கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NILP - 2024-25 - Conduct of Final Basic Literacy Test - Activities - Issuance of Guidelines - Proceedings of the Director

 

புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ - 2024-25ஆம்‌ ஆண்டு செயல்பாடுகள்‌ - இறுதி அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்துதல்‌ - மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ - பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌:065/ஆ2/2024, நாள்‌: 23.10.2024


புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கற்போருக்கான தேர்வு தேதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு. NILP திட்ட கற்போருக்கான தேர்வு (10.11.24) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது...



New India Literacy Program - Activities for the year 2024-25 - Conduct of Final Basic Literacy Test - Activities to be undertaken - Issuance of Guidelines - Proceedings of the Director of Non-School and Adult Education No:065/A2/2024, Dated: 23.10.2024



பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்குநர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

முன்னிலை: முனைவர்‌.சு.நாகராஜ முருகன்‌

ந.க.எண்‌:065/ஆ2/2024, நாள்‌: 23.10.2024


பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - பள்ளிசாரா மற்றும்‌ வயது வந்தோர்‌ கல்வி இயக்ககம்‌ - புதிய. பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ 2022-27 - நடப்பு 2024-25ஆம்‌ ஆண்டு செயல்பாடுகள்‌ - திட்ட முதற்கட்ட கற்போருக்கு 10.11.24அன்று இறுதி அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்துதல்‌ - வழிகாட்டு நெறிமுறைகள்‌ வழங்குதல்‌ - சார்பு.


பார்வை: 1, 2024-25ஆம்‌ ஆண்டிற்கான புதிய பராத எழுத்தறிவுத்‌ திட்ட ஏற்பளிப்புக்‌ குழு கூட்ட (PAB) நாள்‌ 22.03.24

2, அரசாணை நிலை எண்‌.159, பள்ளிக்‌ கல்வித்(எம்‌எஸ்‌) துறை, நாள்‌: 09.07.24

3, இவ்வியக்கக செயல்முறைகள்‌ ந.க.எண்‌.065/ஆ2/2024, நாள்‌: 09.07.24


தமிழ்நாட்டில்‌, 15வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத்‌ தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக்‌ கல்வி வழங்கிடும்‌ வகையில்‌ புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌ கடந்த 2022-23 ஆம்‌ ஆண்டு முதல்‌ அனைத்து 38 மாவட்டங்களிலும்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ்‌, 2022-23ஆம்‌ ஆண்டு முதல்‌ 2024-25ஆம்‌ ஆண்டு வரை 16 இலட்சம்‌ பேர்‌ பயனடைந்துள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்‌.


பார்வை-3இல்‌ காணும்‌ செயல்முறைகளின்படி, 2024-25ஆம்‌ ஆண்டில்‌ அனைத்து எழுதப்படிக்கத்‌ தெரியாதோர்‌ அனைவரையும்‌ 100% கண்டறிந்து, அவர்கள்‌ அனைவருக்கும்‌ அடிப்படை எழுத்தறிவுக்‌ கல்வி கற்கும்‌ வாய்ப்பை வழங்கிடும்‌ வகையில்‌ திட்டச்‌ செயல்பாடுகளை இரண்டு கட்டங்களாகப்‌ பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதன்‌ அடிப்படையில்‌, திட்ட முதற்கட்டத்தில்‌ விரிவான கணக்கெடுப்பின்படி கண்டறியப்பட்டுள்ள 6.14இலட்சம்‌ நபர்களுள்‌, 5.09இலட்சம்‌ நபர்கள்‌ அரசு மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ பள்ளி வளாகங்களில்‌ அமைக்கப்பட்டுள்ள 30,113 கற்போர்‌ எழுத்தறிவு மையங்களில்‌ சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 30,113 தன்னார்வலர்களின்‌ உதவியுடன்‌ 200 மணி நேரக்‌ கற்பித்தல்‌ மற்றும்‌ கற்றல்‌ செயல்பாடுகள்‌ 2024-ஜுலை மாதம்‌ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்ட இரண்டாம்‌ கட்டம்‌ 2024-நவம்பர்‌ மாதம்‌ முதல்‌ 2025-மார்ச்‌ மாதம்‌ வரை செயல்படுத்தப்படும்‌.


தற்போது, திட்ட முதற்கட்டத்தின்கீழ்‌. விரிவான கணக்கெடுப்பின்‌ மூலம்‌ கண்டறியப்பட்டு, அனைத்து 38 மாவட்டங்களிலும்‌ இணைப்பில்‌ கண்டுள்ளபடி எழுத்தறிவு மையங்களில்‌ சேர்க்கப்பட்டுள்ள 5,09,459 கற்போருக்கு வருகின்ற 10.11.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்தத்‌ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படை எழுத்தறிவுத்‌ தேர்வு நடத்துவது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்குப்‌ பின்வருமாறு வழங்கப்படுகிறது.





இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி - முதல் பரிசு ரூ.50000

 


கடிதம் எழுதும் போட்டிக்கு கட்டுரைகளை அனுப்பலாம் 


இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி - முதல் பரிசு ரூ.50000


போட்டியில் பங்குபெறுவோர் பெயர் மற்றும் பள்ளியின் முகவரி தவறாமல் குறிப்பிட வேண்டும்.


தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.


இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.


 அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.


 'எழுதுவதின் மகிழ்ச்சி: நவீன யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த போட்டியில் அனைத்து வயதினரும் கலந்துகொள்ளலாம்.


தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி இவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு வருகிற டிசம்பர் மாதம் 14ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


உள்நாட்டு கடிதப்பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் எழுதுவோர் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுதி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், பெறாதவர் என்ற வயதிற்கான சான்று கடிதத்தில் குறிப்பிட வேண்டும். போட்டியில் பங்குபெறுவோர் பெயர் மற்றும் பள்ளியின் முகவரி தவறாமல் குறிப்பிட வேண்டும்.


போட்டியில் தமிழ்நாடு வட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரமும்,2-வது பரிசு ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Annual Increment Format


ஆண்டு சம்பள உயர்வு நமூனா


Annual Increment Format



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தீபாவளி பண்டிகை - 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்கள்

 

தீபாவளி பண்டிகை - 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்கள்


தீபாவளி பண்டிகையையொட்டி 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்


கிளாம்பாக்கம் = திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்


கோயம்பேடு = வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்...


மாதவரம் புதிய பேருந்து நிலையம் = ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்


கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தல்


Diabetics no longer need insulin injections - Chinese scientists make a marvelous discovery



 சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி இனி தேவை இல்லை - சீன  விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு


சர்க்கரை நோய்க்கு நிரந்தரத் தீர்வு... சீன விஞ்ஞானிகள் அசத்தல்! 


உலக மக்களை ஆட்டிப்படைத்து வரும் கொடிய நோய்களில் ஒன்று சர்க்கரை நோய். மரபணு, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணங்களால் ஏற்படும் இந்த நோய், இன்று லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில், சீன மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய சிகிச்சைமுறை சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு புதிய விடியலைத் தந்துள்ளது.‌ 


அரை மணி நேர அறுவை சிகிச்சை: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தியின் படி, 25 வயது பெண் சர்க்கரை நோயாளிக்கு அளிக்கப்பட்ட புதிய சிகிச்சை முறையானது, சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தும் வாய்ப்பைத் திறந்துள்ளது. இந்த சிகிச்சையில் நோயாளியின் உடலில் இருந்து சிறிதளவு தசை எடுக்கப்பட்டு, சில ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த அரை மணி நேரம் அறுவை சிகிச்சையின் மூலம் நோயாளி இனி இன்சுலின் ஊசி போடாமல் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



இந்த புதிய சிகிச்சைமுறை குறிப்பாக டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைப் 1 நீரிழிவு நோயில், உடல் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது. இதனால், இன்சுலின் ஊசி போடுவது அவசியமாகிறது. ஆனால், இந்த புதிய சிகிச்சையின் மூலம் இன்சுலின் தேவை குறைந்து வாழ்க்கைத் தரம் மேம்படும். 


சீன மருத்துவர்களின் இந்த கண்டுபிடிப்பு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்த சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. 


சீன மருத்துவ ஆராய்ச்சியில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக, இந்த சர்க்கரை நோய் சிகிச்சை முறையானது சீனாவின் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதனால், சீன மருத்துவர்கள் சர்க்கரை நோய்க்கான எதிர்கால சிகிச்சைகளை மேலும் மாற்றி அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என நம்பப்படுகிறது.‌ 


சீன மருத்துவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு சர்க்கரை நோய் சிகிச்சைக்கான ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி இருந்தாலும், இந்த சிகிச்சை முறையில் நீண்ட கால விளைவுகள் குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்த சிகிச்சை முறையை உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும் எளிதாக அணுகும் வகையில் செய்ய வேண்டியது அவசியமாகும். 



சமீபத்தில் சீன மருத்துவ அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வியத்தகு சாதனை ஒன்றைப் புரிந்திருக்கிறார்கள்


முற்றிலும் இன்சுலின் சுரப்பு இல்லாத நிலையில் டைப் ஒன் நீரிழிவு நிலையில் இருந்த 25 வயது பெண்மணி ஒருவருக்கு சிகிச்சை அளித்து அவரது நீரிழிவைக் குணப்படுத்தி உள்ளனர். 


