அரசு சிறார் காப்பகங்களின் செயல்பாடுகளை, மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ராயபுரம், எஸ்.என். செட்டி தெருவில் உள்ள, அரசு சிறார் காப்பகத்தில் இருந்து, கடந்த, ஜூன் மாத இறுதியில், 34 சிறார்கள், நள்ளிரவில் தப்பினர். இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு, மாநில மனித உரிமைகள் ஆணையம், சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு துறை செயலர்களுக்கு, "நோட்டீஸ்" அனுப்பியது.
அதிகாரிகள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில், அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயந்தி, பிறப்பித்துள்ள உத்தரவு:
அதிகாரிகள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில், அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஜெயந்தி, பிறப்பித்துள்ள உத்தரவு:
அரசு சிறார் காப்பகங்களில் உள்ள பிள்ளைகளுக்கு, சுகாதாரமான குடிநீர், சத்தான உணவுகளை வழங்குவதுடன், மாதம் இருமுறை, அவர்களுக்கு, மனநல ஆலோசனை,யோகா மற்றும் தியானப் பயற்சி அளிக்க வேண்டும்.
கழிவுநீர் பாதையை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட, காப்பக துப்புரவு பணிகளில், சிறார்களை ஈடுபடுத்தக் கூடாது. சிறார்கள், தங்கள் குறைகளை தெரிவிக்க, அனைத்து காப்பகங்களிலும், புகார் பெட்டி வைக்க வேண்டும்.
மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், காப்பகங்களில், மாதம் ஒருமுறையாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.மேலும், மாவட்ட கலெக்டர்கள், காப்பகங்களின் செயல்பாடுகளை, தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.