கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சேஷசாயி நிறுவனத்தில் காகிதக் கூழ் டிப்ளமோ - TNPL நிறுவனம் 3 -1/2 ஆண்டுகள் கல்வி கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறது - விண்ணப்பிக்க கடைசி நாள்: 03-07-2021...

 சேஷசாயி நிறுவனத்தில் காகிதக் கூழ் டிப்ளமோ (Diploma in Paper Technology) - TNPL நிறுவனம் 3 -1/2 ஆண்டுகள் கல்வி கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறது - விண்ணப்பிக்க கடைசி நாள்: 03-07-2021...






12ஆம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு கணக்கீடு...



12ஆம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு கணக்கீடு...


10 ஆம் வகுப்பு

உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண் 70,80,90 எனக்கொண்டால் இவற்றின் சராசரி, அதாவது மூன்றையும் கூட்டி மூன்றால் வகுக்க கிடைப்பது 80 ஆகும். இந்த 80 இல் 50 சதவீதம் 40 ஆகும். இந்த 40 மதிப்பெண்ணை 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாட மதிப்பெண்ணுக்கும் கூட்டிக்கொள்ள வேண்டும்.


11ஆம் வகுப்பு


தமிழில் பெற்ற மொத்த மதிப்பெண் 90 எனில் அக மதிப்பீட்டு மதிப்பெண் 10 போக மீதம் உள்ளது 80 ஆகும். இதில் 20 சதவீதம் எடுத்துக்கொள்ள வேண்டும். 80 ஐ 20 ஆல் பெருக்கி 90 ஆல் வகுத்துக்கொள்ள வேண்டும். அப்படியெனில் 17.77 =18  ஆகும். அதாவது 12 ஆம் வகுப்புக்கு தமிழ் பாடத்தில் சேர்க்க வேண்டிய மதிப்பெண் 18 ஆகும். இதுவே இயற்பியல் பாடத்தில் ஒருவரது மொத்த மதிப்பெண் 90 எனில் செய்முறைதேர்வு மதிப்பெண் 20 அகமதிப்பீட்டு மதிப்பெண் 10 போக மீதம் இருப்பது 60 ஆகும். இதற்கு 20 சதவீதம் என்பது  60 ஐ 20 ஆல் பெருக்கி 70 ஆல் வகுக்க வேண்டும். எனவே இயற்பியல் மதிப்பெண் ஆனது 17.14 =17 ஆகும். அதாவது 12 ஆம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் சேர்க்க வேண்டிய மதிப்பெண் 17 ஆகும். இதே போன்று ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட வேண்டும்.


12 ஆம் வகுப்பு


இதில் செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு 20 + அக மதிப்பீட்டு மதிப்பெண்ணுக்கு 10 என மொத்தம் 30 மதிப்பெண் எடுத்துக்கொள்ள வேண்டும். செய்முறைத் தேர்வு இல்லாத படங்களுக்கு அந்தந்த பாடத்திற்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டு மதிப்பெண்ணை மூன்றால் பெருக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு தமிழ் பாடத்தில் அக மதிப்பீட்டு மதிப்பெண் 8 வழங்கப்பட்டது எனில் அவருக்கு 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்திற்கு 8×3=24 என எடுத்துக்கொள்ள வேண்டும்.



12ஆம் வகுப்பிற்கு மதிப்பெண் வழங்கும் முறை


உதாரணமாக தமிழ் பாடத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

பத்தாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண்  40, பதினோன்றாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 18, பண்ணிரண்டாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 24 ஆகிய  அனைத்தையும் கூட்ட கிடைப்பது 40+18+24=82. எனவே 12 ஆம் வகுப்பிற்கு அவருக்கு தமிழ் பாடத்தில் 80 மதிப்பெண் வழங்கப்படும். இதே முறையை அனைத்து பாடங்களுக்கும் பின்பற்றவும்.


>>> 12ஆம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு கணக்கீடு...


>>>  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து தமிழ்நாடு முதல்வர் செய்தி அறிக்கை வெளியீடு...


கல்வி தொலைக்காட்சியை நம் Mobile Phoneல் LIVE ஆக ஒரே நிமிடத்தில் பார்ப்பது எப்படி? MOBILE APP...



கல்வி தொலைக்காட்சியை நம் Mobile Phone ல் LIVE ஆக ஒரே நிமிடத்தில் பார்ப்பது எப்படி? 


