கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10 & 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் அலகுத்தேர்வு அறிவிப்பு - Time Table & Syllabus JULY-2021- CEO Proceedings...



 10 & 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் அலகுத்தேர்வு அறிவிப்பு - Time Table & Syllabus JULY-2021...

- CEO Proceedings...


இராணிப்பேட்டை மாவட்டம் 

2021-2022 

இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் 

ந.க.எண்: 540, நாள்:  -07- 2021


இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி முதலாம் அலகுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு அலகுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கால அட்டவணைப்படி முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். 


ஜூன் , ஜூலை மாதத்திற்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்பட்டுள்ளன. அவ்விரு மாதங்களுக்கான பாடத்திட்டத்தை சுருக்கமாக மீள ஒருமுறை மாணவர்களுக்கு நடத்திட சார்ந்த பாட ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


ஆசிரியர்கள் அலகுத் தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் பட்டியல் தயார் செய்து உரிய பதிவேட்டில் பதிந்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்கிறார்கள். அனைத்து அரசு / அரசு நிதி உதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாதாந்திர அலகுத் தேர்வு நடைபெற இருப்பதால் அனைத்து வகை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் சுற்றல் கற்பித்தல் திறனை ஊக்கப் படுத்த கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.


>>> Click here to Download CEO Proceedings, Unit Test Time Table & Syllabus JULY-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Last working day of AY 2024-2025, DEE Proceedings

   2024-2025ஆம் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 15-04-2025 Last working day of the aca...