கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Rabies : நம்மை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை

 


ரேபிஸ் நோய் : நம்மை தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை 


🦮🐕‍🦺🐈🐕🐕‍🦺🦮🐈‍⬛🐕

சமீபத்தில் தெருநாயை சாக்கடையில் இருந்து காப்பாற்றும் போது நாயிடம் இருந்து கடிபட்ட ப்ரிஜேஷ் எனும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த கபடி வீரர் ரேபிஸ் நோய் ஏற்பட்டு துடிதுடித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 


கடந்த இரண்டு மாதங்களில் கேரள மாநிலத்தில் மூன்று சிறு வயதினர் நாய்க்கடிக்குப் பின் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இத்தகைய சூழ்நிலையில் 

ரேபிஸ் குறித்தும், நம்மையும் நம் சுற்றத்தாரையும் தற்காத்துக் கொள்ளத் தேவையான விஷயங்களைப் பற்றி அறிவோம். 


ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று நோயாகும். 


இந்தியாவைப் பொருத்தவரை இந்தத் தொற்று, பெரும்பாலும் நாய்களிடம் ( 95%)   இருந்தும் 

அதன் பின் பூனைகள் (2%), நரி, கீரிப்பிள்ளை (1%) உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பரவுகின்றது. 


ரேபிஸ் வைரஸ் தொற்றுடைய நாயோ பூனையோ, மனிதர்களைக் கடிக்கும் போதோ பிராண்டும் போதோ அல்லது காயமுற்ற பகுதியில் நக்கும் போதோ அல்லது மனிதர்களின் வாயில் , கண்ணில் அதன் எச்சில் படும் போதோ, ரேபிஸ் வைரஸ் மனிதர்களின் உடலுக்குள் செல்கிறது.


இது ஏனைய வைரஸ்கள் போல ரத்த ஓட்டத்தில் கலந்து பரவும் தன்மையற்றது.  மாறாக நரம்புகளில் ஊடுருவி மூளையை நோக்கி மெதுவாக ஊர்ந்து செல்லும் தன்மை கொண்டதாக இருக்கிறது. 


விலங்கிடம் கடிபட்டு தொற்று அடைந்ததில் இருந்து நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும். 


பொதுவாக, எந்த இடத்தில் விலங்கு கடித்திருக்கறது என்பதைப் பொருத்து அந்த காலம் முடிவாகும். 

மூளைக்கு மிக அருகில் இருக்கும் தலை, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் கடிபட்டால் சீக்கிரமே அறிகுறிகள் தோன்றிவிடும். 


இன்னும் கை, கால்கள், விரல்கள் ஆகிய பகுதிகளில் நரம்புகள் அதிகமாக உணர்வூட்டுவதால் அங்கு உள்ளே செல்லும் வைரஸும் எளிதில் தண்டுவட நரம்பை அடைந்து அங்கிருந்து தண்டுவட நீர் மூலம் மூளையை அடைந்துவிடுகிறது. 

பொதுவாக பெரும்பான்மையான ரேபிஸ் நோயாளர்களில் மூளையை வைரஸ் அடைவதற்கு 21 நாட்கள் நேரம் எடுத்துக் கொள்கிறது. 


ரேபிஸ் நோய் ஏற்பட்டுவிட்டால் மரணம் சம்பவிப்பது 100% உறுதி. 

இதற்குக் காரணம்,

இந்த வைரஸ் மூளையைச் சென்று அடைந்த பிறகே மூளையில் தொற்று (எண்கெஃபாலைட்டிஸ்) ஏற்பட்டதற்கான அறிகுறிகளை வெளியிடும்.  வைரஸானது மூளையைச் சென்று அடைந்து விட்ட பிறகு எந்த சிகிச்சை கொடுத்தும் காப்பாற்றுவது மிகக் கடினம் என்ற நிலையே இப்போது வரை இருந்து வருகிறது. 


காய்ச்சல் 

கடும் தலைவலி 

நீரைக் கண்டு அச்சம் கொள்ளுதல் ( ஹைட்ரோ ஃபோபியா) , 

ஒலியைக் கேட்டு அச்சம் கொள்ளுதல் ( ஃபோனோபோபியா) , 

காற்று மேலே பட்டால் கூட கடும் உடல் வலி ஏற்படும். தொண்டைப் பகுதி தசைகள் லேசாக நீர்பட்டால் கூட இறுக்கிக் கொண்டு மூச்சுத் திணறல் ஏற்படும். 

எச்சில் அதிகமாக சுரக்கும். முதலில் ஆங்காங்கே 

தசை இறுக்க நிலை ஏற்பட்டு, 

பிறகு பக்கவாதம், பிதற்றல் நிலை என்று நோய் முற்றி  மரணம் சம்பவிக்கும்.


எனவே, 

நாய்க்கடியோ பூனைக்கடியோ உதாசீனப்படுத்தாமல் உடனடியாக அதற்குரிய முக்கியமான உயிர்காக்கும் சிகிச்சைகளான 

1.காயத்தைக் கழுவி சுத்தம் செய்தல்

2. ரேபிஸ் தடுப்பூசியை முறையாகப் பெறுதல் 

3. தேவை இருக்கும் இடங்களில், ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசியைப் பெறுதல் 


ஆகிய மூன்றையும் கட்டாயமாகச் செய்தாக வேண்டும்.


வளர்ப்பு நாய்களால்  ரேபிஸ் தொற்று ஏற்படாது என்றே பலரும் அலட்சியமாக இருக்கின்றனர். 

அவ்வாறின்றி 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த 121 ரேபிஸ் மரணங்களில்  51 மரணங்கள் வளர்ப்பு நாய்க்கடிகளால் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


நாய்க்கடி/ பூனைக்கடி விஷயத்தில் முதலும் முக்கியமானதும் கடியை வகைப்படுத்துவதாகும். 


வகை ஒன்று 

CATEGORY I 


விலங்கைத் தொடுவது, 

விலங்குக்கு உணவு வழங்குவது, 

காயம் ஏற்படாத நல்ல நிலையில் உள்ள தோலில் விலங்கு நக்குவது, காயம் ஏற்படாத நல்ல நிலையில் உள்ள தோலில் விலங்கின் எச்சில் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட எச்சங்கள் படுவது .


மேற்கூறியவற்றால் ரேபிஸ் நோய் பரவுவதில்லை. 

எனவே இவர்களுக்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. 


வகை இரண்டு 

CATEGORY II 


லேசான ரத்தம் வெளியே வராத அளவு 

சிறிய அளவு பிராண்டல்/ பல் பதியாத அளவு  சிறிய அளவு கடி 


 

கடிபட்ட இடத்தை சுத்தமாகக் கழுவ வேண்டும் அதனுடன் 

ரேபிஸ் தடுப்பூசி ( ANTI RABIES VACCINE) வழங்கப்பட வேண்டும். 


வகை மூன்று

( CATEGORY III)  


ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் ரத்தம் வெளியே வருமாறு தோல் முழுமையையும் உள்ளடக்கிய கடி / பிராண்டல்/ காயம் ஏற்பட்ட இடத்தில் நக்கப்படுதல்/ கண், வாய் உள்ளிட்ட இடங்களில் விலங்கின் எச்சில்படுவது ஆகியன மூன்றாம் நிலை கடியாகும். 


கடிபட்ட இடத்தைக் கழுவுதல் + ரேபிஸ் தடுப்பூசியைப் பெறுதல் அதனுடன் கடிபட்ட இடத்தில் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் ஊசி கட்டாயம் வழங்கப்பட வேண்டும். 


----- 


கடிபட்ட பிறகு உடனே செய்ய வேண்டியது 

காயம்பட்ட இடத்தை ஓடும் குழாய் நீரில் தண்ணீரைத் திறந்து விட்டு நன்றாக சோப் போட்டுத் தேய்த்து 15 நிமிடங்கள்  கழுவ வேண்டும். பிறகு கடிபட்ட இடத்தில் போவிடோன் அயோடின் போன்ற கிருமி நாசினியை  உபயோகிக்கலாம். 


மூன்றாம் வகைக் கடியாக இருப்பின் கடித்த இடத்தைச் சுற்றி ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் (RABIES IMMUNOGLOBULIN)  ஊசியை கட்டாயம் வழங்க வேண்டும். கூடவே டெட்டானஸ் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். 