குணம் என்றால் இன்சுலின் ஊசி தேவைப்படாத நிலையில் அவரது உடலில் சுயமாக இன்சுலின் உற்பத்தி மீண்டும் ஏற்படுமாறு செய்துள்ளனர். 


இதை அவர்கள் எப்படி செய்தனர்? 


வாருங்கள் காண்போம்


அந்தப் பெண்ணின் கொழுப்புத் திசுக்களில் இருந்து செல்களை எடுத்தனர்.


அத்தகைய செல்களில் உள்ள மரபணுக்களில் உயிர் வேதியியல் ரசாயனங்கள் மூலம் உரிய மாற்றங்களைச் செய்து மறு-ஆக்கத்துக்கு உட்படுத்தி அதை எதுவாகவும் உருமாறும் செல்களாக (Pluripotent stem cells) மாற்றினர்.  


பிறகு அந்த ப்ளூரி பொட்டண்ட் ஸ்டெம் செல்களை -  இன்சுலின் சுரக்கும் இயற்கையான  பீட்டா செல்களாக உருமாற்றினர். இவற்றுக்கு "ரசாயனம் மூலம் தூண்டப்பட்ட ப்ளூரி பொட்டன்ட் ஸ்டெம் செல்களில் இருந்து தோன்றிய ஐலெட் செல்கள்" என்று பெயரிட்டனர்.  


இவ்வாறு உருவாக்கப்பட்ட ஐலெட் செல்களை அந்தப் பெண்மணியின் முன் வயிற்றுப் பகுதியில் உள்ள தசையில் ஊசி மூலம் செலுத்தினர். 


இவ்வாறு ஊசி மூலம் செலுத்தியதற்கு அரை மணிநேரம் மட்டுமே எடுத்துக் கொண்டது என்பதால் அனைத்து ஊடகங்களும் அரை மணிநேரத்தில் டைப் ஒன் நீரிழிவை குணப்படுத்தியதாக பறைசாற்றினர்.


இதற்கு முன்பு இந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சியில், கணையத்தின் பீட்டா செல்களை கல்லீரலின் ரத்த நாளத்தில் சூழ்வைப்பதே முறையாக இருந்தது. எனினும் அந்த முறையில், உடலின் எதிர்ப்பு சக்தி தீவிரமாக இந்த புதிய செல்களை எதிர்த்து அழிப்பது நடந்தது. 


இந்தப் புதிய முறையான முன் வயிற்றுப் பகுதி தசையில் ஊசி மூலம் எளிதாக செலுத்தும் முயற்சி சிறப்பானதாகும். 


மேலும், நோயரிடமிருந்தே எடுக்கப்பட்ட திசுக்களை அவருக்கே செலுத்தும் போது எதிர்ப்பு சக்தியால் புதிய செல்கள் வீழ்த்தப்படும் சதவிகிதம் மிக மிகக் குறைவு. 


இது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை என்பதால் நோயருக்கு எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் மருந்துகள் வழங்கப்பட்டதும் தெரிகிறது


இத்தகையதோர் புதிய முயற்சியை செய்த 75 நாட்களுக்குப் பிறகு அந்த நோயாளிக்கு இன்சுலின் ஊசி தேவை இல்லாமே ரத்த க்ளூகோஸ் அளவுகள் நீரிழிவு இல்லாதவருக்கு இருக்கும் நிலைக்கு வந்தது தெரிகிறது.


ஒரு வருடமாக அந்த நோயாளியை கண்காணிப்புக்கு உட்படுத்தியதில் இந்த புதிய சிகிச்சையால் வேறு பாதிப்புகள் தோன்றாமல் இருப்பதும் தெரிகிறது. 


டைப் ஒன்று நீரிழிவிற்கு உயிர் காக்கும் ஒரே மருந்தான "இன்சுலின்" கண்டறியப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்திருக்கும் சூழ்நிலையில் 


நோயாளியிடம் இருந்தே எடுக்கப்பட்ட செல்களை -  தொழில்நுட்பம் மூலம் ஸ்டெம் செல்களாக மாற்றி அந்த ஸ்டெம் செல்களை - இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களாக மாற்றி 

நோயாளிக்கு ஊசி மூலம் எளிதாக செலுத்தி டைப் ஒன்று நீரிழிவில் இருந்து குணத்தை அளித்துள்ள 

டியாஜின் முதல் மத்திய மருத்துவமனை மற்றும் பெக்கிங் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள். 


