கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முகக்கவசம் அணிவது அவசியம் - தமிழ்நாடு சுகாதாரத்துறை


முகக்கவசம் அணிவது அவசியம் - தமிழ்நாடு சுகாதாரத்துறை


நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.



பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


கொரோனா தொற்று பரவி வருவதால், மாவட்ட சுகாதார அதிகாரிகள், தினமும் பாதிக்கப்படுவோர் குறித்த தரவுகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்.


நோய் பரவலை தடுப்பது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.


கைகளை சுத்தமாக கழுவுதல், நெரிசல் மிக்க இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், இருமும்போதும், தும்மும்போதும், வாய், மூக்கு பகுதிகளை முழுமையாக மூடிக் கொள்ளுதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2025 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀🌀...