கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Press Release லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Press Release லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மாணவர்களுக்கு JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி - EoI வரவேற்பு



தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக, தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை (Expression of Interest - EoI) வரவேற்கப்படுகிறது.


செய்தி வெளியீடு எண்: 647


நாள்: 11.09.2026


தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்காக, தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை (Expression of Interest - Eol) வரவேற்கப்படுகிறது.


தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 12,000-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை JEE, NEET, CUET, CLAT உள்ளிட்ட பல்வேறு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் நேரடி வகுப்புகள், ஐயம் தீர்க்கும் அமர்வுகள், தொடர் தேர்வுகள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவை மாணாக்கர்களுக்கு வழங்கப்படவுள்ளன. 


மேலும், 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல், விண்ணப்பப் பதிவு உதவிகள், கலந்தாய்வு ஆதரவு மற்றும் கல்லூரி சேர்க்கைக்குப் பிந்தைய ஒருங்கிணைப்புப் பணிகளும் இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக வழங்கப்படவுள்ளன.


இந்த விருப்பக் கோரிக்கையானது (Eol), சந்தை நிலவரத்தை மதிப்பிடுவதற்கும் திட்ட மதிப்பீட்டிற்குமான செலவினக் கணக்கீட்டை (Price Discovery) மேற்கொள்வதற்கும் மட்டுமே கோரப்படுகிறது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களது நிதி முன்மொழிவில் உரிய முறையில் சுட்டிக்காட்ட வேண்டும்.


இதில் பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள், நிறுவனத் தகுதி விவரங்கள் மற்றும் உரிய நிதி முன்மொழிவுப் படிவத்தை tntribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் தகவல்களுக்கு https://www.tntribalwelfare.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகவும் மற்றும் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்: பரத் (7200738258) /யுரேகா (7373944312) / கார்த்திகேயன் (7338801434).


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9



Everest, LG பெருங்காயம் தூளுக்கு FSSAI தடை



Everest, LG பெருங்காயம் தூளுக்கு FSSAI தடை


- EVEREST மற்றும் LG ஆகிய பிரபல நிறுவனங்களின் பெருங்காயத் தூளை விற்பனை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் FSSAI தடை விதித்துள்ளது. 


- ஆய்வு முடிவில் இந்த இரு நிறுவனங்களின் பெருங்காயத் தூளும் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI),தரக்  குறைபாடு காரணமாக, எவரெஸ்ட் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் கலப்புப் பெருங்காயப் பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடை விதித்து  , ஆகஸ்ட் 2026-ல் உடனடித் தடை உத்தரவைப் பிறப்பித்தது .


முக்கிய சோதனை கண்டுபிடிப்புகள்

குறைந்த சாறு அளவு: கலக்கப்பட்ட பெருங்காயத்தில் குறைந்தபட்சம் 5% ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு இருக்க வேண்டும். எவரெஸ்ட் மாதிரிகளில் இது 0% முதல் 4.4% வரை பதிவாகியுள்ளது.


அதிகப்படியான ஸ்டார்ச்: 

LG மாதிரிகளில் 32% வரை ஸ்டார்ச் இருந்தது, இது 1% என்ற அதிகபட்ச வரம்பை விட மிகவும் அதிகம்.


தரநிலைகளில் தோல்வி: தயாரிப்புகள் தரம் குறைந்தவை என்பதை ஆய்வகப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தின.


தேவையான நடவடிக்கைகள்

உடனடித் தடை: இரு பிராண்டுகளின் கலப்புப் பெருங்காயத் தூள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

தன்னார்வத் திரும்பப்பெறல்: சந்தையில் உள்ள தரமற்ற சரக்குகளைத் திரும்பப் பெறுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.



இது குறித்த செய்தி வெளியீடு 


தரமற்ற தன்மை காரணமாக, இரண்டு முக்கிய மசாலா பிராண்டுகளின் கலப்பு பெருங்காய விற்பனை உத்தரவுக்கு FSSAI தடை விதித்துள்ளது.

பதிவிட்ட நாள்: 29 ஆகஸ்ட் 2026, பிற்பகல் 2:34, PIB மும்பை

மும்பை, ஆகஸ்ட் 29, 2026:

நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), மெஸ்ஸர்ஸ் எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மெஸ்ஸர்ஸ் லால்ஜி கோதூ அண்ட் கம்பெனி (எல்ஜி பிராண்ட் யூனிட்) ஆகிய இரண்டு முன்னணி மசாலாப் பொருட்கள் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் கலப்புப் பெருங்காயத்தை விற்பனை செய்யத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட பிராண்டின் கலப்பு பெருங்காயத்தின் தரம் குறித்து நுகர்வோர் அளித்த புகாரைத் தொடர்ந்து, FSSAI சந்தையில் உள்ள அனைத்து முக்கிய பிராண்டுகளையும் உள்ளடக்கிய ஒரு விரிவான சந்தைக் கண்காணிப்பைத் தொடங்கியது. இந்தக் கண்காணிப்பின் முதன்மை ஆய்வகப் பரிசோதனை அறிக்கைகள், எவரெஸ்ட் மற்றும் எல்ஜி ஆகிய இரு நிறுவனங்களின் கலப்பு பெருங்காயப் பொருட்களும் தரம் குறைந்தவையாக இருந்தன என்பதைக் குறிப்பிட்டன.

