>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் புதிதாக அமைக்க அனுமதி அளித்து அரசாணை (G.O.Ms.No. 365, Dated: 14-10-2022) வெளியீடு (National Urban Health Mission - Constitution of Committee to Monitor the Performance of 708 Urban Health and Wellness Centers in Municipalities, Greater Chennai Corporation and Other Corporations - G.O.Ms.No. 365, Dated: 14-10-2022)...
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும்: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு...
ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு...
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்காமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
என் மனைவியை பிரசவத்திற்காக கடந்த 25.6.2012ல் ராஜாக்காமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தேன். மறுநாள் காலை பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிரசவத்திற்கு பின் அதிகளவில் ரத்தம் வெளியேறியது. சிகிச்சையளித்த மருத்துவர்கள், உடனடியாக என் மனைவியை ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறினர். ஆனால் அங்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததாலும், தாமதமாக அழைத்துச் செல்லப்பட்டதாலும் அங்கு என் மனைவி இறந்தார். எனவே, என் மனைவி இறப்புக்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மனைவிக்கு உடனடியாக மருத்துவர்களும் தேவையான மருந்து மற்றும் முதலுதவியை கொடுத்துள்ளனர். ஆனாலும், ரத்தக்கசிவு நிற்கவில்லை. இதனால் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு மாற்றக் கூறியுள்ளனர். ஆம்புலன்ஸ் இல்லாததால்தான் பிரச்னை துவங்கியுள்ளது. ஆம்புலன்ஸ் வருவதற்காக அரைமணி நேரம் வீணாகியுள்ளது. சுமார் 1.15 மணி நேரத்திற்கு பிறகே இறந்துள்ளார். தாமதமின்றி அவரை மாற்றியிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம். இதுபோன்ற நேரத்தில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருக்கக் கூடாது. காத்திருந்த நேரத்தில் அதிகளவு ரத்தம் வெளியேறியதே இறப்புக்கு காரணமாகியுள்ளது. எனவே, பொது சுகாதாரத்துறை முதன்மை செயலர் தரப்பில் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை மூலதன நிதியில் இருந்து 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Suspension of a teacher who slept in a government school asking students to press his feet
அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் Suspension of a teacher who slept in a government school ...