கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு- மேலும் 6 பேர் கைது...

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பாக, மேலும் 6 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். கைது  செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உட்பட 6 பேர் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் என இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு கிடப்பில் கிடந்ததாகப் புகார் எழுந்ததால் 15 நாட்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. வட்டார தகவல் கூறுகின்றன.

இதனிடையே, ராமநாதபுரத்தில் குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சிப் பெற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் உதவியாளராக நேரடி நியமனம் செய்யப்பட்ட மாலாதேவி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை

  களஞ்சியம் செயலி / வலைத்தளத்தில் வருமான வரி அறிவிப்பு புதுப்பிப்பு செயல்முறை Income Tax Declaration Update Procedure in Kalanjiyam App / We...