- கடிபட்ட இடத்தில் வைரஸ் இருக்கும் என்பதால் கட்டாயம் கடிபட்ட இடத்தை வெறும் கையால் தொடுதல் கூடாது 

- கட்டாயம் காயத்தின் மீது மண், காபித் தூள், எலுமிச்சை, மூலிகைகள், வெற்றிலை போன்றவற்றை அப்புவது தவறு. 

-------


கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் -


எச்.ஐ.வி நோயாளிகள் , புற்று நோய் கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்கள், எதிர்ப்பு சக்தி குன்றியோர் , ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்பவர்கள், 

ஹைட்ராக்சி குளோரோகுயின், மலேரியா சிகிச்சையில் பயன்படும் குளோரோகுயின் போன்ற மாத்திரைகளை உட்கொள்வோருக்கு 

இரண்டாம் வகை கடி ஏற்பட்டிருந்தாலும் 

அதை மூன்றாம் வகைக் கடியாகக் கருத்தில் கொண்டு 

ரேபிஸ் தடுப்பூசியுடன் 

கட்டாயம் ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் வழங்கப்பட வேண்டும். ரேபிஸ் தடுப்பூசி மட்டுமே இவர்களுக்கு  எதிர்ப்பு சக்தியை போதுமான அளவு வழங்காது  என்பதே இதற்கான காரணம். 


ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுளின் - அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.  


கடிபட்ட உடனே நன்றாக பதினைந்து நிமிடங்கள் ஓடும் குழாய் நீரில் சோப் போட்டுக் கழுவி விட்டு, அரசு மருத்துவமனைக்கு விரைந்திட வேண்டும். 


கடிபட்ட இடத்தில் ரத்தம் வந்ததென்றால் அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். 

மருத்துவர் கடியை சரியாக வகைப்படுத்துவதற்கு இந்தத் தகவல் உறுதுணையாக இருக்கும். 


எவ்வளவு சீக்கிரம் 

தடுப்பூசி பெறுகிறோமோ அவ்வளவு நல்லது. 

உள்ளே சென்ற வைரஸ் மூளையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்குமுன் நாம் எதிர்ப்பு மருந்தை வழங்கியாக வேண்டும். 


முதல் தவணை ( 0 நாள்) 

அதிலிருந்து மூன்றாவது நாள், பின் ஏழாம் நாள், பின் இருபத்தி எட்டாம் நாள் என்று நான்கு தவணை மருத்துவமனைக்குச் சென்று தோலினூடே வழங்கப்படும் ஊசியைச் முறையாகச் சரியாகப் போட்டுக் கொள்ள வேண்டும். 


தனியாரில் தசை வழி வழங்கப்படும் ரேபிஸ் தடுப்பூசி பெறுபவர்கள்

 

முதல் தவணை ( 0 நாள்) 

அதிலிருந்து மூன்றாவது நாள், பின் ஏழாம் நாள், பின் பதினான்காம் நாள், அதன் பின்  இருபத்தி எட்டாம் நாள் என்று ஐந்து  தவணை  சென்று தசைக்குள் வழங்கப்படும் ஊசியை முறையாகச் சரியாகப் போட்டுக் கொள்ள வேண்டும். 


தடுப்பூசி பெறும் இந்த ஒரு மாத காலத்தில் 

உணவுப் பத்தியம் ஏதுமில்லை. மாமிசம், மீன், முட்டை உள்ளிட்ட அனைத்தையும் சாப்பிடலாம். 


தமிழ்நாட்டில் 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த ரேபிஸ் மரணங்களில் செய்யப்பட்ட ஆய்வில், 

மரணமடைந்தவர்களில் 73.6% பேர் கடிபட்ட பிறகான ரேபிஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவில்லை என்பதும் 

17.4% பேர் ஆரம்ப  தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டாலும்  

முழுமையாக நான்கு தவணைகளையும் ( 0, 3,7,28) முழுமையாக முடிக்கவில்லை. 

ஒரே ஒரு நபர் தான் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தது தெரிய வந்தது. 


அந்த ஆய்வில், இறந்த நபர்களில் 83.5% பேர் நாய்களால் கடிக்கப் பெற்று  , 73.5% பேர் மூன்றாம் வகை ( CATEGORY III) கடியைப் பெற்றிருந்தும் அவர்களில் 5% பேர் மட்டுமே ரேபிஸ் இம்யூனோகுளோபுளின் பெற்றிருந்தது தெரியவந்தது. இதிலிருந்து, கடியை வகைப்படுத்துதலின் முக்கியத்துவமும் ,

மூன்றாம் வகைக் கடிக்கு கட்டாயம் இம்யூனோகுளோபுளின் வழங்கப்பட வேண்டியதன் அத்தியாவசியம் குறித்தும் நாம் அறிய முடிகிறது. 


வீட்டில் செல்ல நாய்கள் மற்றும் பூனைகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் அவற்றுக்கு வருடாந்திர ரேபிஸ் தடுப்பூசியை முறையாக வழங்கி வர வேண்டும். கூடவே தாங்கள் வளர்க்கும் நாய் மற்றும் பூனையை, தெரு நாய் மற்றும் பூனைகளுடன் கலந்து விடாதவாறு பராமரிப்பதும் அவர்களின் கடமை. 


தடுப்பூசி பெறப்பட்ட நாய், பூனை கடித்தாலும் பிராண்டினாலும் மனிதர்களுக்கு  ரேபிஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு அரிதாக உள்ளது. எனவே,  கடித்தது நாம் வளர்க்கும் செல்ல நாயாக இருந்தாலும் சரி. அதற்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் சரி, கடிபட்டவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. 


ஒருமுறை சரியாக நாய்க்கடிக்குப் பின்பான ரேபிஸ் தடுப்பூசி அட்டவணையை முடித்தவர்கள் ( கட்டாயம் அதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்)  அதற்குப் பின்பு மூன்று மாதங்களுக்குள் மற்றொரு கடிபட்டால் அவர்களுக்கு காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சிகிச்சை மட்டும் பெற்றால் போதுமானது. 

ரேபிஸ் தடுப்பூசி பெறத் தேவையில்லை. 


முந்தைய முழு அட்டவணை தடுப்பூசிகளைப் பெற்று

மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில் தற்போது புதிதாக கடிபட்டிருந்தால், 

முதல் தவணை ( 0 நாள்) 

மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால் போதுமானது. இவர்களுக்கு இம்யூனோகுளோபுளின் தேவையில்லை. 


முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி ( PRE EXPOSURE PROPHYLAXIS) 


விலங்கு நல ஆர்வலர்கள்,  மருத்துவர்கள், விலங்கு நல ஆர்வலர்கள்,  

நாய் வளர்ப்போர், நாய்களைப் பிடிப்பவர்கள், 

அதிகமான தெரு நாய்கள் இருக்கும் பகுதிகளில் வாழ்பவர்கள் - முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி பெறுவது குறித்து சிந்தித்து முடிவெடுக்கலாம். 

இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் - குழந்தைகளுக்கு முன்கூட்டிய ரேபிஸ் தடுப்பூசி பெறுவதற்கு ஊக்குவிக்கிறது. 


முன்கூட்டிய ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி அட்டவணை பின்வருமாறு 


தடுப்பூசி பெறும் முதல் நாள் ( 0 நாள்) 

மூன்றாவது நாள் 

21 அல்லது 28வது நாள்

ஆகிய மூன்று தவணைகள் பெற வேண்டும். 


ஒருமுறை முன்கூட்டிய தடுப்பூசிகளை எடுத்தவர்களுக்கு 

அவர்கள் நாய்க்கடி வாங்கும் போது 

முதல் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகிய இரு தவணைகள் மட்டும் ரேபிஸ் தடுப்பூசி போட்டால் போதுமானது. மேலும் இவர்களுக்கு இம்யூனோகுளோபுளின் வழங்கத் தேவையில்லை. 


 ரேபிஸ் 100% மரணத்தை விளைவிக்கக் கூடிய கொடூர நோயாக இருப்பினும் 

முறையான விரைவான 

சிகிச்சை மற்றும் தடுப்பூசி வழங்குதல் உயிர்களைக் காக்கக் கூடிய நடவடிக்கைகளாகும். 