FSSAI, மும்பையில் அமைந்துள்ள மெஸ்ஸர்ஸ் எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எல்ஜி பிராண்ட் யூனிட் ஆகியவற்றின் மத்திய உரிமம் பெற்ற அலகுகளிலிருந்து நேரடியாக சட்டப்பூர்வ மாதிரிகளைச் சேகரித்தது. இந்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக ஒரு முதன்மை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. மேலும், FSSAI குஜராத் மாநில FDA உடன் இணைந்து, குஜராத்தின் உம்பர்காவ்னில் உள்ள எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் மாநில உரிமம் பெற்ற அலகில் ஒரு கூட்டு ஆய்வு மற்றும் மாதிரி சேகரிப்பை நடத்தியது. இந்த நடவடிக்கைகளின் போது சேகரிக்கப்பட்ட கலப்பு பெருங்காயத்தின் அனைத்து சட்டப்பூர்வ மாதிரிகளும் தரம் குறைந்தவை என்பதை முதன்மை ஆய்வகம் உறுதி செய்தது.

2011 ஆம் ஆண்டின் FSS (உணவுப் பொருட்கள் தரநிலைகள் மற்றும் சேர்க்கைகள்) ஒழுங்குமுறைகளின் கீழ், பதப்படுத்தப்படாத பெருங்காயம், அரேபிய கோந்து, ஸ்டார்ச்சுகள் மற்றும் மாவு வகைகளைக் கலப்பதன் மூலம் உருவாக்கப்படும் கலப்புப் பெருங்காயம் ஒரு அனுமதிக்கப்பட்ட வகையாகும். இறுதி கலப்புப் பெருங்காயத் தயாரிப்பில் குறைந்தபட்சம் 5% ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு இருப்பதை உறுதிசெய்ய, பதப்படுத்தப்படாத பெருங்காயத்தை குறைந்தபட்சம் சேர்க்க வேண்டும் என்று இந்த ஒழுங்குமுறைகள் வலியுறுத்துகின்றன. ஆய்வகக் கண்டுபிடிப்புகள் இந்த பாதுகாப்புத் தரநிலைகளிலிருந்து குறிப்பிடத்தக்க விலகல்களை வெளிப்படுத்தின:

  1. குறைந்த ஆல்கஹால் கரையக்கூடிய சாறு: பரிசோதிக்கப்பட்ட கலப்பு பெருங்காய மாதிரிகளில் 0-3% மட்டுமே ஆல்கஹால் கரையக்கூடிய சாறு இருந்தது. இது, கட்டாயப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச அளவான 5%-ஐ விடக் கணிசமாகக் குறைவாகும். நுகர்வோர் தயாரிப்புகளில் உற்பத்தியாளர்கள், தேவைப்படும் மூலப் பெருங்காயத்தின் அளவை 30-40% குறைவாகச் சேர்த்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது.
  2. பச்சை பெருங்காயத்தில் அதிகப்படியான மாவுச்சத்து: FSSAI, மும்பையில் உள்ள LG பிராண்ட் யூனிட்டில், தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் ஆறு வகையான பச்சை பெருங்காயங்களையும் மாதிரிக்காக ஆய்வு செய்தது. FSSAI தரநிலைகள் பச்சை பெருங்காயத்தில் மாவுச்சத்தின் அளவை அதிகபட்சமாக 1% என வரம்பிட்டாலும், LG-யின் ஆறு வகையான பச்சை பெருங்காயங்களிலும் 15% முதல் 32% வரை மாவுச்சத்து இருப்பதை ஆய்வகம் உறுதிசெய்தது. இதனால் அவை தரம் குறைந்தவையாக வகைப்படுத்தப்பட்டன. விதிமுறைகளின்படி, பச்சை பெருங்காயத்தில் குறைந்தபட்சம் 12% ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு இருக்க வேண்டும்.

