில் 31.07. அன்று 5 வயது பூர்த்தி செய்திருந்தால் முதல் வகுப்பில் சேர தகுதி பெற்றவராகிறார்.

அதாவது 31.07.2015 அன்று 5 வயது பூர்த்தி செய்திருந்தால், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு சேர தகுதி பெற்றவராகிறார்.

 தேவைப்பட்டால், பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் 30.08.2015 அன்று 5 வயது நிறைவு பெறும் குழந்தைக்கு (30 நாட்களுக்கு மட்டும்) , உரிய அலுவலரிடம் தவிர்ப்பு பெற்று முதல் வகுப்பில் சேர்க்கலாம்.

CBSE பள்ளிகளில், எந்த வயது முதல் எந்த வயது வரை உள்ள குழந்தைகள், முதல் வகுப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்களாகின்றனர்?

மார்ச் 31 அன்று 5 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் 7 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதாவது 2020-21 ஆம் கல்வி ஆண்டில் ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமாயின், அக்குழந்தை 01.04.2013 முதல் 31.03.2015 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

அதாவது 5 வயது முதல் 7 வயதுக்குள் உள்ள குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்க தகுதி படைத்தவர்கள்.

ஒரு குழந்தை 6 வயது முடிந்து 7 வயது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், முதல் வகுப்பு சேர்ந்திருந்தால், அக்குழந்தை 12 ஆம் வகுப்பு முடிக்க 18+ வயதாகி விடும்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், ஒரு குழந்தை 12 ஆம் வகுப்பு வரை (அதாவது 18 வயது வரை) கட்டாயம் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும்.

எனவே பள்ளி செல்லாதோர் கணக்கெடுப்பு 18 வயது என்பதை இலக்காகக் கொண்டு நடத்தப் படுகிறது.

இதை பின்பற்றியே EER பதிவேட்டில் 5+ வயது முதல் 18+ வயது வரை உள்ள மாணவர்கள், கல்வி நிறுவனங்களில் பயிலும் விவரம் சேகரித்து, பதிவு செய்யப் படுகிறது.

EER - UPDATE MODEL FORM...

 புதிய கல்விக் கொள்கையின் படி 2 வயது முதல் 18 வரை உள்ளவர்கள் அனைவரும், கட்டாயம் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும்.

இதன் படி பார்த்தால் 2 வயது முடிந்த ஒரு குழந்தை Pre KG or Anganwadi யில் கல்வியைத் தொடங்கி, தனது 18 ஆம் வயதில், கல்லூரி முதல் ஆண்டில் பயிலும் வரை கட்டாயம் என வலியுறுத்தப் படுகிறது.

இதை தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், கண்காணித்து உறுதி செய்வது கட்டாயமாகிறது.

எனவே இதற்கேற்ப EER பதிவேட்டை தயாரித்து வைத்துக் கொள்வது நல்லது.

தங்கள் கணக்கெடுப்பு பகுதிக்கு ஏற்ப,

கீழ்க்கண்டவாறு பக்கங்களை ஒதுக்கீடு செய்வது நல்லது.

1. SC ஆண்

2. SC பெண்

3. ST ஆண்

4. ST பெண்

5. SCA ஆண்

6. SCA பெண்

7. MBC ஆண்

8. MBC பெண்

9. BC ஆண்

10. BC பெண்

11. BCM ஆண்

12. BCM பெண்

13. 0C ஆண்

14. 0C பெண்

மேற்கண்ட வகையில், தங்கள் கணக்கெடுப்பு பகுதி மக்கள் தொகைக்கேற்ப பக்கங்களை ஒதுக்கீடு செய்து பைண்டிங் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

இந்த முறையில் தயாரிக்கும் பதிவேடு, புதிய குடியிருப்புப் பகுதி உருவாகாத, கிராமப்புற பள்ளிகளுக்கு பயனளிக்கும்.

புதிய குடியிருப்பு பகுதி உருவாகியுள்ள பள்ளிகள், மாற்றமில்லாத பழைய குடியிருப்புப் பகுதிகளுக்கு ஒன்றும், புதிதாக உருவாகியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு ஒன்றும் தயாரித்து பயன்படுத்தலாம்.

இதில் மாணவர் ஆதார் எண் மற்றும் EMIS குறிக்கப் படுவதால், நடப்பு கல்வி ஆண்டில் எங்கு பயில்கிறார் என்ற விவரத்தை, தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் EMIS இணைய தளம் மூலம் கண்டறியலாம்.

மேலும் மாணவர் மாற்றுத் திறனாளியா? 18 வயது முடிவில் என்ன பயன்றுள்ளான் போன்ற விவரங்களை, கல்வித்துறை அலுவலர்கள் கேட்கும் போது துல்லியமாக பதிலளிக்க இயலும்.

இம்முறையில் பதிவேடு தயாரித்து பயன்படுத்தும் பொழுது, ஆசிரியர்களின் EER update பணிச்சுமை வெகுவாக குறையும்.


>>> EER - மாதிரி படிவம்...


>>> EER Format in Excel Sheet...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...