பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-03-2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
இனியவைகூறல்
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.
குறள் 94:
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
விளக்கம் :
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.
பழமொழி :
A hungry man is an angry man
பசி வந்திட பத்தும் பறந்து போகும்
பொன்மொழி:
ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ?
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்?
விடை: கோலா
எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?
விடை: ஆறு கால்கள்
அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?
விடை: தாய்லாந்து
முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?
விடை: நார்வே
இந்தியாவின் தேசிய வாக்கியம் எது?
விடை: சத்யமேவ் ஜெயதே
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Loan - கடன்
Lock - பூட்டு
Loose - தளர்வு
Lose - இழப்பு
Louse - பேன்
Love - அன்பு
ஆரோக்கியம்
ஆரோக்கியமான தூக்கம்
காலையில் உங்களால் நினைத்த நேரத்துக்கு எழுந்துகொள்ள முடியாமல் தொடர்ச்சியாகச் சிரமப்பட்டால் உங்களுக்குக் கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையின் முன்னுரிமையாகத் தூக்கத்தை மாற்றுங்கள். தூங்குவதற்கான நேரத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். அன்றாடம் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்துகொள்வது ஆரோக்கியமானது. உங்கள் படுக்கையறையை அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் இதில் அடக்கம்.
இன்றைய சிறப்புகள்
மார்ச் 27
1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1970 – கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.
பிறந்த நாள்
1973 – லாரி பேஜ், கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கர்
நினைவு நாள்
-
சிறப்பு நாட்கள்
உலக நாடக அரங்க நாள்
நீதிக்கதை
அறிவற்ற சிங்கம்
ஒரு காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. அது வயதான கிழச்சிங்கம். இப்போதெல்லாம் அந்தச் சிங்கத்தால் வேகமாக ஓட முடிவதில்லை. நாள்கள் செல்லச் செல்ல ஓடியாடி வேட்டையாடுவது கடினமான செயலாயிற்று.
ஒரு நாள் இரைதேடி காட்டில் இங்கு மங்கும் சுற்றி அலைந்து கொண்டிருந்த சிங்கம் ஒரு குகையைக் கண்டது. ஏதாவது விலங்கு இங்குத் தங்கியிருக்கக் கூடும், என்று எண்ணியவாறு, மெதுவாக அதனுள் நுழைந்தது.
உள்ளே ஒரு பிராணியும் இல்லை. நான் உள்ளே ஒளிந்து கொண்டு விலங்கு வருவதற்காகக் காத்திருப்பேன் என்று நினைத்தது. அந்தக் குகை ஒரு நரியின் இருப்பிடம். ஒவ்வொரு நாளும் நரி உணவு தேட வெளியே சென்று மாலையில் குகைக்கு வந்து இளைப்பாறும்.
அன்று மாலை உணவு உண்டப் பிறகு தான் வசிக்கும் இடம் நோக்கி நரி செல்ல ஆரம்பித்தது. அருகில் வந்த போது சூழ்நிலையில் ஏதோ மாற்றம் இருப்பதைக் கண்டது. அங்கு எல்லாமே அமைதியாக இருந்தது.
“ஏதோ தவறு நடந்திருக்கிறது. ஏன் எல்லாப் பறவைகளும், பூச்சிகளும் சிறிது கூட ஓசை எழுப்பாமல் அமைதியாக இருக்கின்றன ?” என்று தனக்குள் கேட்டுக்கொண்டது நரி.
மிகுந்த கவனத்தோடு மெதுவாகக் குகையை நெருங்கியது. ஆபத்துக்கான அடையாளம் ஏதேனும் இருக்கிறதா என்று அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தது.
குகையின் வாயிலை நெருங்கிய போது ஆபத்து காத்திருப்பதை அதன் உள்ளுணர்வு எச்சரித்தது. “எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திய பிறகே நான் உள்ளே நுழைய வேண்டும்” என்று கூறியவாறே, நரி யோசித்து ஒரு திட்டம் தீட்டியது.
“அதன்படி, அந்தப் புத்திசாலி நரி தன் குகையைக் கூப்பிட்டது !என் அருமை நண்பனான குகையே ! இன்றைக்கு உனக்கு என்ன நேர்ந்தது ? ஏன் மிகவும் அமைதியாக இருக்கிறாய் ?” என்று கேட்டது நரி.
நரியின் குரல் குகையின் உள்ளே எதிரொலித்தது. பசியை இதற்கு மேலும் தாங்க முடியாத சிங்கம் தனக்குள், நான் உள்ளே இருப்பதால்தான் இந்தக் குகை அமைதியாக இருக்கிறது. நான் உள்ளே இருப்பதை நரி தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் ஏதாவது செய்தாக வேண்டுமே, என்று எண்ணியது.
மறுபடியும் நரி தொடர்ந்து பேசியது. “குகையே ! நம்முடைய உடன்படிக்கையை நீ மறந்து விட்டாயா ? நான் வீடு திரும்பும் போது நீ என்னை வரவேற்க வேண்டுமே ? ” என்று சாமர்த்தியமாக ஒரு கேள்வியை எழுப்பியது நரி.
“நண்பனே உள்ளே வா” என்று தன் குரலை மிகவும் தாழ்த்திக் கொண்டு குகையின் உள்ளிருந்து சிங்கம் கூப்பிட்டது.
வெளியே சிங்கத்தின் குரலைக் கேட்டதும் பறவைகள் கத்தியவாறு அங்கிருந்து பறந்து சென்றன. நரியின் உடல் அச்சத்தால் நடுங்கியது. பசியால் துடித்த சிங்கம் தன் மீது பாய்ந்து கொன்று தின்பதற்கு முன்னால் தன் உயிரைக் காப்பற்றிக் கொள்ள நரி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
குகைக்குள் நரி நுழையும் என்று சிங்கம் காத்திருந்தது. நீண்ட நேரம் கழிந்த பின்னரும் நரி வரவேயில்லை. தான் முட்டாளாக்கப்பட்டதைப் பிறகு சிங்கம் உணர்ந்து கொண்டது. தன்னுடைய முட்டாள்தனத்தால் இரையைத் தப்பிக்க விட்டதை அறிந்து சிங்கம் தன்னையே நொந்து கொண்டது.
நீதி : புத்தி இல்லாதவனுக்கு எல்லாமே சிக்கல்தான்.
இன்றைய முக்கிய செய்திகள்
27-03-2024
இந்தியாவிலேயே இளம் வாக்காளர்கள் கேரளாவில்தான் அதிகம்...
புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு...
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து..
மாவட்ட பதிவாளருக்கு போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டதிருத்தத்தை நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறப்பு...
சங்கரன்கோவிலில் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த ஓட்டுநர் முருகன் மனைவிக்கு அங்கன்வாடி பணி வழங்க உத்தரவு...
வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு...
ஜவ்வாது மலை பகுதியில் பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள்...
Today's Headlines:
27-03-2024
Kerala has the highest number of young voters in India.
Special buses run for Good Friday, weekend: Transport department announcement...
In the state of Maryland, USA, the Baltimore bridge collapsed after a cargo ship collided with a terrible accident.
High Court directs TamilNadu government to stay amendment to empower district registrar to cancel fake deed registrations...
200 cubic feet per second water release from Mettur dam for drinking water requirement...
Order to provide Anganwadi work to wife of driver Murugan who died in police attack at Sankarankoil...
Leave with pay should be given on polling day: Chief Electoral Officer Satya Pratha Sahu...
Traces of Paleolithic humans living in Javvad Hill region...