கலவைப் பெருங்காயத்தின் பல தொகுப்புகள், நிர்ணயிக்கப்பட்ட தர விதிமுறைகளுக்கு இணங்காதது கண்டறியப்பட்டதால், மும்பையைச் சேர்ந்த மெஸ்ஸர்ஸ் எவரெஸ்ட் ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எல்ஜி பிராண்ட் யூனிட் ஆகியவற்றுக்கு FSSAI முறைப்படி விற்பனைத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நிர்வாக நடவடிக்கை, பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் நுகர்வோர் நலன்களைக் காக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

மேலும், இந்த முறைகேடுகளை எவ்வாறு சரிசெய்வார்கள் மற்றும் நுகர்வோருக்குத் தரமான கலப்புப் பெருங்காயத்தின் உற்பத்தியை எவ்வாறு உறுதி செய்வார்கள் என்பதை விவரிக்கும் ஒரு விரிவான செயல் திட்டத்தைச் சமர்ப்பிக்குமாறு, சம்பந்தப்பட்ட உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள தரம் குறைந்த அனைத்துப் பொருட்களையும் தாமாகவே திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தொடங்குமாறும் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

***

சுப்ரியா கெய்டடக்/யாஷ் ரானே/பர்சுராம் கோர்


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



Tamil Nadu Housing Board – Houses and Plots for Sale – Government of Tamil Nadu Press Release


தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் - வீடுகள் மற்றும் மனைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Departmental Examinations - May 2026 | Tentative Answer Keys Release



துறைத் தேர்வுகள் - மே 2026 | தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியீடு 


DEPARTMENTAL EXAMINATIONS, MAY-2026 – PUBLISHING OF TENTATIVE ANSWER KEY FOR OBJECTIVE TYPE EXAMINATION (TEST CODE-006) IN THE COMMISSION’S WEBSITE – REGARDING (Press Release)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Revised Budget of the Government of Tamil Nadu for 2026 | Press Release

 


தமிழ்நாடு அரசு திருத்திய நிதிநிலை அறிக்கை 2026 தாக்கல் செய்தல் குறித்த அறிவிப்பு வெளியீடு


Announcement regarding the presentation of the Revised Budget of the Government of Tamil Nadu for 2026


ஆகஸ்ட் 5 அன்று தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்




ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது


 -  சபாநாயகர் அறிவிப்பு


* தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டம் அடுத்த மாதம் 2026-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி அதாவது. 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை-600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடவுள்ளது.


* தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 181(1)-. 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் நாள், புதன்கிழமை அன்று பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 'நாள்' குறித்துள்ளார்கள்.


மேலும், அன்று காலை 10.00 மணிக்கு 2026-2027-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்.


மாண்புமிகு பேரவைத் தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை.



தலைமைச் செயலகம்,

சென்னை - 600 009.

21.7.2026

மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) | செய்தி வெளியீடு



கல்லூரி மாணவர்களுக்கு பிணையில்லா கல்விக் கடன் (Collateral Free Education Loan) விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



"தமிழ்நாடு நாள்" | பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு



"Tamil Nadu Day" | Announcement of Speech and Essay Competitions for School Students


"தமிழ்நாடு நாள்" | பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் அறிவிப்பு


"தமிழ்நாடு நாள்" விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெறவுள்ளன



செய்தி வெளியீடு எண்: 385 , நாள்: 13.07.2026


செய்தி வெளியீடு


தமிழ் வளர்ச்சித் துறை


மெட்ராஸ் மாகாணம் என இருந்த நிலப்பரப்பிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பெற்ற அந்தப் பொன்னான வரலாற்றை, நம் இளைய தலைமுறை நெஞ்சங்களில் ஆழப் பதிக்க வேண்டும். மொழியால் ஒன்றுபட்ட அந்த வீர வரலாற்றை, நம் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். தமிழ் உணர்வைச் சுமக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் விருப்பமாகும். அதற்காகத்தான். 'தமிழ்நாடு நாள்' விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பெறுகின்றன.


இது வெறும் போட்டி மட்டுமல்ல; நம் தமிழ் மொழியின் பெருமையுடன். நம் தமிழ்நாட்டின் வரலாற்றைப் பறைசாற்றும் பெருவிழா! மாணவச் செல்வங்கள் அலைகடலென திரண்டு இந்தப் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்கொணர வேண்டுகிறேன்.


சென்னை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 14.07.2026 செவ்வாய்க் கிழமை அன்று காலை 9.00 மணிக்கு சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகைப் பதிவேட்டையும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பெறுகிறது.


தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும் "நான் விரும்பும் தமிழ்நாடு"."அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு", "இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு", "கல்வியில் சிறந்த தமிழ்நாடு", "வீரம் செறிந்த தமிழ்நாடு" ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.


இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள மாணவ மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக்கடிதம் பெற்றுவர வேண்டும். போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவ/ மாணவியர் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்.


தமிழ் வளர்ச்சி இயக்குநர்


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




Birth Certificate தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிகைச் செய்தி

 


பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிகைச் செய்தி


Press release by the District Collector regarding birth certificates


குறிப்பு: அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




செ.வெ.எண். 42, நாள். 10.07.2026


பத்திரிகைச் செய்தி


பிறப்புப் பதிவு-குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ வயது குறித்த ஆதாரம், குடியுரிமைக்கான ஆதாரம் ஆகும். குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றுதான் முழுமை பெற்ற சான்றிதழ் ஆகும்.


