கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 10.11.2020 (செவ்வாய்)...

 🌹எப்பொழுது முடிவுகளை நாமே எடுக்க பழகுகிறோமோ, அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியமும் நமக்குள் பிறக்கும்.!

🌹🌹சண்டையின் போது அமைதியாய் இருப்பவர்கள் தவறு செய்தவர்கள் அல்ல.

வார்த்தையை விட்டால் உறவு பிரியும் என்பதை உணர்ந்தவர்கள்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘நவம்பர் 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா? என்பது பற்றி 12-ம் தேதி முடிவு எடுக்கப்படும்  அமைச்சர் அன்பழகன்                                             

📕📘G.Os of BC, MBC and Minorities Welfare Department - GO(Ms)No 75 Dt: October 14, 2020 - சீர்மரபினர் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் – பதிவு பெற்ற உறுப்பினர்கள் – பதிவு புதுப்பித்தல் காலம் 31.12.2020 வரை நீட்டிப்பு – ஓய்வூதியம் பெறும் உறுப்பினர்கள் – வாழ்நாள் சான்று கோருவதில் 31.12.2020 வரை விலக்கு அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது.

📕📘மருத்துவக் கலந்தாய்வுக்கு 32,300 பேர் விண்ணப்பம்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல்

📕📘27 பாடங்களுக்கு புதிய பாடத்திட்டம்: யுஜிசி தகவல்

📕📘11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இரு வகையான பாடத் திட்டம்! - தமிழக அரசு முடிவு

📕📘அனைத்து அரசுக் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் இலவச அதிவேக வைஃபை சேவை- உத்தராகண்டில் அதிரடி

📕📘தேசிய நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு வேளாண். பல்கலை. மாணவர்கள் தேர்ச்சி: முதுநிலை, பிஎச்டி படிப்புகளில் சேர வாய்ப்பு

📕📘தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தினால் மட்டுமே நிதி உதவி அளிக்கப்படும் - யூ.ஜி.சி

📕📘கல்வித்துறை தொடர்பாகவே அதிக வழக்குகள் பதிவாகின்றன – உயர்நீதிமன்றம்.

📕📘வரும் 16-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல்

📕📘ஒரு அறைக்கு ஒரு மாணவர்: கொரோனா டெஸ்டில் நெகடிவ் என சான்றிதழ் இருந்தாலும் 14 நாட்கள் தனிமை கல்லூரி விடுதிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டது யூஜிசி.

📕📘தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டம் குறைப்பு விவரம் விரைவில் வெளியிடப்படும் என  பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 

📕📘அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவச் சேர்க்கையில், உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி,  ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

📕📘வரும் டிசம்பருக்குள் அரசு பள்ளிகளில்  மேலும் நவீன வசதிகளும், மாற்றங்களும்  செய்யப்படும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள்  தங்கள் குழந்தைகளை  பயில வைப்பது அவர்களது விருப்பம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு. 

📕📘நவ.16-ல் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய பள்ளிகளில் நேற்று  கருத்துக் கேட்பு கூட்டம் பெற்றோர்கள் பெருமளவில் பங்கேற்பு 

📕📘அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு ரத்து. தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

📕📘பழைய பென்ஷன் திட்டம் வல்லுனர் குழு முடிவு என்னாச்சு- அரசு ஊழியர் ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு  - நாளிதழ் செய்தி 

📕📘தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்   தெரிவித்துள்ளார்

📕📘பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்று மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர் - பள்ளிக்கல்வித்துறை   அமைச்சர்

📕📘கொரோனா ஊரடங்குக்கு பின் பெங்களூருவில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் வராததால் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

📕📘ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் தோளில் காயம் ஏற்பட்டதால் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

📕📘மதுரையில் விஜய் ரசிகர்கள் ஆலோசனை

SAC தொடங்கும் கட்சியில் ரசிகர்கள் யாரும் சேரக்கூடாது என உறுதிமொழி.

📕📘பண்டிகை காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு!

