கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த உத்தரவு

மாணவர்களின் கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களின், தமிழ், ஆங்கில கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக கட்டுரையின் தலைப்பு மற்றும் அதற்கான முழு தகவல்களையும், ஆசிரியர்களே கொடுத்து விடுவார்கள். இதனால் மாணவர்களின் சிந்திக்கும், எழுதும் திறன் வளர்வதில்லை.
இனிமேல், கட்டுரையின் தலைப்பை மட்டுமே ஆசிரியர்கள் வழங்குவார்கள், அதற்கான அனைத்து தகவல்களையும் அவர்களே தொகுத்து, சொந்த நடையில் எழுத வேண்டும். கட்டுரையை மதிப்பீடு செய்து, அதற்கு மதிபெண் வழங்கப்படும்.
கட்டுரையின் நிறை,குறைகளை கூறி மாணவர்களின் எழுதும் திறனை மேம்படுத்த வேண்டும். சிறந்த கட்டுரையை வகுப்பறை மற்றும் கூட்டு பிரார்த்தனையின் போது மாணவர்களை வாசிக்க வைத்து உற்சாகப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு Special TET நடத்த தமிழ்நாடு அரசு G.O. வெளியீடு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண் : 231, நாள் : 13-10-2025 வெளியீடு Special TET  Ta...