தொடர்ந்து நடக்கும் ரேபிஸ் மரணங்கள் குறித்த ஆய்வுகளில் தெரிய வருபவை யாதெனில் 


கடிபட்டவர்களுக்கு கடிபட்டதே தெரியாமலும், தெரிந்தாலும் கடிபட்ட இடத்தை சுத்தமாக நன்றாக சோப் போட்டுக் கழுவாமல் இருப்பதும், 

அதற்குப் பின்பு தடுப்பூசி போடாமல் அலட்சியம் செய்வதும், 

தடுப்பூசி போடப்பட்டாலும் வகைப்படுத்துதலில் சிக்கல் ஏற்பட்டு இம்யூனோகுளோபுளின் வழங்கப்படாமல் இருப்பதும், 

குறிப்பிட்ட அட்டவணைப்படி அனைத்து தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெறாமல் இருப்பதும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. 


எந்தவொரு விலங்குக் கடியையும் அது நாய்க்கடியோ பூனைக்கடியோ அதன் சிறு பிராண்டலையும் 

துச்சமெனக் கருதாமல் அலட்சியம் செய்யாமல் 

உடனடியாக மருத்துவமனை விரைந்து அதற்குரிய சிகிச்சையும் தடுப்பூசியையும் பெறுவோம் என்று உறுதி ஏற்போம். 


ரேபிஸ் நோயால் ஏற்படும் மரணங்களைத் தடுத்திடுவோம்.


இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழின் "நலம் வாழ" பகுதியில் ரேபிஸ் நோய் குறித்த எனது விழிப்புணர்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


Type 2 diabetes நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்



 டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்


ஆம், சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடித்துள்ளனர். ஷாங்காய் சாங்செங் மருத்துவமனையின் விஞ்ஞானிகள், ஒரு நோயாளியின் உடலில் ஸ்டெம் செல்களை மாற்றி அமைப்பதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோயை மாற்றியமைக்க முடிந்தது என்று கூறியுள்ளனர். 


இந்த ஆராய்ச்சியில், 59 வயதுடைய ஒருவருக்கு ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி Type 2 diabetes நோயை மாற்றியமைத்த முதல் முறையாகும், அந்த நபர் இன்சுலின் இல்லாமல் இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த சாதனை, நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 


இந்த சிகிச்சை ஒரு புதுமையான உயிரணு மாற்று அறுவை சிகிச்சையாகும், மேலும் இந்த நோயாளி 33 மாதங்களாக இன்சுலின் மற்றும் மருந்துகளின்றி இருப்பதாக கூறப்படுகிறது. இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஒரு சாத்தியமான சிகிச்சையை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். 


சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு... சீன விஞ்ஞானிகள் அசத்தல்! 


உலக மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொடிய நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். மரபணு, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் ஏற்படும் இந்த நோய், இன்று லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில், சீன மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய சிகிச்சைமுறை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய விடியலைத் தந்துள்ளது.‌ 


அரை மணி நேர அறுவை சிகிச்சை: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின் படி, 25 வயது பெண் சர்க்கரை நோயாளிக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையானது, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வாய்ப்பைத் திறந்துள்ளது. இந்த சிகிச்சையில் நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு தசை எடுக்கப்பட்டு, சில ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த அரை மணி நேரம் அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளி இனி இன்சுலின் ஊசி போடாமல் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



இந்த புதிய சிகிச்சைமுறை குறிப்பாக டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் 1 நீரிழிவு நோயில், உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது. இதனால், இன்சுலின் ஊசி போடுவது அவசியமாகிறது. ஆனால், இந்த புதிய சிகிச்சையின் மூலம் இன்சுலின் தேவை குறைந்து வாழ்க்கைத் தரம் மேம்படும். 


சீன மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்த சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. 


சீன மருத்துவ ஆராய்ச்சியில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, இந்த சர்க்கரை நோய் சிகிச்சை முறையானது சீனாவின் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதனால், சீன மருத்துவர்கள் சர்க்கரை நோய்க்கான எதிர்கால சிகிச்சைகளை மேலும் மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என நம்பப்படுகிறது.‌ 


சீன மருத்துவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு சர்க்கரை நோய் சிகிச்சைக்கான ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தாலும், இந்த சிகிச்சை முறையில் நீண்ட கால விளைவுகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்த சிகிச்சை முறையை உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் எளிதாக அணுகும் வகையில் செய்ய வேண்டியது அவசியமாகும். 



Application for Paramedical courses starts from 17.06.2025


TamilNadu Paramedical


துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்பம் 17.06.2025 முதல் துவங்குகிறது. Paramedical Admission Prospectus 2025-26


Counseling application for Paramedical courses starts from 17.06.2025


கடைசி நாள் 07.07.2025



 PARAMEDICAL COURSE PROSPECTUS 2025-2026


2025-2026 


படிப்புகள் சார்ந்து தெரிந்து கொள்ள.. விண்ணப்பம் அளிக்க கீழே உள்ள PDF பார்க்கவும்

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



GOVERNMENT OF TAMIL NADU

PROSPECTUS FOR ADMISSION TO PARAMEDICAL DEGREE COURSES UNDER GOVERNMENT QUOTA 2025-2026 SESSION

(As per G.O. (D) No.618, Health and Family Welfare (PME-2) Department, Dated : 12.06.2025 and as amended from time to time)


➢ B.PHARM

➢ B.P.T.

➢ B.ASLP

➢ B.Sc. (NURSING)

➢ B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY

➢ B.Sc. RADIO THERAPY TECHNOLOGY

➢ B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY

➢ B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY

➢ B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY

➢ B.Sc. CARDIAC TECHNOLOGY

➢ B.Sc. CRITICAL CARE TECHNOLOGY

➢ B.Sc. DIALYSIS TECHNOLOGY

➢ B.Sc. PHYSICIAN ASSISTANT

➢ B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY

➢ B.Sc. RESPIRATORY THERAPY

➢ B.OPTOM

➢ B.O.T.

➢ B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGY

➢ B.Sc. CLINICAL NUTRITION

LAST DATE FOR UPLOADING ONLINE APPLICATION

07-07- 2025 UPTO 5.00 P.M.


தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை தகவல்





 தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை தகவல்


18 people infected with corona in Tamil Nadu - Health Department information


தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மொத்தம் 93 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


சிங்கப்பூர், தாய்லாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை சொல்லியிருப்பது என்ன.? 


மீண்டும் பரவும் கொரோனா

சீனாவில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி, பெரும் உயிர்சேதத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. பல லட்சம் பேரை காவு வாங்கிய பின்னர், கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டது.


2 ஆண்டுகள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த மக்கள், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்தற்குப்பின் தான் நிம்மதி அடைந்தனர். ஆனாலும், 2 ஆண்டுகளுக்கு மேல் கொரோனா ருத்ர தாண்டவம் ஆடியதால், கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையே மாறியது. லாக் டவுன் இருந்ததால், ஏராளமானோர் வேலையையும், தொழிலையும் இழந்தனர். கொரோனா இல்லாமல் உலகம் சகஜ நிலைக்கு திரும்பினாலும், அவரவர் அடைந்த நஷ்டத்திலிருந்து இன்னும் மீளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங்கில் பரவல் அதிகரிப்பு

இந்த நிலையில், தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனிடையே, ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


குறிப்பாக, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீனா மற்றும் தாய்லாந்திலும் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது.


இந்தியாவில் எத்தனை பேருக்கு தொற்று.? தமிழ்நாட்டில் எத்தனை.?

இதையடுத்து நடந்த பரிசோதனையில், இந்தியாவில் மொத்தம் 93 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல், புதுச்சேரியில் 13 பேருக்கும், கேரளாவில் 15 பேருக்கும், கர்நாடகாவில் 4 பேருக்கும், மகாராஷ்டிராவில் 7 பேருக்கும், டெல்லியில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.


எனினும், மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தமாக 24 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூரில், மே மாத முதல் வாரத்தில் 14,200 பேரிடம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நிலையைவிட 28% அதிகமாக இருப்பதால், ஓராண்டுக்குப் பிறகு அந்நாட்டு சுகாதார அமைச்சகம், கொரோனா குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


தமிழ்நாடு சுகாதாரத்துறை சொல்வது என்ன.?

