கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Anbil Mahesh Poyyamozhi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Anbil Mahesh Poyyamozhi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 முதல் 3ஆம் வகுப்புகள் - வரைவு பாடத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் அவர்களின் பதிவு

 1 முதல் 3ஆம் வகுப்புகள் - வரைவு பாடத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு 


தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை - 2025  (பள்ளிக்கல்வி) அடிப்படையில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள வரைவு பாடத்திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது. பாடத்திட்ட வல்லுநர் குழுவினருடன் கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினோம்.


Tamilnadu_School_Education_Department







ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களின் "கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார் முதலமைச்சர்

 





ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களின் "கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார் முதலமைச்சர் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு 


ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில்  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நடைபெற்ற நன்றி அறிவிப்பு மாநாடு 


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, ”தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்தியதற்காகவும், பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதிய உயர்வு மற்றும் குடும்ப ஓய்வூதியம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டதற்காகவும் மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு  ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு இன்று நடைபெற்றது.


சென்னை நந்தனத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்புரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் "உங்களின் கோரிக்கைகள், கனவுகள், எதிர்பார்ப்புகளை நாங்கள் 'திராவிட மாடல் 2.O' ஆட்சியிலும் நிச்சயம் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று உறுதியளித்தார்கள். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு இந்த நிகழ்வில் கலந்து கொண்டோம்.


#Dravidian_Model

#வெல்வோம்_ஒன்றாக




முனைவர் பட்டம் பெற்றதை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்



முனைவர் பட்டம் பெற்றதை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்


PHYSICAL ACTIVITIES FOR SKILL DEVELOPMENT AMONG SCHOOL CHILDREN USING MACHINE LEARNING TECHNOLOGY என்ற தலைப்பில் ஆய்வினை நிறைவு செய்ததற்காக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்ட "முனைவர்" பட்ட சான்றிதழை என்னுடைய வாழ்வியலின் வழிகாட்டி - அரசியல் ஆசான் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் காண்பித்து, வாழ்த்துப் பெற்றுக்கொண்டேன்.



ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி - அமைச்சர் அவர்களின் பதிவு



ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் நலன்காக்கும் அரசாகச் செயல்படும் #திராவிடமாடல் அரசின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரசாணையாக,



பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும்,


பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது.


இதன் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நம் முதலமைச்சர் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், இது சமூகநீதி காக்கும் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.


ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி!


ஓய்வூதியத் திட்டம் & இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக - சற்றுமுன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டி

 

Regarding the Pension scheme & Secondary Grade Teachers' salary discrepancy - Interview with Minister Anbil Mahesh Poyyamoshi a while ago


நாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடுகிறார்கள் - ஓய்வூதியத் திட்டம் & இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக - சற்றுமுன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பேட்டி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 






>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...



boAt Stone 352 Pro/Stone 358 Pro w/ 14W Signature Sound, Up to 12 Hours Playback, RGB LEDs, TWS Feature, Built-in Mic, BTv5.3, Free Music Streaming on JioSaavn Bluetooth Speaker (Groovy Grey)


https://amzn.to/44SiutC



ஆட்சியின் வெற்றிக்கு நீ ஒரு ஆள் போதும்டா - இரண்டாம் வகுப்பு குழந்தையின் பேச்சுத் திறமையைப் பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 


ஆட்சியின் வெற்றிக்கு நீ ஒரு ஆள் போதும்டா - இரண்டாம் வகுப்பு குழந்தையின் பேச்சுத் திறமையைப் பாராட்டிய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் 



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




SLAS அறிக்கை : 38வது ஆய்வுக்கூட்டம் தென்காசியில் நடைபெற்றது தொடர்பான அமைச்சர் அவர்களின் பதிவு

 


SLAS அறிக்கை : 38வது ஆய்வுக்கூட்டம் தென்காசியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உடனான கலந்தாய்வுக் கூட்டம், ஜூன் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் எனது தலைமையில் நடைபெற்றது. அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களோடு ஆலோசித்தோம். அதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களைச் சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம். 


அதன்படி, முதல் ஆய்வுக்கூட்டம் ஜூன் 25ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் தொடங்கியது. பிற அலுவல்களுக்கு இடையிலும், தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வுக் கூட்டங்களை நடத்திய நிலையில், 38வது மாவட்ட ஆய்வுக் கூட்டம் தென்காசியில் இன்று நடைபெற்றது. 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 700 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். SLAS தரவுகளை முன்வைத்தும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினோம்.


