SMC ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
SMC ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Creation of an electronic monitoring system within the TNSED Parents app to oversee the appointment and functioning of temporary teachers recruited through the SMC - DEE Proceedings
SMC மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் பணி நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க TNSED Parents செயலியில் மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்கம்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி - பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parents App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன் மொழிவு பெறப்பட்டது - சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனுப்புதல் - தொடர்பாக தொடக்கக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், சென்னை-06
ந.க. எண்:007242/டி1/2026, நாள்: .07.2026
பொருள்:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி - பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parent App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன் மொழிவு பெறப்பட்டது சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனுப்புதல் - தொடர்பாக
பார்வை:
1. அரசாணை(நிலை) எண்.07, பள்ளிக்கல்வித் (5(2)) துறை. நாள்.01.01.2023
2. சென்னை-06, தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடித ந.க.எண்.1338/எஸ்1/எஸ்.எம்.சி/எம்2/2026, நாள் : 19.06.2026
பார்வை (1)-பள்ளி காணும் அரசாணை வழிமுறைகளின்படி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தும் நோக்கில் TNSED பெற்றோர் செயலியில் (Parent App) முன்மொழியப்பட்டுள்ள மின்னணு கண்காணிப்பு அமைப்பு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் விவரங்களை எளிமையாகக் கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பயனுள்ள கண்காணிப்பை மேற்கொள்ளவும் உதவும், சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட மாவட்ட, வட்டார ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுறுத்திட பார்வை (2)-இல் காணும் தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடித நகல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்படுகிறது.
இணை இயக்குநர்(நிர்வாகம்).
இணைப்பு: கடித நகல்
பெறுநர்.
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்(தொடக்கக்
நகல்.
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள். (உரிய வழியாக)
அனுப்புநர்:
உறுப்பினர் செயலர்,
தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் சங்கம்,
பள்ளிக் கல்வித்துறை.
டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சாலை,
சென்னை - 600 006.
பெறுநர்:
1 இயக்குநர்.
பள்ளிக் கல்வி இயக்ககம்,
2 இயக்குநர்.
தொடக்கக் கல்வி இயக்ககம்,
சென்னை-600 006.
RC No: 1338/S1/SMC/MS/2026, Date: 19-06-2026
பொருள்: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMCs) மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் பணி நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parent App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன்மொழிவு-தொடர்பாக.
பார்வை: அரசாணை (நிலை) எண். 07, பள்ளிக் கல்வி 5(2) துறை, நாள் 01.01.2023.
அரசாணை (நிலை) எண். 07, பள்ளிக் கல்வித் துறை, நாள் 07.01.2023இல் காண் வழிமுறைகளின்படி, நீண்டகால விடுப்பு, மாற்றுப் பணி, காலிப்பணியிட மாற்றம், மருத்துவ விடுப்பு. மகப்பேறு விடுப்பு அல்லது பிற நிர்வாகக் காரணங்களால் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஏற்படும் பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதற்காக, பள்ளி மேலாண்மைக் குழு (SMCs) மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் விவரங்களை முறையாகப் பதிவுசெய்து கண்காணிப்பதற்காக TNSED பெற்றோர் செயலியில் தனித்துவமான மின்னணு தொகுதியை (Digital Module) உருவாக்க இதன்வழியாக முன்மொழியப்படுகிறது.
முன்மொழியப்படும் தொகுதியில் பின்வரும் கூறுகள் இடம்பெறலாம்:
1. பள்ளி வாரியாக தேவைகளை உள்ளீடு செய்தல்
o தற்காலிக ஆசிரியர் நியமனம் தேவைப்படும் காலிப்பணியிட விவரங்களை தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம்.
0 காலிப்பணியிடத்திற்கான காரணம், காலஅளவு, பாடம் மற்றும் கற்பிக்க வேண்டிய வகுப்பு விவரங்கள் பதிவு செய்யப்படலாம்.
2. பள்ளி மேலாண்மைக் குழு தீர்மான பதிவேற்றம்
௦ தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்த பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானத்தை மின்னணு வடிவில் பதிவேற்றம் செய்தல்.
0 பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்ற நாள் மற்றும் தீர்மான எண் பதிவு செய்தல்.
