கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செய்தி வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்தி வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

துணைத்தேர்வு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Certificate) பதிவிறக்கம் - செய்திக்குறிப்பு


துணைத்தேர்வு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Certificate) பதிவிறக்கம் - செய்திக்குறிப்பு



ஜூலை 2025 - பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) துணைத்தேர்வு - தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Mark Certificate) /மதிப்பெண் பட்டியலாக (Statement of Mark Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் - செய்திக்குறிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



துணைத்தேர்வில் தேர்ச்சியானவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம்



 துணைத்தேர்வில் தேர்ச்சியானவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு


12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்


Class 12 students who have passed the supplementary examination can apply for higher education.


துணைத்தேர்வில் தேர்ச்சியான 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு


12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் – மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் @Govichezhian அவர்கள் தகவல்.



"அன்பு கரங்கள்" : ரூ.2000 நிதி ஆதரவு திட்டம் - விண்ணப்பிக்கும் முறை



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை : முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டம் - விண்ணப்பிக்கும் முறை & தேவையான ஆவணங்கள்


Monthly allowance of Rs. 2000 for children who have lost their parents : Chief Minister's "Anbu Karangal" financial support scheme - Application procedure & required documents


பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கும் முதலமைச்சரின் "அன்பு கரங்கள்" திட்டம் - செய்தி வெளியீடு 


 இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் "அன்பு கரங்கள்" நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்டங்களில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்  என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப., அவர்கள் தகவல்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை விண்ணப்பிப்பது எப்படி, முழு விவரம்


அன்புக்கரங்கள் திட்டம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி பெறலாம். அதற்கு விண்ணப்பிப்பது எப்படி, என்ன ஆவணங்கள் தேவை


அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர்களின் பாதுகாப்பில் உள்ள 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் நிதி ஆதரவுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


 மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்

தமிழ்நாடு முதலமைச்சர், மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின்  பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அவர்களது பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை  மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள். 


அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டம்

இந்த அறிவிப்பிற்கிணங்க, இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு, அவர்களின் 18 வயது வரையிலான மாதந்திர உதவித்தொகை “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்.


இச்சீரிய திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்:       


1. ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).


2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)


3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்


4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)


5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)


கீழ்க்காணும் ஆவணங்களுடன்,  “அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம்.


தேவையான ஆவணங்கள்


1. குடும்ப அட்டையின் நகல்


2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்


3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/ கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)


4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்.


5. பெற்றோரின் இறப்புச்சான்று நகல். 

உள்ளிட்டவற்றை மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்


விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 2025-26ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சித்தலைவர்



 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 2025-26ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,அவர்கள் தகவல்



>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


PG TRB Exam Date Announced

 


முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடைபெறும் தேதி - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 


PG TRB Exam Date Announced 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அனைத்து புறநகர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு மாற்றம்



 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு 16.07.2025 முதல் மாற்றம் செய்யப்படுகிறது - திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Trichy Panjappur Bus Standலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பேருந்து நடைமேடைகள், வழித்தடங்கள் அறிவிப்பு



திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பேருந்து நடைமேடைகள், வழித்தடங்கள் அறிவிப்பு


Announcement of bus platforms and routes going to various cities from Trichy Panchappur Bus Terminal



>>> மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 09.05.2025 அன்று திறந்தவைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக (Terminus) கொண்டு இயக்கப்பட்ட அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.


அதன் விவரம் வருமாறு:


விரைவு பேருந்துகள் / புறநகரப் பேருந்துகள்.


சென்னை/திருப்பதி/வேலூர்/விழுப்புரம்/ காஞ்சிபுரம்/புதுச்சேரி மார்க்கம்


அனைத்து மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால் பண்ணை, தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.


தஞ்சாவூர் / கும்பகோணம்/ வேளாங்கண்ணி/காரைக்கால் மார்க்கம்


மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்லவேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.


நாமக்கல்/ சேலம் / பெங்களுரு மார்க்கம்


மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை. டிவிஎஸ் டோல்கேட், நெ.1 டோல்கேட் வழியாக திரும்பச் செல்லவேண்டும். 