SLAS அறிக்கை : 37வது ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது தொடர்பான அமைச்சர் அவர்களின் பதிவு



SLAS அறிக்கை : 37வது ஆய்வுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 37வது மாவட்டமாக தேனியில் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நிறைவுற்றது.


மாணவச் செல்வங்களின் கற்றல் அடைவு குறித்து SLAS அடிப்படையில் கலந்துரையாடி, தேவையான முன்னேற்றங்கள் பற்றி ஆலோசித்தோம்.


அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் முடிந்த பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அளித்த பேட்டி


 கீழக்கரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில்  நடைபெற்ற அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் முடிந்த பின் அவர் அளித்த பேட்டி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




எல்லா ஆசிரியர்களுக்கும் சொல்லிக்கொள்வது ஒன்னே ஒன்னு தான் TET சார்ந்து ஆசிரியர்கள் யாரும் பயப்பட வேண்டாம். அதை நாங்க பாத்துக்குறோம். ஆசிரியர் தகுதித் தேர்வால் ஒரு ஆசிரியர் கூட பாதிக்கப்பட மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள எங்கள் பிள்ளைகளை ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வதைப்போல ஆசிரியர்களைப் பாதுகாப்பது தமிழ்நாடு அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும்.


மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 

👆




கோளரங்க வளாகத்தில் "வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம்" திறப்பு

 கோளரங்க வளாகத்தில் "வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம்"  திறப்பு


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு


தமிழ்நாடு உயர்கல்வித்துறை சார்பில் திருச்சியில் உள்ள அண்ணா அறிவியல் மையம் - கோளரங்க வளாகத்தில் "வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம்" அமைக்கப்பட்டுள்ளது. அதனை நேரில் பார்வையிட்டோம்



SLAS அறிக்கை : 34வது ஆய்வுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

SLAS அறிக்கை : 34வது ஆய்வுக்கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


SLAS2025 அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனான ஆய்வுக்கூட்டம், 34வது மாவட்டமாக சிவகங்கையில் இன்று நடைபெற்றது. இதில் 3 கல்வி ஒன்றியங்களில் இருந்து 340 தலைமையாசிரியர்கள் பங்கேற்றார்கள். 


மாணவச் செல்வங்களை கற்றல் அடைவுகளை எட்டச் செய்வது, ஒவ்வொரு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினோம்.


@tnschoolsedu




SLAS அறிக்கை : 35வது ஆய்வுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

 

SLAS அறிக்கை : 35வது ஆய்வுக்கூட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 கல்வி ஒன்றியங்களைச் சேர்ந்த 800 பள்ளித் தலைமையாசிரியர்களுடன் சந்திப்பு.


SLAS2025 ஆய்வறிக்கை அடிப்படையிலான 35வது மாவட்ட ஆய்வுக் கூட்டமாக அமைந்தது.




TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு & Press Release

 

TET Judgement: TN Govt has Decided to file Review Petition in Supreme Court 


TET உச்சநீதிமன்றத் தீர்ப்பு : தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு & Press Release


ஆசிரியர் தகுதித் தேர்வு - உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - சீராய்வு மனு தாக்கல் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு - Google Translate தமிழாக்கம்


TET தேர்வு


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin  அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.



>>> செய்தி வெளியீடு (ஆங்கிலத்தில்) - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> TET தேர்வு சீராய்வு மனு தாக்கல் செய்தி வெளியீடு தமிழாக்கம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Press Release

Government of Tamil Nadu - School Education Department

Chennai, [11/09/2025]

The Government of Tamil Nadu has decided to file a Review Petition before the Hon'ble Supreme Court of India against the judgment delivered on 01 September 2025 in Anjuman Ishaat-e-Talim Trust vs State of Maharashtra &Others.

In this judgment, the Hon'ble Court directed that all in-service teachers who do not possess the Teacher Eligibility Test (TET) qualification must acquire it within two years. If they fail to do so, they would face compulsory retirement with terminal benefits. Teachers with less than five years of service remaining have been allowed to continue till retirement, but without eligibility for promotion.

While the Government of Tamil Nadu fully supports the principle that teacher quality must be continuously improved and that TET should remain a compulsory requirement for future appointments, the retrospective application of this requirement to teachers who were already in service has created grave concern. Thousands of teachers were recruited in full compliance with the laws,rules, and procedures in force at the time of their appointment. To now impose a new qualification on them decades later, and compulsorily retire them, if they do not qualify is neither fair nor sustainable.

