கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் , கற்பித்தல் - கற்றல் விளைவுகள் - மேம்படுத்துதல் - தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் : 3917/ஆ4/2021, நாள்: -07-2021...



 கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் : 3917/ஆ4/2021, நாள்:   -07-2021...


கோவிட் -19 பெருந்தொற்று காரணத்தினால் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021-22 - ம் கல்வி ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை இரு மாதங்களாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் நேரடி வகுப்பு நடைபெறாத நிலையில் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் , இணையவழி மற்றும் இதர சமூக வலைதளங்கள் வழியாகவும் கற்றல் கற்பித்தல் செயலப்பாடுகள் மாவட்ட அளவில் செம்மையாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே குறுவளமைய அளவில் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குறு வள மைய அளவில் ( CRC Level) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. 


இக்கூட்டத்தில் கொரானா பெருந்தொற்று காலக்கட்டத்தில் இணையவழி சமூக வலைதளம் , கல்வி தொலைக்காட்சி , Home visit போன்றவை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் சிறப்பாக செயல்பட்டு மாணவர்களின் கற்றல் விளைவுகள் அடைந்ததை உறுதி செய்து , பங்கு பெற்ற மாணவர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ள பள்ளிகளை தேர்வு செய்து மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு ஒவ்வொரு குறு வள மையத்திலிருந்தும் சிறந்த பள்ளிகளின் செயல்பாட்டு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் புதுமையாக கையாளப்பட்ட TNTP , DIKSHA , Teachmint App , Zoom App , Whattsapp , Google Meet , MS Teams , Youtube மற்றும் இதர கல்வி சார்பான Apps மூலமாக LIVE Class செயல்படுத்தி வருவதை அறிய முடிகிறது.


இப்பள்ளிகளை போல மற்ற பள்ளிகளும் கற்றல் , கற்பித்தல் , சிறப்பாக செயல்படும் பள்ளிகளை பின்பற்றி கல்வி தரத்தை மேம்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் பாடவாரியாக பாடத்திட்டங்கள் எளிமையாக்கப்பட்டு உரிய கால இடைவெளிக்குள் முடிக்கப்பட வேண்டும்.


இவ்வகையான கற்றல் கற்பித்தலை வலுப்படுத்த , சென்ற ஆண்டு குறுவளமைய அளவில் Learning outcomes சார்ந்த Worksheet அனைத்து வகுப்புகளுக்கும் தயார் செய்யப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டின் ஜூன் / ஜூலை மாதங்களில் அந்தந்த பள்ளிகளில் முடிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திட்டத்தின்படி , Content Based Learning Outcomes அடைந்ததை உறுதி செய்யும் வகையில் மாணவர்களுக்கு Worksheets / Book Back Exercises , ஒப்படைவு வழங்குதல் மற்றும் சிறுத்தேர்வுகள் நடத்தப்பட்டு , மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பீட்டு பட்டியலை தயார் செய்து தலைமை ஆசிரியர் பார்வைக்கு வாரந்தோறும் உட்படுத்தி பள்ளிக்கு வரும் ஆய்வு அலுவலர்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டும்.


 மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட பெற்றோர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி , மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகள் ஏற்படா வண்ணம் மாணவர்களையும் , பெற்றோர்களையும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் பாடக் குறிப்பேட்டில் , பாடத்திட்டம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தந்த வாரத்திற்கான வகுப்புகளின் பாடப் பொருள் சார்ந்த பாடக்குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதையும் , என Whattsapp குழுவில் மாணவர்களுக்கு வழங்கும் செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் கவனித்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் தலைமை ஆசிரியர் பார்வைக்கு உட்படுத்த வேண்டும். அனைத்து வகுப்புகளின் Workdone பதிவேட்டிலும் கால அட்டவணை பின்பற்றி அம்மாத்திற்கான பாடப்பொருள் உரிய ஆசிரியரால் உரிய நேரத்தில் நடத்தப்பட்டுள்ளதை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தலைமை ஆசிரியர்கள் சரி பார்த்து , மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Assignments எத்தனை மாணணவர்களால் முடிக்கப்பட்டுள்ளது.


