கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 20.01.2021 (புதன்)...

 


🌹உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும்.

நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல நடத்தை இருக்கும்.

அதிக அன்பு இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்.!

🌹🌹தேவையில்லாதவர்களிடமும்,

தகுதியில்லாதவர்களிடமும் 

நாம் யார் என்பதை நிருபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்.!!

🌹🌹🌹கோவப்பட்டோம் என்பதை மட்டும் பல விதங்களில் ஆராய்ச்சி செய்கிறார்கள் 

ஆனால் எதற்காக கோவப்பட்டோம் என்பதை யாரும் சிறிதும் சிந்திப்பல்லை.!!!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘மாணவ-மாணவிகள் உற்சாக பேட்டி : "பள்ளிகளுக்கு மீண்டும் சென்றது சிறகடித்து பறப்பது போல உள்ளது"

📕📘NEET, JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது - மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு

📕📘அரசு பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் ஆய்வு

📕📘அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை வெளியீடு

📕📘TANCET நுழைவுத்தேர்வு 2021 – ஆன்லைன் பதிவு தொடங்கியது

📕📘35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்தல் - அரசாணை வெளியீடு

📕📘40 அரசு நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - அரசாணை வெளியீடு

📕📘பள்ளிக் கல்வி - பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மாணவர்கள் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் - இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 

📕📘“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

📕📘ஜனவரி 27 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு

📕📘IGNOU இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

📕📘மற்ற சுகாதார பணிகள் பாதிப்பதால் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தடுப்பூசி போட வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.

📕📘குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், அவர்களை டெல்லிக்குள் அனுமதிப்பது குறித்து டெல்லி போலீசார்தான் முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

📕📘பிளஸ் 1 வகுப்புகளைத் தொடங்குவது குறித்து அரசு பிறகு அறிவிக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் இல.நிர்மல்ராஜ் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்

📕📘இந்துக்களுக்கு குரல் கொடுப்பதில் கருணாநிதிக்கு அடுத்தபடி ஸ்டாலின்தான்

- திமுக எம்.பி. கனிமொழி

📕📘உலகளவில் வார இறுதி நாட்களில் அதிக வசூல் செய்த படங்களில் மாஸ்டர் திரைப்படம் முதலிடம்.

📕📘தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகள் தொடங்கியது.

பள்ளிச் சீருடையில் பெற்றோர் சம்மத கடிதத்துடன் வந்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

📕📘எலும்பியல் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட தங்களது தந்தை(கமலஹாசன்) நலமாக இருக்கிறார்

ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷ்ரா ஹாசன் அறிக்கை

📕📘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 ஆவது பிறந்த தினமாகிய வரும் ஜனவரி 23ஆம் தேதி, பராக்கிரம நாளாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

📕📘வரும் 22 ஆம் தேதி அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அனைத்து அமைச்சர்களும் 22 ஆம் தேதி தலைமை செயலகம் வர உத்தரவு

📕📘புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்தேன் - பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு முதல்வர் பேட்டி

📕📘ஆஸ்திரேலிய மண்ணில் வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ் பரிசு

- பிசிசிஐ அறிவிப்பு.

📕📘பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய அணிக்கு வாழ்த்துகள்! வீரர்கள் வருங்காலத்திலும் சாதனைகள் புரிய வாழ்த்துகள் -பிரதமர் மோடி

📕📘கொரோனா தடுப்பூசி போட்டாலும் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்; தமிழகத்தில் வாரத்தின் 7 நாட்களும் தடுப்பூசி போடப்படுகிறது - ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்

📕📘NIT-களில் சேருவதற்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் தேவையில்லை.

JEE Main தேர்வு மதிப்பெண்ணே கருத்தில் கொள்ளப்படும்.

12-ம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் கட்டாயம் என்ற விதியில் தளர்வு.

-மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு.

📕📘Engineering மாணவர்களுக்கு வரும் பிப்., 6 & 13-ம் தேதிகளில் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு.

பிப்., 6-ம் தேதி நடைபெற உள்ள தேர்வு 16-ம் தேதியிலும், 13-ம் தேதி நடைபெற உள்ள தேர்வு 17-ம் தேதியிலும் நடைபெறும்.

Gate தேர்வு காரணமாக தேதி மாற்றம்.

