காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு
Flood warning issued to people living along the Cauvery River
காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு
Flood warning issued to people living along the Cauvery River
MEFTAL மாத்திரை பயன்பாடு - எதிர்விளைவுகள் குறித்து இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரிக்கை (Medicines Authority of India warns about the use of MEFTAL tablets & side effects)...
மாதவிடாய் வலி, முடக்கு வாதம் உள்ளிட்ட வலிகளுக்கு பயன்படுத்தப்படும் 'MEFTAL' வலி நிவாரணி மாத்திரைகளால் மோசமான எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய அரசு எச்சரிக்கை.
ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு, தோல் எரிச்சல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மாத்திரை உட்கொண்ட 2 முதல் 8 வாரங்களுக்கு பின் தோன்ற வாய்ப்புள்ளது.
மருத்துவர்கள் அறிவுறுத்தல் இன்றி வலி எழும்போதெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் துறை மருத்துவர்களுக்கான அலர்ட் வழங்கியுள்ளது. இது குறித்த Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா அவர்களின் பதிவு...
அரசின் மருந்துகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்காணிக்கும் துறை மருத்துவர்களுக்கான அலர்ட் வழங்கியுள்ளது. இது போன்ற அலர்ட்களை தொடர்ந்து வழங்குவது இத்துறையின் பணியாகும்.
சமீபத்தில் வந்துள்ள அலர்ட்
"மெஃபினமிக் ஆசிட்" எனும் மருந்தினால் "ட்ரெஸ் (DRESS) எனும் பக்கவிளைவு அரிதினும் அரிதாக ஏற்படுவதாகவும்
இந்த மருந்தை பரிந்துரைக்கும் போது
இது குறித்த எச்சரிக்கை உணர்வு தேவை என்பதற்காக வழங்கியுள்ள அலர்ட்டாகும்.
மெஃபினாமிக் ஆசிட் மருந்தினால் DRESS ( DRUG REACTIONS WITH ESINOPHILIA & SYSTEMIC SYMPTOMS) எனும் பக்கவிளைவு ஏற்படும் என்பது இன்று புதிதாக அறியும் தகவல் அன்று.
ஏற்கனவே அறிவியல் பூர்வமான ஆய்வுகளிலும் இந்த மருந்தினால்
இதே பக்க விளைவு அரிதாக உண்டாகலாம் என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு அரிதினும் அரிதாக
- கடுமையான காய்ச்சல்
- உடல் முழுவதும் படை
- சோர்வு
- முக வீக்கம்
இத்துடன் முறையான சிகிச்சை அளிக்காவிடில் சிறுநீரகம் , கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழப்பும் ஏற்படலாம்.
இவர்களுக்கு ரத்த வெள்ளை அணுக்களில் ஈசினோஃபில்ஸ் அதிகமாக இருக்கும்
ரத்த தட்டணுக்கள் குறையும்
கல்லீரல் நொதிகளின் அளவுகள் கூடும்
இந்த பக்கவிளைவு ஏற்பட்டிருப்பதை அடையாளம் கண்டால் உடனடியாக மாத்திரையை நிறுத்தி விட்டு அதற்குரிய சிகிச்சையை பெற வேண்டும்.
இத்தகைய பக்கவிளைவுகள்
பத்து மில்லியனில் ஒருவருக்கு ஏற்படும் அரிதினும் அரிதான பக்கவிளைவாகும்.
மெஃபினமிக் ஆசிட் என்பது உடல் வலி போக்கும் மாத்திரையாகும்.
இதை மருத்துவப் பரிந்துரையில்லாமல் தொடர்ச்சியாக உட்கொண்டு வருவது தவறு.
எனினும்
மருத்துவ காரணங்களுக்காக
- அதீத மாதவிடாய் கால வலி
- குழந்தைகளில் ஏற்படும் அதீத காய்ச்சல்
ஆகியவற்றுக்காக மருத்துவ பரிந்துரையின் பேரில் உட்கொள்ளலாம்.
அதீத காய்ச்சலுக்கு மெஃபினமிக் ஆசிட் + பாராசிட்டமால் கலந்த சிரப்கள், ப்ரூஃபென் சிரப்கள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.
எனினும் சாதாரண காய்ச்சலுக்கு
பாராசிட்டமால் + குளிர் நீர் ஒத்தடம் போதுமானது.
அனைத்து காய்ச்சலுக்கும் மெஃபினமிக் ஆசிட் / ப்ரூஃபன் அவசியமற்றது.
குழந்தைகளுக்கு காய்ச்சல் அடித்தால் மருத்துவர் பரிந்துரைக்காமல் சுயமாக மெஃபினமிக் ஆசிட் / ப்ரூஃபென் போன்ற வலி நிவாரணிகள் கலந்த சிரப்களை பெற்றோர்கள் கொடுக்கும் போக்கு தவறானது.
பெண்களில் பலர் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு இந்த மெஃபினமிக் ஆசிட் கலந்த மாத்திரையை உட்கொண்டு வருகிறார்கள்.
இது சரியா?
பொதுவாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு கர்ப்ப பைகளின் தசைகள் சுருங்குவதால் வலி ஏற்படும்.
கர்ப்ப பை தசைகள் சுருங்குவதால் தான் கர்ப்ப பையின் உள்பக்க சுவரான எண்டோமெட்ரியம் உரிந்து மாதவிடாய் கால உதிரப்போக்காக வெளியேறுகிறது.