Assessment ல் மாணவர்களின் அடைவுநிலை ஒவ்வொரு மாணவருக்கும் பதிவேட்டில் பதியப்பட்டு தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.



>>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் : 3917/ஆ4/2021, நாள்:   -07-2021...


முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான (CEO) ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் (Commissioner of School Education) அவர்களால் வழங்கப்பட்ட தகவல்கள்....

 கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது. 


அரசுப்பள்ளிகளில் SC/ST மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை.


- பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு...


காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சார்ந்த விவரம் :



1. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 


அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும்




2. தொடக்கக் கல்வி இயக்குநர் 


2021-22ம் கல்வி ஆண்டில் 1 ம் வகுப்பு முதல் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS- ல் பதிவேற்றம் செய்யவேண்டும்.


2021-22ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அதில் உதவிப் பெறும் பள்ளிகளில் 1,00,000 பேர் சேர்ந்திருக்கிறார்கள் , 1 கிலோ மீட்டர் தொலைவில் தொடக்க பள்ளிகளும் , 3 கிலோமீட்டர் தொலைவில் நடுநிலைப் பள்ளிகளும் உள்ளது. இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கவேண்டும்.


கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1125 மாணவர்கள் புதியதாக சேர்ந்து இருக்கிறார்கள். அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 போர் மாணவர்களை சேர்த்துள்ளார். பெற்றோர்களை அணுகி மாணவர்களின் எண்ணிகையினை அதிகரித்துள்ளார். 


அதுபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் பெற்றோர்களை அணுகி மாணவர்களை ஊக்குவித்தும் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத சூழ்நிலையில் அவர்கள் அரசு பள்ளியை நாடுகிறார்கள் , அவ்வாறு வரும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 


புதிய - 2021-22ம் கல்வி ஆண்டில் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு கால அட்டவணை தயார் செய்து தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும்.


கல்வித் தொலைக்காட்சியில் பாடத்திட்டங்கள் நடைபெறுகிறது என்ற தகவல்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் தகவல்களை தெரிவிக்கவேண்டும்.



 3.Samagra Siksha 


அனைத்து மாவட்டப் பள்ளிகளிலும் Hi - Tech Lab செயல்பாட்டில் இருக்கவேண்டும்.


 இனி வருங்காலங்களில் PFMS மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.


 பள்ளிக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்தால் விரைவில் கட்டி முடிக்கவேண்டும்.


பள்ளிகளுக்கு தேவையான கழிவறைகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும்.




4.ஆணையர் - பள்ளிக் கல்வி 

2020-2021ம் கல்வி ஆண்டில் SC / ST மாணவர்களை அதிகம் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.


தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயனடையும் வகையில் பாடங்களை நடத்தி வருகிறது. அது மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்று பார்க்கவேண்டும். 


தலைமையாசிரியர்களும் , ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களை வீட்டிற்கு சென்று கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் புரிகிறதா அவர்கள் ஆர்வமுடன் பார்க்கிறார்களா என்று பார்க்கவேண்டும்.


கல்வித் தொலைக்காட்சியில் எடுக்கப்படும் பாடங்களுக்கு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்தும் , அவ்வாசிரியர்கள் நன்றாக பாடம் கற்பிக்கிறார்களா , அவர் கற்பித்த பாடத்தை அவருக்குநன்கு புரிந்து பாடம் நடத்துகிறா என்று பார்க்கவேண்டும்.


கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும்.


அரசின் அறிவிப்பின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.





அரசு / உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை - இயக்குனர் தகவல்...

 அரசு / உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை - இயக்குனர் தகவல்...









கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...



 தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தற்பொழுது துவங்கியிருக்கும் புதிய கல்வியாண்டில் பயிலும் 2 மற்றும் 3வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


ஆன்லைன் வகுப்புகள்

கொரோனா 2ஆம் பேரலை காரணமாக மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.


இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கான 2021-22 புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகளும் துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் துவங்குமா என்று எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தது.


