கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-11-2026 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் - செய்தி வெளியீடு

 

01-11-2026 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் - செய்தி வெளியீடு


செய்தி வெளியீடு எண்: 952 , நாள்: 30.10.2026



தமிழ்நாடு நாள் விழா

*************************


தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-நாளினைப் பெருமைப்படுத்திடும்வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் நாள் "தமிழ்நாடு நாள்" என்ற பெயரில் தமிழ்நாடு அரசால் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, நவம்பர் 1-ஆம் நாள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவாகச் சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் காலை 10 மணி அளவில் கொண்டாடப்படவுள்ளது.


இவ்விழாவில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், 5 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்தமைக்கான நூலுரிமைத்தொகை வழங்கிடவும். திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிடவும், தமிழ்ச் செம்மல் விருதுகள் 76 அறிஞர்களுக்கும் வழங்கியும் சிறப்பிக்க உள்ளார்.


மேலும், நவம்பர் 1-ஆம் நாள் மாலை தமிழ்நாடு நாள் விழாவையொட்டி கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நாட்டுப்புறக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் சிறப்பான முறையில் நடத்தப்படும்.


தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்படும்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5 days Residential training for B.T. Assistants - SCERT Director Proceedings

தெரிவு செய்யப்பட்ட கணித, அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சென்னையில் 5 நாட்கள் (23.11.2026 முதல் 27.11.2026 வரை) உண்டு, உறைவிடப் பயிற்சி - ...