கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 12.02.2021 (வெள்ளி)...

 


🌹நாம் அடுத்தவர்களுக்கு எதை கொடுக்கிறோமோ அதையே வட்டியும் முதலுமாக ஆண்டவன் நமக்கு தருகிறான்.                           அது அன்பானாலும் சரி,

துரோகமானாலும் சரி.!

🌹🌹யாராவது கோபத்தில் பேசும் போது கவனமாக கேளுங்கள்.

அந்த நேரம் தான் அவர்கள் உண்மையை சொல்லும் நேரமாகும்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒கொரோனாவால் குறைந்தபட்சம் ஒரு மொழித் திறனை இழந்த 92% மாணவர்கள்: ஆய்வில் தகவல்

🍒🍒6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இப்போது பள்ளிகள் திறக்கும் சூழல் இல்லை

அமைச்சர் செங்கோட்டையன்

🍒🍒அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மே முதல் ஈட்டிய விடுப்பு சம்பளம்  அதிகபட்சமாக 30 நாட்கள் முதல் அரசுக்கு ஒப்படைத்து ஊதியமாக பெற்றுக்கொள்ளலாம்.

🍒🍒10, 11 ஆம் வகுப்புகள் பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் பணிக்கான கால அவகாசம் நீட்டிப்பு

🍒🍒வருங்காலங்களில் சார்பு ஆய்வாளர் நியமனத்தில் தமிழ் வழி இடஒதுக்கீடு சலுகை பின்பற்றப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி

🍒🍒பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்திடுவீர் 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு

🍒🍒காபி பிரியர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவது குறைவு! - ஆய்வில் தகவல்.

🍒🍒CBSE மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அடுத்த கல்வி ஆண்டு தொடக்கம்

🍒🍒பள்ளிகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி: பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை

🍒🍒2020- 2021-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு | மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் மற்றும் TML கட்டணம் செலுத்துதல் – தொடர்பாக – அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி வெளியீடு – நாள்.11.02.2021

🍒🍒வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க ரயில்வே நிர்வாகம்  அனுமதி                                   🍒🍒மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வழிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

🍒🍒NMMS EXAM 2021 -தேர்வு கூட நுழைவு சீட்டினை 15-02-2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🍒🍒அரசாணை (நிலை) எண் 16 Dt: January 25, 2021 - நகர்ப்புற வளர்ச்சி - 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 28.02.2021 வரை கால நீட்டிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

🍒🍒NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று (2020-21ல் +2 பயிலும் மாணவர்கள்) இதுவரை இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள் விபரங்களை 15.02.2021க்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படாது - 6 முதல் 8ம் வகுப்பு வரை டேப் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

🍒🍒கடந்த 7 ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் தொகுப்பூதிய உதவிப் பேராசிரியர்களின் ஊதிய உயர்வைத் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், ஊதியத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் உறுப்புக் கல்லூரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது

🍒🍒வல்லுநர் குழுவின் அறிக்கையினை பரிசீலித்து அரசாணைகள் வெளியிடப்படும்: அரசு சார்பு செயலாளரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

🍒🍒கேரளாவில் தனியார் டியூசன் மையத்தில் படித்து வந்த 91 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

🍒🍒2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

🍒🍒இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த 143 ஆசிரியர்களின் பட்டியல் வெளியீடு

🍒🍒G.O -8- கலப்புத் திருமணம் (Inter Caste Marriage - ICM) செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் தாய் அல்லது தந்தை சாதியின் அடிப்படையில் சாதிச் சான்று வழங்கலாம் என்று தெளிவுரை வழங்கி அரசாணை வெளியீடு - நாள் : 09.02.2021.

🍒🍒சசிகலாவின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதைப் பொறுத்தே பாரதிய ஜனதா தமது நிலைப்பாட்டை கூற இயலும்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

🍒🍒போதையில் பதவி மாண்பை மறந்து மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனத்திற்கு டிடிவி தினகரன் பதிலடி.                                                🍒🍒நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து.

பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது.

தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.

டிடிவி தினகரன்

🍒🍒எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மற்றவர்கள் மீது எம்.பி., எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க கூடாது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதாக ஐகோர்ட் பதிவாளர் விளக்கம் அளித்தனர்

🍒🍒மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு எப்படி உதவப் போகிறது.

கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிப்பில்லை.

மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு.

🍒🍒கொரோனா நெருப்பு இன்னும் அணையாத நிலையில், விலை ஏற்றம் என்ற பெட்ரோலை ஊற்றி மக்களை வதைப்பதா? 

மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியதே அரசின் பொறுப்பு - 

திமுக தலைவர் ஸ்டாலின்.

🍒🍒பொதுத்துறை வங்கிகளிலுள்ள விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தம்பிதுரை எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி தம்பிதுரை கூறியுள்ளார்.

