கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இதய நாள அடைப்பு - அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும் (Coronary heart block – symptoms & treatment) - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா...



இதய நாள அடைப்பு - அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும் (Coronary heart block – symptoms & treatment) - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா...


 நமது உடலின் பாகங்கள் அனைத்துக்கும் ரத்தத்தை விசையுடன் உந்தித் தள்ளுவது இதயத்தின் பணியாகும். 


அத்தகைய இதயத்தின் தானியங்கும் வலிமை பெற்ற தசைகளுக்கு ஊட்டமளிப்பவை இதயத்துக்குரிய பிரத்யேக தமனிகள்


அந்த தமனிகளின் உட்புற சுவர்களில் 

சிறிது சிறிதாக அடைப்பு  (PLAQUE) ஏற்பட்டு 

ஒரு நாள் ஒரு பொழுது 

அந்த வீக்கமடைந்த உட்புற சுவரில் வெடிப்பு (PLAQUE RUPTURE)  ஏற்பட அந்த வெடிப்பை சரிசெய்யும் பொருட்டு ரத்த தட்டணுக்கள் அனைத்தும் ஒன்று கூடி ரத்தக்கட்டியை உடனடியாக உருவாக்குகின்றன. 


திடீரென உருவான அந்த  ரத்தக் கட்டி ( BLOOD CLOT)  ரத்த நாளத்தின் விட்டத்தை அபாய அளவுக்கு  சுருக்கி விடுகிறது. 


இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளில் இவ்வாறு திடீர் அடைப்பு ( MYOCARDIAL INFARCTION)  ஏற்படும் போது 


விசையுடன் துடிக்கும் இதயத்தின் தசைகளுக்கு திடீரென ரத்த ஓட்டம் தடைபடுகிறது


இதன் விளைவாக அடைப்புக்குள்ளான அந்த தமனி ஊட்டமளித்த இதயத்தின் பகுதிகள் செயல் முடங்கிப் போகின்றன 


இத்தகைய திடீர் செயல்முடக்கத்தின் பாதிப்பால்  இதயம்  தனது துடிப்பை நிறுத்திக் கொள்கிறது 


இதயம் தனது துடிப்பை நிறுத்திய சில நிமிடங்களுக்குள் முறையான சிபிஆர் (CARDIO PULMONARY RESUSCITATION) செய்யப்படுமாயின்

விரைவாக டீஃபிப்ரில்லேட்டர் எனும் இதயத்தின் மின் ஓட்டத்தை சீர் செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டால் 

இதயம் துடிக்கத் தொடங்கும். 


உடனடியாக ரத்த நாள அடைப்பை ஒரு மணிநேரத்திற்குள் ரத்தக்கட்டியைக் கரைக்கும் மருந்துகள் வழங்கப்பட்டால் 

மீண்டும் ரத்த ஓட்டம் தடைபட்ட தசைகளுக்கு ரத்த ஓட்டம் மீண்டும் கிடைக்கும். 


பிறகு அடைபட்ட இடத்தில் தேவைப்பட்டால் ஸ்டெண்ட் வைக்கப்படும். இதனால் ரத்த ஓட்டம் தடைபடாமல் மீண்டும் ஏற்படுத்தப்படும். 


இதயத்தின் முக்கிய தமனிகளில் அடைப்பு சதவிகிதம் மிக அதிகமாக இருப்பின் "பை பாஸ்" அறுவை சிகிச்சை செய்யப்படும்


இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்


நமக்கு ஏற்படும்

 

-நெஞ்சுப்பகுதி வலி தவிர


-மருந்துகளுக்கு கேட்காத நெஞ்செரிச்சல்

-தாடைப்பகுதி வலி

-மேல் வயிற்று வலி/ குமட்டல் /வாந்தி 

- இடப்பக்க மார்பு வலி இடப்பக்க தோள் பகுதிக்கு பரவுவது

- நடக்கும் போது நெஞ்சில் அழுத்தும் உணர்வு 

- படுக்கும் போது மூச்சுத் திணறும் உணர்வு ஏற்படுதல் 

- சிறிது தூரம் நடந்தாலும் அதீத மூச்சுத்திணறல் எடுப்பது 


போன்றவை இதயம் சார்ந்த 

சிக்கல்கள் இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள்


மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் 

உடனடியாக மருத்துவரை சந்தித்து 

ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டும். 


குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு

ஈசிஜி நார்மலாக இருந்தாலும்

இதய ரத்த நாள அடைப்பு ஏற்படக்கூடும்


எனவே இதயத்தின் தசைகள் காயமடையும் போது வெளிப்படுத்தும் நொதிகளான ட்ரோபோனின்  ,  க்ரியாடினின் கைனேஸ் ஆகியவை அளவில் கூடும். அதை வைத்தும் 

ரத்த நாள அடைப்பை அறியலாம். 


நெஞ்சுப்பகுதி வலி முன்னெப்போதும் இல்லாத அளவு குடைந்து அழுத்துவது போல இருந்தால் கூடவே நன்றாக குப்பென வேர்வை வந்து உடல் குளிர்ந்து போனால் வந்திருப்பது பெரும்பான்மை இதய ரத்த நாள அடைப்பு என்றறிக .


மன ரீதியாக பதட்டமடையாமல்

108 ஆம்புலன்ஸ் அல்லது தனியார் ஆம்புலன்ஸ் அழைத்துப் படுத்துக் கொண்டே மருத்துவமனை விரைய வேண்டும் 


இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்கள் நடக்கவோ வேறு பணிகள் புரியாமல் படுத்துக் கொண்டு மருத்துவமனை அடைவது நல்லது

 

கூடவே லோடிங் டோஸ் எனப்படும் 


ஆஸ்பிரின் 75 மிகி 

 நான்கு மாத்திரைகள்

( ரத்த தட்டணுக்கள் ஒன்றிணைந்து ரத்தக் கட்டி பெரிதாவதை தடுக்கும்)  


க்ளோபிடோக்ரெல் 75மிகி 

நான்கு மாத்திரைகள் 

( ரத்த தட்டணுக்கள் ஒன்றிணைந்து ரத்தக் கட்டி பெரிதாவதை தடுக்கும்)  


அடோர்வாஸ்டாடின் 10 மிகி 

எட்டு மாத்திரைகள் 

( ரத்த நாள வீக்கம் மேலும் வெடிக்காமல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தும் ) 


மாத்திரைகளை மொத்தமாக உட்கொள்ள வேண்டும். 


இதய நோய் சிறப்பு சிகிச்சை வசதி உள்ள மருத்துவமனையை விரைவில் அடைய வேண்டும் 


- இதயம் சார்ந்த அறிகுறியை 

புறந்தள்ளாமை

- உடனடியாக லோடிங் டோஸ் உட்கொள்வது

- உடனடியாக ஈசிஜி எடுப்பது  

- இதயம் செயல் நிறுத்தம் செய்தாலும் உடனடியாக சிபிஆர் மற்றும் டீஃபிப்ரில்லேட்டர் சிகிச்சை கிடைக்கச் செய்வது 


பதட்டப்படாமல் இதய நோய் சிறப்பு சிகிச்சை இருக்கும் மருத்துவமனைக்கு படுத்துக் கொண்டு விரைதல்


மேற்கூறியவற்றை செய்தால் 

இதய ரத்த நாள அடைப்பு சார்ந்த மரணங்களைக் குறைக்க முடியும் 

என்று நம்புகிறேன் 


தேவை விழிப்புணர்வும் 

அறிகுறிகளை அலட்சியம் செய்யாமையும் ஆகும்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இலவச ஆஞ்சியோபிளாஸ்டி முகாம் - 2023 ஜூன் 12 முதல் 18 வரை - 200 ஏழை நோயாளிகளுக்கு இலவச ஸ்டென்ட் (Free Angioplasty workshop at Sri Jayadeva institute of cardiovascular sciences and research - From 12th to 18th June 2023 - Free medicated Stents for 200 Poor Patients)...

 



>>> ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இலவச ஆஞ்சியோபிளாஸ்டி முகாம் - 2023 ஜூன் 12 முதல் 18 வரை - 200 ஏழை நோயாளிகளுக்கு இலவச ஸ்டென்ட் குறித்த செய்தி வெளியீடு (Free Angioplasty workshop at Sri Jayadeva institute of cardiovascular sciences and research - From 12th to 18th June 2023 - Free medicated Stents for 200 Poor Patients - Press Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...