எனவே தாங்கிக் கொள்ளக் கூடிய பிணிக்கு எந்த மாத்திரையும் தேவையில்லை.
- அடிவயிறு மசாஜ்
- வெந்நீர் ஒத்தடம்
- ஓய்வு போன்றவை போதுமானது.
அனைவருக்கும் மாத்திரை மூலம் சிகிச்சை தேவையற்றது.
எனினும் பெண்களில் சிலருக்கு
இந்தப் பிணி தாங்கிக் கொள்ள இயலாத அளவு மிக அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு கர்ப்ப பை தசை சுருங்கி இருப்பதைத் தாண்டி இறுகிப் போகும். இதை கர்ப்ப பை தசை இறுக்கம் என்கிறோம்
இந்த நிலையில் ஏற்படும் அதீத பிணியைக் குறைக்க
டைசைக்ளோமின் எனும் மாத்திரை பயன்படுகிறது
இத்துடன் கூட மெஃபினமிக் ஆசிட் எனும் பிணி மாத்திரையும் இணைத்து தரப்படுகிறது.
இந்த மாத்திரையை மருத்துவ பரிந்துரையின் பேரில் அதீத பிணி இருக்கும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் மட்டும் உட்கொண்டு வருவதில் பிரச்சனை இல்லை.
அச்சப்படத் தேவையில்லை.
இன்னும் இத்தகைய அதீத மாதவிடாய் கால வலிக்கான காரணங்களை மருத்துவரிடம் கலந்தாலோசித்து கண்டறிய வேண்டும்.
அதுவே சரியான வழிமுறையாகும்.
சிலருக்கு எண்டோமெட்ரியோசிஸ் எனும் பிரச்சனை இருக்கலாம்
சிலருக்கு கர்ப்பபை ஃபைப்ராய்டு இருக்கலாம்.
இன்னும் சிலருக்கு பிசிஓஎஸ் இருக்கலாம்
இத்தகைய ஹார்மோன் சார்ந்த காரணங்களை கண்டறிந்து குணப்படுத்தினால் வலியும் குறையக்கூடும்.
அதீத வலிக்கு வலி நிவாரணி அவசியம் தான் ஆனால் இதைக் காரணமாகக் கொண்டு ஒரு தூக்கம் போட்டால் குணமாகும்
சாதாரண தலைவலி முதல் தாங்கக் கூடிய மாதவிடாய் வலிக்கும் வலி நிவாரணியின் துணையை நாடுவது தவறு.
காரணம்
எந்த மருந்தும் தேவைக்கு உபயோகிப்பதே சிறந்தது.
நாம் உண்ணும் அனைத்து மருந்துகளிலும் அதற்குரிய பக்க விளைவுகள் உண்டு.
எனவே
கட்டாயம் மருந்து தேவையா? என்பதை உறுதி செய்து
மருத்துவரிடம் சென்று காட்டி சிகிச்சை பெற்று பரிந்துரையின் படி மருந்து உட்கொள்வதே சிறந்தது.
மற்றபடி இந்த அலர்ட் என்பதற்கு பொது மக்கள் அதீத அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இந்த மாத்திரையை அதீத மாதவிடாய் கால வலிக்காக (DYSMENORRHOEA) மருத்துவ பரிந்துரையின் பேரில் உட்கொண்டு வரும் சகோதரிகள் அச்சப்படத் தேவையில்லை.
எச்சரிக்கை உணர்வு போதுமானது.
நன்றி
Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
>>> 31-10-2021ன் படி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியீடு - இணைப்பு: அக்டோபர் மாதத்தில் பெய்த மழை விவரம் மாவட்ட வாரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது...
மெட்ரிக் பள்ளிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தமிழக மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பல பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூடியிருப்பதை பார்க்க முடிகிறது. 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கவும், ஒன்பதாம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் பெறவும், பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், ஒரே நேரத்தில் அதிக கூட்டம் உள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றாமல், பல பள்ளிகளில் மாணவர்கள் திரளாக நிற்பது தெரியவந்துள்ளது.எனவே, பள்ளிகளில் கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மீண்டும் ஊரடங்கிற்கான சூழலை ஏற்படுத்திவிடாதீர்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை வீடியோ.
கொரோனா தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வதைத்து வருகிறது.
அரசின் நடவடிக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்களின் சேவையால் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வருகிறது.
முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் மக்கள் எச்சரிக்கை இன்றி இருப்பது வேதனையளிக்கிறது.
அதனால் அதிக கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட கூடாது என்றே கடைகளை திறக்க உத்தவிட்டுள்ளோம், ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிடக்கூடாது.
மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்திட வேண்டாம் என்று கடுமையாகவே சொல்கிறேன்.
மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வல்லமையும், உட்கட்டமைப்பும் தமிழக அரசுக்கு உண்டு, அதனால் கொரோனாவை விலை கொடுத்து வாங்க வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள்.
மூன்றாவது அலை கடுமையாக இருக்கும் என வல்லுனர்கள் சொல்வதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு நாம் மிக அவசியமான தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினியை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து நம்மையும், நாட்டையும் காப்போம் என தெரிவித்திருக்கிறார்.
உயர் தொழில்நுட்ப ஆய்வகம் : திருத்தப்பட்ட கால அட்டவணை - DSE செயல்முறைகள் , நாள் : 23-07-2025 Hi-Tech Lab : Revised Timetable - DSE Proceedi...