3. ஆசிரியர் விவரப் பதிவு
0 தற்காலிக ஆசிரியரின் பெயர், கல்வித் தகுதி, கைபேசி எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட அடையாள விவரம், பாட நிபுணத்துவம் மற்றும் பணிக்காலம் ஆகியவற்றை பதிவு செய்தல்.
O பணியில் சேர்ந்த நாள் மற்றும் பணிவிடுவிக்கப்பட்ட நாள் ஆகியவற்றை மின்னணு முறையில் பதிவு செய்தல்.
4. வருகைப் பதிவு மற்றும் ஊதிய கண்காணிப்பு
o மாதத்தில் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை பதிவு செய்தல்
0 அரசின், நடைமுறைகளின்படி வழங்கப்படும் மதிப்பூதியம் / ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரங்களை கண்காணித்தல்
5. மாவட்ட மற்றும் மாநில தகவல் கண்காணிப்பு முகப்புப் பலகை (Dashboard)
பணியில் உள்ள தற்காலிக ஆசிரியர்களின் எண்ணிக்கை, பணிக்காலம், காலிப்பணியிட வகை மற்றும் பள்ளி வாரியான நிலை ஆகியவற்றை நிகழ்நேரத்தில் (Real-time) மாநில மற்றும் மாவட்ட அளவில் (CEO, DEO Ele & Sec, BEO) கண்காணித்தல்.
நீண்டகாலமாக நீடிக்கும் காலிப்பணியிடங்கள் மற்றும் அப்பணியிடத்தில் தற்காலிக
ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக முன் அறிவிப்புகள் மாவட்ட அளவில் (CEO/DEO(E) - Login) வழங்குதல்.
6. கொள்கைத் திட்டமிடலுக்கான தரவுக் களஞ்சியம்
0 தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் மற்றும் காலிப்பணியிட மேலாண்மை தொடர்பான நிர்வாக முடிவெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை மாநில அளவில் (State Login) உருவாக்குதல்.
முன்மொழியப்படும் இவ்வமைப்பு மூலம்:
அரசாணைகளைத் தரப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்துதல்.
பள்ளி மேலாண்மைக் குழு அடிப்படையிலான நியமனங்களில் வெளிப்படைத்தன்மை மேம்படும்.
நீண்டகாலமாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை கண்டறிய வழி ஏற்படும்.
அங்கீகரிக்கப்படாத நியமனங்கள் தடுக்கப்படும்.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான அலுவலர்களால் நிகழ்நேர (Real-time)
கண்காணிப்பு மேற்கொள்ள இயலும்.
பள்ளிகளில் கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகளின் தொடர்ச்சி சிறப்பாக உறுதி செய்யப்படும்.
மேற்கண்ட விவரங்கள் தங்களது கனிவான தகவலுக்காகவும், இயக்கக அளவில்
தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சமர்ப்பிக்கப்படுகின்றன.
விவரங்களை TNSED பெற்றோர் செயலியில் முன்மொழியப்பட்டுள்ள மின்னணு கண்காணிப்பு அமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் மாவட்டங்கள் முழுவதும் எளிமையாகக் கண்காணிக்கவும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும். பயனுள்ள கண்காணிப்பை மேற்கொள்ளவும் உதவும். மேலும், இத்தொகுதியின் சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதிசெய்திட மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உறுப்பினர் செயலர்
* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.23.3
* Updated on 05-07-2026
👉 Simple Gov - Foreign Trip Module Implemented
About this App
✨ குழந்தைகளுக்கான GCompris Educational Software-ன் முக்கிய பயன்பாடுகள்
🔢 1. கணிதத் திறனை வளர்க்க உதவுகிறது
எண்களை அறிதல்
எண்ணிக்கை சொல்லுதல்
கூட்டல், கழித்தல் கற்றல்
வடிவங்கள் மற்றும் முறைகள் (patterns) புரிதல்
நேரம், அளவு போன்ற அடிப்படை கருத்துகளை அறிதல்
