கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாத பள்ளி வாகன உரிமம் ரத்தாகும்?

ஐகோர்ட்டு உத்தரவுப்படி, பள்ளி வாகனங்களை முறையாக இயக்க, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் அமைத்து, மாதம் ஒரு முறை, ஆலோசனை கூட்டம் நடத்தாத, பள்ளி வாகன உரிமங்கள் ரத்து செய்யப்படும் என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
சென்னை சேலையூர், சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்த, 6 வயது மாணவி ஸ்ருதி, ஜூலை, 25ம் தேதி, பள்ளி பஸ்சில் இருந்த, ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்தாள். மாணவியின் இந்த பரிதாப மரணம், பெற்றோர் மத்தியில் பெரும் கலக்கத்தை உருவாக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக, ஐகோர்ட் தானாக முன்வந்து, விசாரணை நடத்தியது. அதில், "தனியார் பள்ளி வாகனங்களை முறைப்படுத்த, புதிய விதிமுறைகளை இயற்ற வேண்டும்&' என, உத்தரவிட்டது. தமிழக அரசு, 21 புதிய விதிமுறைகளை வகுத்து, அக்., 1ம் தேதி முதல், அமலுக்கு கொண்டு வந்தது. பள்ளி வாகனங்களை முறையாக இயக்க, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் அமைத்து, மாதம் ஒரு முறை, ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை, பள்ளி அளவிலான போக்குவரத்து குழு, அமல்படுத்த வேண்டும்.

புதிய விதிகள் நடைமுறைக்கு வந்து, இரு மாதங்களாகியும், பெரும்பாலான பள்ளிகள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை அமைத்து ஆலோசிக்கவில்லை. இதனால், பள்ளி அளவிலான, போக்குவரத்து குழுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. பள்ளிகளின் இந்த செயல்பாடு, போக்குவரத்து துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, போக்குவரத்து துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய விதிப்படி, பள்ளி வாகனங்களுக்கான, தனி பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை, அனைத்து பள்ளிகளும் ஏற்படுத்தி இருக்க வேண்டும். இந்த சங்கம், மாதம் ஒரு முறை கூடி, அதில் கூறப்படும் ஆலோசனைகளை, பதிவு செய்து, பள்ளி அளவிலான போக்குவரத்து குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால், இதுவரை பெரும்பாலான தனியார் பள்ளிகள், வாகனங்களுக்கான பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை அமைக்கவில்லை. தனி சங்கம் அமைத்து, கூட்டத்தை நடத்தாத, பள்ளிகளை கண்டறிந்துள்ளோம். அந்த பள்ளிகள் கூட்டம் நடத்தி, அதில் எடுக்கப்படும் முடிவுகளை, போக்குவரத்து குழுவுக்கு உடனே அனுப்ப உத்தரவிட்டுள்ளோம்.

அரசின் உத்தரவை மீறும், பள்ளிகள் குறித்த தகவலை, பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வாகன உரிமத்தை, ரத்து செய்ய தேவையான, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...