கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாடத்திட்டம் குறைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடத்திட்டம் குறைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு (Reduced Syllabus 2021-22) அரசாணை (G.O.Ms.No.126 , Dated:13-08-2021) வெளியீடு...



 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைப்பு (Reduced Syllabus 2021-22) அரசாணை (G.O.Ms.No.126, Dated:13-08-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.126, Dated:13-08-2021...


அரசாணை எண் 126, பள்ளிக் கல்வித் துறை நாள்: 13.08.2021ன் படி 2020-21ஆம் கல்வியாண்டிற்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டமானது 2021-22ஆம் கல்வியாண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12 வகுப்புகளுக்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம்...


>>> 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (Reduced Syllabus) விவரம்...



>>> ஒன்பதாம் வகுப்பிற்கான, அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...



>>> பத்தாம் வகுப்பிற்கான, குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...



>>> 11ஆம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...



>>> பன்னிரண்டாம் வகுப்பிற்கான, அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...



தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மாநில பாட திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் தற்போது வரை மூடப்பட்டுள்ளதால் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு தாகவும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான பாடங்கள் குறைக்கப்படுவதாகவும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் 40% குறைக்கப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.





பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆலோசனை...



 கொரோனா தொற்றால் நடப்பு கல்வியாண்டில்  பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆசிரியர்கள் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.



தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள்(Syllabus) குறைக்க ஆலோசனை : அமைச்சர் அன்பில் மகேஷ்...

 


தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள்(Syllabus) குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். எவ்வளவு சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்பது அதுபற்றிய ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நடப்பு கல்வியாண்டிலும் நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. 


எழுதுக இயக்கம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எழுதிய 100புத்தகங்கள் வெளியிடும் நிகழ்ச்சிசென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட்டார். இதில் பிரம்மோஸ் விண்வௌி மைய நிறுவனர் ஏ.சிவதாணு பிள்ளை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:


தமிழகத்தில் பள்ளிகள் திறப்புகுறித்து துறைரீதியான ஆலோசனை நடந்து வருகிறது. இதில் மருத்துவ வல்லுநர்களின் கருத்துகளையும் அறிய வேண்டியது அவசியம். தற்போது 3 மாநிலங்களில் பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.


பள்ளிகள் திறப்பு தாமதம் ஆவதால், பாடத் திட்டத்தை குறைப்பதுகுறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.


பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத 23 மாணவர்கள் மட்டும் துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதுதவிர, தனித் தேர்வர்கள் 39,579 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் துணைத் தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ள மாணவர்களை தக்கவைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.


தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாகஉயர் நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை முறையாக பின்பற்றி செயல்படுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விக் கட்டண விவகாரத்தில், தனியார் பள்ளிகளை தண்டிப்பதைவிட அறிவுறுத் தவே விரும்புகிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்.



மாணவர்களுக்கு பாடத்திட்டக் குறைப்பா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்...



 பாடத்திட்டத்தைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.


அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:


''ஸ்மார்ட் போர்டு, இன்ட்ராக்டிவ் போர்டு, ஹைடெக் ஆய்வகம் ஆகியவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று ஆரம்பகட்டமாக 432 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிவு செய்து, அந்தப் பணியைத் தொடங்கி இருக்கிறோம். இன்று முதல் 5 நாட்களுக்கு இந்தப் பயிற்சி ஆன்லைனில் நடைபெறும்.


அவர்கள் அடுத்தகட்டமாக மற்ற ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளார்கள். அந்த வகையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தொடக்கப் பள்ளி, நடுநிலை, மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளோம். இந்த நிகழ்வில் கல்வி தகவல் மேலாண்மை (EMIS) தளத்தில் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்வது குறித்தும் பயிற்சி வழங்கப்படும்.


பள்ளி மாணவர்களுக்குத் திடீரென 7 மாதங்களில் பொதுத் தேர்வு என்று அறிவிக்க முடியாது. பாடத்திட்டத்தைக் குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு மழலையர் வகுப்புகள் கட்டாயம் என்பது விதிமுறைகளில் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்''.


இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


பாடத்திட்டம் குறைப்பு குறித்து விரைவில் அரசாணை வெளியாகும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்...

 கொரோனா விடுமுறைக்கு பிறகு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுதினம் பள்ளிகள் திறக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எழும்பூரில் உள்ள பிரசிடென்ஸி மகளிர் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருவதாக கூறினார். மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கொரோனா அச்சத்தைப் போக்கும் விதமாக மாணவர்களுக்கு 2 நாட்கள் மனநல ஆலோசனை வழங்கப்படவுள்ளதாகவும் கண்ணப்பன் தெரிவித்தார்.

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு 50 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைய வாய்ப்பு - ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகிறது...

 நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்புதாமதம் காரணமாக 50 சதவீத அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதளவழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு 10, 12-ம்வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குபின் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே கல்வியாண்டு தாமதம் காரணமாக நடப்பு ஆண்டு1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையும்பாடத்திட்டம் குறைக்கப் பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.

இதற்கான பணிகளில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆர்டி) ஈடுபட்டது. தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கும் 50 சதவீதம்வரை பாடத்திட்டம் குறைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் நடப்பு கல்வியாண்டில் 60 சதவீத வேலைநாட்கள் முடிந்துவிட்டன. மீதமுள்ள நாட்களில் பாடங்களை நடத்த போதுமான அவகாசம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு 10, 12-ஆம் வகுப்புகளுக்கு பாடஅளவு குறைப்பு 45 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டக் குறைப்பு பாடங்கள் வாரியாக மாறுபடும். அதற்கான பணிகளும் முழுமையாக முடிந்துவிட்டன. இதுகுறித்த தொகுப்பறிக்கை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடுவார். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்படும்.

இதுதவிர, பள்ளிக்கு வர இயலாமல் வீட்டிலிருந்தபடி கல்வி பயிலும் மாணவர்கள், அரசின் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களைப் படித்தால் போதுமானது. எனவே, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சம் வேண்டாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்

பாடத்திட்டங்கள் குறைப்பு மூன்று நாட்களுக்குள் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன்...

 


பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை, மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால், 'ஆன்லைன்' மூலமாக, அரையாண்டு தேர்வை நடத்துவதில், எந்த ஆட்சேபனையும் இல்லை.

இன்றைய கொரோனா சூழலில், அனைத்து வகுப்புக்கும், பாடத்திட்டங்கள், 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பாடங்களை ஆசிரியர்கள் போதிக்கின்றனரோ, அந்த பாடங்களில் இருந்து தான், தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்.

மத்திய தேர்வு வாரியம், சி.பி.எஸ்.இ., 10 முதல் பிளஸ் 2 வகுப்புக்கு, இறுதியாண்டு தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால், மாநில அரசின் தேர்வு வாரியம், இந்த வகுப்புகளுக்கு, தேர்வு நடத்துவது குறித்து, பின்னர் தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...