கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CEO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings


மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings




மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு பிற பணி (OD) அனுமதித்து தேனி CEO சுற்றறிக்கை

 


மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு பிற பணி (On Duty) அனுமதித்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் சுற்றறிக்கை


Census OD


முதன்மைக் கல்வி அலுவலகம்,

தேனி:- 04.08.2026


சுற்றறிக்கை


அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை 01.08.2026 முதல் 31.08.2026 வரை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் முற்பகல் அல்லது பிற்பகல் (அரை நாள்) பிறப்பணியில் (OD) அனுமதி வழங்கி, பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் ஆசிரியர்களை சுழற்சி முறையில் விடுவித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை எவ்வித தொய்வும் இன்றி மேற்கொள்ளவும், இதற்கென தனி இயக்கக பதிவேடு (Movement Register) பள்ளியளவில் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறித்து பராமரிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.



தமிழ்நாடு நாள் விழா - கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் பரிசுகள் விவரம்

 


தமிழ்நாடு நாள் விழா - கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் பரிசுகள் விவரம்


காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் திருவள்ளுவராண்டு 2057 / பராபவ ஆண்டு / ஆனி மாதம்


ந.க.எண்.2647/ஆ3/ 2026 நாள்: 13.07.2026


பொருள்


தமிழ் வளர்ச்சித் துறை - காஞ்சிபுரம் மாவட்டம் - தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் - தமிழ்நாடு நாள் விழா கொண்டாடுதல் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14.07.2026 அன்று பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்துதல் தொடர்பாக


பார்வை : காஞ்சிபுரம், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரின் கடித ந.க.எண்.312/2026 நாள்:10.07.2026


பார்வையில் காணும் கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


இவ்வறிவிப்பிற்கிணங்க 2026-2027-ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 14.072026 அன்று காஞ்சிபுரம், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் முற்பகல் 09.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.


எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / நிதியுதவி பெறும் / நலத்துறை மற்றும் மெட்ரிக் உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மேற்படி போட்டிகளில் ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டும் கலந்து கொள்ளச் செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / தாளாளர் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


போட்டிக்கான தலைப்புகள்


கட்டுரை

தமிழ்நாடு கருவானது முதல் உருவானது வரை


பேச்சு

1. நான் விரும்பும் தமிழ்நாடு


2 அன்றைய மெட்ராஸ் மாகாணம்


இன்றைய நவீன தமிழ்நாடு


3. இளைஞர்களின் தமிழ்நடு பார்வையில்


4. கல்வியில் சிறந்த தமிழ்நாடு


5. வீரம் செறித்த தமிழ்நாடு


பரிசு விவரம்


கட்டுரைப் போட்டி

முதல் பரிசு   ரூ.10,000/-

இரண்டாம் பரிசு   ரூ.7,000/-

மூன்றாம் பரிசு   ரூ.5,000/-


பேச்சுப் போட்டி

முதல் பரிசு   ரூ.10,000/-

இரண்டாம் பரிசு   ரூ.7,000/-

மூன்றாம் பரிசு   ரூ.5,000/-


இணைப்பு:-பார்வையில் காணும் கடித நகல்


முதன்மைக் கல்வி அலுவலருக்காக

காஞ்சிபுரம்.


பெறுநர்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், காஞ்சிபுரம் மாவட்டம்.


நகல்


1 மாவட்டக் கல்வி அலுவலர்

(இடைநிலை/தொடக்கக் கல்வி தனியார் பள்ளிகள்)

காஞ்சிபுரம்


2 உதவி இயக்குநர்.

தமிழ்வளர்ச்சித் துறை காஞ்சிபுரம்.


3. தலைமை ஆசிரியர்,பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்.(உரிய ஏற்பாடுகள் செய்யும்பொருட்டு)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings

 


பணி ஓய்வு ஆசிரியருக்கு மறு நியமன பணி நீட்டிப்பு மறுத்து உத்தரவு - CEO Proceedings


Order denying re-appointment / extension of service to a retired teacher - CEO Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்(பொறுப்பு) செயல்முறைகள் 

பிறப்பிப்பவர்: திருமதி.அ.சுகப்பிரியா எம்.எஸ்.ஸி.,பி.எட்.எம்ஃபில்.,


மூ.மு.எண்.4001 / ஆ4/ 2026, நாள். 30.06.2026


பொருள்:


பள்ளிக்கல்வி - தமிழ்நாடு சார்நிலைப்பணி - பணி ஓய்வு - பணி நீட்டிப்பு - தஞ்சாவூர் மாவட்டம். செண்டங்காடு, அரசு நீட்டிப்பு உயர்நிலைப்பள்ளி. ஓவிய ஆசிரியர் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 இல் வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு - 01.07.2026 முதல் 2026-2027 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதிவேலை நாள் வரை மறுநியமன அடிப்படையில் பணிநீட்டிப்பு கோரியது - தொடர்பாக.