இதனிடையே, தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை, வைரஸ் பாதிப்பு பெருமளவில் இல்லை எனவும், மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், 8 முதல் 10 பேருக்கு தினசரி பரிசோதனை செய்யப்படுவதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இது வீரியமில்லாத கொரோனா என்பதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


10,000 additional places in medical studies this year - 75,000 places in the medical field will be increased in the next 5 years


 மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டில் கூடுதலாக 10,000 இடங்கள் - அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவ துறையில் 75,000 இடங்கள் அதிகரிக்கப்படும் 


10,000 additional places in medical studies this year - 75,000 places in the medical field will be increased in the next five years



அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்களை உருவாக்குவதற்கான மத்திய பட்ஜெட்டின் அறிவிப்பை கல்வி நிபுணர்கள் வரவேற்றுள்ளனர், இந்த நடவடிக்கை மருத்துவ மாணவர்கள் மற்ற நாடுகளுக்கு வெளியேறுவதைக் குறைக்கும் என்று கூறுகின்றனர். 6,500 மாணவர்களுக்கு இடமளிக்க ஐந்து புதிய ஐஐடிகளில் உள்கட்டமைப்பு விரிவாக்கம், 10,000 புதிய மருத்துவ இடங்கள் மற்றும் கல்விக்கான செயற்கை நுண்ணறிவுக்கான சிறந்த மையத்தை அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு ஆகியவை 2025-26 பட்ஜெட்டில் கல்வித் துறைக்கான பெரிய அறிவிப்புகளில் அடங்கும்.



அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் 75,000 இடங்களை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சுகாதாரத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பிற நாடுகளுக்கு மாணவர்கள் வெளியேறுவதைக் குறைப்பதற்கும் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது அவசரமாகத் தேவை என்று இந்திய கல்வி தொழில்நுட்ப கூட்டமைப்பு (IEC) தெரிவித்துள்ளது .


"ஐந்து ஆண்டுகளில் 75,000 கூடுதல் மருத்துவ இடங்கள், மருத்துவ மாணவர்கள் மற்ற நாடுகளுக்கு வெளியேறுவதைக் குறைப்பதில் ஒரு முக்கியமான படியாகும், ஏனெனில் 23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் NEET தேர்வை எழுதுகிறார்கள், ஆனால் 1.1 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ளன," என்று PhysicsWallah (PW) இன் இணை நிறுவனர் மற்றும் இந்திய Edtech Consortium (IEC) தலைவரான பிரதீக் மகேஸ்வரி கூறினார்.


 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகள் கிடைப்பது புவியியல் ரீதியாக சாய்வாக இருப்பதாகத் தெரிகிறது, இது தென் மாநிலங்களில் 51 சதவீத இளங்கலை இடங்களும் 49 சதவீத முதுகலை இடங்களும் உள்ளன என்பதிலிருந்து தெளிவாகிறது. மேலும், நகர்ப்புறங்களுக்கு சாதகமாக கிடைக்கும் தன்மை சாய்வாக உள்ளது, நகர்ப்புற மற்றும் கிராமப்புற மருத்துவர் அடர்த்தி விகிதம் 3.8:1 ஆகும்.


இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கான தகுதித் தேர்வில் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளின் (FMGs) மிகக் குறைந்த தேர்ச்சி சதவீதம், மருத்துவப் பயிற்சி இல்லாதது உட்பட, வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியின் தரமற்ற தன்மையைக் குறிக்கிறது என்று கணக்கெடுப்பு குறிப்பிட்டது.



வெளிநாட்டு மருத்துவக் கல்வியைத் தடுக்க கொள்கை தலையீடு உருவாக்கப்படுவதால், இந்தியாவில் செலவுகளை நியாயமான வரம்புகளுக்குள் வைத்திருப்பது அவசியம் என்றும் கணக்கெடுப்பு பரிந்துரைத்தது. கல்வி நிறுவனங்கள் உட்பட நிறுவனங்களுக்கான நிர்வாக தேடல் மற்றும் தலைமைத்துவ ஆலோசனை "கல்விக்கான அதிகரித்த பட்ஜெட் ஒதுக்கீடு , குறிப்பாக ஐஐடிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் திறனை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவது, இந்தியாவின் உயர்கல்வி சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு மூலோபாய உந்துதலை நிச்சயமாக சுட்டிக்காட்டுகிறது.



"..ஆனால், உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் அதே வேளையில், புதிய திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய உயர்தர ஆசிரியர்களுக்கான தேவை இன்னும் அதிகமாக உள்ளது," 


அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75,000 ஐ எட்டும் தொலைநோக்குடன், 10,000 மருத்துவக் கல்லூரி இடங்களைச் சேர்ப்பது, சுகாதாரக் கல்வி மற்றும் பணியாளர் திறனை கணிசமாக மேம்படுத்தும்.


ஆனால் தற்போதைய பட்ஜெட்டில் தனியார் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது, அரசு நிறுவனங்களை விட தனியார் நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் சேருவதால், இந்தத் துறைக்கு ஊக்கமளிக்கும்.


"டிஜிட்டல் கல்வி மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு இணைந்து, இந்த நடவடிக்கைகள், இந்தியாவை உலகளாவிய அறிவு மற்றும் புதுமை மையமாக மாற்றுவதை நோக்கி நிச்சயமாகத் தூண்டும்" 


அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக 75,000 இளங்கலை மருத்துவ இடங்கள் சேர்க்கப்படுவது சுகாதாரக் கல்வி மற்றும் அணுகலை கணிசமாக வலுப்படுத்தும்.


மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் நாடு முழுவதும் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 1.10 லட்சத்திற்கும் அதிகமான எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. 2024 ஆம் ஆண்டில் 25 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வை - நீட் யுஜி - எழுதியது சாதனையாக இருந்தது.


ஒவ்வொரு ஆண்டும், வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வு (FMGE) தேர்வை வெவ்வேறு எண்ணிக்கையில் எழுதுபவர்கள் முயற்சிக்கின்றனர். 2024 டிசம்பர் அமர்வில், மொத்தம் 13,149 விண்ணப்பதாரர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர், அதே நேரத்தில் FMGE தேர்வில் மொத்தம் 44,392 பேர் தேர்வெழுதினர்.



Allocation of ₹122 crore for setting up 50-bed ICU in 5 Govt Hospitals and Integrated Public Health Laboratory in 3 Hospitals - G.O. Released



 5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க ₹122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு


Allocation of ₹122 crore for setting up 50-bed Intensive Care Unit in 5 Government Hospitals and Integrated Public Health Laboratory in 3 Hospitals - Government of Tamil Nadu Ordinance G.O. Issued


கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மேட்டுபாளையம் அரசு மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை ஆகிய 5 அரசு மருத்துவமனைகளில் தலா 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படவுள்ளது.


கும்பகோணம், தென்காசி, காங்கேயம் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.



2572 Assistant Surgeons (General) appointment - Provisional Selection List Released by MRB


2572 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் (பொது) நியமனம் - தற்காலிகத் தேர்வுப் பட்டியல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது


2572 Assistant Surgeons (General) appointment - Provisional Selection List Released by MRB


GOVERNMENT OF TAMIL NADU

MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB)

th Floor, DMS Building, 359, Anna Salai, Teynampet, Chennai-600 006.

Website: www.mrb.tn.gov.in e–mail: mrb.tn.nic@gmail.com

Phone no: 044 -24355757

PSL No. 01/MRB/2024 , Dated: 20.02.2025

Provisional selection List for the post of Assistant Surgeon (General)

Sub: Medical Services Recruitment Board – Assistant Surgeon (General), 2024 - List of Provisionally selected candidates - Published.

Ref: Notification No.01/MRB/2024, Dated: 15.03.2024

*******

 The list of candidates selected provisionally for appointment to the post of Assistant Surgeon (General) in Tamil Nadu Medical Service is published in Annexure – I.

 The provisional selection of candidates whose names are withheld are shown in the Annexure – II



>>> Click Here to Download...


425 Pharmacist Posts Direct Recruitment by MRB




மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் 425 மருந்தாளுநர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்காக பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


425 Pharmacist Posts Direct Recruitment by Medical Recruitment Board Commission




Russia claims to have discovered a vaccine for cancer



புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு


Russia claims to have discovered a vaccine for cancer


 கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு


கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையிலான இந்த தடுப்பூசி, கேன்சர் நோயை குணப்படுத்தும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.


உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். வருடங்கள் ஓடினாலும்.. பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத.. குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது கேன்சர்தான்! பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. சில மருந்துகள் கேன்சருக்கு எதிராக நம்பிக்கை அளித்தாலும்.. முழுமையாக கேன்சரை குணப்படுத்தாமல் இருந்தது. இப்போது வரை கீமோதெரபிதான் கேன்சருக்கு எதிராக முக்கியமான சிகிச்சை முறையாக இருக்கிறது. புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்து உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார். தடுப்பூசி அல்லது தனிப்பயனாக்கப்பட்ட mRNA, கணித அடிப்படையில் மேட்ரிக்ஸ் முறைகளைப் பயன்படுத்துவதால், தற்போது தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு அதிக நேரம் எடுக்கிறது. AI மற்றும் நியூரல் நெட்வொர்க் கம்ப்யூட்டிங் உதவியுடன், இந்த நடைமுறைகளை அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்தில் உருவாக்கி விடலாம் என்று ரஷ்யாவின் தடுப்பூசி தலைவர் கூறினார். ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகளவில் புற்றுநோய் சிகிச்சை சிகிச்சை துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும்.


mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.


சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசியுள்ளார்.


புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.


ரஷிய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


அதன்படி இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும் இந்த தடுப்பூசி 2025 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசுகையில், புற்றுநோய்க்கு எதிராக சொந்தமாக mRNA- அடிப்படையிலான அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்றும் இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.


தடுப்பூசிகளின் ஒரு வகையான mRNA [messenger RNA] தடுப்பூசி, உடலில் உள்ள mRNA molecule ஐ பிரதி எடுத்து அதிலிருந்து நோயெதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலானது. இந்நிலையில் ரஷியாவின் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் உலகம் முழுதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கும். 


Why does heel pain occur?



குதிகால் வலி ஏற்படுவது ஏன்?

- கு.கணேசன், மருத்துவர்


Why does heel pain occur?


தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் ‘சுள்’ ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்!



ஆனால், இந்தச் சிரமம் எல்லாமே சில மணி நேரத்துக்குத்தான். வலியைப் பொறுத்துக்கொண்டு, நடக்கத் தொடங்கிவிட்டால், சிறிது நேரத்தில் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். பிறகு, இவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவில் உறங்கச் செல்லும்போது மீண்டும் குதிகாலில் வலி ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு ‘பிளான்டார்ஃபேசியைட்டிஸ்’ (Plantar Fasciitis) என்று பெயர்.


என்ன காரணம்?


குதிகால் எலும்பிலிருந்து ‘பிளான்டார் அப்போநீரோசிஸ்’ (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்தத் திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.


குதிகால் எலும்பும் தசைநார்களும் உராய்வதைத் தடுக்க ‘பர்சா’ (Bursa) எனும் திரவப்பை உள்ளது. இதில் அழற்சி ஏற்பட்டு வீங்கிவிட்டாலும் குதிகால் வலி வரும். இன்னும் சிலருக்குக் குதிகால் எலும்பும் திசுக்கொத்தும் சேருமிடத்தில் சிறிதளவு எலும்பு அதிகமாக வளர்ந்துவிடும். இதற்கு ‘கால்கேனியல்ஸ்பர்’ (Calcaneal Spur) என்று பெயர். இதன் காரணமாகவும் குதிகால் வலி ஏற்படுவது வழக்கம்.



சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும். இதனாலும் குதிகால் வலி வரலாம். முடக்குவாதம், தன்தடுப்பாற்றல் நோய், காசநோய், கோணலாக வளர்ந்த பாதம், தட்டைப் பாதம், எலும்பு வலுவிழப்பு நோய் போன்ற பல காரணங்களாலும் இது வரலாம்.


யாருக்கு வருகிறது?


முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் இது வரலாம். ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு இந்தப் பாதிப்பு சற்று அதிகமாகவே ஏற்படுகிறது. அதிக உடல் எடை உள்ளவர்களுக்கும் இந்தப் பாதிப்பு அதிகம். அதற்காக ஒல்லியானவர்களுக்கு இது வராது என்று சொல்லமுடியாது. அப்பா, அம்மாவுக்கு இது வந்திருக்குமானால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் இது ஏற்படுவது உண்டு.


நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்கிறவர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தில் பணி செய்பவர்கள் ஆகியோருக்கு இது வருகிறது. முறைப்படி ‘வார்ம்அப்’ பயிற்சிகளைச் செய்யாமல் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டால் நாளடைவில் குதிகால் வலி வந்துவிடும்.



கரடுமுரடான தோல் செருப்புகளையும் பிளாஸ்டிக் செருப்புகளையும் அணிபவர்களுக்குக் குதிகால் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், வாகனங்களில் ‘ஷாக் அப்சார்பர்’ வேலை செய்வதுபோல, நம் காலணிகள் செயல்பட வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்கு வேலைப் பளு குறையும். ஆனால், கரடுமுரடான தோல் செருப்புகளில் இந்தப் பலனை எதிர்பார்க்க முடியாது. மிருதுவான ரப்பர் செருப்புகள் ( ஹவாய் செருப்புகள் ) இதற்கு உதவும்.


இன்றைய பெண்களில் பலரும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்புகளை அணிகின்றனர். குதிகாலை உயரமான நிலையில் வைத்திருக்க உதவுகிற இந்தக் காலணிகள் பாதத்துக்குச் சமமான அழுத்தத்தைத் தருவதில்லை. இவற்றைக் காலில் போட்டுக்கொண்டு நடக்கும்போது, பிளான்டார் திசுக்கொத்து மிகவும் விரிந்த நிலையிலேயே நாள் முழுவதும் இருப்பதால், சீக்கிரமே அழற்சி அடைந்து குதிகால் வலியை ஏற்படுத்திவிடும்.



இன்னும் சிலர் கூம்பு வடிவ ஷூக்களை அணிகிறார்கள். இவற்றால் கால் பாத எலும்புகள் அழுத்தப்பட்டு, இடைவெளி குறைந்து, வலி தொடங்கும். சாதாரணமாக இருக்கும்போது கால் முழுவதும் வலிக்கும். நடக்கும்போது குதிகாலில் வலி அதிகமாக இருக்கும்.


நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் குதிகால் வலி, இளம் வயதிலேயே வந்து விடுகிறது. காரணம், ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அந்த அதீதச் சர்க்கரையானது குதிகால் எலும்பு மூட்டுகளில் தேங்கும். அப்போது அங்குள்ள திசுக்களை அது அழிக்கத் தொடங்கும். இதன் விளைவால் இவர்களுக்குக் குதிகால் வலி வரும்.



என்ன சிகிச்சை?


குதிகால் எலும்புக்கு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், யூரிக் அமிலம், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளைச் செய்து காரணம் அறிந்து சிகிச்சை பெற வேண்டும். ஆரம்ப நிலையிலேயே இதைக் கவனித்துவிட்டால் சிகிச்சை சுலபமாகும். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடலாம்.


மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், நீங்களாகவே கடையில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடாதீர்கள். இவற்றால் பக்க விளைவுகள் உண்டு. ஆரோக்கியத்துக்கு ஆபத்தும் உண்டு.


வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம். அப்படியும் வலி எடுத்தால், காலையில் எழுந்த உடனேயே கால்களைத் தரையில் வைக்கக் கூடாது. கால் விரல்களைச் சிறிது நேரம் நன்றாக உள்ளே மடக்கிப் பிறகு விரியுங்கள். கெண்டைக்கால் தசைகளையும், இதுபோல் மடக்கி விரியுங்கள். இதனால் அந்தப் பகுதிக்குப் புது ரத்தம் அதிகமாகப் பாயும். குதிகாலுக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும், சிலருக்குக் குதிகால் வலி ஏற்படும். இந்த ரகத்தில் வலி ஏற்படுபவர்களுக்கு, மேற்கண்ட எளிய பயிற்சியிலேயே வலி மறைந்துவிடும்.