இந்நிலையில் கல்லூரிகளில் 2ஆவது மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா 2ஆம் பரவல் குறைவதை பொறுத்து தான் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கோர முடியாது - உயர்நீதிமன்றம் உத்தரவு...



 திறந்தவெளிப்பல்கலைக் கழக முதுகலைப் பட்டம் அடிப்படையில் , இரண்டாம் நிலை சார்பதிவாளராக பணி நியமனம் பெற்றவர் முதல் நிலை சார்பதிவாளராக பணி உயர்வு கோரிய மனுவை தமிழக அரசு நிராகரித்தது. 


இதை எதிர்த்து , அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , பணி உயர்வு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா, சத்தியநாராயணா அமர்வில் , விசாரணைக்கு வந்தது.


 தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.நீல கண்டன் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று அண்ணாமலை பல்கலைக்கழக வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.


 எனவே , நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பணி நியமனமோ , பதவி உயர்வோ கோர முடியாது என்று வாதிட்டார். அரசுத் தரப்பின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டதுடன் , இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக திறந்தவெளிப்பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் பணி உயர்வு கோர முடியாது என்று தீர்ப்பளித்தனர்.


தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆய்வு: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு...



 சத்துணவு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவியல்பூர்வ ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி 'Citizen Consumer and Civic Action Group' என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களைப் பெற்றோர், பொருளாதார பாதிப்பு காரணமாக அவற்றை விற்று விடுவதாகவும் வாதிட்டார். மேலும் அவர், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து, அவற்றின் மூலம் மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தார்.


இந்த யோசனை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார்.


இதையடுத்துத் தலைமை நீதிபதி  அமர்வு, ''கரோனா தாக்கம் தணிந்துள்ளதாலும், மூன்றாவது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்தக் கணிப்பும் இல்லாததாலும், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல்பூர்வமாக ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும்'' எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.


அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாணவர்களுக்குச் சத்துணவு சென்றடையச் செய்வதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.


இன்றைய (29-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 29, 2021




உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு விருப்பமானவர்களின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் மூலம் சிறு மனக்கசப்புகள் நேரிடும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அஸ்வினி : சுபச்செய்திகள் கிடைக்கும்.


பரணி : மனக்கசப்புகள் நேரிடும்.


கிருத்திகை : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 29, 2021



தொழில் ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


ரோகிணி : முன்னேற்றமான நாள்.


மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 29, 2021



சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். செல்வச்சேர்க்கை மற்றும் வசதி வாய்ப்புகள் மேம்படும். அரசு வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான சிக்கல்கள் குறையும். வர்த்தக பணிகளில் தனவரவுகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.


திருவாதிரை : செல்வச்சேர்க்கை உண்டாகும்.


புனர்பூசம் : தனவரவுகள் மேம்படும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 29, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.


பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 29, 2021



கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக அமையும். சமூகப்பணிகளில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும்போது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. வங்கி தொடர்பான விஷயங்களை எவரிடத்திலும் பகிராமல் இருக்கவும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மகம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.


பூரம் : நிதானம் வேண்டும்.


உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 29, 2021



புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திரம் : பயணங்கள் சாதகமாகும்.


அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.


சித்திரை : நெருக்கடிகள் நீங்கும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 29, 2021



நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். உயர்பொறுப்பில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. அரசு தொடர்பான செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.


சுவாதி : இழுபறிகள் அகலும்.


விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 29, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் ரீதியான எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அனுஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.


கேட்டை : ஆதரவான நாள்.

---------------------------------------




தனுசு

ஜூலை 29, 2021



தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் மேன்மை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


பூராடம் : மேன்மை உண்டாகும்.


உத்திராடம் : உபாதைகள் நீங்கும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 29, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தம்பதியர்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திராடம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவோணம் : நன்மை உண்டாகும்.


அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 29, 2021



உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விஷயங்கள் பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


சதயம் : திருப்திகரமான நாள்.


பூரட்டாதி : ஈர்ப்பு அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 29, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதியும், ஒற்றுமையும் மேம்படும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



பூரட்டாதி : தனவரவுகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.


ரேவதி : ஆசைகள் நிறைவேறும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...