-அண்ணா பல்கலைக்கழகம்

📕📘ஜனவரி 27 காலை 10 மணி அளவில் விடுதலை செய்யப்படுகிறார் சசிகலா

அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கர்நாடக சிறைத்துறை

மின்னஞ்சல் மூலமாக சசிகலா தரப்பு வழக்கறிஞருக்கு தகவல் வழங்கியுள்ளது கர்நாடக சிறைத்துறை

📕📘உள்ளாட்சிதுறை ஊழலாட்சிதுறையாக மாறிவிட்டது, உள்ளாட்சி என்று கூற தனக்கு அவமானமாக உள்ளது,

 ஏன்‌ என்றால். நானும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்ததால்

விராலிமலை கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

📕📘ராகுலின் தமிழக பயணம்

👉23இல் மீண்டும் தமிழகம் வரும் ராகுல் காந்தி கோவையில் தொழில்துறையினருடன் சந்திப்பு, அவினாசியில் பேரணி, திருப்பூரில் பொதுக்கூட்டம்

👉24-ஊத்துகுளி, பெருந்துறை, சென்னிமலையில் பேரணி, தாராபுரத்தில் பொதுக்கூட்டம்

👉25-கரூரில் பேரணி, திண்டுக்கல்லில் பொதுக்கூட்டம்                                 

  📕📘ஜன. 29 முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்; மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செய்யப்படும்; நேரமில்லா நேரம், கேள்வி நேரம் நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன் அனைத்து எம்.பி.க்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். நாடாளுமன்ற உணவகங்களில் எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு வழங்குவது இனி நிறுத்தம். எம்.பி.க்கள் மட்டுமன்றி நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் இனி இலவசமாக உணவு வழங்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

📕📘பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை

அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை

தமிழக பணிகளை துவக்கி வைக்க பிரதமரை அழைத்தேன்

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட பிரதமரிடம் வலியுறுத்தினேன்

-எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர்                                                                                          

📕📘சென்னை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் வரும் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்க உள்ளது- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு.

📕📘இந்தியாவிற்குள் ஊடுருவி புதிய கிராமத்தை கட்டமைத்தது சீனா : மத்திய அரசு சீனாவிடம் தோல்வியை ஒப்புக் கொண்டதா?

ப.சிதம்பரம் கேள்வி

📕📘மேற்கு வங்கத்தை தொடர்ந்து அசாம் சட்டப்பேரவை தேர்தலிலும் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவிப்பு

📕📘வரும் 22ம்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

📕📘இந்தியா வரலாற்று சாதனை

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை

பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி புதிய சாதனை

 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; பிரிஸ்பன் வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது

📕📘சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார்

முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் பிரச்னையை தீர்க்க டில்லிக்கு செல்லவில்லை. 

வரும் 27 ம் தேதி சசிகலா வெளியே வரும் போது அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். 

இதனால், ஆட்சியை தக்க வைக்கவே முதல்வர் டில்லி சென்றுள்ளார். 

சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். 

தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்

மு.க.ஸ்டாலின்.

📕📘கொரோனா தடுப்பூசி போட்டு உயிரிழந்த இருவரின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை: தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் தகவல்.

📕📘அலர்ஜி, காய்ச்சல், இரத்தக்கசிவு போன்ற பாதிப்புடையவர்கள் தடுப்பூசி போடவேண்டாம் - பாரத் பயோடெக் நிறுவனம்.

📕📘விஜய் மல்லயாவை விரைவில் இந்தியா அழைத்து வர நடவடிக்கை; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் உறுதி.

📕📘2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 158 முதல் 166 இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும், அதிமுக கூட்டணிக்கு 60 முதல் 68 இடங்கள் கிடைக்கும் என ஏபிபி - சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.  

📕📘வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

📕📘தென் கொரிய அதிபருக்கு லஞ்சம் வழங்கிய விவகாரத்தில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் சாம்சங் சியான் லீக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

📕📘📕📘📕📘📕📘📕📘

🌹🌹10,12 ம் வகுப்புகளில் முதல் நாளில் 85 சதவீதத்திற்கு மேல் மாணவர்கள் வருகை

👉தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 85 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகைப் புரிந்துள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து, 2020-21 கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. இதற்கிடையில் கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் நவம்பரில். பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவிற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதனால் அரசு தனது முடிவை ஒத்திவைத்தது.

இதைத் தொடர்ந்து ஜனவரி 6,7ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்து பள்ளிகளிலும் பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பொதுத்தேர்வு எழுத உள்ள சுமார் 19 லட்சம் மாணவர்களுக்கு நேற்று முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 10 மற்றும்.12ம் வகுப்புகளில் 19,20,013 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் சம்மத்துடன் 85 சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...