குழந்தையை பள்ளியில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை பெற, ஓட்டுநர் உரிமம்பெற, அரசுப் பணிகளில் சேர, கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச்சான்று இன்றியமையாத ஆவணமாகும்.


ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அப்பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாத காலத்திற்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளரிடம் சமர்ப்பித்து குழந்தையின் பெயரினை தாமத கட்டணமின்றி பதிவுசெய்து கொள்ளலாம்.


12 மாதங்களுக்கு பின் குழந்தையின் பெயரினை 15 வருடத்திற்குள் காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி, உரிய அலுவலரின் அனுமதி பெற்று பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு 15 வருடத்திற்கு மேற்பட்ட மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது பிறந்திருந்தாலும் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பிறப்புகளுக்கு வரும் 26.09.2026 வரை பெயர் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


குழந்தையின் பெயரினை இதுவரை பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யாதோர் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து குழந்தையின் பெயரினை பதிவுசெய்து கொள்ளலாம்.


பிறப்புச் சான்றில் குழந்தையின் பெயரினை ஒருமுறை பதிவு செய்த பின்னர் எக்காரணம் கொண்டும் பெயரினை மாற்றம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 26.09.2026-க்குள் குழந்தையின் பெயரினை பிறப்புச் சான்றில் பதிவுசெய்து பயன்பெறுமாறு மாவட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.ராஜகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி



மாணவர்களுக்கு ரூ.7.5இலட்சம் வரை பிணையம் இல்லாமல் கல்விக்கடன்

 


Collateral-free education loans up to Rs. 7.5 lakh for students - District Collector's press release


 வங்கிகளில் மாணவர்களுக்கு ரூ.7.5இலட்சம் வரை பிணையம் இல்லாமல் கல்விக்கடன் - மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



செ.வெ.எண்.29 , நாள்.07.07.2026


பத்திரிகைச் செய்தி


தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது,


 தேனி மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் வங்கிகளில் ரூ.7.5இலட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறுவதற்கு https://pmvidyalaxmi.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும்பொழுது மாணவர்களின் ஆதார் அட்டை, கல்லூரி சேர்க்கை கடிதம், கல்வி கட்டணம், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம், பெற்றோர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் பெற்றோர்களின் ஆதார் அட்டை, வருமான வரி அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும், மாணவர்கள் மூன்று வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேனி.


In-person-visit-free document registration becomes mandatory from 17.08.2026



பதிவுத் துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப் பதிவு 17.08.2026 முதல் கட்டாயம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு


Online, in-person-visit-free document registration in the Registration Department becomes mandatory from 17.08.2026 | Tamil Nadu Government Press Release


செய்தி வெளியீடு எண்: 348 , நாள்: 07.07.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



"பதிவுத்துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு"


மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்


திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தகவல்


மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் இன்று (07.07.2026) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் அலுவலர்/தனித்துணை (5) தணிக்கை). ஆட்சியர் (முத்திரை) மாவட்ட மற்றும் வருவாய் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


இந்த ஆய்வு கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:


தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் புதிய ஆட்சி பொறுப்பேற்றபின் பதிவுத்துறையில் லஞ்சம் வாங்கும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தினை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அலுவலர்கள் பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய இருக்கை வசதியை ஏற்படுத்தி, அவர்களுடைய குறைகளை கவனமாக விசாரித்து, லஞ்சம் வாங்குவதை தவிர்த்து, ஆவணப் பதிவுகளை உடனடியாக முடித்து, அன்றைய தினமே உரிய நபர்களிடம் பத்திரங்களை ஒப்படைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


பின்னர் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:


மாண்புமிகு தமிழ்நாடு அவர்கள் முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் அரசாக இந்த அரசு செயல்படும் என்பதை தெரிவித்தார். அதேபோல் அனைத்து துறைகளிலும் அதனை செயல்படுத்தும் விதமாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அறிவுரை வழங்கி வருகிறார். அந்த வகையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆய்வுக் கூட்டம் நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று எனது தலைமையில் பதிவுத்துறை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


தற்பொழுது அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே சார்பதிவாளர் நிலை அலுவலர்களுக்கு மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. 10.05.2026 முதல் நாளது வரை 259 சார்பதிவாளர்களைப் பொறுத்து மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 249 சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் மட்டுமல்லாமல், 10 நிர்வாக சார்பதிவாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேற்கண்ட மாறுதல் ஆணைகள் அனைத்தும் பணியாளர்களின் கோரிக்கையை அடிப்படையாக கொண்டும், வெளிப்படைத் தன்மையுடனும் சார்பதிவாளர்களின் திறன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் அலுவலகங்கள் மற்றும் பெருமளவில் ஆவணப்பதிவு மேற்கொள்ளப்படும் அலுவலங்களில், நிரந்தர சார்பதிவாளர்கள் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் விதமாக இம்மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி மாறுதல் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைப்பிடித்தும், நிர்வாக நலனை முன்னிறுத்தியும் பிறப்பிக்கப்பட்டுள்ள இம்மாறுதல் ஆணைகள் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை நிலை நிறுத்திட வழிவகுக்குகிறது.


