கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16-02-2024...

 

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 426:


எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வ துறைவ தறிவு.


விளக்கம்:


உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.



பழமொழி : 


Necessity knows no low. All is fair in love and war.


ஆபத்துக்கு பாவம் இல்லை.



பொன்மொழி:


  I am the captain of my soul. I am the master of my fate.


 என் ஆன்மாவுக்கு நானே தலைவன். என் தலைவிதியையும் நானே எழுதுகிறேன்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 பொருளின் கட்டுமான அலகு - அணு

வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு

கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி

ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்

பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்

நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Deliver - வழங்குதல்

Demand - தேவை

Demolish - இடித்தல்

Depart - புறப்படுதல்

Descend - இறங்குதல்

Desert - பாலைவனம்


ஆரோக்கியம்


தக்காளி, கீரை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகுமா?


தக்காளி, கீரை வகைகளைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருக்குச் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாது. இது தேவையற்ற பயம். ஆனால், ஏற்கெனவே சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நலம். காரணம், இந்த இரண்டிலும் சிறுநீரகக் கல்லை உருவாக்கக்கூடிய ஆக்சலேட்டுகள் அதிகம்.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 16


1978 – முதலாவது கணினி அறிக்கைப் பலகை சிகாகோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

1944 – தாதாசாகெப் பால்கே, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1870)




சிறப்பு நாட்கள்


விடுதலை நாள் (லித்துவேனியா, 1918)



நீதிக்கதை


தேனும் கசந்தது 


உணவைத் தேடி ஒரு கரடி காட்டில் அலைந்து கொண்டிருந்தது. அந்த பரிதாபமான கரடி நல்ல உணவை சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டன. அதற்கு பிடித்தமான வேர்கள், கொத்துக்கொத்தான பழங்கள், தேன் முதலியவற்றை நினைத்தாலே அதற்கு நாக்கில் நீர் ஊறிற்று. அது ஓர் அடர்த்தியான காடு; பல மயில்கள் பரவி இருந்தது. தன் பசியை போக்க கூடிய உணவு எப்போது கிடைக்கும் என்று எண்ணியவாறு கரடி காடு முழுவதும் அலைந்து திரிந்தது.


சற்றுத் தொலைவில் மரக்கிளையில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று திடீரென்று அதன் கண்களுக்கு தென்பட்டது. அந்த மரத்தை நோக்கி கரடி சென்றது. அருகில் நெருங்கியது; தேன்கூடு ஒன்று கிளையில் இருந்து தொங்குவதை கண்டதும் அதற்கு வியப்பு தாங்கவில்லை. நம்ப முடியாமல் தன் கண்களை தேய்த்துக் கொண்டது.


மரக்கிளையிலிருந்து தொங்கிக் கொண்டிருப்பது தேன்கூடா? ஆம், தேன் கூடுதான். தன் அதிர்ஷ்டத்தை கரடியால் நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியால் துள்ளி குதித்தது. தேன்கூட்டுக்குள் தேனீக்கள் இருக்கின்றனவா என்று உற்று நோக்கியது. அங்கு தேனீக்கள் இல்லை மிக உற்சாகத்தோடு சுவையான தேனைத் தேன் கூட்டில் இருந்து எடுக்க தன் காலை தூக்கியது.


அந்த நேரத்தில் சத்தமாக ரீங்காரமிட்டவாறு ஒரு பெரிய தேனீ கூட்டம் தன்னை நோக்கி வருவதை கண்டு கரடி துணுக்குற்றது. அந்தக் கூட்டை சேர்ந்த தேனீக்கள் அவை. தேனீக்கள் நாள் முழுவதும் கடுமையாக உழைத்து சேகரித்து தேனை கூட்டில் வைப்பதற்காக வந்து கொண்டிருந்தன. கூட்டை  நெருங்கும் போது அங்கிருந்த கரடியை பார்த்தன. அவை சேகரித்த விலைமதிப்பற்ற தேனை கரடி அபகரிக்க வருவதைக் கண்ட தேனீக்கள் கரடியை சூழ்ந்து கொண்டு கோபத்துடன் அதை கொட்ட ஆரம்பித்தன.



தேனீக்கள் கொட்டியதால் கரடிக்கு மிகவும் வலித்தது. வலி தாங்காத கரடிக்கு அதிகமாக ஆத்திரம்  ஏற்பட்டது. “எனக்கு கிடைக்காத தேன், தேனீக்களுக்கும் கிடைக்கக்கூடாது” என்று கரடி எண்ணியது. மேலே எழும்பி குதித்து கூட்டை கைப்பற்ற எண்ணியது. கைப்பற்றியவுடன் கூட்டை கீழே போட்டு உடைத்து அதை அழிக்க வேண்டும் என்று வெறி அதற்கு ஏற்பட்டது.


