கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கக்கோரி வழக்கு -மார்ச் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

 தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களை அவர்கள் பணியமர்த்தப்படும் தொகுதியிலேயே வாக்களிக்க தனி வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதாக கூறி, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், சம்பந்தப்பட்ட தொகுதியில் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குச்சாவடிகளை அமைக்ககோரி தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அந்த மனுவில், சொந்த தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணி சான்றிதழ் சமர்ப்பித்து வாக்களிக்கவும், பிற தொகுதி அல்லது பிற மாவட்டங்களில் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.


தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு கடைசி கட்ட பயிற்சியின்போது வழங்கப்படுகிறது எனவும், அந்த வாக்குச் சீட்டில் அதிகாரிகளின் அத்தாட்சியை பெற வேண்டியுள்ளதாகவும், அத்தாட்சி பெற்றாலும் பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.


தபால் வாக்குகள் செலுத்தினாலும், சில நேரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தான், அந்த வாக்குச்சீட்டுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை சென்றடைவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 ஊழியர்களில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 697 பேர் தபால் மூலம் வாக்களித்தனர் என்றும், இதில் 37 ஆயிரத்து 712 பேர் வாக்குகளை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட தாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


வாக்குகளை செலுத்திய 3 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேரில், 24 ஆயிரத்து 912 பேருடைய வாக்குச்சீட்டுகள் அதிகாரிகளின் அத்தாட்சி இல்லாததால் நிராகரிக்கப்பட்டதன் மூலம் மொத்தமாக 62 ஆயிரத்து 624 பேர் வாக்குகள் வீணாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.


தற்போது தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கொரோனா தொற்று காரணமாக இந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 90,000 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக தேர்தல் பணிக்கு 6 லட்சம் பேர் அமர்த்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதன் அடிப்படையில் இவ்வாறு தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களை அவர்கள் பணியமர்த்தப்படும் தொகுதியிலேயே வாக்களிக்க தனி வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.21.2 - Updated on 07-04-2025

   Kalanjiyam App Update செய்த பிறகு New / Old Regime தேர்வு செய்ய முடிகிறது  KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.21.2 *  IFHRMS   Kalanjiya...