மேலும், பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (Anywhere Registration) கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24 x 7 x 365) இணையவழி தங்களது ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்யும் வசதியான"வருகை இல்லா ஆவணப்பதிவு (Anywhere Registration)" நடைமுறை 17-08-2026 முதல் கீழ்க்கண்ட ஆவணங்களைப் பொறுத்து கட்டாயமாக்கப்படுகிறது.


அ) முதல் விற்பனை மனை (First sale of Plot)


ஆ) முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat)


புதிய நடைமுறை


1. பதிவுத்துறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவினை (Login) தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.


2. ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விபரங்கள் மற்றும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்ய வேண்டும்.


3. ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.


4. இணையவழி கட்டணம் செலுத்தி இணையவழியிலேயே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.


5. ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின், சார்பதிவாளர் இணையவழியில் கோரும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கலாம்.


6. சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண இரசீது சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் மின்கையொப்பத்துடன் ஆவணதாரருக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும்.


7. பதிவு செய்யப்பட்ட 60 நாட்கள் வரை பதிவுசெய்யப்பட்ட ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


8. பதிவுச்சட்டம், 1908-ல் விதி 32,52 மற்றும் 69-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு புதிதாக இணைய வழி பதிவு விதிகள் உருவாக்கப்பட்டு, இணையவழி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


9. இதுதொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பிரத்யேகமாக ஒர் உதவி மையம் செயல்படும்.


தொழில்நுட்ப தேவைகள்


1. இணைய இணைப்பு


2. ஆதார் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல் 0 & எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப் படலம் கவரும் கருவி


3. புகைப்படக்கருவி (Webcam)


இந்த புதிய நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள முடியும். இதனால் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் கணிசமாகக் குறையும். மேலும், அலுவலகங்களுக்கிடையேயான பணிச்சுமை சமநிலைப்படுத்தப்பட்டு பதிவுப் பணிகள் விரைவாக நடைபெறும். அதேவேளையில் பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைவதுடன் பதிவுச் சேவைகளின் தரம் செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனும் மேம்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலாளர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., பத்திரப் பதிவுத்துறை தலைவர் திரு. ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப.. கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9



பாடத்திட்டத்திற்கு அப்பால் இருந்து TETல் வினாக்கள் கேட்கப்பட்டனவா? | TRBன் விளக்க அறிக்கை

 


பாடத்திட்டத்திற்கு அப்பால் இருந்து TETல் வினாக்கள் கேட்கப்பட்டனவா? | TRBன்  விளக்க அறிக்கை


TRB Press News Dated 07-07-2026


ஆசிரியர் தகுதி தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் இருந்து வினாக்கள் கேட்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  விளக்க அறிக்கை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அறிவிக்கை எண் .01/2026, நாள்:13.02.2026-இன்படி நடைபெற்ற தகுதித்தேர்வு தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.



ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026 நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I 04.07.2026 அன்றும், தாள்-II 05.07.2026 அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.


பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள்-1 இல் 222 மையங்களில் 59,535 ஆசிரியர்களும். தாள்-II இல் 613 மையங்களில் 1,60,929 ஆசிரியர்களும் தேர்வை எழுதினர். இத்தகுதித்தேர்வில் தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டுள்ளதாக இத்தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்ததாக சில தினசரி பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி உள்ளது. இத்தேர்வு வினாத்தாள் சார்ந்த விவரங்கள் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.


பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு சார்ந்த 13.02.2026 நாளிட்ட அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் (Structure and content) கீழ் வழங்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய அரசாணை (நிலை) எண்.181, பள்ளிக் கல்வித் (C2) துறை. நாள்.15.11.2011 இன்படியும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட வெளியிடப்பட்டுள்ளன. பாடத்திட்டத்தின் அடிப்படையிலும்


குறிப்பாக, அறிவிக்கை எண்.01/2026இன் பக்கம் 3 தலைப்பு 4இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தாள்-I சார்ந்த பாடத்திட்டப் பகுதி பத்தி (v) இல் The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper I will be based


on the topics of the prescribed syllabus of the State for Classes I - V. but the standard, as well as linkages will be up to the Secondary Stage 6, சார்ந்த பாடத்திட்டப் பகுதி பத்தி (vi) இல் The questions in the Tamil Nau Teacher Eligibility Test Paper-II will be based on the topics of the prescribed syllabus of the State for Classes VI.VIII, but the standard, as well as linkages will be up to Higher Secondary (Senior Secondary) Stage குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே. அறிவிக்கை எண்.01/2026 நாள்:13.02.2026-இன்படி நடைபெற்ற தகுதித்தேர்வு தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.