🔤 2. மொழித் திறனை மேம்படுத்துகிறது
தமிழ் / ஆங்கில எழுத்துக்களை அறிதல்
சொற்களை வாசிக்கப் பழகுதல்
எழுத்து–சொல் பொருத்துதல்
கேட்டு புரிதல் மற்றும் வாசிப்பு திறனை வளர்த்தல்
🖥️ 3. கணினி பயன்படுத்தும் திறனை கற்பிக்கிறது
மவுஸ் பயன்படுத்த கற்றுக்கொடுக்கிறது
கிளிக், டிராக், டிராப் போன்ற அடிப்படை செயல்களை பயிற்சி செய்கிறது
கீபோர்டைப் பயன்படுத்தி தட்டச்சு பழக்கத்தை உருவாக்குகிறது
கணினியுடன் பழகும் நம்பிக்கையை அளிக்கிறது
🧠 4. சிந்தனை மற்றும் தர்க்கத் திறனை மேம்படுத்துகிறது
நினைவாற்றலை வளர்க்கும் செயல்பாடுகள் உள்ளன
தர்க்க ரீதியாக யோசிக்கும் திறனை வளர்க்கிறது
பிரச்சினைகளை தீர்க்கும் திறனை மேம்படுத்துகிறது
கவனம் மற்றும் ஒருமைப்பாட்டை அதிகரிக்கிறது
🎨 5. ஆரம்பக் கற்றலை எளிதாக்குகிறது
நிறங்களை அறிதல்
வடிவங்களைப் புரிதல்
பொருத்துதல் (matching) செயல்பாடுகள்
வரிசைப்படுத்துதல் (sequencing) திறன்
சிறு குழந்தைகளின் அடிப்படை கற்றலுக்கு உதவுகிறது
🧩 6. விளையாட்டு மூலம் கற்றலை சுவாரஸ்யமாக்குகிறது
புதிர்கள் மூலம் கற்றல்
விளையாட்டு போல இருக்கும் கல்விச் செயல்பாடுகள்
கற்றல் சலிப்பில்லாமல் அமையும்
குழந்தைகள் ஆர்வத்துடன் கற்க உதவுகிறது
👨🏫 7. ஆசிரியர்களுக்கு பயனுள்ளது
வகுப்பறையில் பயன்படுத்தலாம்
கணினி ஆய்வகப் பயிற்சிக்கு உதவும்
செயல்வழிக் கற்றலுக்கு ஏற்றது
மாணவர்களை ஈர்க்கும் டிஜிட்டல் கற்றல் கருவியாக செயல்படும்
👨👩👧 8. பெற்றோருக்கும் உதவிகரமாக உள்ளது
வீட்டிலேயே குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கலாம்
பள்ளியில் கற்றவற்றை மீண்டும் பழக்க முடியும்
குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக மாற்றலாம்
🌱 9. மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கு உதவுகிறது
அடிப்படை கருத்துகளை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ய உதவுகிறது
பயமில்லாமல் கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குகிறது
தனிநபர் வேகத்தில் கற்க உதவுகிறது
🎯 10. பல திறன்களை ஒரே இடத்தில் வளர்க்கிறது
பாட அறிவு
கணினித் திறன்
நினைவாற்றல்
கவனிப்பு திறன்
தர்க்க சிந்தனை
பிரச்சினை தீர்க்கும் திறன்
இவற்றை ஒரே செயலியில் வளர்க்க உதவுகிறது
To Download GCompris Application
For Windows
https://download.kde.org/stable/gcompris/qt/windows/gcompris-qt-26.1-win64-gcc.exe
For macOS
https://download.kde.org/stable/gcompris/qt/macos/gcompris-qt-4.3-Darwin.dmg
For Android
https://play.google.com/store/apps/details?id=net.gcompris.full
Download and Enjoy...!
* TNSED Schools App
* What's is new..?
🎯 Added enhancements to the Uniform
📍Noon Meal, and Breakfast Schemes module
The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.
Pay Drawn Particulars Download Procedure in Kalanjiyam App
களஞ்சியம் செயலியில் Pay Drawn Particulars Download செய்யும் வழிமுறை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
2024-2025, 2025-2026, 2026-2027 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கும் Pay Drawn Particulars டவுன்லோட் செய்யலாம்.
தகவலுக்காக
* Kalanjiyam app இல் கீழ்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்களுடைய மே - 2026 மாத ஊதியத்தை தெரிந்து கொள்ளலாம்.