அதேபோலக் கீழ்க்கண்ட பயிற்சியையும் செய்யலாம். காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரணத் தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறிக் மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும். அப்போது வலியை உணரச் செய்கிற பொருட்கள் அங்கிருந்து விலகிவிடும். இதனால் குதிகால் வலி குறையும். இதைப் பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும். அப்போதுதான் வலி நிரந்தரமாக விடைபெறும்.


பிசியோதெரபியும் இந்த வலியைப் போக்க உதவும். குறிப்பாக, ESWT எனும் ஒலி அலை சிகிச்சையும் IFT எனும் வலி குறுக்கீட்டு சிகிச்சையும் லேசர் சிகிச்சையும் குதிகால் வலியைப் போக்கும் சிறந்த பிசியோதெரபி சிகிச்சைகள்.


இதுபோன்ற எளிய சிகிச்சை முறைகளில் வலி சரியாகவில்லை என்றால், வலி உள்ள இடத்தில் ‘ஹைட்ரோகார்ட்டிசோன்’ (Hydrocortisone) என்ற மருந்தை ’லிக்னோகைன்’ எனும் மருந்துடன் கலந்து செலுத்தினால் வலி குறையும். எலும்பு நோய் நிபுணரின் ஆலோசனைப்படி இதைச் செய்ய வேண்டும். என்றாலும், இந்த ஊசியை ஒன்றிரண்டு முறைக்கு மேல் செலுத்தக்கூடாது. இதிலும் சில பக்கவிளைவுகள் உள்ளன. மேற்சொன்ன சிகிச்சைகளில் குதிகால் வலி குறையவில்லை என்றால், கடைசியாக அறுவை சிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது.


தடுக்க என்ன வழி?


குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது. சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவது தடுக்கப்படும்.


குதிகால் வலி உள்ளவர்கள் இதற்கென்றே உள்ள தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சைக்கிள் ஓட்டும் பயிற்சி, குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி. காரணம், முன் பாதத்தில் அழுத்தம் கொடுத்துப் பெடல் செய்வதால், மொத்தப் பாதத்துக்குமே ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வலி குறையும்.


உடல் பருமன் இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் குதிகாலுக்குப் பாரம் குறைந்து வலி சீக்கிரத்தில் விடைபெறும்.


குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. தெருவில் மட்டுமல்ல; வீட்டுக்குள்ளும் தான். எப்போதும் மிருதுவான ஹவாய் செருப்புகளை அணிந்து நடக்க வேண்டும்.


“எம்.சி.ஆர்.” (Micro Cellular Rubber) செருப்புகளை அணிந்து நடப்பது இன்னும் நல்லது. கரடுமுரடான செருப்புகளை மறந்தும் அணிந்துவிடக்கூடாது. நீரிழிவு நோய், ‘கவுட்’ (Gout) போன்ற நோய்கள் இருந்தால் கட்டுப்படுத்த வேண்டும்.


பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டியது முக்கியம். அழுத்தமான ஷூக்களையும் அணியக்கூடாது. லூசான ஷூக்களையும் அணியக்கூடாது. இந்த இரண்டிலும் தீமை உள்ளது. முக்கியமாக, குதிகால் தசை நாணுக்கு அதிக உராய்வைக் கொடுத்து வலியை ஏற்படுத்த இவை துணைப் போகும்.


புகைபிடிக்கக் கூடாது. புகையிலையில் உள்ள நிகோட்டின் ரத்தக்குழாய்களைச் சுருக்கி ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இயற்கையாகவே நம் குதிகால் பகுதியில் ரத்த ஓட்டம் குறைவு. இதில் புகைபிடிப்பது என்பது, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுகிற மாதிரிதான்!


கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்


தொடர்புக்கு: gganesan95@gmail.com

Tamilnadu government order to appoint principals for 14 medical colleges...

 

14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு...


Tamilnadu government order to appoint principals for 14 medical colleges...


✒️ தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்


✒️ தேனி கரூர் விருதுநகர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம்


*✒️மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஸ் குமார் நியமனம்*


*✒️செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக ஜி சிவசங்கர் நியமனம்*


*✒️கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி முதல்வராக ராமலட்சுமி*


*✒️சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள்*


*✒️வேலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக ரோகிணி தேவி நியமனம்*


*✒️கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி முதல்வராக பவானி*


*✒️ஈரோடு மருத்துவ கல்லூரி முதல்வராக ரவிக்குமார் நியமனம்*


*✒️விருதுநகர் மருத்துவ கல்லூரி முதல்வராக ஜெய்சங்கா்*


*✒️கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராக லோகநாயகி*


*✒️தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக முத்து சித்ரா*


*✒️புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி நியமனம்...



மஞ்சளின் மருத்துவப் பயன்கள்...

 மஞ்சளின் மருத்துவப் பயன்கள்...



2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா), எம்.டி. (யுனானி) மற்றும் எம்.டி.(ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை...

 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா), எம்.டி. (யுனானி) மற்றும் எம்.டி.(ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை...






மூளையைத் தின்னும் அமீபா குறித்த மருத்துவரின் கட்டுரை...



மூளையைத் தின்னும் அமீபா குறித்த மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா அவர்களின் கட்டுரை...


 கேரளாவின் மலப்புரத்தில் குட்டையில் குளித்த ஐந்து வயது சிறுமி மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு இறந்திருக்கிறாள். 


இறப்பிற்கான காரணமாக இருந்தது 

"நிக்லேரியா ஃபவுலேரி" (Naeglaria fowleri)  எனும் ஒரு செல் உயிரி. 


அமீபா என்று உயிரியலில் படித்திருப்போம் தானே..? 

அந்த வகையைச் சேர்ந்த 

பாக்டீரியாக்களை உணவாக உட்கொள்ளும் ஒரு செல் உயிரி இது. 


இந்த நிக்லேரியா  -  அசுத்தமான குளம் , குட்டை , முறையாக க்ளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்கள் போன்றவற்றில் காணப்படும். 


குறிப்பாக குளிர்ச்சியான நீரை விடவும்  வெப்பமான வெதுவெதுப்பான நீரில் வாழும் தன்மை கொண்டவை. 


இந்த அமீபாக்கள் தேங்கியிருக்கும் நீரின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சேறு சகதியில் வாழும்.  குளிக்கும் போது கலக்கும் போது மேலே எழும்பி நீரில் கலந்திருக்கும். 


இத்தகைய அமீபாக்கள் வாழும்  நீரில் குளிக்கும் போது மூக்குக்குள் நீர் புகும் நிலை ஏற்படும் போது 


மூக்கினுள் க்ரிப்ரிஃபார்ம் தகடு என்ற எலும்பு உள்ளது. இந்த எலும்பில் சிறு சிறு ஓட்டைகள் இருக்கும். அதன் வழி நம் நுகர்தலுக்குத் தேவையான நரம்பு கிளை பரப்பி நாசியின் சுவர்களுக்குள் படர்ந்திருக்கும். 


இந்த அமீபா இருக்கும் நீரை மூக்குக்குள் உள்ளிளுக்கும் போது

நுகர்தலுக்கான நரம்பில் ஒட்டிக்கொண்டு மேலே மூளை நோக்கி ஏறிச்செல்லும் தன்மை கொண்டது. 


உள்ளே நுழைந்ததில் இருந்து மூன்று முதல்  பத்து நாட்களுக்குள்

நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். 


முதலில் தீவிர காய்ச்சல் 

அடங்காத தலை வலி 

என்று ஆரம்பித்து பிறகு 


மூளைக்காய்ச்சல் அறிகுறிகளான

பின் கழுத்துப் பகுதி இறுக்கம்

குமட்டல் / வாந்தி 

தலை சுற்றல் 

வலிப்பு ஏற்படுதல் 

பேதலிப்பு நிலை 

மூர்ச்சை நிலை 

கோமா 

இறப்பு ஏற்படக்கூடும் 


இந்த அமீபா - நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால் இதற்கு மூளை திண்ணும் அமீபா என்ற பெயரும் உண்டு. 


