கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவப்படுத்திய ஆசிரியர்கள்...

 


சிவகங்கை மாவட்டம் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு அஞ்சல் தலை வெளியிட்டு ஆசிரியர்கள் கவுரவப்படுத்தினர்.

திருப்பத்தூர் அருகே சேவினிப்பட்டி சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி முருகேசன், ராதிகா. இவர்களது மகள் சத்யபிரியா அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தார்.

இவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் நடந்த தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வை எழுதினார்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். கடந்த ஆண்டு நடந்த தேர்வில் மாணவி சத்யபிரியா மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்தார்.

மேலும் இச்சாதனையை ஊக்குவிக்கும் விதமாக, ஆசிரியர்களின் முயற்சியால் மாணவி சத்தியபிரியாவின் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல்தலையை அஞ்சல்துறை வெளியிட்டது.


மேலும் அந்த மாணவியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டினர்.

இதுகுறித்து சத்யபிரியா கூறுகையில்,‘‘ நான் இதுவரை தேசத்தலைவர்களின் அஞ்சல்தலையை தான் பார்த்துள்ளேன். தற்போது என்னுடைய புகைப்படமே அஞ்சல் தலையில் வெளியிட்டுள்ளது எனக்கு மிகுந்த கவுரமாக உள்ளது. தேர்வில் வெற்றி பெற ஊக்குவித்த பெற்றோருக்கும், பயிற்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்,’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 2 - Unit 3 - November 1st Week - Lesson Plan - 1, 2 & 3rd Std - Ennum Ezhuthum

  1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு - அலகு 3 – நவம்பர் முதல் வாரம் (Term 2 - Unit 3 - November 1st Week -...