இந்த மருத்துவ சிகிச்சை முறையில் இன்னும் பலரைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு நீண்ட கால சாதக பாதக அம்சங்கள் ஆராயப்பட்டு 

இந்த சிகிச்சை விரைவில் உலகத்தார் அனைவருக்கும் கைகொள்ளத்தக்க விலையில் கிடைக்கும் சிகிச்சையாக மாறும் போது 


நம்மால் டைப் ஒன்று நீரிழிவு நோயர்கள் அனைவருக்கும் இன்சுலின் ஊசியிலிருந்து விடுதலை அளிக்க முடியும். 


அந்த நாள் விரைவில் வர இருக்கிறது. 


அதுவரை 

டைப் ஒன்று நீரிழிவிற்கு இன்சுலின் எனும் அருமருந்தே உயிர்காக்கும் ஒரே மருந்தாகத் தொடரும். 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


Producing fake NEET score certificate - Trying to get admission in Madurai AIIMS Medical College - Himachal Pradesh student arrested



போலியாக நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தயாரித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற இமாச்சல பிரதேச மாநில மாணவன் கைது


💯%    போலியாக நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழை தயாரித்து எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற அபிஷேக் கைது



💯%     மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்காக   போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக்  கைது



💯%    மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை


ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி நீட் சான்றிதழை அளித்த வட மாநில மாணவரை போலீஸார் கைது செய்தனர்.


ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. நீட் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலம் மாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக் (22) என்ற மாணவர் தனது தந்தையுடன் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்காக வந்துள்ளார்.


மாணவர் அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்த எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டு கேணிக்கரை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில், அபிஷேக் இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மூன்றாவது முறையாக நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணிற்கு வெறும் 60 மார்க் எடுத்ததால் தனது தந்தைக்கு தெரியாமல் போலியான நீட் தேர்வு சான்றிதழ் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.


தொடர்ந்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் அபிஷேக் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு மருத்துவக்கல்லுரியில் மாணவர் சேர்க்கையில் போலி சான்றிதழுடன் வந்து வட மாநில மாணவர் ஒருவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மாச சம்பளம் வந்ததுக்கும் பாராட்டு விழா நடத்தினாலும் நடத்துவாங்கபோல - வருந்தும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்

மாச சம்பளம் வந்ததுக்கும் பாராட்டு விழா நடத்தினாலும் நடத்துவாங்கபோல - வருந்தும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் - தினமலர் டீக்கடை பெஞ்ச்


 ''மாச சம்பளம் வந்ததும் பாராட்டு விழா நடத்தினாலும் நடத்துவாங்கபோலன்னு வருத்தப்பட்டு பேசிகிட்டு இருக்காங்களாம் ஓய்..." என்று விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.


"இவ்வளவு வருத்தப்படறது யாருன்னு விவரமா சொல்லுங்க..." என்றார் அந்தோணிசாமி.


"அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் ஓய்... இவங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி சமீபத்திலே அறிவிப்பு வெளியானது. இதுக்காக சியெம்முவை சந்திச்சு நன்றி சொல்லணுமுன்னு முப்பது சங்கங்கள் முடிவு செய்ததாம். ஆனா. அதுக்கு சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. இருந்தாலும், அந்த எதிர்ப்பை மீறி பெரிய கூட்டமா போயி தனித்தனிக்குழுவா சியெம்முவை சந்திச்சு வாழ்த்து சொல்லியே ஆகணுமுன்னு மாநில நிர்வாகிகள் அடம் பிடிக்கறாங்களாம் ஓய்... அகவிலைப்படி உயர்வுங்கறது ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு ஒருமுறை அரசு கட்டாயம் கொடுத்தாகணும். அதுதான் சம்பள கமிஷன் விதிமுறை. சியெம்மு சொன்னதுபோல பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிச்சாருன்னா பாராட்டு தெரிவிக்கலாம். பெரிய அளவிலே பாராட்டு விழாவையும் நடத்தலாம். அந்த விழாவுக்கு எவ்வளவு செலவானாலும் அதை கொடுக்க எல்லாரும் தயாராக இருக்கோம். ஆனா, அகவிலைப்படி உயர்வு அறிவிச்சதுக்காக வாழ்த்து சொல்றது சரியில்லே. 


இப்படியே போனா, இனி ஒவ்வொரு மாசமும் சம்பளம் வந்ததும் சம்பளம் போட்ட சியெம்முக்கு நன்றின்னு சங்க நிர்வாகிகள் முண்டியடிச்சுகிட்டு போயி நின்னாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லேன்னு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருத்தப்பட்டு பேசிகிட்டு இருக்காங்களாம் ஓய்..." என்றார் குப்பண்ணா.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...