பார்வை:


1. அரசாணை (நிலை) எண்.261. பள்ளிக்கல்வி (155(2)) துறைநாள்.20.12.2018.


2. அரசாணை (நிலை)எண்.115, பள்ளிக்கல்வித் (பக5(2)) துறைநாள்.28.06.2022.


3. அரசாணை (நிலை)எண்.151. பள்ளிக்கல்வித் (SE1 (1) துறைநாள்.09.09.2022.


4.அரசுக்கடிதஎண்: 3618/பக5(1)/2025 நாள்:30.05.2025.


5.செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரின் கடித ந.க.எண்:37/516/ 2026, நாள்: 05.06.2026.


தஞ்சாவூர் மாவட்டம், செண்டங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வரும் திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 அன்று வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறுவதால் 01.07.2026 முதல் 2026 27 ஆம் கல்வியாண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை பணி நீடிப்பில் பணிபுரிய அனுமதி கோரி பார்வை (5) இல் கண்டுள்ள கடிதத்தில் சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன் இவ்வலுவலகத்தில் கருத்துரு பெறப்பட்டுள்ளது.


பார்வை 1-ல் காணும் அரசாணையில் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயது அடையும் ஆசிரியர்களை பணி ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின், கல்வியாண்டு முடியும் வரை அப்பணியிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில், பாடம் போதிக்க ஆசிரியர்கள் இல்லாத நிலையினைத் தவிர்க்கவும், மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையினைத் தவிர்க்கவும், கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதைக் கருதியும், ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் இறுதிவரை மறுநியமனம் வழங்கலாம் என்பது அரசின் பொதுவான ஆணையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ன் படி 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு கலை ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செண்டங்காடு. அரசு உயர்நிலைப்பள்ளியில் 01.08.2025 ஆசிரியர் நிர்ணயத்தின் படி 6 ஆம் வகுப்பில் 15 மாணவர்களும், 7 ஆம் வகுப்பில் 21 மாணவர்களும், 8 ஆம் வகுப்பில் 16 மாணவர்களும் ஆக கூடுதல் 52 மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது. மேலும் இன்றைய தேதியிலும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு குறைவாகவே கல்வி பயின்று வருகின்றனர்.


எனவே திரு.தி.மாரிமுத்து என்பார் 30.06.2026 பிற்பகல் பணி ஓய்வு பெறும் நிலையில் தனியர் கலையாசிரியர் என்பதாலும், அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும் மேற்காணும் அரசாணைகளின் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டும் தனியருக்கு பணி நீட்டிப்பு வழங்க வழிவகை இல்லை என்பதால் பெறப்பட்ட கருத்துரு அசலாக திருப்பப்படுகிறது.


முதன்மைக் கல்வி அலுவலர்(பொ). தஞ்சாவூர்.


பெறுநர் :

சம்மந்தப்பட்ட ஆசிரியர் (உரியவழியாக)


நகல் :

தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, செண்டங்காடு.


நகல் :

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை), தஞ்சாவூர்.




TRB - TNTET Paper I மற்றும் Paper - II தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள் - CEO சுற்றறிக்கை

 


 TRB - TNTET Paper I மற்றும் Paper - II தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள் - CEO சுற்றறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



முதன்மைக் கல்வி அலுவலகம்

கரூர்


ந.க.எண்.3605/ஆ5/2026 , நாள். 01.07.2026


சுற்றறிக்கை

பொருள்:

பள்ளிக்கல்வித்துறை - கரூர் மாவட்டம் TRB-TNTET Paper I மற்றும் Paper - II தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள் - தொடர்பாக.


பார்வை


ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் அவர்களின் 23.06.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்.