புதுக்கோட்டை/ அறந்தாங்கி/ ராமேஸ்வரம் மார்க்கம்


மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்


கரூர்/ ஈரோடு/ திருப்பூர்/ கோயம்புத்தூர் மார்க்கம்


மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வ.உ.சிசாலை, மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.


மணப்பாறை/ திண்டுக்கல்/ பழனி/ குமுளி மார்க்கம்


அனைத்து மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் பேருந்துகளும் கருமண்டபம். மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.


மதுரை/ தூத்துக்குடி/ விருதுநகர்/திருநெல்வேலி மார்க்கம்


மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.


நகரப் பேருந்துகள்


மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.


ஆம்னி பேருந்துகள்


மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.


உள் வருகை மற்றும் வெளிச் செல்கை (Entry and Exit)


அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்திற்கு உள்வரும்போது (Entry) காவல் சோதனை சாவடி எண்.2 (CP-2) வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும்.


பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் (Exit) அனைத்து பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பி (U Turn) செல்ல வேண்டும்.


பயணிகளுக்கான வசதிகள்


திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தில் 20 எண்ணிக்கையில் 10 கடைகளும், 12 எண்ணிக்கையில் உணவகங்களும், எண்ணிக்கையில் சிற்றுண்டி கடைகளும் (Snacks) செயல்படவுள்ளது.


மேலும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க 228 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.பயணிகள் மற்றும் அவர்தம் உடைமைகளின் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் 52 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.பயணிகளின் தேவைக்கேற்ப ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பயணிகளுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் 30 Guit நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.பேருந்து முனையத்திற்குள் நடந்து செல்ல சிரமப்படும் முதியவர்கள், நோயாளிகள் பயன்பாட்டிற்காக 3 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.


பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின் பேரில் (On call) மருத்துவர் குழு (Health Desk) தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் தெரிவித்தார்.


செய்தி வெளியீடு :

மாவட்ட ஆட்சியர்,

திருச்சிராப்பள்ளி மாவட்டம்.


வருமான வரி தாக்கல் (ITRs) மோசடி : வருமான வரித் துறையின் நடவடிக்கை குறித்த அறிவிப்பு

  

 வருமான வரி தாக்கல் (ITRs) விலக்குககளில் மோசடி, தவறான தாக்கல்கள் : வருமான வரித் துறையின் நடவடிக்கை குறித்த அறிவிப்பு


வருமான வரி தாக்கல்களில் (ITRs) விலக்குகள் மற்றும் விலக்குகள் குறித்த மோசடியான கூற்றுக்கள் மீது வருமான வரித் துறை பெரிய அளவிலான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட மோசடிகள், தவறான தாக்கல்கள் மற்றும் நன்மை பயக்கும் விதிகளை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. 


➡️ இந்த பெரிய அளவிலான சரிபார்ப்பு, 10(13A), 80GGC, 80E, 80D, 80EE, 80EEB, 80G, 80GGA மற்றும் 80DDB பிரிவுகளின் கீழ் விலக்குகள் போன்ற நன்மை பயக்கும் விதிகளை தவறாகப் பயன்படுத்துவது குறித்த விரிவான பகுப்பாய்வைத் தொடர்ந்து வருகிறது, இது பெரும்பாலும் தொழில்முறை இடைத்தரகர்களுடன் இணைந்து செயல்படுகிறது. சந்தேகத்திற்கிடமான வடிவங்களை அடையாளம் காண மேம்பட்ட AI கருவிகள் மற்றும் மூன்றாம் தரப்பு தரவு பயன்படுத்தப்படுகின்றன. 


செய்திக்குறிப்பில் உள்ள விவரங்கள்:


இந்திய அரசு நிதி அமைச்சகம் வருவாய் துறை மத்திய நேரடி வரிகள் வாரியம் புது தில்லி, ஜூலை 14, 2025 