இடம்: சென்னை

நாள் : 07.07.2026

ஆசிரியர் தேர்வு வாரியம்




2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தொடர்பான TRB தெளிவுரை




ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தொடர்பான  தெளிவுரை  தமிழில் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Press Release No : 333 Date: 03.07.2026 

 

PRESS RELEASE

Clarification on Certain Issues Regarding the Results of the Assistant Professor Recruitment Examination Conducted by the Teachers Recruitment Board

The Teachers Recruitment Board (TRB) hereby clarifies the position regarding certain concerns and issues circulating in public forums and social media relating to certain observations made about the examination process for recruitment to Assistant Professor posts.

Certain allegations have been made suggesting that discrepancies in candidate records indicate compromise or irregularity in the examination process. The Board wishes to categorically state that such claims are factually incorrect, misleading, and without basis.


Online Application and Hall Ticket Generation

Candidates submit their applications through the online portal by entering personal details including name, date of birth, gender, educational qualifications, community, disability status, and other required information.

For the limited purpose of enabling candidates to appear for the written examination, the online system vets the submitted applications using uploaded identity records and photographs. Hall Tickets are generated based on these submitted details.

To ensure that genuine candidates are not denied an opportunity to write the examination due to minor clerical mistakes made while entering their details, candidates are provided an opportunity to seek correction of such inadvertent errors, subject to verification.


Nature of the Reported Errors

The discrepancies currently being discussed pertain solely to certain data-entry errors committed by individual candidates while filling their online applications, and not to any lapse, irregularity, or manipulation by the Teachers Recruitment Board.


Illustrative examples include the following:

Case 1: Incorrect Date of Birth Entry

In one instance, a candidate inadvertently entered 05.06.2006 as the date of birth in the online application instead of the actual date of birth, 27.09.1991.

This error occurred because the candidate mistakenly entered the date appearing under the “TMR Code No. & Date” field in the SSLC mark certificate, instead of entering the actual date of birth recorded in the certificate.

The discrepancy is clearly attributable to an inadvertent data-entry error committed by the candidate during online submission. The relevant documents, namely:

* Copy of the concerned candidate’s online application

* Copy of the candidate’s SSLC mark certificate

have been examined and enclosed for reference. These documents clearly establish the nature of the error and confirm that it was purely clerical in nature, without any bearing on eligibility, merit, or the integrity of the examination process.

Case 2: Certificate Number Entered Instead of Candidate Name

In another instance, a candidate inadvertently entered her SSLC certificate number (AA 2772011) in place of her name while submitting the online application.

Upon noticing the error, the candidate personally appeared before the Teachers Recruitment Board and submitted a representation seeking correction, along with valid supporting identity documents.

After due verification of her credentials and confirmation of her identity, the Board permitted the candidate to appear for the written examination. This procedural correction was made solely to ensure that a genuine candidate was not denied an opportunity on account of an inadvertent clerical error.

The relevant supporting documents, namely:

* Copy of the concerned candidate’s online application

* Copy of the candidate’s representation/petition requesting name correction

* Supporting identity documents submitted for verification have been examined and are enclosed for reference.

This correction did not confer any undue advantage to the candidate, nor did it affect the integrity, fairness, or credibility of the examination process in any manner.


No Impact on Merit or Selection

Such clerical mistakes do not influence evaluation, marks, ranking, merit list preparation, or final selection in any manner.

The written examination, answer script evaluation, and publication of marks are conducted independently through established procedures with adequate safeguards to ensure fairness and objectivity.


Certificate Verification Ensures Final Accuracy

It is important to note that final selection is never based solely on online application entries.

Before final selection and appointment, every shortlisted candidate undergoes mandatory 

Certificate Verification (CV) in the presence of officials, during which all critical particulars are rigorously verified against original documents, including:

* Name

* Date of Birth

* Educational Qualifications

* Community Certificates

* Disability Status

* Other eligibility conditions

Only after successful verification are candidates considered for final selection.

Therefore, any minor mismatch or clerical error in the online application is detected and rectified during this stage.

Examination Process Remains Secure and Credible The Teachers 

Recruitment Board reiterates that:

* The examination was conducted fairly and securely

* Evaluation and publication of marks were carried out strictly as per established norms

* No candidate received undue advantage due to clerical mistakes

* No aspect of the merit determination process has been compromised

Accordingly, claims that the examination process has been compromised on account of these isolated candidate-side errors are baseless and without merit.

