கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு...

 வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன. கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக, வருமான வரி தாக்கல் செய்வதற்கு வரி செலுத்துவோருக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையில், கீழ்கண்ட வருமான வரி தாக்கல் செய்வோருக்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுகிறது.

(அ)  தங்களின் கணக்குகள் தணிக்கை செய்ய வேண்டிய தேவை இருக்கும் வரிசெலுத்துவோருக்கான (அவர்களின் பங்குதாரர்கள் உட்பட) வருமான வரித்தாக்கல் காலக்கெடு (அவர்களுக்கான காலக்கெடு, கூறப்பட்ட அறிவிப்பில் நீட்டிப்பதற்கு முன்பு)  2020 அக்டோபர் 31- சட்டத்தின்படி) 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

(ஆ) தங்களின் சர்வதேச / குறிப்பிட்ட உள்ளூர் பரிமாற்றங்கள் குறித்து அறிக்கைகள் தாக்கல் செய்ய வேண்டிய தேவை இருக்கும் வரிசெலுத்துவோருக்கான வருமான வரித்தாக்கல் காலக்கெடு(அவர்களுக்கான காலக்கெடு, கூறப்பட்ட அறிவிப்பில் நீட்டிப்பதற்கு முன்பு)  2020 நவம்பர் 30- சட்டத்தின்படி) 2021 ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

(இ) இதர வரி செலுத்துவோருக்கான வருமானவரி செலுத்துவதற்கான காலக்கெடு (அவர்களுக்கான காலக்கெடு, கூறப்பட்ட அறிவிப்பில் நீடிப்பதற்கு முன்பு) 2020 ஜூலை 31- சட்டத்தின்படி) 2020 டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, வரி தணிக்கை அறிக்கை மற்றும் சர்வதேச/குறிப்பிட்ட உள்ளூர் பரிமாற்றங்கள் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வரும் பல்வேறு தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2020 டிசம்பர் 31-வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

>>> Click here to Download Income Tax Department Circular 24-10-2020

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ராமேஸ்வரம் பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது

 பிரதமர் மோடி அவர்கள் இன்று திறந்து வைத்த ராமேஸ்வரம் பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது Repairs underway on new vertical suspen...