செய்திக்குறிப்பு

 வருமான வரித்துறை வரி விலக்குகள் மற்றும் விலக்குகள் பற்றிய போலியான கூற்றுக்கள் மீது நடவடிக்கை எடுத்தது வருமான வரி வருமானங்களில் (ITRs) விலக்குகள் மற்றும் விலக்குகள் பற்றிய மோசடியான கூற்றுக்களை எளிதாக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து, ஜூலை 14, 2025 அன்று நாட்டின் பல இடங்களில் வருமான வரித்துறை ஒரு பெரிய அளவிலான சரிபார்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. வருமான வரிச் சட்டம், 1961 இன் கீழ் வரி சலுகைகளை தவறாகப் பயன்படுத்துவது பற்றிய விரிவான பகுப்பாய்வைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, பெரும்பாலும் தொழில்முறை இடைத்தரகர்களுடன் கூட்டு சேர்ந்து. கற்பனையான விலக்குகள் மற்றும் விலக்குகளைக் கூறி வருமானங்களை தாக்கல் செய்து வரும் சில ITR தயாரிப்பாளர்கள் மற்றும் இடைத்தரகர்களால் இயக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடிகளை விசாரணைகள் கண்டறிந்துள்ளன. இந்த மோசடியான தாக்கல்களில் நன்மை பயக்கும் விதிகளின் துஷ்பிரயோகம் அடங்கும், சிலர் அதிகப்படியான பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக தவறான TDS வருமானங்களைச் சமர்ப்பித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான வடிவங்களை அடையாளம் காண, மூன்றாம் தரப்பு ஆதாரங்கள், தரைமட்ட நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவிகளிலிருந்து பெறப்பட்ட நிதித் தரவைத் துறை பயன்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளால் இந்த கண்டுபிடிப்புகள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, அங்கு பல்வேறு குழுக்கள் மற்றும் நிறுவனங்களால் மோசடியான கூற்றுக்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டன. பிரிவுகள் 10(13A), 80GGC, 80E, 80D,80EE, 80EEB, 80G, 80GGA, மற்றும் 80DDB ஆகியவற்றின் கீழ் விலக்குகளின் பரவலான தவறான பயன்பாட்டை பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது.

செல்லுபடியாகும் நியாயங்கள் இல்லாமல் விலக்குகள் கோரப்பட்டுள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்டோர் இதில் ஈடுபட்டுள்ளனர். வரி செலுத்துவோர் பெரும்பாலும் இந்த மோசடித் திட்டங்களில் ஈர்க்கப்பட்டு, கமிஷனுக்கு ஈடாக அதிக பணத்தைத் திரும்பப் பெறுவதாக வாக்குறுதி அளிக்கப்படுகிறார்கள். முழுமையாக மின்-செயல்படுத்தப்பட்ட வரி நிர்வாக அமைப்பு இருந்தபோதிலும், பயனற்ற தகவல் தொடர்பு வரி செலுத்துவோருக்கு உதவுவதில் ஒரு குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது. இத்தகைய ஐடிஆர் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் மொத்த வருமானத்தை தாக்கல் செய்வதற்காக மட்டுமே தற்காலிக மின்னஞ்சல் ஐடிகளை உருவாக்குகிறார்கள், பின்னர் அவை கைவிடப்படுகின்றன, இதன் விளைவாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் படிக்கப்படாமல் போகின்றன. 'வரி செலுத்துவோரை முதலில் நம்புங்கள்' என்ற வழிகாட்டும் கொள்கையின்படி, துறை தன்னார்வ இணக்கத்தை வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, சந்தேகத்திற்குரிய வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை திருத்தி சரியான வரியை செலுத்துமாறு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் ஆலோசனைகள் உட்பட விரிவான தொலைதொடர்பு முயற்சிகளை துறை மேற்கொண்டுள்ளது. வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நேரடி தொலைதொடர்பு திட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கடந்த நான்கு மாதங்களில் சுமார் 40,000 வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்தை புதுப்பித்துள்ளனர், 1,045 கோடி மதிப்பிலான தவறான கோரிக்கைகளை தானாக முன்வந்து திரும்பப் பெற்றுள்ளனர். இருப்பினும், பலர் இணங்கவில்லை, ஒருவேளை இந்த ஏய்ப்பு மோசடிகளுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகளின் செல்வாக்கின் கீழ் இருக்கலாம்.