1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை, புதிய கல்வியாண்டு 2021-2022க்கான பாடங்கள், கல்வி TVல், சீரான கால அட்டவணைப்படி ஒளிபரப்பாகிறது...


அதை  Mobile ல் LIVE ஆக பார்க்க வேண்டுமா? 


மேலே உள்ள Tamil Cloud என்ற app ஐ Play store இல் Download செய்து அதில் Channel No.14ஐ தேர்ந்தெடுத்து Full Screen இல் உங்கள் பாடங்களை தெளிவாக பார்த்து கொள்ளலாம். 


Exit  ஆக  Back Positionஐ இரு முறை அழுத்தி வெளியேறலாம்.


>>> Click here to Download App...


மாணவர்களுக்கு அவசியமான இப்பதிவினை அனைவருக்கும் "SHARE" செய்யவும்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 01-07-2021 முதல் வழங்கிட உள்ளதாகவும் - வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகையானது 3 தவணைகளில் வழங்கிட உள்ளதாகவும் இந்திய நிதித்துறை செயலாளர் உத்தரவு என பரவும் செய்தியின் உண்மைத்தன்மை...

 மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 01-07-2021 முதல் வழங்கிட உள்ளதாகவும் - வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத்தொகையானது 3 தவணைகளில் வழங்கிட உள்ளதாகவும் இந்திய நிதித்துறை செயலாளர் உத்தரவு...

OFFICE MEMORANDUM 

Subject : Resumption of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Central Government Pensioners from July 2021. 


The undersigned is directed to say that the Dearness Allowance and Dearness Relief frozen during COVID - 19 crisis is to be resumed from 1st July , 2021. The additional instalments of Dearness Allowance and Dearness Relief due from 1st July , 2020 and 1st Jan 2021 shall be paid in three instalments . 2. These orders shall be applicable to all Central Government employees and Central Government pensioners





பரவும் இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராயப்பட்டதில் இச்செய்தி மற்றும் அவ்வாணை போலியானது என்பதும் இந்திய அரசு அவ்வாறு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது...






ஓய்வூதியர்களுக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஓய்வூதிய சீட்டு இனி மாதாந்தோறும் ஓய்வூதியம் பெறும் வங்கிகளிலிருந்து அனுப்பப்படும்...

Issue of pension slip through SMS, Email and Whatsapp by Pension Disbursing banks on monthly basis...


25.06.2021 முதல் 30.06.2021 வரை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் +2 மாணவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்க்க / புதுப்பிக்க (Verify & Update) அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு...

 


அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் 25.06.2021 முதல் 30.06.2021 வரை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் +2 மாணவர்களின் (2020-21ஆம் கல்வி ஆண்டு) 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்க்க / புதுப்பிக்க (Verify & Update) அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு...


Attention to all Chief Educational Officers,

Chief Educational Officers are kindly requested to instruct Head Masters of all Higher Secondary Schools to verify / update the 10th standard marks of +2 students (2020-2021) as per Nominal Roll with their Mark Certificates / Records submitted during +1 admission in the Directorate of Government Examinations website (www.dge.tn.gov.in) from 25.06.2021 forenoon to 30.06.2021. 

After completing verification the final list of candidates verified / updated by schools should be certified by respective Head Masters and the same to be handed over to the concerned district Assistant Director of Government Examinations without fail. The above on-line application will be available live from 25.06.2021 forenoon. 

Sd./- 

DIRECTOR


>>> Click here to Download Director of Government Examinations Circular...


2020-21-ல் +2 தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும் அரசு தேர்வுகள் இயக்குநரகத்தின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அணையிடப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், பிளஸ் டூ தேர்வுகளை ரத்து செய்த மாநிலங்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை வெளியிட உத்தரவிட்டது.


மேலும் 10 நாட்களுக்குள் மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து தெரிவிக்கவும் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், +2 மாணவர்கள் 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை சரிபார்த்து நாளைமுதல் வருகிற 30ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றவேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. +2 மதிப்பெண் கணக்கீட்டிற்கு தேவைப்படுவதால் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநரிடமும் பட்டியலை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ +2 தேர்வு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை கவனித்தபிறகே மாநில அளவிலான +2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிட முடியும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். சிபிஎஸ்இ +2 மதிப்பெண்ணானது மாணவர்கள் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் விகிதத்தைக்கொண்டே வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தமிழக அரசும் +2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது.

12 ஆசிரியரல்லா நிரந்தரப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-06-2021...

 


  12 ஆசிரியரல்லா நிரந்தரப் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-06-2021...


>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...