கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மருத்துவப் படிப்பு: 17ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 17ம் தேதி துவங்குகிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்பத் தரப்படும் இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் காலியாக உள்ள இடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.
சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடக்கும், இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானோருக்கு, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது. www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலின்படி, தகுதியானோர், குறிப்பிட்ட தேதியில், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மருத்துவக் கல்வி இயக்கக செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காலாண்டுத் தேர்வு 2025 : கால அட்டவணை

  Quarterly Exam 2025: Timetable காலாண்டுத் தேர்வு 2025 : கால அட்டவணை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு காலஅட்டவணை அனுப்...