மோசடியான கூற்றுகளுக்கு எதிராக, பொருந்தக்கூடிய இடங்களில் அபராதம் மற்றும் வழக்குத் தொடருதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கத் துறை இப்போது தயாராக உள்ளது. 150 வளாகங்களில் நடந்து வரும் சரிபார்ப்புப் பயிற்சி, இந்தத் திட்டங்களுக்குப் பின்னால் உள்ள நெட்வொர்க்குகளை அகற்றவும், சட்டத்தின் கீழ் பொறுப்புணர்வை உறுதி செய்யவும் உதவும் டிஜிட்டல் பதிவுகள் உள்ளிட்ட முக்கியமான ஆதாரங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விசாரணைகள் தற்போது நடந்து வருகின்றன. வரி செலுத்துவோர் தங்கள் வருமானம் மற்றும் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்புகளின் சரியான விவரங்களை தாக்கல் செய்யுமாறும், தேவையற்ற பணத்தைத் திரும்பப் பெறுவதாக உறுதியளிக்கும் அங்கீகரிக்கப்படாத முகவர்கள் அல்லது இடைத்தரகர்களின் ஆலோசனையால் பாதிக்கப்படக்கூடாது என்றும் மீண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள். (வி. ராஜிதா) வருமான வரி ஆணையர் (ஊடகம் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை) & அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், CBDT



The Income Tax Department has launched a large-scale crackdown on fraudulent claims of deductions and exemptions in Income Tax Returns (ITRs). Organized rackets, false filings, and misuse of beneficial provisions are under scrutiny.


➡️ This large-scale verification follows detailed analysis of misuse of beneficial provisions like deductions u/s 10(13A), 80GGC, 80E, 80D, 80EE, 80EEB, 80G, 80GGA and 80DDB, often in collusion with professional intermediaries. Advanced AI tools and third-party data are being used to identify suspicious patterns.


Details in the Press Release:


Government of India Ministry of Finance Department of Revenue Central Board of Direct Taxes

New Delhi, 14h July, 2025

Press Release

Income Tax Department Cracks Down on Bogus Claims of Deductions & Exemptions

The Income Tax Department initiated a large-scale verification operation across multiple locations in the country on 14th July 2025, targeting individuals and entities facilitating fraudulent claims of deductions and exemptions in Income Tax Returns (ITRs). This action follows a detailed analysis of the misuse of tax benefits under the Income-tax Act, 1961, often in collusion with professional intermediaries.

Investigations have uncovered organized rackets operated by certain ITR preparers and intermediaries, who have been filing returns claiming fictitious deductions and exemptions. These fraudulent filings involve the abuse of beneficial provisions, with some even submitting false TDS returns to claim excessive refunds.

To identify suspicious patterns, the Department has leveraged financial data received from thirdparty sources, ground-level intelligence, and advanced artificial intelligence tools. These findings are further substantiated by recent search and seizure operations conducted in Maharashtra, Tamil Nadu,Delhi, Gujarat, Punjab, and Madhya Pradesh, where evidence of fraudulent claims was found to have been used by various groups and entities.

Analysis reveals rampant misuse of deductions under sections 10(13A), 80GGC, 80E, 80D,80EE, 80EEB, 80G, 80GGA, and 80DDB. Exemptions have been claimed without valid justification.Employees of MNCs, PSUs, government bodies, academic institutions, and entrepreneurs are among those implicated. Taxpayers are often lured into these fraudulent schemes with promises of inflated refunds in return for a commission. Despite a fully e-enabled tax administration system, ineffective communication remains a significant hurdle in assisting taxpayers. It has been observed that such ITR preparers often create temporary email IDs solely for filing bulk returns, which are later abandoned,resulting in official notices going unread.

In line with its guiding principle of 'Trust Taxpayers First, the Department has emphasized voluntary compliance. Over the past year, the Department has carried out extensive outreach efforts,including SMS and email advisories, nudging suspected taxpayers to revise their returns and pay the correct tax. Physical outreach programs, both on and off campus, have also been conducted. As a result, approximately 40,000 taxpayers have updated their returns in the last four months, voluntarily withdrawing false claims amounting to 1,045 crore. However, many remain non-compliant, possibly under the influence of the masterminds behind these evasion rackets.

The Department is now poised to take stern action against continued fraudulent claims,including penalties and prosecution wherever applicable. The ongoing verification exercise across 150 premises is expected to yield crucial evidence, including digital records, that will aid in dismantling the networks behind these schemes and ensure accountability under the law.

Further investigations are currently underway.

Taxpayers are again advised to file correct particulars of their income and communication coordinates and not be influenced by advice from unauthorized agents or intermediaries promising undue refunds.

