இரண்டாம் கட்ட கலந்தாய்வின் முடிவில், 51 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக
உள்ளன. காலியாக உள்ள, பி.டி.எஸ்., இடங்களை நிரப்ப, வரும், 30ம் தேதிக்குள்,
இறுதிகட்ட கலந்தாய்வு நடைபெறும். இதற்கான அறிவிப்பு, நாளை மறுநாள்
இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பல் மருத்துவக் கல்லூரியில்
காலியாக இருந்த, 19 மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், காலியாக
இருந்த, 106, பி.டி.எஸ்., இடங்களை நிரப்ப, நேற்று கலந்தாய்வு நடந்தது.
கலந்தாய்வின் முடிவில், அரசு பல் மருத்துவமனையில் 5 இடங்களும் மற்றும்
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 46 இடங்களும் காலியாக உள்ளன. இவற்றில்,
எம்.பி.சி., பிரிவில், 14; எஸ்.சி., பிரிவில், 23 இடங்கள் நிரப்பப்படாமல்
உள்ளன. சுகாதாரத் துறை இணையதளத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.