எதிர்வரும் 04.07.2026 மற்றும் 05.07.2026 அன்று நடைபெற உள்ள TRB-TNTET Paper-I மற்றும் Paper II தேர்வுகள் எழுத உள்ள ஆசிரியர்களுக்கு மேற்காண் பார்வையில் கண்ட இணை இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் தெரிவிக்கப்படுகிறது.


எனவே, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியிலிருந்து மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ள ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகளை அவசியம் தெரிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


1. ஆசிரியர்கள் தேர்வு வாரிய இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட Hall Ticket-ஐ தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


2. Aadhar. Passport, PAN Card. Driving Licence இவற்றில் ஏதாவது ஒரு original அடையாள அட்டையை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


3. இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


4. இரண்டு BLACK BALL POINT- பேனாக்களை (கருப்பு மை பந்துமுனைப் பேனா) தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.


5. காலை 08.30 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கீடு செய்த தேர்வு மையத்திற்கு சென்று விட வேண்டும்.


6. Hall Ticket-ல் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை நன்கு படித்து அதன்படி செயல்பட வேண்டும்.


7. OMR தாளில் எக்காரணம் கொண்டும் Whitener பயன்படுத்தக் கூடாது.


8. Hall Ticket- இல் உள்ள சரியான Roll Number- ஐ OMR தாளில் எழுத வேண்டும்.


9. Gate Closing Time காலை 9.30-க்குப் பிறகு செல்லும் தேர்வர்கள் எவருக்கும் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி கட்டாயம் கிடையாது.


எனவே. உரிய நேரத்திற்குள் அவசியம் சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.


"தேர்வெழுதும் அனைவரும் வெற்றி பெற நல்வாழ்த்துகள்"


முதன்மைக் கல்வி அலுவலர்.

கரூர்


பெறுநர்:


1. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் (உரிய வழியாக)


2. தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்


அனைத்து வகைப் பள்ளிகள். கரூர் மாவட்டம்.


நகல்


1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) கரூர்.


2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கரூர்


3. மாவட்டக் கல்வி அலுவகர் (தனியார் பள்ளிகள்) கரூச்


4. உதவித் திட்ட அலுவலர். (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கரூர் மாவட்டம்.


5. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கரூர் மாவட்டம். நகல்


சென்னை-06, ஆசிரியர் தேர்வு வாரியம், இணை இயக்குநர் அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.


நகல்


கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பணிந்தனுப்பப்படுகிறது.


G.O.Ms.No.122 | CEOs Transfer & DEOs Promotion | DSE Proceedings



முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் மற்றும் DEO to CEO பதவி உயர்வு - அரசாணை, பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு


G.O.Ms.No.122 , Dated : 01-07-2026 - CEOs Transfer & DEOs Promotion DSE Proceedings Order



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TET Passed Teachers விவரங்கள் கோரி CEO சுற்றறிக்கை



ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET)  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விவரங்கள் கோரி CEO சுற்றறிக்கை


ந.க.எண்    3570 /அ3/2026, நாள் 10.06.2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,

அனைத்து அரசு /  நகராட்சி  உயர்நிலை / மேல்நிலைப்  பள்ளித்  தலைமை ஆசிரியர்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று (10.06.2026) இரு படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

1. அதில் Sec.Gr.Teacher / Spl.Tr.and PET Service Details என்ற படிவத்தில் தற்போது அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் (இசை,ஓவியம்,தையல்) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Passed Teachers only) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மட்டும் கலம் 1 முதல் 26 வரை கோரியுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 12..6.2026க்குள் ceotrichya3@gmail.com அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

2. அடுத்தப்படியாக இரண்டாம் படிவத்தில் தற்போது அரசு/நகராட்சி உநிப/மேநிப பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மட்டும் கலம் 1 முதல் 23 வரை கோரியுள்ள விவரங்களை பூரத்தி செய்து 13.6.2026 க்கு ceotrichya3@gmail.com அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கலாகிறது.

Note: TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் (TET Not qualified or Not Passed) விவரங்களை இப்படிவத்தில் கொண்டுவரவேண்டாம்.