(V.Rajitha)

Commissioner of Income Tax(Media & Technical Policy) &Official Spokesperson, CBDT








B.Ed., admission application period Extended



அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள் : 09-07-2025


Extension of application period for B.Ed. student admission - Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



B.Ed படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை கால அவகாசம்


அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களில் பிஎட் படிப்​புக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் கோவி.செழியன் அறி​வி்ததுள்​ளார்.


இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: நடப்பு கல்வி ஆண்​டில் அரசு மற்​றும் அரசு உதவி​பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் பி.எட். மாணவர் சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்​கியது. இதற்​கான கடைசி நாள் ஜூலை 9 (நேற்​று) முடிவடைந்​தது.


இந்​நிலை​யில், மாணவர்​கள் நலன் கருதி பிஎட் படிப்​புக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்​டிக்​கப்​படு​கிறது. எனவே, பிஎட் படிப்​பில் சேர விரும்​பும் மாணவர்​கள் www.tngasa.in என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி வரு​கிற 21-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்.


விண்​ணப்​பங்​கள் பரிசீலனை செய்​யப்​பட்டு தகு​தி​யுள்ள மாணவர்​களின் தரவரிசை பட்​டியல் ஜூலை 31-ம் தேதி வெளி​யிடப்​படும். விரும்​பும் கல்​லூரியை தேர்​வுசெய்​வதற்​கான கலந்​தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடை​பெறும். கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​படும்.


மாணவர்​கள் தங்​களுக்​கான கல்லூரி ஒதுக்​கீட்டு ஆணையை www.iwiase.ac.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட கல்​லூரி​யில் சேர்ந்து கொள்​ளலாம். அரசு மற்​றும் அரசு உதவி பெறும் கல்​வி​யியல் கல்​லூரி​களில் முதல் ஆண்டு மாணவர்​களுக்​கான வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்​கும். இவ்​வாறு அவர்​ கூறி​உள்​ளார்​.



இன்றைய / முன்னாள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் போட்டிகள்

 


இன்றைய / முன்னாள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் போட்டிகள்


என் பள்ளி! என் பெருமை!!


செய்தி வெளியீடு எண் : 1551, நாள்: 08-07-2025


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றி வரும் அரும் தொண்டுகளையும், செயல்படுத்தி வரும் சிறப்பான நலத்திட்டங்களையும் மாணவர் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் பல்வேறு கலைப் போட்டிகளை நடத்துகிறது. இப்போட்டிகளில் இன்றைய மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



>>> செய்தி வெளியீடு எண் : 1551, நாள்: 08-07-2025 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மின் கட்டண உயர்வு குறித்த செய்தி - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களின் அறிவிப்பு



மின் கட்டண உயர்வு குறித்த செய்தி - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களின் அறிவிப்பு


வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை - மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்ட  தகவல்



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


SSLC & +1 Supplementary Exam Hall Ticket Download From 25.06.2025 AN



SSLC & +1 துணைத் தேர்வு - 25.06.2025 (புதன்கிழமை) பிற்பகல் முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசு தேர்வுகள் இயக்குனர் செய்தி குறிப்பு வெளியீடு


SSLC & +1 Supplementary Exam Hall Ticket Download From 25.06.2025 AN



>>> செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (19.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம்

 

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (19.06.2025) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


+2 Supplementary Exam Hall Ticket Download From Tomorrow (19.06.2025) Afternoon 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Adi Dravidar and Tribal Welfare Department Hostel Admission - Press Release

 

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி / ஐடிஐ / டிப்ளமோ / கல்லூரி விடுதி சேர்க்கை  - செய்தி வெளியீடு


Adi Dravidar and Tribal Welfare Department School / ITI / Diploma / College Hostel Admission - Press Release




Caste-wise Population Census 2027 - Union Government Ministry of Home Affairs Official Announcement



 2027ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என ஒன்றிய அரசு உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Caste-wise Population Census 2027 - Union Government Ministry of Home Affairs Official Announcement



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



உள்துறை அமைச்சகம்

azadi ka amrit mahotsav

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUN 2025 5:30PM by PIB Chennai

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, 16.06.2025 (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.  முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, 00:00 மணியாக இருந்தது. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01, 00:00 மணியாக இருந்தது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.