If implemented in its present form, the ruling will cause mass compulsory retirements, leaving schools across Tamil Nadu with crippling teacher shortages. It will be practically impossible to recruit or train an equivalent number of TET-qualified teachers in the short timeframe provided. Such a situation will inevitably affect the education of lakhs of students, disrupt classroom teaching, and create instability in the school system.

The Review Petition is being filed on the following key grounds:

. The Right of Children to Free and Compulsory Education Act, 2009(RTE Act) under Section 23 regulates minimum qualifications only for new appointments. It does not authorise compulsory retirement of teachers already in service.

The NCTE Notification dated 23 August 2010 - which first introduced TET - clearly stated that its provisions would not apply to teachers already appointed prior to that date.

Retrospective application of TET unsettles vested rights of lawfully appointed teachers, causes disproportionate hardship, and threatens the stability of the education system.

The Government of Tamil Nadu is committed to ensuring both quality in education and justice for teachers. The Review Petition seeks to strike this balance - by protecting the livelihoods and service rights of in-service teachers, while maintaining strict compliance with TET for all future appointments.

The Hon'ble Supreme Court will now be approached to reconsider its judgment, and the Government will strongly present the case that this issue involves not only legal and constitutional principles but also the future of students across the State.

The Government of Tamil Nadu reassures the teaching community that it stands firmly with them. The State will pursue this matter vigorously and take it forward to its logical and fair conclusion, so that the interests of teachers are protected, and the right of every child to receive quality education remains secure.


செய்திக் குறிப்பின் சுருக்கம் – 


தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை (11/09/2025)


தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. (01.09.2025 அன்று Anjuman Ishaat-e-Talim Trust vs State of Maharashtra & Others வழக்கில் வந்த தீர்ப்புக்கு எதிராக).


TET தகுதி இல்லாத பணியில் உள்ள ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுக்குள் அதை பெற வேண்டும்; பெறவில்லை என்றால் கட்டாய ஓய்வு மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


5 ஆண்டுகளுக்கு குறைவான சேவைக்காலம் உள்ள ஆசிரியர்கள் ஓய்வு வரை தொடரலாம், ஆனால் பதவி உயர்வு கிடையாது.


தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு:


எதிர்கால புதிய நியமனங்களுக்கு TET அவசியம் என்பதில் முழு ஒப்புதல்.


ஆனால், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை; இது நீதியற்றது, நடைமுறையிலும் சாத்தியமில்லை.


இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால், ஆசிரியர்கள் கட்டாய ஓய்வு, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் கல்வி பாதிப்பு போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும்.


மறுபரிசீலனை மனுவின் காரணங்கள்:


1. இலவச & கட்டாயக் கல்வி சட்டம், 2009 (RTE Act) – புதிய நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும்; பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு விதிக்க இயலாது.


2. NCTE அறிவிப்பு (23.08.2010) – அதற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET விதி பொருந்தாது.


3. பின்பற்றும் விதி (retrospective) ஆசிரியர்களின் உரிமைகளை பாதிக்கிறது; கல்வித் துறையில் ஆபத்தை உண்டாக்குகிறது.


அரசின் உறுதி:


கல்வித் தரமும், ஆசிரியர் நலனும் பாதுகாக்கப்படும்.


தற்போதைய ஆசிரியர்களின் உரிமைகள் காக்கப்படும், புதிய நியமனங்களுக்கு மட்டும் TET கடைபிடிக்கப்படும்.


ஆசிரியர்களுடன் மாநில அரசு உறுதியாக நிற்கிறது, நியாயமான தீர்வு கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரப்படும்.


TET தீர்ப்பு தொடர்பான கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பேட்டி


 TET தீர்ப்பு தொடர்பான கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்களின் பேட்டி


TET தீர்ப்பு தொடர்பாக விரைவில் ஆலோசனை செய்யப்பட உள்ளது ; அனைத்து சங்கங்களுடனும் இதுபற்றி பேசியுள்ளோம்


- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்..


>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 



 பல மருத்துவர்கள், பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தற்போது ஆசிரியர் தகுதியின் தேர்வில் தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் உருவாக்கியது அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களே - அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேட்டி




அரசுப் பள்ளியிலிருந்து அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ள மாணவி

 


அரசுப் பள்ளியிலிருந்து அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ள மாணவி : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 



அரசுப் பள்ளி to அமெரிக்கா...!


அமெரிக்க வெளியுறவு துறை நிதியுதவி வழங்கும் ‘The Kennedy-Lugar Youth Exchange and Study (YES)’ எனும் திட்டத்தின் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார் ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவி தட்சண்யா.