* Pay slip ஐகான்க்கு பதிலாக கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
* Kalanjiyam app - Reports - Pay drawn - 2026 : 2027 - Submit
தற்போது TNSED Schools App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது
TNSED Schools App New Version: 0.4.1 - Updated on 22-04-2026 - Application Enhancements and Performance improvements have been implemented
* TNSED Schools App
* What's is new..?
🎯 Application Enhancements and Performance improvements have been implemented
UPDATED ON 22 May 2026
Version: Now 0.4.1
Link:
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
Official app for the teachers by State School Education Department, Tamil Nadu
The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.
TN Noon Meal Program App Update New version 4.0.3
Noon Meal Monitoring application for Tamilnadu state govt schools
PM POSHAN Tamilnadu Noon Meal App Version
New version 4.0.3
Update date 16.05.2026
https://play.google.com/store/apps/details?id=in.co.bsnl.chennai.pmp
TN Noon Meal Program App Update
Noon Meal Monitoring application for Tamilnadu state govt schools
PM POSHAN Tamilnadu Noon Meal App Version 1.20
New version 4.0.3
Update date 02.05.2026
https://play.google.com/store/apps/details?id=in.co.bsnl.chennai.pmp
22.04.2026 மற்றும் 23.04.2026 அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ECINET PRO Module செயலியில் மேற்கொள்ள வேண்டிய பதிவுகள் விவரம்
PrO App Timeline
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
உங்களுக்கு Booth Slip கிடைக்கவில்லையா? - ECINET App மூலம் தகவல் அறியலாம்
உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? உங்களுக்கு பூத் ஸ்லிப் கிடைக்கவில்லையா?
நீங்கள் வாக்கு அளிக்க வேண்டிய வாக்குச்சாவடி மையம் எது என்று தெரியவில்லையா?
எல்லாவற்றையும் எளிதில் தெரிந்து கொள்ள google playstore ல் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள ECINET மொபைல் ஆப் ஐ தரவிறக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் ஒரே செயலியில் வாக்காளர் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறலாம்.
ECINET செயலி என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தால் (ECI) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு "சூப்பர் செயலி" ஆகும். இது 40-க்கும் மேற்பட்ட தனித்துவமான தேர்தல் தொடர்பான சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது. வாக்காளர் பதிவு (படிவம் 6), டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பதிவிறக்கம் செய்தல் (e-EPIC), வாக்காளர் பட்டியலைத் தேடுதல், விண்ணப்ப நிலையைக் கண்காணித்தல், வாக்குச் சாவடிகளைக் கண்டறிதல், வேட்பாளர் விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் cVIGIL வழியாக விதிமீறல்களைப் புகாரளித்தல் ஆகியவை இதன் முக்கியப் பயன்பாடுகளில் அடங்கும்.
https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.app
இன்று (17.04.2026) TNSED Attendance Appல் ஆசிரியர் வருகைப்பதிவு செய்யும் முறை
வணக்கம்
17.04.2026 Friday
Today Attendanceல்
Fully Not working எனவும்,
Reason இல் Others எனவும் தேர்வு செய்து
Save கொடுக்கவும்.
பின்னர் வழக்கம்போல Teacher Attendance பதிவு செய்யலாம்.
ஆசிரியர்களுக்கு மட்டும் காலை மாலை என இருவேளையும் வருகை பதிவு செய்யவும்
துப்புரவு பணியாளர்களுக்கும் வழக்கம் போல் பதிவு செய்யவும்
மாணவர் வருகைப்பதிவு செய்ய முயற்சி செய்தால் கீழேயுள்ளது போன்று தகவல் காட்டும்
SA Term 3 – மதிப்பெண் பதிவு தொடர்பான அறிவிப்பு:
Term 3 Summative Assessment மதிப்பெண் பதிவு module, 06.04.2026 முதல் 20.04.2026 வரை செயல்பாட்டில் இருக்கும்.
மதிப்பெண்களை பதிவு செய்வதற்கு முன், தயவுசெய்து உங்கள் App-ஐ play store-ல் TNSED Schools App update செய்து கொள்ளவும். மதிப்பெண்களை சரியாக, அனைவரும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
App link :
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
தற்போது TNSED Schools App-ல் RTE attendance Enhancement added புதிய அப்டேட் வெளியாகியுள்ளது
TNSED Schools App New Version: 0.4.0 - Updated on 05-04-2026 - RTE attendance Enhancement added
* TNSED Schools App
* What's is new..?