மின்னஞ்சல் மூலம் அனுப்பிய பிறகு இப்படிவத்தில் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட நகல் மற்றும், சார்ந்த ஆசிரியரின் படிவத்தில் பூர்த்தி செய்துள்ள  விவரங்களுக்கு உரிய SR கருத்துரு நகல் ,TET தேர்ச்சி பெற்ற சான்றிதழ்    தங்கள் அலுவலகப் பிரிவு எழுத்தர்/தனி நபர்  மூலம் 12.06.2026 மாலை 5.00 மணிக்குள் எவ்வித தாமதமுமின்றி,  முதன்மைக் கல்வி அலுவலகம், A3 பிரிவு எழுத்தரிடம் நேரில் வந்து ஒப்படைத்திட தெரிவிக்கப்படுகிறது.





TET பணிச்சான்று பெற்றிட இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்


TET பணிச்சான்று ( Service Certificate ) பெற்றிட இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் விவரங்கள் சார்ந்து திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்




பொதுத்தேர்வு தேர்வு - கண்காணிப்புக் கேமரா (CCTV) பொருத்த அறிவுறுத்துதல்



பொதுத்தேர்வு தேர்வு - கண்காணிப்புக் கேமரா (CCTV) பொருத்த அறிவுறுத்துதல் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு தேர்வு மையம் - தேர்வு கட்டுபாட்டு அறை / சொல்லுவதை எழுதுபவர்கள் அறைகள் மற்றும் வரண்டா ஆகிய பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா (CCTV) பொருத்த அறிவுறுத்துதல் சார்பாக தேனி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Voters Listல் பெயர் சேர்க்க / நீக்க / திருத்தம் மேற்கொள்ள / மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் - தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / நீக்க / திருத்தம் மேற்கொள்ள / மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் - தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு


Special camps for adding /deleting / correcting /cl Changing names in the voters' list - Chief Electoral Officer's order


சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் :

27.12.2025 சனி

28.12.2015 ஞாயிறு

03.01.2026 சனி

04.01.2026 ஞாயிறு


இடம்: அந்தந்த வாக்குச்சாவடிகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Boat Airdopes 163 in Ear Wireless Earbuds with 40 HRS Battery, Fast Charge, 13mm Drivers, IPX5, Quick Touch Response Control (Active Black)



Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/47uAvPb




மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (08.11.2025) அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் - CEO செயல்முறைகள்

 

மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (08.11.2025) அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் Working Day - CEO செயல்முறைகள்


 மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று சனிக்கிழமை (08.11.2025) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள் : 06.11.2025



Sony BRAVIA 3 Series 139 cm (55 inches) 4K Ultra HD AI Smart LED Google TV K-55S30B (Black)







Actual Price: 1,18,900

Offer Price : 67,990

Benefit : Rs. 50,910


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4qNSQ2t



பாரதியார் தின & குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் - CEO கடிதம்



 பாரதியார் தின & குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் - கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம்


Bharathiyar Day & Republic Day Sports Competitions - Letter from Karur District Chief Educational Officer



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



WD-40 Pidilite Multipurpose Spray, Lubricant, Rust Remover, Squeak Noise Remover, Stain Remover, And Cleaning Agent, 170G



Actual Price: Rs. 260

Offer Price : Rs. 214

Benefit : Rs. 46


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/3J3L1Vz


தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தால் வழங்கப்படும் ₹75,000 பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள்



வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் இறந்தால் வழங்கப்படும் ₹75,000 பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள், விண்ணப்பப் படிவம் & சரிபார்ப்புப் பட்டியல் : வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள், நாள் : 08-10-2025


Application Forms, Checklist & Procedures for applying for ₹75,000 in case of death of earning mother/ father in an accident: Proceedings of Vellore District Chief Education Officer, Date: 08-10-2025



மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் / தந்தை விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ வழங்கப்படும் ₹75,000/-க்கான விபத்துக் காப்பீடு பத்திரம் பெற, விண்ணப்பிக்கும் வழிமுறைகள், விண்ணப்பப் படிவம் & சரிபார்ப்புப் பட்டியல் குறித்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த கல்விச் சுற்றுலா செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் : CEO செயல்முறைகள்

 

 மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த கல்விச் சுற்றுலா செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் : முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Guidelines for implementing science-based educational tourism : CEO Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஆசிரியர் தகுதி தேர்வு TNTET 2025 தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் எழுதும் / எழுதாத ஆசிரியர் விவரங்கள் கோரி CEO செயல்முறைகள்

 

 