The public, candidates, and stakeholders are requested not to be misled by unverified or incomplete claims.

The Teachers Recruitment Board remains firmly committed to fairness, transparency, merit, and integrity in all recruitment processes.

Teachers Recruitment Board

Government of Tamil Nadu




SSLC மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு



பத்தாம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் 06.07.2026 இன்று பிற்பகல் வெளியீடு - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியீடு


SSLC re-totaling and re-evaluation results to be released today, 06.07.2026, in the afternoon - DGE Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



TET II தேர்வு எழுதியவர்களின் விவரம் - TRB செய்தி வெளியீடு



TET II தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% - TRB செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண். 01/2026, நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-II க்கான தேர்வு 05.07.2026 இன்று நடைபெற்றது.


இத்தகுதி தேர்வு தாள்-IIயை 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 1,60,929 தேர்வர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தகுதித்தேர்வு தாள்-II-இல் தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 95.94% ஆகும். அனைத்து மையங்களிலும் இத்தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் சுமூகமான முறையிலும் நடைபெற்றது.

தலைவர்


நாள் : 05.07.2026

இடம்: சென்னை -06


TET 1 தேர்வு எழுதியவர்களின் விவரங்கள் - TRB செய்தி வெளியீடு



TET 1 தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 96.99% - TRB செய்தி வெளியீடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ஆசிரியர் தேர்வு வாரியம்


பத்திரிக்கைச் செய்தி


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026, நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I க்கான தேர்வு 04.07.2026 இன்று காலை நடைபெற்றது.


இத்தகுதி தேர்வு தாள்-Iயை 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 59,535 தேர்வர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தகுதித்தேர்வு தாள்-I-இல் தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 96.99% ஆகும். அனைத்து மையங்களிலும் இத்தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் சுமூகமான முறையிலும் நடைபெற்றது.

தலைவர்

நாள்: 04.07.2026

இடம்: சென்னை -06



Part Time B.E., | தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



Part Time B.E., | தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 308, நாள் : 29-06-2026


B.E., Degree for Working Professionals Admission (Formerly Part Time B.E.,)


பட்டயப் படிப்பு முடித்து ஓராண்டு பணிபுரிந்த / பணிபுரியும் அலுவலர்களுக்கு பகுதி நேர பி.இ. பொறியியல் பட்டப்படிப்புகள் அறிமுகம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



15 காவல் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம்

 15 காவல் துறை அலுவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் - செய்தி வெளியீடு


2026-ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை.



செய்தி வெளியீடு எண்: 298 , நாள்: 26.06.2026


செய்தி வெளியீடு


2026ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி (26.06.2026), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை.


மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு "போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்" 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட காவல் அதிகாரிகள்/காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்கள்:


வ.எண். பெயர். பதவி மற்றும் பணிபுரியும் இடம் திருவாளர்கள்


1. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர். கடலூர் மாவட்டம்.


2. ஜி. சந்தீஷ், இ.கா.ப.. காவல் கண்காணிப்பாளர். இராமநாதபுரம் மாவட்டம்.


3. ஸ்ரீ. லட்சுமணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர். போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு, சென்னை.


4. வை. மனோஜ்குமார். காவல் உதவி ஆணையாளர், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு. நுண்ணறிவுப் பிரிவு. சென்னை பெருநகர காவல்.


5. மோ.கண்ணன். காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு. திருச்சி மண்டலம்.


6. பொ. காமராஜ். காவல் ஆய்வாளர். மத்திய நுண்ணறிவுப் பிரிவு, கோயமுத்தூர் மண்டலம்.


7. மு. அருண். காவல் உதவி ஆய்வாளர், குரங்கனி காவல் நிலையம், தேனி மாவட்டம்.


8. கே. ராஜ்குமார். தலைமைக் காவலர் -1868, குமுளி காவல் நிலையம், தேனி மாவட்டம்.


9. க. கார்த்திகேயன். தலைமைக் காவலர் 348, வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம்.


10. அ. குத்புதீன், தலைமைக் காவலர் 1288. கோட்டைப்பட்டினம் காவல் நிலையம், புதுக்கோட்டை மாவட்டம்.


11. க. ராமர், சிறப்பு உதவி ஆய்வாளர் -973, நல்லூர் காவல் நிலையம். திருப்பூர் மாநகரம்.


12. மு. ஐய்யப்பன். தலைமைக் காவலர் 2244. மதுவிலக்கு அமலாக்க பிரிவு, திருநெல்வேலி.


13. ந. பிரேம் குமார், தலைமைக் காவலர் 46983, R-3 அசோக் நகர் காவல் நிலையம். சென்னை பெருநகர காவல்.


