கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடைநிலை ஆசிரியர்களுக்கு புகுநிலைப் பயிற்சி : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு

 இடைநிலை ஆசிரியர்களுக்கு புகுநிலைப் பயிற்சி : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


Induction training for Secondary Grade Teachers: Minister Anbil Mahesh's post


மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புகுநிலைப் பயிற்சியை ஈரோட்டில் இன்று தொடங்கி வைத்தோம். ஈரோடு மாவட்டத்தில் பணி நியமனம் பெற்றுள்ள 103 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் உரையாற்றி, "செயலாய்வு பகுப்பாய்வு" புத்தகத்தையும் வெளியிட்டோம்.


2023-2024ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்த, "புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் பணி ஏற்கும்முன் பணித்திறன் மற்றும் நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படும்" என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் 20 கல்வி மாவட்டங்களில் மொத்தம் 2,535 இடைநிலை ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-08-2025

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-08-2025 : School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்