பெரும்பாலும் நோயின் அறிகுறிகள் ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் மரணம் சம்பவிக்கும்


மரணத்திற்கான முக்கிய காரணம் 

இந்த நோயின் அறிகுறிகள் அனைத்தும் 

பாக்டீரியா எனும் மற்றொரு ஒரு செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சல் போன்றே இருக்கும் என்பதாலும்

இந்த அமீபா தொற்று அரிதிலும் அரிதானது என்பதாலும் 


நோய் கண்டறிதலில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் - வேனில் காலங்களில் குளம் குட்டைகளில், நீச்சல் குளங்களில் அதிகமானோர் நீராடும் வழக்கம் உள்ளது. 


எனவே கட்டாயம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவர்களுக்கும் பொது மக்களுக்கும் இருப்பது பல உயிர்களைக் காக்கும். 


இந்தக் கிருமித் தொற்று ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது.  


இந்த அமீபா தொற்று - பாக்டீரியா தொற்று போலவே தெரிந்தாலும் 

பாக்டீரியா கொல்லிகள் என்றழைக்கப்படும் ஆண்ட்டிபயாடிக்குகளுக்கு அடங்காது.


இதற்கென பிரத்யேகமான மருந்தாக 

ஆம்ஃபோடெரிசின் - பி என்பது விளங்குகிறது. 

ஆம்... கோவிட் தொற்று ஏற்பட்ட காலத்தில் உப கொள்ளை நோயாக உருவெடுத்த கருப்பு பூஞ்சை ( ம்யூகார் மைகோசிஸ்) தொற்றுக்கு இந்த மருந்து தான் கேட்டது. 


இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை 

சரியான நேரத்தில் கணித்து 

மூளை தண்டு வட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து 

உடனடியாக ஆம்ஃபோடெரிசின்- பி  சிகிச்சை வழங்கிட வேண்டும். 


தமிழ்நாட்டில் நிக்லேரியா தொற்றுக்கு உள்ளான 47 வயது நபர் ஒருவருக்கு சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டதில் உயிர்பிழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களை தின்று முடிப்பதற்குள் விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. 


அதனாலேயே இந்த நோயின் இறப்பு உண்டாக்கும் சதவிகிதம் கிட்டத்தட்ட 100% 


இதுவரை உலகில் ஐநூறுக்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக மருத்துவ ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 


இந்தியாவில் ஐம்பதுக்கும் குறைவான ஆதாரங்களே பதிவாகி உள்ளன. 


எனினும் முறையாகப் ஆவணப்படுத்தப்படாத 

ரிப்போர்ட் செய்யப்படாத

அல்லது தவறுதலாக பாக்டீரியாவினால்/ வைரஸினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் என்று ஆவணப்படுத்தப்பட்ட நோயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். 


இந்தியாவில் இறப்பிற்கான காரணங்களை பிரேதக் கூறாய்வு மூலம் அறிவது மருத்துவ- சட்ட ரீதியான வழக்குகளுக்கு மட்டுமே கட்டாயமாக உள்ளது என்பதால் 

இது போன்ற மூளைக்காய்ச்சல் மரணங்களில் இந்த அமீபா தொற்றின் பங்கு குறித்து நம்மால் சரியான எண்களை அறிய முடியாமல் போகிறது. 


இந்த அமீபா தொற்று  ஏற்படாமல் எப்படி காத்துக் கொள்வது? 


- தேங்கி இருக்கும் குளம் குட்டை கண்மாய் போன்றவற்றின் அடிப்பகுதி சகதியை இயன்றவரை கிளறி விடாமல் குளிப்பது நல்லது


- இத்தகைய தூய்மையற்ற நீரில் மூழ்கிக் குளிப்பதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். இந்த அமீபா மூக்கு துவாரம் வழியாக மட்டுமே மூளையை அடைய முடியும். 


அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் அந்த நோய் ஏற்படுவதில்லை. 


எனவே மூக்குப் பகுதிக்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


- நீச்சல் குளங்களில் சரியான முறையில் க்ளோரினேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 

நீச்சல் பயிற்சி செய்யும் போது நோஸ் க்ளிப் அணிந்து கொள்வது சிறந்தது. 


- சில நேரங்களில் அசுத்தமான நீரில் 

மூக்கு துவாரங்களைக் கழுவுவதாலும் இந்த தொற்று பரவக்கூடும். இஸ்லாமியர்கள் - தொழுகைக்கு முன்பு செய்யும் ஒளு எனும் தூய்மை செய்யும் முறையில் மூக்கு நாசிக்குள் நீரை உறிஞ்சி சுத்தப்படுத்துவர். அத்தகைய நீர் தூய்மையானதாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 


 - இது போன்ற குளம் குட்டை கண்மாய்களில் குளித்த பத்து நாட்களுக்குள் காய்ச்சல் / தலைவலி / கழுத்துப் பகுதி இறுக்கம் / வலிப்பு  போன்றவை ஏற்படின் தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி 

மருத்துவரிடம் தாங்கள் எப்போது? எங்கு? குளித்தோம் என்பதை தெளிவுபடுத்திட வேண்டும். 

இது விரைவில் நோயைக் கண்டறிய உதவும். 


குளம், குட்டைகளில் கண்மாய்களில் நீச்சல் குளங்களில் குளிக்கும் அனைவருக்கும் இந்தத் தொற்று ஏற்படுவதில்லை. 


அரிதிலும் அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது. 


அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொருத்தும் அமைகிறது. 


எனவே இந்தத் தொற்று குறித்த அதீத அச்சம் தேவையற்றது. 

மாறாக நிறைய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. 


வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்தும் அமீபா வாழும் நீர்நிலைகள் குறித்தும் விழிப்புணர்வு அதிகம் இருக்கும். 


வெப்ப மண்டல நாடான நமக்கும் அத்தகைய விழிப்புணர்வு தேவை என்பதே இந்தப் பதிவின் நோக்கம். 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



>>> மூளையைத் தின்னும் அமீபா - மூன்று பேர் உயிரிழப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு...


மூளையைத் தின்னும் அமீபா - மூன்று பேர் உயிரிழப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு...

 



மூளையைத் தின்னும் அமீபா - மூன்று பேர் உயிரிழப்பு - தமிழ்நாடு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு...


அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம்...


“ ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்னும் மூளையை அரிக்கும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”


-  பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல்...



>>> தமிழ்நாடு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> மூளையைத் தின்னும் அமீபா குறித்த மருத்துவரின் கட்டுரை...




தமிழ்நாட்டைத் தாக்கும் வெப்ப அலை - எச்சரிக்கைப் பதிவு - சில மருத்துவ அறிவுரைகள் - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா...

 


தமிழ்நாட்டைத் தாக்கும் வெப்ப அலை 


அலர்ட் பதிவு 


சில மருத்துவ அறிவுரைகள் 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. 

கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. 

இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம். 


இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. 


வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை 

நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் முதல் இடம் பிடிக்கின்றன. 


உடல் சூடாவதை தடுப்பது எப்படி? 


1. தண்ணீர்பஞ்சம் இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்


2. தண்ணீர் பஞ்சம் நிலவும் ஊர்களில் ,  ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை கால் முகம் போன்றவற்றை கழுவலாம். 

இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.


3. வெப்பத்தை உள்ளயே தக்க வைக்கும் உடைகளான கம்பளி / லினன் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். 

ஜீன்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது. 

பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. 

வெப்பத்தை தக்க வைக்கும் கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது. 


4. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை / தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்த வரை , வெயில் நம் உடல் மீது நேராக படாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. 


5. வெயில் தனல் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே  செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம்.  வெளியே சென்று விளையாடுவதை காலை நேரம் மற்றும் மாலை நேரத்திற்கு தள்ளி வைக்கலாம். 


அடுத்த நடவடிக்கை. 

இதை மீறியும்   சூடான நம் உடலை எப்படி குளிர் படுத்துவது என்பது.


நாம் வீட்டிற்கு உள்ளேயே இருந்தாலும்.

வெப்ப சலனம் நம்மை கட்டாயம் பிரச்சனைக்குள்ளாக்கும் 


காரணம்.. சூரியனின் வெப்பமானது மூன்று முறைகளில் நம் மீது தாக்கலாம்


ஒன்று - conduction 

இரண்டாவது - convection 

மூன்றாவது - radiation 


இதில் முதலாவதாக இருக்கும் conductionக்கு நாம் ஏற்கனவே சூடான ஒரு பொருளோடு தொடர்பில் இருந்தால் நடப்பது. அதாவது , வெயிலில் நின்ற ஒரு  பைக் மீது நாம் ஏறி உட்கார முற்படும் போது , அதன் வெப்பம் நமக்கும் பரவும். 


இதை தவிர்க்க முடிந்த வரை நிழலில் வண்டியை நிறுத்தலாம் அல்லது சீட்டில் உட்காரும் முன் நல்ல கடினமான துணியை விரித்து உட்காரலாம்


இரண்டாவது வகை

convection 

அதாவது காற்றை சூடாக்கி விட்டால் போதும். அதனுடன் தொடர்பில் இருக்கும் நமக்கும் வெப்பம் கடத்தப்படும். 

இது நாம் வீட்டினுள் இருந்தாலும் சரி , நம்மை தாக்கியே தீரும். 

பொதுவாக அடைக்கப்பட்டு நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் சென்ற உடன் தாக்கும் வெப்பம் இந்த வகை. 


நமது வீட்டின் ஜன்னல்களில் தண்ணீரில் முக்கிய துண்டுகளை காயப்போடலாம். இதன் மூலம் வீட்டினுள் வரும் காற்று சிறிது ஈரப்பதம் கலந்து வரும். 


நாம் போடும் மின்விசிறி. வெளியே இருக்கும் வெப்பக்காற்றையும் மேலே சூடான தளத்தின் காற்றையும் நம் மீது தள்ளும். 

அதனால் தான் என்ன வேகமாக ஃபேன் சுழன்றாலும் வெப்பம் தணியாமல் இருக்கும். 


கார் உபயோகிப்பவர்கள்

 கார் கண்ணாடிகளை உடனே நன்றாக திறந்து விட வேண்டும். 

ஏசியை உடனே போடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் அந்த ஏசி மெசினும் 100 டிகிரிக்கு மேல் சூடாகி இருக்கும். அதில் இருந்தும் வெப்பக் காற்றே வரும். 


மூன்றாவது Radiation 

இதற்கு காற்று போன்ற எந்த கடத்தியும் தேவையில்லை . மின் காந்த அலைகளான இந்த வெப்பம் நம்மை நேரடியாக தாக்கி நம் உடலை சூடாக்கும். 

நம் வீட்டில் கிச்சனில் உபயோகப்படுத்தும் மைக்ரோ வேவ் அவன் இந்த முறையில் தான் இயங்குகிறது. 


இந்த முறையில் சூடாகும் நம் 

உடல் எப்படி இந்த சூட்டை தானாக தணித்துக்கொள்கிறது ? 


அதற்கு காரணம் "Evapouration" எனும் தற்காப்பு முறை 


அதிகமாக உடல் சூடானால், நமது உடலில் வேர்வை அதிகமாக சுரக்கும். அந்த வேர்வை உடலை குளிர்விக்க முயற்சிக்கும்.(sweating)  மேலும் உடலுக்குள் உள்ள உஷ்ணத்தை நமது நுரையீரல் வெளியிடும் மூச்சுக்காற்று வழி அனுப்ப முயலும்(expiration) 


இப்படி நம் உடல் அதிக நீர்ச்சத்தை உபயோகித்து குளிர்விப்பதால் ஏற்படும் பிரச்சனை 

Dehydration - நீர் சத்து குறைதல்..


இதை எப்படி அறியலாம்? 


- நாக்கு வரண்டு போதல்

- சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல்

- தசைப்பிடிப்பு 

- தலை சுற்றல்

- கை கால் தளர்வு 


போன்ற அறிகுறிகளால் அறியலாம்


இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?


1. எளிதான வழி - தண்ணீரைப் பருகுவது.


நமது சிறுநீரகங்கள் சரியாக இயங்க குறைந்தபட்சம் ஒருவரின் எடைக்கு  கிலோ ஒன்றிற்கு முப்பது மில்லி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு பருகி ஆக வேண்டும். 


உதாரணம் 

60 கிலோ எடை உள்ள ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தாலும் சரி. வெயில் காலமோ குளிர்காலமோ அவர் 


60 ( கிலோ) × 30( மில்லி) = 1800 மில்லி லிட்டர் தண்ணீர் குறைந்த பட்சம் பருக வேண்டும். 


இந்த தண்ணீரின் உட்கொள்தல் அளவு அவர் செய்யும் வேலைகள் பொறுத்து அதிகமாகும். 


இன்னும் வெப்ப சலனம் நிலவும் காலங்களில் 30 மில்லி லிட்டர் என்பது 60 மில்லி லிட்டர்  அளவு குறைந்தபட்ச தேவையாக  மாறும்.


உங்கள் பள்ளி செல்லும் குழந்தையின் எடை 20 கிலோ என்றால் 

இந்த வெப்ப சலனத்தில் அவர்களின் குறைந்த பட்ச தேவை ஒரு கிலோவுக்கு 60 மில்லி லிட்டர் என்று கொண்டால் 


20 (கிலோ) * 60 ( மில்லி லிட்டர் ) = 1200 மில்லி லிட்டர். 

அதாவது 1.2 லிட்டர் கட்டாயம் பருக வேண்டும் 


வளர்ந்த ஆணும் பெண்ணும் 

பொதுவாக , 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுவது சிறந்தது. 


இந்த தண்ணீரை 

இளநீராக, மோராக, லஸ்ஸியாக , பழச்சாறாக எப்படி வேண்டுமானாலும் பருகலாம். 


செயற்கை குளிர்பானங்கள், ரசாயன கலர் பொடிகள் கலந்த கலவைகளை தவிர்ப்பது நல்லது. 


குளிர் நீர் பருகுவது சிறந்தது. அதிலும் ஃப்ரிட்ஜில் வைத்து கால் மணி நேரம்  முதல் அரை மணி நேரத்தில் எடுத்து பருகினால் சரியான குளிர்ச்சி இருக்கும். 


ஆற்று மணல் பரப்பி அதில் நீர் ஊற்றி அதன் மீது வைத்த

மண்பானையில் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை ஊற்றி குளிர்வித்து குடிப்பது சிறந்தது.


மிக அதிகமான குளிர்ச்சி தரும் நீரை பருகுவது தொண்டைக்கு கேடு விளைவிக்கும்.


சரி..இப்போது வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


1. வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவரை உடனே நல்ல குளிர்ச்சியான இடத்துக்கு அல்லது நிழலான பகுதிக்கு மாற்ற வேண்டும். 


2. அவரது மேலாடைகளை கழற்றி விட வேண்டும். நன்றாக உடலில் காற்று பட வேண்டும். 


3.அவரை காலை நீட்டி படுக்க வைக்க வேண்டும். 


4. காற்றாடி / மின்விசிறியை இயக்கி குளிர்விக்க வேண்டும். 


5. சுற்றி ஆட்கள் நின்று கொண்டு காற்று அவருக்கு செல்வதை தடுக்கக்கூடாது.


6. தண்ணீரில் நனைத்த துணியைக்கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். 


7.கால்களை சிறிது உயரத்தூக்கி வைக்க வேண்டும்


8. சிறிது நினைவு திரும்பியதும் அமர வைத்து.. தண்ணீரை வழங்க வேண்டும். 


9.     911 / 108 க்கு அழைத்து உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்க வேண்டும் 


இதுவே வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதல் உதவி. 


ஹை அலர்ட் தேவைப்படும் வகுப்பினர்

பின்வருமாறு 


1. குழந்தைகள் 

2. முதியோர்கள்

3. நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள் 

4.கர்ப்பிணிகள்

5. வெயிலில் நின்று வேலை செய்யும் தொழிலாளிகள் 

6. அதிகமாக பயணம் செய்பவர்கள் 


முடிந்த வரை வெப்ப சலனத்தில் இருந்து நம்மையும் நம்மை சார்ந்தோரையும் பாதுகாப்போம் 


நிழல் தரும் மரங்களை நம்மால் இயன்ற அளவு வளர்த்து பின்வரும் சந்ததியினர் இதுபோன்ற வெப்ப சலனங்களில் நிழல் தேடி அலையாதவாறு காப்போம்


நன்றி 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Rs.5400 grade pay : Audit Objections : Ordered to repay Rs.30 lakhs in one installment

  ரூ.5400 தர ஊதியம் : தணிக்கை தடைகளால் திண்டாடும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் : கூடுதலாகப் பெற்ற சுமார் 30 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் தி...