🍒🍒திண்டிவனத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

🍒🍒சசிகலாவை சந்திக்க சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ் மற்றும் தனியரசு நேரம் கேட்டுள்ளார்கள்.

🍒🍒கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் சீனா உட்பட 82 நாடுகளுக்கு 80 கோடி ரூபாய் மதிப்புள்ள மானிய உதவிகளை இந்தியா வழங்கியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தகவல்.

🍒🍒கீழடியில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை வரும் 13 ஆம் தேதி தொடக்கம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைப்பதாக தகவல்.

🍒🍒பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட/தொடங்கி வைக்க பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

🍒🍒காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலக்கப்பட்டுள்ளார்.

🍒🍒மாமல்லபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிக்கு 160 அடியில் மணல் சிற்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

🍒🍒இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க முயற்சிக்கும் பாஜக அரசை மக்கள் நீதி மய்யம் கண்டித்து பொதுக்குழுவில் தீர்மானம்.

🍒🍒தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் மார்ச் 2வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.

கொரோனா காலத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் தமிழகத்தில் 68,324 இருந்த வாக்கு சாவடிகள் எண்ணிக்கை தற்போது 93000 ஆக உயர்த்தபட்டு உள்ளது - சுனில் அரோரா

வாக்காளர்களுக்கு பணம் தருவதை தடுக்க கூடுதலாக பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்

- தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

கொரோனா காலம் என்பதால் வாக்களிக்கும் நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்.

🍒🍒விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன்களை ரத்து செய்ததற்கான ரசீது இன்னும் 10 நாட்களுக்குள் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

🍒🍒அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வர வாய்ப்பு இல்லை.

கடல் வத்தி மீன் தின்ன காத்திருந்த கொக்கு தொன்டை வத்தி செத்தது என்பதுபோல் தான் சசிகலாவின் நிலமை 

- ஜெயகுமார்

🍒🍒ஒபிஎஸ் மகன் ஜெயபிரதீப் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்

அவருக்கான சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது

🍒🍒உத்தராகண்ட் சமோலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக உயர்வு.

🍒🍒பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது: மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் திட்டவட்டம்.

🍒🍒2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட முடிவு ?

பொதுக்குழுவில் பேசிய கமல்ஹாசன் 

தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு இருங்கள் இல்லாதவர்கள் வெளியேறுங்கள்  

கதவு திறந்து தான் உள்ளது.

🌹🍒நாளை பிப்ரவரி 13ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது. 

இடைக்கால நிநி நிலை அறிக்கை தாக்கல் செய்வதும் அமைச்சரவையில் விவாதிக்கப்படுகிறது.

🍒🍒நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் அவரது மகன் துஷ்யந்த் மனைவி மற்றும் மருமகளுடன் பாஜக மாநில தலைவர்   

L.முருகன் மற்றும் தமிழக பொறுப்பாளர் C .T .ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்

🍒🍒முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார்.

🍒🍒வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில், அனைத்து நேரங்களிலும் மாணவர்கள் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி. மாணவர்களின் அடையாள அட்டை அவசியம்.

🍒🍒காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார் கராத்தே தியாகராஜன்.

🍒🍒தமிழக சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என்று சுனில் அரோரா கூறியுள்ளார்.

வரும் சட்டமன்ற தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதே ஆணையத்தில் இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எப்போதும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும்

இம்முறையும் அதிகரிக்கும் என நம்புகிறோம்

தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய படைகள் ஈடுபடுத்தப்படும்

வழக்கத்தை விட வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்.

 தமிழகத்தில் ஏற்கனவே 68,324 வாக்குச்சாவடிகள் உள்ளன

தற்போது 93,324ஆக உயர்த்தப்படுகின்றன

தமிழ் புத்தாண்டு, பள்ளித் தேர்வுகள், வெயில் ஆகியவற்றை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி முடிவு செய்யப்படும்

வரும் சட்டமன்ற தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதே ஆணையத்தின் இலக்கு

கொரோனா காலத்தில் கூட பல சவால்களை சமாளித்து பீகார் தேர்தலை நடத்தி முடித்தோம்

சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி.

🍒🍒பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்; ஒரு வாரம் தனிமையில் இருப்பார் என உறவினர்கள் தகவல்; வரும் 17ம் தேதி முதல் ஆதரவாளர்கள், நலம் விரும்பிகளை சந்திக்கிறார்.

🍒🍒அமெரிக்காவில் உள்ள மியான்மர் ராணுவத் தளபதிகளின்

சொத்துக்களை முடக்க ஜோபைடன் உத்தரவு - மக்களின் ஜனநாயக உணர்வுகளை மதிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

🍒🍒மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

🍒🍒தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜன் விடுவிப்பு. மார்ச் மாதம் நடைபெறும்  இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...