14. உ.பி. செந்தில்குமார். சிறப்பு உதவி ஆய்வாளர் -1138, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு. கரூர் மாவட்டம்.


15. ச. ராமகிருஷ்ணன், தலைமைக் காவலர் 2120, போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, தேனி அலகு.


மேற்கண்ட பதக்கம் பெறுபவர்களின் சிறப்புப் பணிகள் பின்வருமாறு:-


1. திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் 28.12.2020 அன்று இந்திய காவல் பணியில் சேர்ந்து ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய காலத்தில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட நுண்ணறிவு சார்ந்த நடவடிக்கைகள் மூலம், 903 கிலோ கஞ்சா, 575 கிராம் மெத்தாம்பெட்டமைன், 74.5 கிராம் எம்.டி.எம்.ஏ., 55 கிராம் கோகைன் மற்றும் எல்.எஸ்.டி. தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வெளிமாநில மற்றும் அயல் நாட்டை சேர்ந்த குற்றவாளிகள் உட்பட 82 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ச்சியான விசாரணை, தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் திறமையான மேற்பார்வையின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயும் சர்வதேச அளவிலும் செயல்பட்ட போதைப்பொருள் வலையமைப்புகளை முறியடித்து, பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.


2. திரு. ஜி. சந்தீஷ், இ.கா.ப 17.12.2018 அன்று இந்திய காவல் பணியில் சேர்ந்தார். 12.01.2024 முதல் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் சட்ட வழிகாட்டுதல் படியும், அறிவுபூர்வமான விசாரணைகள் மற்றும் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலமாக, தான் பணியாற்றிய மாவட்டங்களில் போதைப்பொருள் குற்றங்களை கணிசமாகக் குறைத்துள்ளார். 2024-ஆம் ஆண்டு முதல் 347 NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 640 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், கஞ்சா, மெத்தாம்பெட்டமின் மற்றும் கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கிய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 2025 ஆம் ஆண்டில், 542 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம், இவரது மேற்பார்வையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய கஞ்சா பறிமுதல் நடவடிக்கையாகும்.










Supplementary Exam Hall Ticket Download - DGE Press Release

 


மேல்நிலை இரண்டாம் ஆண்டு / முதலாம் ஆண்டு துணைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்ககம் செய்தி குறிப்பு 


Supplementary Exam Hall Ticket Download - DGE Press Release 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




TET Hall Ticket தொடர்பான தகவல்கள்

 


TET Hall Ticket தொடர்பான தகவல்கள் 


TET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது


* ஆசிரியர் தேர்வு வாரியம் - பத்திரிகைச் செய்தி | 19.06.2026


* தேர்வு விவரம்:

தேர்வு: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 - TET

* அறிவிக்கை எண்: 01/2026, நாள் 13.02.2026

* தேர்வு நாட்கள்: 

     * தாள் I : 04.07.2026

     * தாள் II : 05.07.2026


* Hall Ticket விவரம்:

* ஹால் டிக்கெட் வெளியீடு: ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

* டவுன்லோட் செய்ய தொடக்கம் : 19.06.2026 முதல்

* எப்படி எடுப்பது: User ID மற்றும் Password பயன்படுத்தி Login செய்து பதிவிறக்கம் செய்யலாம்


ஹால் டிக்கெட் பிரச்சனை இருந்தால்:

* சிறப்பு முகாம்: 22.06.2026 முதல் 30.06.2026 வரை

* நாட்கள்: வேலை நாட்களில் மட்டும் - Working Days

* எங்கு: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக

* எதற்கு: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள், வேறு குறைகள் இருந்தால் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்


* முக்கிய தேதிகள்:

1. 19.06.2026 : ஹால் டிக்கெட் டவுன்லோட் ஆரம்பம்

2. 22.06.2026 - 30.06.2026 : சிறப்பு முகாம்

3. 04.07.2026 : TET தாள் I தேர்வு

4. 05.07.2026 : TET தாள் II தேர்வு


* கவனிக்க : இந்த தேர்வு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கானது. 



TET Hall Ticket - TRB Press Release





ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06.

பத்திரிகைச் செய்தி

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026, நாள் 13.02.2026ன் படி 2026 ஆம் ஆண்டிற்கான பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் தாள் II ற்கான தேர்வு எதிர்வரும் 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் 19.06.2026 முதல் அவர்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சிறப்பு முகாம் 22.06.2026 முதல் 30.06.2026 வரை (பணி நாட்களில் - Working Days) செயல்படும். நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ இச்சிறப்பு முகாம் அலுவலர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைவர்

இடம்: சென்னை

நாள் : 19.06.2026


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET - ஆந்திரா முதலமைச்சர் வாக்குறுதி

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET - ஆந்திரா முதல்வர் வாக்குறுதி TET தேர்வில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி பெற முடியும் என்பதை ...