🎯 RTE attendance Enhancement added
UPDATED ON 05 April 2026
Version: Now 0.4.0
Link:
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
TNSED Schools app update, செய்தபின் log out செய்து log in செய்தால் மதிப்பெண்கள் பதிவிட முடியும்.
Official app for the teachers by State School Education Department, Tamil Nadu
The app will be used by the teachers, Heads of schools, and other administrative staff to enter student, staff and school data and track the same. The app currently has modules for entering students and staff attendance, modules for screening the health of the students and referring them to the doctors, module for identifying and tracking the out of school students and module for teachers to register for teacher training.
>>> ரூ. 20,000-க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள்...
KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.1
* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.23.1
* Updated on 26-03-2026
*Whats New?
களஞ்சியம் Kalanjiyam App New Update 1.23.1
👉 Employee Paydrawn can download now based on Financial Year
👉 Enhancement and Bug Fixes
App Update செய்ய Direct link
👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
About this App
Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls
Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.
March 2026 Pay roll Income Tax and Cess deduction குறித்த தகவல்
நண்பர்களே வணக்கம் 🙏
March 2026 pay roll Completed
அதில் income tax and cess deduction செய்துள்ளது
பலருக்கு சந்தேகம் இது சரிதானா?
மார்ச் மாதம் I.T காட்ட மாட்டோமே?
1) ifhrms kalanjium auto deduction..
2) income tax விதிகளின் படி இது சரிதான்
3) 1/April/26 க்கு பிறகு தான் மார்ச் 2026 ஊதியம் கிடைக்கும்
4) எனவே மார்ச் 2026 மாத சம்பளம் ஆக இருந்தாலும் அது அடுத்த (2026-2027) நிதியாண்டு ஊதியம் தான்.
5) நீங்க *DDO IT e-filing 138 (24Q)* (2026-2027 - Q1) செய்யும் போது..
1) Apr I ( மார்ச் 26)
2) Apr II ( ஏப்ரல் 26)
3) May
4) June
என காண்பித்து e-filing செய்து கொள்ளலாம்... தவறேதும் இல்லை
6) இந்த பதிவின் நோக்கம்..
*மார்ச் 26* Income Tax
auto deduction ஐ
*edit செய்ய delete செய்ய* முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம்...
தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம்
20/3/26
அரசுப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு " தேர்வுக்களம் " எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலி (Integrated Mobile App) வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
App Download Link :
https://play.google.com/store/apps/details?id=com.tn.integrated.app
App has recruitment related information from TamilNadu Govt’s recruitment boards
The Government of Tamilnadu through its various recruitment boards like TNPSC, TRB, TNUSRB and MRB organize and manage recruitment process to fill the vacant positions within the respective boards. Currently there are different websites and web portals that are being maintained by the respective recruitment boards for notifying and announcing the job recruitment related information to the prospective candidate (or) aspirant. Now for the benefit of the candidates/ aspirants of Tamilnadu, The Government of Tamilnadu has come up with developing an integrated mobile application in both iOS & Android platforms for the aspirants/ candidates of TNPSC, TRB, TNUSRB and MRB for connecting them with the respective recruitment board related information and provide a single touch point for the aspiring candidates.
The official Government Recruitment Mobile app for Tamilnadu candidates exclusively developed for the benefits of the candidates from Tamilnadu to refer and apply for various government job recruitments happening through the following recruitment boards of Tamilnadu Government, TNPSC, TRB, MRB and TNUSRB. The Candidates can download this mobile application and access the above mentioned recruitment boards to get various information about the communications that these recruitment boards provide to the candidates of TamilNadu.
The mobile app has information about the announcements, notifications and other recruitment related communications from the TamilNadu Government’s recruitment boards, TNPSC, TRB, MRB and TNUSRB.
Being an integrated mobile app, this mobile app provides a single place view of all the announcements, notifications and other recruitment related communication to the candidates from Tamilnadu for the recruitment related communications from the above mentioned recruitment boards of Tamilnadu Government.