பண்பாடு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான இத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் ஓராண்டு பள்ளிப் படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவி தட்சண்யா, 11-ஆம் வகுப்பை, Belton-ல் உள்ள Heartland பள்ளியில் படித்து வருகிறார். 12-ஆம் வகுப்பை தமிழ்நாட்டில் தொடர்வார் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை SEP : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு

 தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 


“எதிர்காலத்திற்கு தேவையான பார்வையுடன் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை (பள்ளிக் கல்வி) உருவாக்கியுள்ளோம்”


இந்தக் கல்விக் கொள்கையின் மூலமாக… 


🙇படித்து மனப்பாடம் செய்வதை விட, சிந்தித்து கேள்விக் கேட்கும் மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்.


⚡️எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான ஆற்றலை வழங்கவுள்ளோம்.


👩‍💻தொழில்நுட்ப மனம் படைத்த மாணவர்களை உருவாக்குவோம்.


👩‍🎨படிப்பவர்களாக மட்டுமல்ல! படைப்பாற்றல் உள்ளவர்களாக மாணவர்களை உருவாக்குவோம்!


🤾‍♀️கல்வியுடன் உடற்பயிற்சியும் இணைக்கப்படும்.


📋தாய்மொழித் தமிழ் நமது அடையாளமாக, பெருமிதமாக இருக்கும்.


📕தமிழும் ஆங்கிலமும் என இருமொழிக் கொள்கைதான் நமது உறுதியான கொள்கையாக இருக்கும்.


🏫ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும்!


📺கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ எனும் நிலையை உருவாக்கும்.


👨‍🎓மதிப்பெண்களாக இல்லாமல் மதிப்பீடுகளை நோக்கி தேர்வுகள் அமையும்.


📚பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.


🧑‍🎓‘நான் முதல்வன்’ திட்டம் வாழ்க்கைக்கும் வழிகாட்டுதலாக அமையும்.


👨‍🔬அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம்!


*“அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் உயர்தரமான கல்வி” இதுதான் நமது திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கை!* - மாண்புமிகு முதலமைச்சர் 

@mkstalin

 அவர்கள்



SLAS அறிக்கை : 21வது ஆய்வுக்கூட்டம் தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 SLAS அறிக்கை : 21வது ஆய்வுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


SLAS 2025 அடிப்படையில் 21வது மாவட்டமாக கடலூரில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.


4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 470 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.



கடலூர் மாவட்டத்திற்கான அரசு மாதிரிப் பள்ளியின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. 


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அப்பள்ளியை இன்று ஆய்வு செய்தோம்.



SLAS அறிக்கை : 20வது ஆய்வுக்கூட்டம் மயிலாடுதுறையில் : பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

 


SLAS அறிக்கை : 20வது ஆய்வுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


மாநில திட்டக்குழு நடத்திய கற்றல் அடைவுத் தேர்வு #SLAS - 2025 ஆய்வின் மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், மாவட்ட வாரியாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைச் சந்தித்து வருகிறோம். 


அந்த வகையில், 20வது மாவட்டமாக மயிலாடுதுறையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 4 கல்வி வட்டாரங்களில் இருந்து 420 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


மாணவச் செல்வங்களுக்கான அடிப்படை வாசிப்பு, கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்த பள்ளிகள் அளவில் செயல் திட்டங்களை உருவாக்கிடவும், பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் தலைமை ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டோம்.


SLAS அறிக்கை : 19வது ஆய்வுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு

 SLAS அறிக்கை : 19வது ஆய்வுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


கரூர் மாவட்டத்தில் 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 470 பள்ளித் தலைமையாசிரியர்களுடன் சந்திப்பு.


#SLAS 2025 அடிப்படையிலான இந்த 19வது ஆய்வுக் கூட்டத்தில் மாணவச் செல்வங்களைச்


🎯 கற்றல் அடைவு இலக்குகளை எட்டச் செய்வதற்கான திட்டமிடல்


📈 தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்தோம்.



SLAS அறிக்கை : 18வது ஆய்வுக்கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


SLAS அறிக்கை : 18வது ஆய்வுக்கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


SLAS - 2025 முடிவுகள் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட வாரியான நடத்தப்பட்டுவரும் ஆய்வுக் கூட்டங்களின் 18வது கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது.


இதில் 4 கல்வி வட்டாரங்களைச் சேர்ந்த 300 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றார்கள்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்