ஆசிரியர் தேர்வு வாரியம் - காஞ்சிபுரம் மாவட்டம் - ஆசிரியர் தகுதி தேர்வு TNTET 2025 தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் எழுதும் / எழுதாத ஆசிரியர் விவரங்கள் அனுப்பக் கோருதல் சார்ந்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள், நாள்: 19-09-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்



 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் - பங்கேற்கும் / சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் - வழிகாட்டி நெறிமுறைகள் - முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Block Level Kalai Thiruvizha Competitions - Certificates for Students - Guidelines - CEO Proceedings


Block Level Kalai Thiruvizha Competitions for Students of Classes 1 to 12 - Certificates for Participating / Distinguishing Students - Guidelines - Proceedings of the Chief Educational Officer



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத துறை அனுமதி பெறத் தேவையில்லை - CEO



ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத துறை அனுமதி பெறத் தேவையில்லை - கடலூர் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்


No need to obtain departmental permission to write Teacher Eligibility Test - Cuddalore Chief Education Officer Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


அலுவலரிடம் வாக்குவாதம் - விளக்கம் அளிக்குமாறு ஆசிரியருக்கு குறிப்பாணை - CEO Proceedings

 

முதன்மைக் கல்வி அலுவலரிடம் வாக்குவாதம் - விளக்கம் அளிக்குமாறு ஆசிரியருக்கு  குறிப்பாணை - CEO Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



காஞ்சிபுரம் மாவட்டம் - தென்னேரி, அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) திருமதி.P.சசிகலா என்பார் அலுவலரிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் செய்தமைக்கு விளக்கம் கோருதல் - குறிப்பாணை வழங்குதல் சார்ந்து - காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்


காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி, அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பாட முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி.P.சசிகலா என்பார், 08.08.2025 அன்று மாலை சிறப்பு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட சென்றார். அப்போது மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் பாடப்புத்தகம் அல்லாமல், தனியார் மூலம் தயாரிக்கப்பட்ட பாடக்குறிப்பு கையேடுகளை வைத்திருந்ததும், மாணவர்களிடம் முதன்மைக் கல்வி அலுவலர் இது குறித்து விசாரித்த போது தாங்கள் இதை மட்டுமே பின்பற்றி படித்து வருவதாக தெரிவித்தனர்.


மேலும், பள்ளி பாடவேளை நேரத்திலும், வகுப்பில் தனியர் மூலம் தயாரித்த கையேடு தான் பயன்படுத்த வேண்டுமென கூறி, இந்த கையேடு மட்டுமே ஆங்கில ஆசிரியரால் விற்கப்பட்டது, எனவே. நாங்கள் அனைவரும் இந்த கையேடு மட்டுமே பயன்படுத்துகிறோம் என்று தெரிவித்தனர்.


இது குறித்து ஆங்கிலப் பாட ஆசிரியரிடம் விசாரித்த போது, ஆசிரியர் உயர் அலுவலரிடம் முறையற்ற வார்த்தைகளையும், குரலை உயர்த்தி பேசியும் அவமதித்தார். மேலும், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நான்கு பாடவேளையில் அரசால் வழங்கப்படும் பாடப்புத்தகத்தை முழுமையாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க இயலாது. 


எனவே தான். நான் தனியார் மூலம் தயாரித்த பாடக்குறிப்பு கையேடுகளை வைத்து கொண்டு, மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றேன் என்று கூறினார். இச்செயல், அரசின் பாடத்திட்டத்தையும், பள்ளியில் ஒதுக்கப்படும் பாடப்பிரிவு நேரத்தையும் அவமதிப்பதாக உள்ளது. இது முற்றிலும் அரசுக்கு எதிராக செயல்படும் நோக்கமாக கருதப்படுகிறது.


எனவே இதற்குண்டான விளக்கத்தினை 3 நாட்களுக்குள் அளிக்குமாறு தெரிவிக்கலாகிறது.


அவ்வாறு விளக்கம் அளிக்க தவறினால் விளக்கம் அளிக்க ஏதும் இல்லை என கருதி தங்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின்படி துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.


Procedure for obtaining NOC for TET and competitive examinations by teachers / officers : CEO Proceedings

 

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் அரசு நடத்தும் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று பெறும் முறை : முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Procedure for obtaining a No Objection Certificate for government-conducted qualifying examinations and competitive examinations by teachers / officers working in government schools: Proceedings of the Chief Education Officer


அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் அரசு நடத்தும் தகுதித் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தடையின்மைச் சான்று பெறும் முறை குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்