The mobile app provides the candidates with easy to access user interface and is currently available in both English and Tamil languages for the convenience of the Tamilnadu candidates who are aspiring to join the Government services through the recruitments happening through the Government recruitment boards TNPSC, TRB, MRB and TNUSRB.
The Integrated Mobile application will be used by the aspirants/ candidates from the general public who are currently using the TNPSC, TRB, TNUSRB and MRB respective websites and web portals for their recruitment related information updates like (1) Notifications (2) Announcements (3) Exam date announcement (4) Hall Ticket related announcements and download links (5) Results and results related announcements (6) Press release announcements (7) What is new announcement (8) Instruction to the candidates (9) Syllabus related communications.
Now, this Thervukalam App provide the aspirants/ candidates a single platform ( here it is a Mobile Application) that can be downloaded by the aspirants/ candidates from the Google Play Store and Apple App Store and installed in the aspirants/ candidates mobile devices to access the recruitment related updates and announcements of the respective recruitment boards (TNPSC, TRB, TNUSRB and MRB)
ECINET App தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
https://play.google.com/store/apps/details?id=in.gov.eci.app
KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.23.0
* IFHRMS Kalanjiyam Mobile App New App New Update
* Version 1.23.0
* Updated on 09-03-2026
*Whats New?
களஞ்சியம் Kalanjiyam App New Update 1.23.0
👉 Security Patch Update
👉 Enhancement and Bug Fix
App Update செய்ய Direct link
👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
About this App
Kalanjiyam is Employee / Pensioner management app, User can apply leaves, Payrolls
Kalanjiyam is Employee / Pensioner management app. User can apply their leaves and HR requests, also their monthly, annual payrolls and many more.
களஞ்சியம் செயலி முந்தைய Update குறித்த தகவல்கள்
* VERSION 1.22.8
* UPDATED DATE: 02.03.26
* WHAT'S NEW
1. SURRENDER LEAVE REQUEST MODULE UPDATED.
2. LEAVE REQUEST NEW ENHANCED.
3. TRANSFER OF PENSION PAY OFFICE MODULE UPDATED.
4. OTP AND OTHER SMS SERVICES ENHANCED.
5. PENSIONER APPROVAL GROUP SORTED WITH EASE
Kalanjiyam செயலியில் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தை (Treasury) மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.
சமீபத்திய புதுப்பிப்புகளில் (Update), ஓய்வூதியதாரர்களுக்கான "Transfer of Pension Pay Office" என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாவட்டத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கோ அல்லது அதே மாவட்டத்திற்குள் உள்ள வேறு கிளைக்கோ மாற்றிக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
Kalanjiyam செயலி மூலம் கருவூலம் மாற்றும் முறை :
Kalanjiyam செயலியில் உங்கள் User ID (PPO Number) மற்றும் கடவுச்சொல் (Password) கொண்டு உள்நுழையவும்.
உள்ளே Pensioner மெனுவை தேர்ந்தெடுக்கவும்.
அங்கு கொடுக்கப்பட்டுள்ள "Transfer of Pension Pay Office" அல்லது "Treasury Change" என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
நீங்கள் எந்த கருவூலத்திற்கு மாற விரும்புகிறீர்கள் என்ற விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
* முக்கிய குறிப்புகள்:
Approval:
நீங்கள் செயலியில் சமர்ப்பிக்கும் கோரிக்கை, சம்பந்தப்பட்ட கருவூல அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே மாற்றம் நடைமுறைக்கு வரும்.
* Web Portal:
செயலியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்தால், ifhrms.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் இதே மாற்றத்தைச் செய்துகொள்ளலாம்.
* Mustering:
வருடாந்திர நேர்காணல் (Mustering) நிலுவையில் இருந்தால் அல்லது கருவூல கணக்கு தணிக்கையில் (Audit) ஏதேனும் நிலுவை இருந்தால் இந்தச் செயல்முறையில் தாமதம் ஏற்படலாம்.
இப்பதிவினை பிற ஓய்வூதிய நண்பர்களும் பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் பகிரலாம்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு CENSUS 2026 - முக்கிய அறிவிப்பு விவரங்கள்: * வீடுகள் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் 30, 2026...