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை                                                                      

📕📘மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டிற்கு மிகவும் காலதாமதமாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது

சமூகநீதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசிடம் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமையைப் போராடிப் பெற வேண்டியுள்ளது 

மருத்துவ மேற்படிப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டையும் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் 

ஸ்டாலின்                                                                    

 📕📘தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் கொலை செய்யப்பட்டிருப்பதற்கு  கண்டனம்.

செய்தியாளர் கொலைக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் - 

திருமாவளவன்                                                       

 📕கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து 90% மக்களுக்கு அந்நோய் ஏற்படாமல் தடுக்கும் என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு இதுவரை 43,500 பேருக்கு தடப்பூசி சோதிக்கப்பட்டது எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                    

📕📘திருவள்ளூர் கிழக்கு - திருவள்ளூர் மத்திய - திருவள்ளூர்  மேற்கு  ஆகிய மாவட்டங்களில்

அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள்

மற்றும்

மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

திமுக தலைமைக் கழக அறிவிப்பு

📕📘📕📘📕📘📕📘📕📘

🌹🌹தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது குறித்து பெற்றோரிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்பில், சுமார் 60 சதவீத பெற்றோர் பள்ளிக்கூடங்களைத் திறக்கலாம் என்றே தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

👉தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் தற்போதுவரை திறக்கப்படவில்லை. ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களைத் திறக்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்தது.

👉இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பள்ளிக்கூடங்களைத் திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து நவம்பர் 9ஆம் தேதி பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தப்போவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

👉அதன்படி, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்த, கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், இதற்கென கொடுக்கப்பட்ட படிவங்கள் மூலம் கருத்துக்களைத் தெரிவித்தனர். இது தவிர, அரசு பள்ளிக்கூடங்களிலும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களிலும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் நிர்வாகிகளும் இணைந்து, தீர்மானம் நிறைவேற்றி அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்பித்துள்ளனர்.

👉முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்`

பள்ளிகள் திறக்கும் பட்சத்தில், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது, பொதுத் தேர்வுகளைத் தள்ளி வைப்பது, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை வெளியிடுவது குறித்தும் பெற்றோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

👉பருவ மழைக் காலம் துவங்கியிருப்பதால், பள்ளிகள் திறந்தால், தொற்று வேகமாக பரவும் என ஒருதரப்பினரும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, பள்ளிகளை திறக்கலாம் என மற்றொரு சாராரும், கருத்துகளை பதிவு செய்திருப்பதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

👉"கருத்து கேட்பு குறித்த விண்ணப்பத்தில், பள்ளிகள், திறக்கலாமா, வேண்டாமா என்ற கருத்துக்கு ஆம் அல்லது இல்லை என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன. பெற்றோர் அதில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும். சுமார் 60 சதவீத பெற்றோர் பள்ளிகளைத் திறக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால், முழு நேர வகுப்பாக அல்லாமல், சுழற்சி முறையில் பின்பற்றலாம் என்பது பலரது கருத்தாக உள்ளது. இதோடு, தீபாவளி பண்டிகைக்கு பின், தொற்று பரவும் தன்மையை ஆய்வு செய்த பிறகு, பள்ளிகளை திறக்கலாம் என பல ஆசிரியர்கள் கருதுகின்றனர்," என அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்க மாநில தலைவர் பீட்டர் ராஜா பிபிசியிடம் தெரிவித்தார்.

👉இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்

👉பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பினிடம் இது குறித்துக் கேட்டபோது, "மாவட்ட வாரியாக பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். இதன் அடிப்படையில் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி, பள்ளிகள் திறப்பது குறித்த இறுதி முடிவை முதல்வர்தான் அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.

👉பாடத்திட்டம் குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் சரியல்ல என்றும் கல்வித் துறை சார்பில் இது தொடர்பாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லையென்றும் அவர் கூறினார். பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகே குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்படுமென்றும் கண்ணப்பன் தெரிவித்தார்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...