மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்டந்தோறும் ஒதுக்கப்படும் கல்வி
நிதி, முறையாக செலவு செய்யப்படுகிறதா என, ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி
உள்ளடங்கிய கல்வி திட்ட துணை இயக்குனர் சீனிவாசன் குழுக்கள் ஆய்வு
செய்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் அடங்கிய இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு
மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வியில் முன்னேறும் நோக்கில்,
அரசு பல லட்சம் நிதி ஒதுக்குகிறது. இதன் மூலம் வட்டார வாரியாக மையங்கள்
ஏற்படுத்தி, சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கல்வி, சிறப்பு பயிற்சி,
மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும், நிதி சரியான முறையில்
பயன்படுவதில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்டந்தோறும் ஆய்வு
நடத்த உத்தரவிடப்பட்டது.
திட்ட இயக்குனர் சீனிவாசன் நேற்று சிவகங்கை வந்தார். அவரது தலைமையில்
மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட
ஒருங்கிணைப்பாளர்கள், தலைமையாசிரியர்கள் அடங்கிய தலா 4 பேர் கொண்ட 12
குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுக்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 பிளாக்குகளுக்கும் சென்று
மாணவர்களிடம் ஆய்வு செய்தனர்.இயக்குனர் சீனிவாசன் கூறுகையில்,"வழக்கமாக
நடக்கும் ஆய்வு தான். இத்திட்டத்திற்கு வழங்கும் நிதி முறைகேடு இன்றி
முழுமையாக மாணவர்களின் கல்விக்கு செலவு செய்யப்படுகிறதா? என, ஆய்வு
நடத்துகிறோம். மாவட்டந்தோறும் இந்த ஆய்வு நடக்கும், என்றார்.