ஆனால், புத்தியுள்ள தேனீக்களுக்கு கரடி என்ன செய்ய முயல்கிறது என்பது தெரிந்தது. ரீங்காரம் செய்தவாரே அவை கரடியை சுற்றி சுற்றி வந்து வலிமையெல்லாம் ஒன்று சேர்த்து கொடுக்குகளால் கொட்டின. மறுமுறையும் தேனீக்கள் தாக்கியவுடன் கரடி திகைத்துப் போனது. தேன் கூட்டை பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டது. அவை இன்னமும் அதிகமாக தாக்குவதற்குள் அங்கிருந்து தப்பித்துக் கொள்ள தீர்மானித்தது.


கரடி மிக வேகமாக ஓடியது. ஆனால், அதன் உடலில் பல இடங்களிலும் கொட்டியவாறு தேனீக்கள் கரடியை பின் தொடர்ந்தன. தங்களுடைய தேனை பேராசை பிடித்த அந்த கரடி மறுபடியும் திருடாமல் இருக்க தேனீக்கள் அதற்கு ஒரு பாடம் புகட்ட விரும்பின.


அந்த அளவு தேனை சேகரிக்க தேனீக்கள் அரும்பாடு பட்டுள்ளன. தங்களுடைய கடுமையான உழைப்பின் பலனை கரடி அனுபவிக்க எண்ணியதை தேனீக்கள் விரும்பவில்லை. தேனீக்களுக்கு கரடி மீது கடும் கோபம் ஏற்பட்டது. அதற்கு தண்டனை அளிக்க தீர்மானித்தன.



தேனீக்களிடம் பயந்து போன அந்த கரடிக்கு எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. காட்டுக்கு நடுவில் வேகமாக ஓடி ஆற்றுக்கு அருகில் கரடி வந்து சேர்ந்தது. ஓடி வந்த கரடி குளிர்ந்த நீருக்குள் குதித்தது. தேனீக்கள் கொட்டியதால் ஏற்பட்ட எரிச்சலை குளிர்ந்த நீர் தணித்தது. நீருக்குள் கரடி நீண்ட நேரம் தன்னை முழுவதுமாக அமிழ்த்திக் கொண்டது. பொறுமை இழந்து தேனீகள் தம் கூட்டை நோக்கி திரும்பும் வரையில் தண்ணீருக்கடியிலேயே கரடி காத்திருந்தது.


உடலில் பட்ட காயத்தால் வருந்திய கரடி தண்ணீரை விட்டு வெளியேறி தன் இடத்திற்கு சென்றது. இனிமேல் தேன் கூட்டு பக்கம் போவதில்லை என்று தீர்மானித்தது. இனிப்பான தேனை நினைத்தாலே கசப்பான இந்த அனுபவம் தான் அதன் நினைவுக்கு வரும்.


 நீதி : ஆசை, வெறியினால் அழிவு உறுதி.




இன்றைய முக்கிய செய்திகள் 


16-02-2024 


தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து: நிதி தந்தவர்கள், பெற்ற கட்சிகள் விவரம் மார்ச் 13க்குள் இணையதளத்தில் வெளியிட கெடு; உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் பெஞ்ச் அதிரடி தீர்ப்பு...


மக்களவை, 4 சட்டசபை தேர்தல் பாதுகாப்புக்கு 3.4 லட்சம் சிஏபிஎப் வீரர்கள் தேவை: ஒன்றிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்...


“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள், 1,598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் : முதல்வர் இன்று வழங்குகிறார்...


வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத் துறை அறிவிப்பு...


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.. பிப்ரவரி மாதத்திற்கான.ரூ.1000 உதவித்தொகை வங்கி கணக்குகளில் டெபாசிட் ஆனது...


விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய பந்த் போராட்டம்: டெல்லி எல்லையில் நீடிக்கும் பதற்றம்...


தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெண் தொடர்ந்த வழக்கு; தாய்க்கு மகன் பணம் செலவழிப்பது குடும்ப வன்முறை ஆகாது: விவாகரத்து வழக்கில் மனைவியின் மனு தள்ளுபடி...


பணியில் இருக்கும் பொழுது விபத்தில் இறந்த போக்குவரத்து ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி...



Today's Headlines:

16-02-2024


Abolition of Election Bond Scheme: Details of donors, receiving parties to be published on website by March 13; Supreme Court's 5-judge bench verdict... 


3.4 lakh CRPF personnel needed for Lok Sabha, 4 Assembly election security: Election Commission letter to Union Govt... 


Welfare assistance under the “People with the Chief Minister” scheme, government job appointment orders for 1,598 youths: Chief Minister today gives...


750 special buses to be run on weekend holidays: Transport Department announces... 


Kalaignar Women Empowerment Scheme for the month of February Rs.1000 scholarship deposited in bank accounts... 


Nationwide bandh strike on behalf of farmers' unions today: Tension continues at Delhi border...


A case filed by a woman working in the Secretariat; Spending money by son on mother is not domestic violence: Wife's plea dismissed in divorce case...


 Rs 25 lakh financial assistance to the family of a traffic inspector who died in an accident while on duty...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...