***


(Release ID: 2133845)


AD/SM/SMB/AG/DL



உள்துறை அமைச்சகம் 

மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 சாதிகளின் கணக்கெடுப்புடன் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்  

மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027க்கான குறிப்பு தேதி மார்ச், 2027 முதல் நாள் 00:00 மணியாக இருக்கும் 

லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒத்திசைவற்ற பனிப்பொழிவு பகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கு, குறிப்பு தேதி அக்டோபர், 2026 முதல் நாள் 00.00 மணியாக இருக்கும் 

பதிவிடப்பட்டது: 04 ஜூன் 2025 மாலை 5:30 மணி PIB டெல்லி 

சாதிகளின் கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027ஐ இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027க்கான குறிப்பு தேதி மார்ச் 2027 முதல் நாள் காலை 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் ஒத்திசைவற்ற பனிப்பொழிவு பகுதிகளுக்கு, குறிப்பு தேதி அக்டோபர் 2026 முதல் நாள் காலை 00.00 மணியாக இருக்கும். மேற்கண்ட குறிப்பு தேதிகளுடன் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நோக்கத்திற்கான அறிவிப்பு, 1948 மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 இன் விதியின்படி, 16.06.2025 அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் தற்காலிகமாக வெளியிடப்படும்.


இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் மற்றும் 1990 மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் கீழ் நடத்தப்படுகிறது. இந்தியாவின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது, அதாவது 

i) கட்டம் I- வீட்டுப் பட்டியல் (HLO) (ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, 2010 வரை) மற்றும் 

(ii) கட்டம் II - மக்கள் தொகை கணக்கெடுப்பு (PE) (பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28, 2011 வரை) குறிப்பு தேதியுடன் - மார்ச் 2011 முதல் நாள் 00:00 மணி வரை, ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பனிப்பொழிவு இல்லாத பகுதிகளைத் தவிர, 2010 செப்டம்பர் 11 முதல் 30, 2010 வரை நடத்தப்பட்டன, குறிப்பு தேதி அக்டோபர் 2010 முதல் நாள் 00.00 மணி ஆகும். 


2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக இதேபோன்ற முறையில் நடத்த முன்மொழியப்பட்டது, கட்டம் I ஏப்ரல்-செப்டம்பர் 2020 மற்றும் இரண்டாம் கட்டம் பிப்ரவரியில் 2021. 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன, மேலும் ஏப்ரல் 1, 2020 முதல் சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் களப்பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றுநோய் பரவியதால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது. 

RK/VV/RR/PS (வெளியீட்டு ஐடி:2133845) 



Ministry of Home Affairs

Azadi Ke Amrit Mahotsav

Population Census-2027 to be conducted in two phases along with enumeration of castes

The reference date for Population Census - 2027 will be 00:00 hours of the first day of March, 2027

For the Union Territory of Ladakh and the non-synchronous snow-bound areas of the UT of Jammu and

Kashmir and States of Himachal Pradesh and Uttarakhand, the reference date will be 00.00 hours of the first day of October, 2026

Posted On: 04 JUN 2025 5:30PM by PIB Delhi

It has been decided to conduct Population Census-2027 in two phases along with enumeration of castes. The reference date for Population Census - 2027 will be 00:00 hours of the first day of March, 2027. For the Union Territory of Ladakh and the non-synchronous snow-bound areas of the UT of Jammu and Kashmir and States of Himachal Pradesh and Uttarakhand, the reference date will be 00.00 hours of the first day of October, 2026. The notification for intent of conducting Population Census with the above reference dates will be published in the official gazette tentatively on 16.06.2025, as per provision of section 3 of Census Act 1948.

The Census of India is conducted under the provisions of the Census Act, 1948 and the Census Rules, 1990. The last Census of India was conducted in 2011 in two phases,namely i) Phase I- House Listing (HLO) (1 April to 30 September 2010) and (i) Phase ⅡI - Population Enumeration (PE) (09 February to 28 February 2011) with reference date - 00:00 hours of the first day of March 2011, except for snow-bound non-synchronous areas of Jammu and Kashmir, Uttarakhand and Himachal Pradesh for which it was conducted during 11 to 30 September 2010 with reference date as 00.00 hours of the first day of October 2010.

