பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-03-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: பண்புடைமை
பொருள்: முறையுடன் நன்மையை உலகத்திற்கும், தனக்கும் கருதுவாருடைய குணத்தை உலகம் போற்றும்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.வெயில் அதிகரிப்பதால் தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பேன்.
2.கடைகளில் விற்கும் ரசாயனம் கலந்த குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து நீர்மோர், எலுமிச்சை சாறு குடிப்பேன்.
பொன்மொழி :
விதைத்துக் கொண்டே இரு , முளைத்தால் மரம்.... இல்லையேல் உரம்.... - சே.குவேரா
பொது அறிவு :
1. கசப்புகளின் அரசன் என்று அழைக்கப்படுவது எது?
விடை: நிலவேம்பு.
2. நதிகள் இல்லாத நாடு எது?
விடை :சவுதி அரேபியா
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
இல்லத்தில் எவ்வாறு நீரை சேமிக்கலாம் என்று பார்ப்போம். சமையலறையிலோ, குளியலறையிலோ தண்ணீர்க் குழாயிலிருந்து நீர் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மார்ச் 21
பன்னாட்டு வன நாள் (International Day of Forests)
பன்னாட்டு வன நாள் (International Day of Forests) எனப்படும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012, நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.
உலகக் கவிதை நாள் (World Poetry Day)
உலகக் கவிதை நாள் (World Poetry Day) என்பது ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது, உலகம் முழுவதும் கவிதை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் மற்றும் போதனை செய்யவும், ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ எனும் ஐக்கிய பண்பாட்டு நிறுவனத்தால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day)
உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது 'கூத்து' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.
இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination)
இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் (International Day for the Elimination of Racial Discrimination) ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில் தென்னாப்பிரிக்காவின் ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த, இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.
எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.
நீதி : தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
இன்றைய செய்திகள்
21.03.2025
* 100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் இல்லாத 375 ஊராட்சிகள் சேர்ப்பு: பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்.
* ஆன்லைன் பட்டா விண்ணப்பங்களை மனுதாரரிடம் விசாரிக்காமல் நிராகரிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.
* வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
* மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
* சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ரஜாவத் வெற்றி.
Today's Headlines
* Municipal Administration Minister K.N. Nehru informed the Assembly that 375 non-agricultural village panchayats have been included in the 100-day employment scheme.
* The High Court has ordered that online Patta applications should not be rejected without inquiring with the applicant.
* Swiss Open Badminton Tournament: India's Rajawat won today's match.
Covai women ICT_போதிமரம்