Census 2021 was also proposed to be conducted in two phases in a similar manner with phase I during April-September 2020 and second phase in February 2021. All the preparations for the first phase of the Census to be conducted in 2021 were completed and field work was scheduled to begin in some States/UTs from April 1, 2020.However, due to the outbreak of COVID-19 pandemic across the country, the census work was postponed.

RK/VV/RR/PS

(Release ID:2133845)

Read this release in: Hindi


கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - TANUVAS Press Release


கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - TANUVAS பத்திரிகை செய்திக் குறிப்பு Press Release 


 கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கு நாளை 26-05-2025 முதல் விண்ணப்பிக்கலாம்



>>> பத்திரிகை செய்திக் குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



TAMIL NADU VETERINARY AND ANIMAL SCIENCES UNIVERSITY

PRESS MESSAGE

Tamil Nadu Veterinary and Animal Sciences University invites applications for undergraduate courses (BVSc & AH / B.Tech) from the candidates of Tamil Nadu State through online (https://adm.tanuvas.ac.in) from 26.05.2025,10.00 AM to 20.06.2025, 5.00 PM.

For online applications, guidelines, number of seats reserved for NRIs (Non-Resident Indians) / Wards of NRIs / NRI Sponsored and Foreign National Quota, please visit https://adm.tanuvas.ac.in.

Chairman, Admission Committee (UG),

TANUVAS, Chennai-600 051.



https://chat.whatsapp.com/DDqsauWKkln1IUdqOq9BnA


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்


கால்நடை மருத்துவ படிப்புகள், கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளை தொடங்குகிறது.


பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி - ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி கடந்த 1903-ல் தொடங்கப்பட்டது. 122 ஆண்டுகளை கடந்த பாரம்பரிய கல்லூரியாக திகழ்கிறது.


பி.டெக். படிப்புகள்: திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்படும் பி.டெக் படிப்பில் உணவு தொழில்நுட்பம் பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்பம் பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில் இருந்து முறையே 6 இடங்களும், 3 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.


மேற்கண்ட பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிப்பது நாளை தொடங்குகிறது.


பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்பில் சேர, பிளஸ் 2 மதிப்பெண் போதும். உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். நீட் மதிப்பெண்கள் தேவையில்லை. ஆனால், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடத்தில் சேர்வதற்கு, நீட் மதிப்பெண் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.


எம்பிபிஎஸ் போன்றே, இந்த படிப்பும் ஐந்தரை ஆண்டுகள் கொண்டது. ஓராண்டு உள்ளிருப்பு பயிற்சியை உள்ளடக்கியது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் இந்திய கால்நடை மருத்துவ குழுமம் மூலமாக நிரப்பப்படுகிறது. எஞ்சிய இடங்கள், தமிழ்நாடு மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 45 இடங்கள் கிடைக்கும்


பி.டெக் படிப்புகள் 4 ஆண்டுகள் கொண்டது. இதில் சேர, பிளஸ் 2 வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். இதில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என 8 இடங்கள் கிடைக்கும்.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கால்நடை மருத்துவம் அல்லது கால்நடை சார்ந்த பி.டெக். படிப்புகள் படித்தால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பை பெற்று முன்னேற வாய்ப்புகள் உள்ளன என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.



அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - தலா 30 வீரர்களை கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு

 

அதி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி, கோவைக்கு தலா 30 வீரர்களை கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைவு



சிவில் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்திகை - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் - செய்தி வெளியீடு

 


சிவில் பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்திகை - தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் - செய்தி வெளியீடு


Civil Defence Exercise and Rehersal - Tamil Nadu Disaster Management Authority - Press Release




மே 8இல் +2 தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு

 


மே 8இல் +2 தேர்வு முடிவுகள் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு


+2 Exam Results on May 8 - Directorate of Government Examinations Press Release


மே 9க்குப் பதில், மே 8இல் தேர்வு முடிவுகள்


பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஒருநாள் முன்னதாக நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

 

+2 RESULTS


12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 08ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!


மே 09ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே வெளியாகிறது.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Rs.5400 grade pay : Audit Objections : Ordered to repay Rs.30 lakhs in one installment

  ரூ.5400 தர ஊதியம் : தணிக்கை தடைகளால் திண்டாடும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் : கூடுதலாகப் பெற்ற சுமார் 30 லட்சம் ரூபாயை ஒரே தவணையில் தி...